Monday, September 7, 2009

வறண்ட தொண்டை

சேகருக்கு தலைகால் புரியாமல் நின்றான். பின்னே கௌதமன் சார் வீட்டுக்குப் போறதுன்னா.., கௌதம் சார் வந்த பிறகுதான் அவன் ஆங்கிலம் ஒழங்காக படிக்க ஆரம்பித்தான். வழக்கமாக சங்கர்தான் போவான். அங்கு போனால் சாரின் மனைவி குடிப்பதற்கு மோர் கொடுப்பாராம். அது தேன் போல தித்திக்குமாம்.

கௌதம் சார் என்றாலே சேகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பள்ளியில் ழ கரத்தை அழுத்தமாக உச்சரிக்கக் கூடிய ஆள் அவர்தான். அவரது வகுப்புகளை கவனிக்கும்வரை தாங்கள் எல்லோரும் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.


விஜயகாந்தின் ழ கரத்தை கேலி செய்து செய்தி வெளிவந்த போது தங்களைப் போல் நன்றாகத்தானே உச்சரிக்கிறார். அப்புறம் எதற்கு அவரை கேலி செய்கிறார்கள் என்று நினைத்திருக்கிறான். ஆனால் கௌதம் சார் வந்தபின் அவனது எண்ணமே மாறிப் போனது. அவ்வளவு அழுத்தமாக ஏழு, அழகு போன்ற வார்த்தைகளை உச்சரிப்பார். அவரது ழ வை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வசந்தன் ஒரு முறை சொன்னான்.


அப்படியே விழுப்புரம் தாண்டிப் போய் பாரு.., அங்கெயெல்லாம் ழ வ இன்னும் அழுத்தி ய வாகவே மாத்தியிருப்பார்கள். அவனது சொந்தக் காரர்கள் சில பேர் அந்தப் பகுதியில் இருந்தனர். அவன் சொன்னது கொஞ்சம் உண்மையாகவே இருந்தாலும் கௌதம் சாரை கேலி செய்ததால் அவனோடு சண்டை போட்டிருக்கிறான்.

சங்கருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவன் இன்று வகுப்புக்கு வரவில்லை. இருந்தாலும் மாதாமாதம் சார் வைக்கும் மாதிரித் தேர்வு அன்றும் நடந்தது. அந்த விடைத்தாள்களை வீட்டிற்குக் கொண்டு செல்லதான் சங்கரை வரச் சொல்லியிருந்தார். சங்கர் இல்லாத காரணத்தாலும் சேகரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது. சேகர் மிதிவண்டி வேறு வைத்திருந்தான்.

ஆசிரியர்கள் சொல்லும் எல்லா வேலைகளை சிரமேற்கொண்டு முடிக்கும் மாணவர்களில் ஒருவனாக இருந்த சேகர் உடனே ஒப்புக் கொண்டான். தவிரவும் சங்கர் சொன்ன அந்த மோர் வேறு ஆசைக் காட்டிக் கொண்டிருந்தது.

அவர் கொடுத்த பையை சைக்கிளில் வைத்து அழுத்திக் கொண்டு சென்றான். கொஞ்சம் தூரம் தான் ஊருக்கு கொஞ்சம் வெளியில் ஆற்றினை ஒட்டி இருந்தது.

அவரது வீட்டு வாசலை அடைந்ததும் கொஞ்சம் படபடப்பாக இருந்தது. என்ன சொல்லி கூப்பிடுவது?

சார்..., சார்..., கௌதம் சார் பள்ளியில்தான் இருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் வேறெப்படி கூப்பிடுவது என்று தெரியவில்லை.யாரது? உள்ளிருந்து ஒரு பெண்குரல் கேட்டது.

நான் சேகர் இந்தப் பையை சார் உங்க கிட்ட கொடுத்திட்டு வரச் சொன்னார்.

சேகரா? அறியாத புரியாத நபரிடம் பேசுவது போல குரல் அமைந்திருந்தது

நான் சார் கிட்டதான் படிக்கறேன். அய்யனார் கோவில் பக்கத்தில எங்க வீடு இருக்கு

திண்ணைல வச்சிட்டுப் போப்பா.., பெண்குரல் வீட்டின் கடை கோடியிலிருந்து பேசியது போல இருந்தது.

இல்ல.., இதெல்லாம் பரீட்சை பேப்பர். பாதுகாப்பா கொண்டு போய் கொடுக்கச் சொன்னார்.

அப்படின்னா டி.வி. பெட்டி பக்கத்தில வச்சிட்டுப் போ

வாசலில் மிக முன் பகுதியில்தான் டி.வி. இருந்தது. வைத்துவிட்டு திரும்பினான்.

மிதிவண்டியில் திரும்ப அழுத்த ஆரம்பித்தான். மோர் கிடைக்காத சோகம் கொஞ்சம் இருந்தாலும் நிஜமாகவே அப்போது அவனுக்கு தாகம் எடுக்க ஆரம்பித்திருந்தது.

பள்ளியில் காலையிலிருந்தே குடி நீர் வரவில்லை. கொண்டுவந்திருந்த தண்ணீரும் தீர்ந்திருந்தது. பேசாமல் சார் வீட்டிலேயே போய் கேட்டு வாங்கிக் குடித்திருக்கலாமோ..,

தாகம் அதிகமாக இருந்ததால் அப்படியே வண்டியைத்திருப்பினான். வாசலில் முன்னால் போய் சார் என்று கூப்பிட வாய் திறந்த போதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தான்.

அந்த வீட்டுப் பெண்மணி விரல்களால் நீர்விலாவி விடைத்தாள் பைக்கு தீட்டுக் களித்துக் கொண்டிருந்தார்.

9 comments:

 1. டாக்டர் சார்....நீங்களுமா?

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

  ReplyDelete
 3. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
  புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
  நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
  பல தள செய்திகள்...
  ஓட்டுப்பட்டை வேண்டாம்...
  எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
  முழுவதும் தமிழில் படிக்க....  தமிழ்செய்திகளை வாசிக்க

  தமிழ்செய்திகளை இணைக்க

  ஆங்கில செய்திகளை வாசிக்க

  வலைப்பூ தரவரிசை

  சினிமா புக்மார்க்குகள்

  சினிமா புகைப்படங்கள்

  ReplyDelete
 4. வறட்சி தொண்டையில் மட்டும் இல்லை...

  ReplyDelete
 5. மக்கள் திருந்துவது எப்போதோ?

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails