Tuesday, February 2, 2010

பதிவுல நண்பர் அனுப்பிய ரகசிய மின்னஞ்சல்

பதிவுலக நண்பர் ஒருவர் நமது நண்பர்கள் சிலருக்கு மட்டும் ரகசிய மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

நமக்கு ஏனோ அதை ரகசியமாக வைத்துக் கொள்ள மனதே இல்லை.

அதனால் அதை அப்படியே பொதுவில் வைக்கிறோம்.

இதைத்தான் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களும்

இருக்கிறதெல்லாம் பொதுவில் வைத்தால் எடுக்கிற வேலையும் வளராது.., என்று எழுதியுள்ளார்.

====================================================================


நம்ம ஊர் பெரிசுகளின் விரல்நுனியிலிருந்து வீழ்ந்த கோலங்கள், இங்கே ஆட்டோகிராப்களாக.
ஒரு சேமிப்பு.

A P J அப்துல் கலாம்
A P J AbdulKalam



அபுல் கலாம் ஆசாத் மவ்லானா
Abul Kalam Azad Maulana



அமர்த்யா சென்
Amartya Sen, Dr.



அம்பேத்கார்
Ambedkar B. R., Dr.



அமிர்தாப்பாச்சன்
Amitabh Bachchan



ஆஷா போஸ்லே
Asha Bhosle



பாபா அம்தே
Baba Amte



பால கங்காத திலகர்
Bala Gangadhar Tilak



பிபின் சந்திர பால்
Bipin Chandra Pal



பிஸ்மில்லா கான் உசாத்
Bismillah Khan Ustad



சி.கே.நாயுடு
C.K. Nayudu



சந்து பார்டே
Chandu Borde



சிரஞ்சீவி
Chiranjeevi



சித்தரஞ்சன் தாஸ்
Chittaranjan Das



தேவ் ஆனந்த்
Dev Anand



கோபால கிருஷ்ண கோகலே
Gopal Krishna Gokhle



ஹர் கோபிந் கொரானா
Har Gobind Khorana



ஹரிபிரசாத் சவுராசிய பண்டிட்
Hariprasad Chaurasia Pandit



இந்திரா காந்தி
Indira Gandhi



டாடா
J.R.D. Tata



ஜகஜீவன் ராம்
Jagjivan Ram



ஜவஹர்லால் நேரு
Jawaharlal Nehru



ஜெயபிரகாஷ் நாராயணன்
Jayprakash Narayan



கபில்தேவ்
Kapil Dev



கான் அப்துல் காபர் கான்
Khan Abdul Gafar Khan



கொனேரு ஹம்பி
Koneru Humpy



லால் பகதூர் சாஸ்திரி
Lal Bahadur Shastri



லாலா அமர்நாத்
Lala Amarnath



லதா மங்கேஸ்கர்
Lata Mangeshkar



ஹூசைன்
M.F. Husain



மகாத்மா காந்தி
Mahatma Gandhi



மங்கலபள்ளி பாலமுரளிகிருஷ்ணா
Mangalampalli Balamuralikrishna



மன்மோகன் சிங்
Manmohan Singh, Dr.



மொராஜி தேசாய்
Morarji Desai



அன்னை தெரசா
Mother Teresa



பி.சுசீலா
P. Susheela



சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
Sarvepalli Radhakrishna



ராகுல் பஜாஜ்
Rahul Bajaj



ராஜ் கபூர்
Raj Kapoor



ராஜேந்திர பிரசாத்
Rajendra Prasad, Dr.



ராஜிவ் காந்தி
Rajiv Gandhi



சி.வி.ராமன்
Raman C.V.



ரத்தன் டாடா
Rattan Tata



ரவி சங்கர் பண்டிட்
Ravi Shankar Pandit



ரவீந்திரநாத் தாகூர்
Ravindranath Tagore



எஸ்.பி.பாலசுப்ரமணியம்
S.P. Balasubrahmanyam



சச்சின் தெண்டுல்கர்
Sachin Tendulkar



சரத் சந்திர போஸ்
Sarath Chandra Bose



சர்தார் வல்லபாய் படேல்
Sardar Vallabbhai Patel



சரோஜினி நாயுடு
Sarojini Naidu



சத்யஜித்ரே
Satyajit Ray



எம்.எஸ்.சுப்பலஷ்மி
Subbulakshmi M.S.



சுபாஷ் சந்திர போஸ்
Subhash Chandra Bose



சுனில் கவாஸ்கர்
Sunil Gavaskar



சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams



தகுதுரி பிரகாசம் பந்துலு
Tanguturi Prakasam Panthulu



அடல் பிகாரி வாஜ்பாய்
Vajpayee Atal Bihari



விக்ரம் சாராபாய்
Vikram Sarabhai, Dr.



வினோபா பாவே
Vinoba Bhave



விஸ்வநாதன் ஆனந்த்
Vishwanathan Anand



விவேகானந்தர்
Vivekananda



ஜாகிர் உசேன்
Zakir Husain, Dr.


=================================================================


அவரது இடுகைகள் ஒவ்வொன்றும் தனித்தனித் தகவல் சுரங்கமாக இருக்கின்றன. உழைப்பும் அற்பணிப்பும் பளிச்சிடும் வ்கையில் அமைந்திருக்கும்.


அவரது பதிவுக்குச் செல்லும் வழி இதோ..,




அவரது பதிவுகளை பிந்தொடர்வது ஒரு  அற்புத அனுபவம்

Sunday, January 31, 2010

விஜய்க்க்கு கொடுக்கப் படாத அங்கீகாரம் 31-1-10

தமிழ் ப் படம் தமிழ் வலைஞர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஏதோ தமிழின் முதல் ஸ்பூஃப் படம் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் டிவியில் விளம்பரங்களும் பாடல்களும் அசத்திக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே சோ முதலான சிலர் சில படங்களை எடுத்திருந்தாலும் இந்த ஆண்டின் முதல் ஸ்பூஃப் படமாக வேட்டைக்காரனே (சில நாட்களுக்கு முன் வெளிவந்திருந்தால் கூட) அமைந்திருந்தது. ஏனோ அதை அங்கீரங்கரிக்க தமிழ் சமுதாயம் மறுக்கிறது.


படத்தின் ஆரம்பத்திலேயே  ஒரு போலீஸ் அதிகாரிக்கு கட் அவுட் வைப்பது, அவரது செய்திகளை சேகரிப்பது என்று முதல் காட்சியிலேயே அதகளம் பண்ணியிருப்பார்கள்,  அவரைப்போலவே 4 வருடம் ஃபெயில் ஆவது ரசிகர்களை கேலி செய்வது போல இருந்தாலும் படங்களில் வந்துள்ளது என்று பார்த்தால் பக்தி படங்களையும், அதில் வரும் சடங்களையும் கேலி செய்வது போல எடுத்துக் கொள்ளலாம்.

போலீஸாக ரயில் ஏறி சென்னை வருவது, அவர் போலவே ஆட்டோ ஓட்டுவது என்று ஒரு சினிமா தாகத்தில் ஓடி வருபவர்களை கேலி செய்வதாகவே படம் அமைகிறது.

பாஷா படத்தில் ஒரு அடியில் அடியாள் போய் மின் கம்பத்தின் உச்சியில்தான் விழுவார். ஆனால் வேட்டையன் அடித்தால் அந்த சிமிண்ட் கம்பமே இடியும் காட்சிகள். ஏனோ ரசிக கண்மனிகளுக்கு விளங்கவில்லை.

அடுத்ததாக தூக்குகுடியில் சாத்துக்குடி காட்சி..,

காதலுக்கு மரியாதை புத்தக காட்சியை இமிடேட் செய்தது ஏனோ நிறையப் பேர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

அனுஷ்கா சம்பந்தப் பட்ட அனைத்துமே பல எம்ஜியார், ரஜினி படங்களை இமிடேட் செய்யப் பட்டிருப்பதுதான். அதையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

படையப்பா படத்தில் ரஜினியை இளைமையாக காட்ட அவரது நண்பர்களாக ஓரளவு முத்திய நண்பர்களாக போட்டிருப்பார்கள். அதே போல் விஜயை இளமையாக காட்ட அனுஷ்காவை நாயகி ஆக்கி இருக்கிறார்கள்.

வில்லனின் கோட்டைக்குள் நாயகன் புகுந்து சவால் விடும் காட்சிகள் ஏராளமாக வந்து விட்டன.  வேட்டைக்காரனிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது.  விஜய் பேசி விட்டு வெளியேறியதும் ஜிந்தா அடியாளிடம் ஒரு கேள்வி கேட்பாரே..,

எல்லாரும் படம் பார்த்துவிட்டதால் வசனத்தையும் சொல்லிவிடலாம்.

ஏண்டா.., அவன் பேசிட்டு இருக்கும் போது என்னடா செஞ்சிட்டு இருந்தீங்க..,

இதைவிட அந்த காட்சிகளை கேலி செய்ய ஏதாவது செய்ய வேண்டுமா? என்ன!

வழக்கமாக விஜய் சட்டைக்கு பட்டன் போடாமல் இருப்பார். அதையும் கூட இதில் கேலி செய்து அதற்கு மேல் பட்டனே இல்லாத ஒரு மேல் சட்டை அணிந்திருப்பார். ( அனுஷ்காவை கடத்தும் காட்சி). பின்னர் அதையும் கழட்டி சண்டை போடுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா..,!

கரப்பான் பூச்சி மருந்தடித்து விஜய் ஒரு படத்தில் வில்லனின் அடியாளை கொல்வார். இதில் போலிஸின் கண்ணை வில்லன் குருடாக்குகிறார்.

ஜாக்கி சான் ஷாப்பிங் காம்பளக்ஸில் போடும் சண்டைகளையும், துணியைப் பிடித்து குதிக்கும் காட்சிகளையும் விஜய் அதகளம் பண்ணிய விஷயமே  நமக்கு தமிழ் படம் பார்த்த பிறகுதான் புரிகிறது.

ஒரே பாடலில் பணக்காரன் ஆவது, ரவுடி பாஸ் ஆவது மாதிரி காட்சிகளை இவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் அடிவாங்கிய ஒரு ரவுடி மருத்துவமனையிலிருந்து வெளியேறுவ்வதற்குள் போலீஸ் ரவி பெரிய ஆள் ஆகிவிடுகிறார்.

விஜயிடம் நட்பின் பெருமையைப் பற்றி அவரது கிருதா நண்பர் பேசும்போது நடுநிலை ரசிகர்கள் சிரித்தே ஆகவேண்டும்.  அவ்வளவு இயல்பு..,

பெரிய ரவுடியாக வரும் நாயகனின் நண்பனாக ஒரு சாதா நண்பன் இருக்கும் காட்சி பல படங்களில் வந்திருக்கிறது. அதை கேலி செய்து இதில் சத்யனைப் போட்டிருப்பார்கள். மற்ற படங்களில் எல்லாம் வில்லனிடம் தப்பிவிடும் பாத்திரம் இதில் செத்தே போகிறது.

வில்லன்கள் பெண்களூடன் ஜலக்கிரீடை செய்யும் காட்சியும் இந்தப் படத்தில் இருக்கிறது.  ஆனால் தனக்கு நீச்சல் தெரியாது என்று  மகன் வில்லன் சொல்லும் காட்சியில் ஏனோ பில்லா ரசிகர்களுக்கு கூட கோபம் வரவில்லை.

இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில்  வில்லனின் சாம்ராஜ்ஜியத்தை சிதைக்கும் காட்சியில் சிதைந்த படங்களை மீண்டும் பாஷாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


இறுதிக்காட்சியில் ஜிந்தாவைக் கொல்லும் காட்சி, குறுக்கே யாரும் வராமல் ஒதுங்கும் காட்சி, கண்பார்வை இல்லாத நபருக்கு விஜய் குறிப்ப்புகள் கொடுக்கும் காட்சி போன்ற காட்சிகளில் கேலியை விட புத்திச் சாலித்தனமே தென்படுவதால் அவற்றை விட்டுவிடலாம்.

அதே போல் விஜய் அருவியில் குதிக்கும் காட்சி, அருவிக்கு சில அடி தூரத்தில் அருவியின் இழுவைக்கு கொஞ்சம் அசராமல் நங்கூரம் இட்டது போல நிற்கும் காட்சிகளும் ஏற்கனவே விஜய் படத்தில் வந்த காட்சிகள் தான் என்பதும் தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

ராவாக ஸ்பிரிட்டைக் குடித்து, அடிவயிற்றுக்குப் போன ஸ்பிரிட்டை மீண்டும் ஆயுதமாக மாற்றி எதிரியை அழிக்கும் காட்சிகளைக் கூட ஸ்பூஃப் ஆக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நண்பர்களை என்னவென்று சொல்வது.


இவ்வளவு கேலி, கிண்டல் செய்து எடுக்கப் பட்ட வேட்டைக்காரனை விட்டுவிட்டு தமிழ் ப் படத்தை இந்த ஆண்டின் முதல் கேலிச் சித்திரமாகச் சொல்வது விஜய் எதிரான சதி என்று சொல்லாமல் என்ன நினைப்பது..,

=====================================================================

வேட்டைக்காரன் விளம்பரம் சன் டி.வி யில் இன்னும் வந்து கொண்டிருந்தாலும் கலைஞர் டி.வி.யில் வரும் தமிழ் ப் படம் அளவிற்கு வலுவாக இல்லை என்பதும் ஒரு உண்மை

Thursday, January 28, 2010

சுமித்ராவின் சரித்திரம் பக்கம் 6

சுமன் மடியில் படுத்திருந்த சுமித்ராவை பார்த்தவுடன் எங்களுக்கு கொடைக்கானல் நிகழ்ச்சிகள் நினைவுகளில் வந்தது. ஏனோ மறக்க நினைத்தாலும் அதன் தொடர்ச்சியும் சேர்ந்து மூளையின் ஒரு மூலையில் ஓட ஆரம்பித்தது.

==================================================

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

சுட்டிகளைப் பயன்படுத்தி படித்துவிடுங்கள்

========================================================

நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஆட்களையெல்லாம் சேர்த்துவிட்டு சுற்றுலாவைத் தொடர ஆரம்பித்தோம். சேட்டைக்கார மாணவர்கள் வேறு வந்திருந்தார்கள் அல்லவா... அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் இந்தச் சுட்டியில் உள்ளது. அவர்கள் பாட்டுக்கு பாட்டு விளையாட ஆரம்பித்திருந்தனர். ஏறக்குறைய பயணம் தொடங்கி பனிரெண்டு மணிநேரம் ஆகியிருந்ததால் ஓரளவு மாணவ, மாணவியரிடம் ஒரு கூச்சம் விலகியிருந்தது. அது ஒருசிலரிடம் மட்டும்தான்.

சேட்டை3 உரத்த குரலில் பாட ஆரம்பித்தான்..

மடிமீது தலைவைத்து விடியும்வரை தூங்குவோம்

உடனே அடுத்தவன் பாட ஆரம்பித்தான். மறுநாள் எழுந்து பார்ப்போம்.

உண்மையில் பாடல் வரிகள் அப்படித்தான் இருக்கும். ஆனால் அவர்கள் பாடிய ராகம்தான் கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. அதுவும் மறுநாள் எழுந்து பார்ப்போம் என்று பாடிவிட்டு எழுந்துநின்று எட்டிப் பார்த்துவிட்டு

இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?

இந்தப் பார்வைக்குத்தானா பெண்ணானது?


போன்ற பாடல்களையும் பாட ஆரம்பித்திருந்தனர்.

போட்டியின் விதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பாடல்கள் வந்த போதிலும் எதையும் ரசிக்கும் மனநிலையில் இருந்த சகாக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் அந்த குழுவில் இருந்த பல மாணவிகளுக்கு இப்படியெல்லாம் பாடல்கள் தமிழில் வந்திருக்கின்றதா? என்று கூடத்தெரியாது.

எங்கள் வகுப்புத்தலைவர் ராஜஸ்ரீயின் ரசிகராக இருந்தகாரணத்தால் ராஜஸ்ரீ நடித்த சிலபடங்கள் பேருந்தில் இருந்த சின்னத்திரையில் ஓடவிட்டிருந்தார். (இந்தியன் படமும் பாடல்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது) ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காதலிக்க நேரமில்லை படத்தின் நகைச்சுவையில் கொஞ்சம் லயித்திருந்தகாரணத்தாலும் மற்றும் சிலர் கடலை சாகுபடியில் குதித்திருந்த காரணத்தாலும் மற்றும் சிலர் பாட்டுப் போட்டியில் களம் இறங்கியிருந்தகாரணத்தாலும் அந்தப் படம் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

அப்படியே பாட்டுப் போட்டி திசைமாறி வார்த்தை விளையாட்டாக மாறியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டுநிமிடம் தமிழில் பேசும் போட்டி அது. ஒருவார்த்தையை மூன்றுமுறை உபயோகப் படுத்தக் கூடாது. ஆங்கில வார்த்தை உபயோகப் படுத்தக் கூடாது போன்ற பல கடினமான விதிமுறைகளைக் கொண்ட போட்டியாக அது இருந்தது. ஆனால் சேட்டைக் குழாமில் இருந்த மாணவர்கள் எந்தமாதிரி தலைப்புகளைக் கொடுத்தாலும் மடியில் தலைவைத்துப் படுப்பதைப் பற்றியே பேச ஆரம்பித்தனர். இந்தப் போட்டி பயங்கர சூடாக அமைந்த காரணத்தால் மற்ற கடலை கோஷ்டிகளும் இதைப் பற்றியே பேச ஆரம்பித்திருந்தனர்.

இதையெல்லாம் சட்டை செய்யாத சுமித்ரா அவள்பாட்டுக்கு தொடையில் தலைவைத்து படுத்து ஏறக்குறைய தூங்கியதுபோலவே வந்தாள். சுமன் அதற்காகவே ஜென்மம் எடுத்தது போல் அவளைத்தாங்கிக் கொண்டு காதலிக்க நேரமில்லை படத்தைப் பார்த்துக் கொண்டுவந்தான்.

மடியில் படுத்திருப்பதைப் பற்றியும், முதல் சுற்றுலாவில் இருவரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டியது பற்றியும் வார்த்தை விளையாட்டில் வந்தபோது நக்மா பொங்கி எழுந்தாள். நக்மா எங்கள் கல்லூரியின் பெண்ணீய வாதிகளில் ஒருத்தி அவளையும்கூட ஒருநண்பன் காதலித்துக் கொண்டிருந்தான். அவனுடன் நக்மாவும் சேர்ந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறாள். எங்களின் கண்ணில் நக்மாவும் நக்மாவின் நண்பனும் எங்கள் கண்களில் தட்டுப் படவே இல்லை. எங்கள் கண்ணில் மட்டுமல்ல.. சேட்டைகளின் கண்களில் கூட தட்டுப் படவில்லை.

நக்மா பொங்கிஎழுந்த உடன் அவளோடு சேர்ந்து சில பெண்களும் சேர்ந்து வார்த்தை விளையாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றங்களை அடுக்க ஆரம்பித்தனர். வார்த்தை விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டு வந்த பெண்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நக்மா கூட்டம் மேலும்மேலும் பெரிய குரலில் சண்டையிட ஆரம்பித்தனர். அவர்களுக்குள் சமாதானம் வராத சூழலில் நாங்கள் த்லையிட்டு அமைதிப் படுத்தினோம்.

ஒரு வழியாக பேருந்து பெங்களூருவை அடைந்தது. அங்கே மதிய வேளையில்
பெங்களூருவில் லாக்பாக் தோட்டத்தை சென்றடைந்தோம்.

வழக்கம்போல் நாங்கள் கெம்ப கௌடாவைப் பற்றியும் ஹைதர் அலி புராணம் பற்றியும் கிடைக்கும் துண்டு பிரசுரங்களையும் குட்டிப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு கடலை போடுவதற்கான குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தோம். எங்கள் கல்லூரி வாழ்க்கை இவ்வாறு குறிப்பெடுப்பதிலேயே கழிந்தது. கடலை என்பது கானல் நீராகவே அமைந்து விட்டது என்பது சென்ற நூற்றாண்டில் பொன்னெழுத்துக்களால் எழுதப் பட்டுவிட்ட ஒரு சரித்திரம் என்பதையும் இங்கே குறீப்பிட்டாக வேண்டும். தலைவர் டயபாலிக் அவர்கள் எல்லோரையும் நான்கு மணிக்குள் பேருந்துக்குள் வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்.

நாங்கள் அந்த தோட்டத்துக்குள் சென்றவுடன் கெம்பே கவுடாவும், ஹைதர் அலியும் எங்கள் நினைவுகளிலிருந்து மறைந்துவிட்டனர். அங்கெ இருந்த இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்தோம். ஆங்காங்க மக்கள் இயற்கை காட்சிகளை தங்கள் கொண்டுவந்திருந்த புகைப் படக் கருவியில் பதிவு செய்ய ஆரம்பித்திருந்தனர்.நிறைய இயற்கை காட்சிகள் இயற்கையாகவே காணப் பட்டன. கோயமுத்தூரில் இது போன்ற இயற்கைக் காட்சிகள் தென்படாது என்ற சூழலில் மக்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. கடலை போட வைத்திருந்த குறிப்புகளை நாங்கள் சுத்தமாக மறந்துவிட்டிருந்தோம். சில மணிநேரங்கள் ரசித்த பின்னர் டயபாலிக் இன் உத்தரவுக்குப் பணிந்து நாங்கள் அனைவரும் பேருந்துக்கு திரும்பியிருந்தோம்.

புற்ப்படும் சூழலில்தான் தெரிந்தது சுமித்ரா உட்பட இரண்டு பெண்களைக் காணவில்லை. கொஞச நேரம் காத்திருந்தோம். நக்மா எழுந்து தான் போய் தேடிவருவதாக தனது தோழியுடன் கிளம்பினாள். ஏற்க்குறைய 250 ஏக்கர் பரப்பளவும் பல இடங்களில் வாசல்களும் கொண்டது லால்பாக் பூங்கா..

பதினைந்து இருபது நிமிடம் போயிருக்கும். சுமித்ரா மற்றும் தோழியும் திரும்பவில்லை. நக்மா மற்றும் தோழியும் திரும்பவில்லை.

பேருந்துக்குள் இருந்த இரண்டு எள் களும் எண்ணெய்களுக்காக காய ஆரம்பித்தன..,

======================================================

தொடரும்.... தொடரும்..................................

Tuesday, January 26, 2010

ஃபாண்டஸிக் கதையின் தொடர்ச்சி 26.1.10

ஒரு ஃபேண்டஸி கதை எழுத ஆரம்பித்ததில் வித்தியாசமான கதைக்களம் என்று பாராட்டப் பட்டாலும் செக்ஸ் போதவில்லை என்ற குறையும் அதில் தென்பட்ட போதிலும் பின்னூட்டத்தில் நீளமாய், நீலமாய் இருப்பதாக சொல்லப்பட்டுவிட்டதாலும் இந்தப் பகுதியையும் அதன் போக்கிலேயே விட்டுவிடுகிறேன். எனவே போன பகுதிக்கு போட்ட முன்னறிவித்தல் இதற்கும் பொறுந்தும்.

முன்னறிவித்தல் 2: சென்ற பகுதியே மிக நீளமாகத் தென்பட்டாலும் எனக்கென்னவோ அதைச் சுருக்கி சிலவரிகளில் சொல்லமுடியும் என்று தோன்றாத காரணத்தால் இந்தச் சுட்டி மூலம் சென்ற பகுதியைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்


========================================================================

கவுரவர்களின் மன்னன் 110ஆம் துரியோதனன் நேரடியாக வந்து கம்பு வீரனையும் அவனோடு வந்த பெண்களையும் ( அதிகாரிகள்) கைது செய்து  கொழுமண்டபத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

 கொழு மண்டபத்தில் குற்றவாளிக்கூண்டில் ஏற்கனவே காணாமல் போன  இரண்டு அரசு அதிகாரிகளும் ஒரு கூண்டில் நிற்க  கம்பு வீரனோடு வந்த மற்ற பெண்கள் ஒரு கூண்டில் அமர்ந்திருக்க  12203வது வது கர்ணன்  ( கர்ணனின் மகன் போரிலேயே இறந்துவிட்டதாக சிலர் பேசலாம். ராஜவிசுவாசிகள் பலருக்கு கர்ணன் எனப் பெயரிடப் படுவதை இங்கு பதிவு செய்துவிடுவோம் ) பேச ஆரம்பிக்கிறார்.

மகாராஜாவுக்கு வந்தனம்.  சென்ற யுகத்தில் உங்களுக்கும் உங்கள் தந்தைகளுக்கும் நடந்த கொடுமை சரித்திரம் அறிந்ததே..,

மூத்தவருக்கே நாடு சொந்தம் என்பது பரம்பரை பரம்பரையாக  உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.

ஆனால் கிருஷ்ணனின் தூண்டுதலின் காரணமாக  தங்கள் முன்னோர் திருதராஷ்ட்டிரனின் தம்பி பாண்டுவின் மைந்தர்கள்  நாட்டை துண்டாடச் சொன்னார்கள். அவர்களுக்காக கிருஷ்ணரே போர் களத்தில் இருந்தார். என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் கிருஷ்ணரின்  படைகள் நம்மோடுதான் இருந்தன என்பது அனைவருக்கும் தெரிந்ததே..,

பாண்டுவின் மைந்தர்களின் செய்த சதிகளை பல வழிகளில் முறியடித்த தங்கள் முன்னோர்களால்  போரைத் தவிர்க்க முடியவில்லை. அபகரிக்க முடியாத சூழலில் நாட்டைத் துண்டாட நினைத்ததும், சில ஊர்களை மட்டுமாவது தனியாக பிரித்து பிரிவினை செய்தே தீரவேண்டும் என்று கிருஷ்ணரின் துணையோடு சதிவகைகள் செய்ததை இன்றைய மக்கள் திரைப்படம் மூலமாவது தெரிந்தே இருக்கிறார்கள்

கைது செய்யப் பட்டுள்ள அதிகாரி:

திரவுபதையை உங்கள் முன்னோர்கள் கையைப் பிடித்து இழுத்ததால்தான் அனைவரும் வெகுண்டு எழுந்து வன்மம் கொண்டாட வேண்டியதாகப் போயிற்று.

12203வது கர்ணன்:  கவனியுங்கள். தம்பிகளின் மனைவி யாரையும் அவர்கள் அவமதிக்க வில்லை. சகோதர்களின் பொதுவான மனைவியை மட்டுமே அவர்கள் சபைக்கு அழைத்திருந்தனர்.

இன்னொரு அதிகாரி:

அதனால் நீங்கள் செய்தது சரியாகிவிடாது. இ.பி.கோ 376ன் படி கண்டிப்பாக தண்டனைக்குரிய குற்றம் அது.

12203வது கர்ணன்:

அதெல்லாம் நடந்து முடிந்த பிரச்சனை.  பாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளையும் இப்போது கைது செய்தாயிற்று.

அவர்களின் வழிவந்த   பெண் அதிகாரிகள் இருவரையும் கைது செய்தாயிற்று. 

இவர்களை அழித்துவிட்டு நம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பாரத தேசம் முழுவதும்  100 கிராமங்களில் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டால்  இந்த பாரத தேசமே மீண்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வந்துவிடும்.

===================================================

இரண்டு பெண்களும் மன்னரிடமும் தளபதியிடமும் தனியே பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். தனியே பேசுவதை சபையினர் முணுமுணுத்தலாக எதிர்த்தாலும்  நேரடியாக சொல்ல் யாருக்கும் தைரியம் வரவில்லை.

முக்கிய அலுவல்கள் இருப்பதால் அதை முடித்துவிட்டு  மாலை நேரத்தில் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு  சென்று விடுகிறார்கள்

=========================================================

மன்னர் துரியோதனனும் தளபதி கர்ணனும்  ஆயுதசாலைக்குச் செல்கிறார்கள். முக்கிய கேந்திரத்தில் உள்ள கண்ணாடி அறைக்குச் செல்ல அங்குள்ள மாயக்கண்ணாடிகள் மூலமாக மீதமுள்ள 99 கிராமங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார்.  மறைமுகத் தாக்குதலுக்கு இதுவே சரியான சமயம் என்றும் அனைவரும் தயாராக இருப்ப அறிவுறுத்துகிறார்கள்.

================================================================

மாலையில் பெண்களை சந்தித்த மன்னரும் தளபதியும் மிகவும் குழம்பிப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பலத்த சண்டை ஏற்படுகிறது.

பூட்டிய அறையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மற்றவர்கள் குழம்புகிறார்கள்.அறையில் ஏற்படும் அதிர்வுகள் மட்டும் மற்றவர்களுக்கு புலப் படுகிறது.

=============================================================

கம்புவீரன் முக்கிய கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து கட்டுப் பாட்டு அறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இந்திய ராணுவ தளபதிகளை  தொடர்பு கொண்டு அனைத்து நிலையங்களைப் பற்றியும் தகவல் கொடுக்கிறார்.

இந்திய ராணுவம் அனைத்து கிராமங்களையும் சுற்றி வளைக்க வலிமைவாய்ந்த கத்தி மற்றும் கதாயுதங்களின் முன் ஒவ்வொரு குண்டாக போட்டுச் சூடும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு இந்திய ராணுவம்  அனைவரையும் வீழ்த்துகிறது.

உள்ளூரில் நடக்கும் சண்டையில் கம்புவீரன் அனைவரையும் அழித்துவிடுகிறான்.  கம்புவீரனின் கையில் சக்கர ஆயுதம் வந்து நிற்கிறது. கம்புவீரனையும் மற்ற பெண்களையும் கொண்டுவந்த சேர்த்த பெரிய வகை கருடன் அவர்களின் அருகில் வந்து அமர்கிறது. (மீண்டும் முதல் பகுதியில் வந்த கருடனை நினைவில் கொண்டுவந்துவிடுங்கள்)..

Saturday, January 23, 2010

இது ஒரு ஃபாண்டஸி கதை

முன்னறிவிப்பு:- இந்தக் கதையில் லாஜிக் இருக்காது. செக்ஸ் நிறைய இருக்கும். தற்கால அவலங்களை சாடுவதாக அங்காங்கே வசனங்கள் வரும்.  முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக முயற்சி செய்ய பட்டிருந்தாலும் சில நேரங்களில் கொஞ்சம் கொடுமையும் வருவதால் மனம் திடமானவர்கள் மட்டும் படித்தல் நலம். ஆனால் இது ஆயிரத்தில் ஒருவனின் தழுவல் அல்ல.., 


கொடைக்கானல் மலையுச்சியில் இருந்து கீழே பார்த்தால் அதல பாதாளத்தில் இருக்கும் ஒரு கிராமம் அது. அதற்காக மலையின் அடிவாரம் என்று நீங்களாக கணக்குப் போட்டுக் கொள்ளக் கூடாது. அந்த பாதாள லோகத்தில் ஒரு ஓட்டுச் சாவடி. அந்த மக்களுக்கு  ஓட்டுரிமை இருப்பதே தெரியாமல் வசித்து வருகிறார்கள். ஆனால் நூறு சதவிகிதம் ஓட்டுப் பதிவு ஆகிக் கொண்டு இருக்கிறது. அங்கே பணிக்கு வரும் அரசு அதிகாரி ஒருவர் இதைக் கண்டுபிடித்து விடுகிறார்.உடனே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி அந்த கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். உயர் அதிகாரிகளும் உடனே அதற்காக எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார்  அந்த அதிகாரி. அத்தோடு காணாமல் போய் விடுகிறார்.

==================================================


அவரது தோழர் இன்னொரு அரசு அதிகாரி இருக்கிறார். அவர் சத்திய மங்கலத்திலிருந்து பணிமாறுதல் வாங்கிக் கொண்டு அந்த கிராமத்திற்குச் செல்கிறார். அவரும் காணாமல் போய்விடுகிறார்.

=====================================================


உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப் படுகிறது. சாட்டிலைட்டின் உதவியோடு ஒரு தங்கப் பேழையும் பட்டுத்துணிகளும் கண்டறியப் படுகின்றன. அந்தப் பட்டுத்துணிகளில் அந்த கிராமத்திற்குச் செல்லும் வழிகள் கண்டறியப் படுகின்றன. அவைகளில்   கொடுத்துள்ளப் படி அந்த கிராமத்திற்குச் செல்லும் வழியானது லண்டன் நகரத்திலிருந்து தொடங்குகிறது. பின்னர் கோவா வருகிறார்கள். கோவாவிலிருந்து புகை வண்டி மூலமாக சென்னை வந்து சென்னையிலிருந்து மதுரைவரை சாலை பயணமாகவும். பின்னர் வத்தலகுண்டுவரை மாட்டுவண்டிப் பயணமாகவும் வத்தலக் குண்டிலிருந்து கொஞ்சம் நடை ப் பயணம் சென்று பின்னர் காட்டுக்குள் கிடைக்கும் வழிகளெல்லாம் பயணித்தால் கிடைக்கும் வழிகள் மூலமாக அந்த கிராமத்திற்குச் சென்றடைய முடியும் என்பதாக அமைகிறது. அந்தக் காட்டுக்குள் வரும் மிருகங்கள் தரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அந்தக் காட்டுக்குள் பிறந்த ஒரு ஆளை பிடிக்கிறார்கள்.

குழுவில் முக்கியப் பொறுப்புகளில் உடல் வலிமைமிக்க பெண்கள் நியமிக்கப் படுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக கிராமத்தான் கம்புவீரன் நியமிக்கப் படுகிறான்.

கம்புவீரன்: ஒரு குவாலிஸ் எடுத்துக்களாம் சார். நேரா வத்தலக்குண்டு தாண்டி அந்த கிராமம் வரைக்கும் போயிடலாம். அப்புறம் எப்படின்னு அங்க விசாரிச்சுக்கலாம்.

முக்கிய பொறுப்பாளர்: இப்படி பொறுப்பில்லாம போய்த்தான் இரண்டு அரசு அதிகாரிகள் என்ன ஆனாங்கன்னே தெரியல. பேசாம பட்டுச் சுவடிய பின்பற்றுங்க..


கம்புவீரன்: அப்பிடியில்ல சார். எப்படியும் சுத்தி சுத்தி வத்தலக் குண்டுதானே வரப்போறோம். அப்புறம் ஏன்சார்.

மு.பொ. இதுக்குத்தான் படிச்ச பசங்கள வேலைக்கு வெக்கணும்கறது.  இத்தன பேர் ஆலோசனை பண்ணி போட்ட திட்டம் இது. அந்த கிராமத்துக்கு நாம நன்மை செய்தே தீர வேண்டும். அதுக்காக எவ்வளவு இடையூறு எவ்வளவு செலவு வந்தாலும் நாங்க கவலைப் பட போறதே இல்ல.

அந்தக் காலத்தில பல ஆராய்ச்சிகள் செய்து நம்ம முன்னோர் கண்டுபிடிச்ச பட்டுப் பத்திரம்  இது. காரணம் இல்லாம எதையும் சொல்லி இருக்க மாட்டாங்க. நீங்க பேசாம ஃபாலோ பண்ணுப்பா..,

இல்லேன்னா மக்காச்சோளவீரன் தயாரா இருக்கான். அவனைக் கூட்டிட்டுப் போய்விடுவோம்.

கம்புவீரன்:- என்னமோ போங்க.., நல்ல சம்பளம் கொடுக்கறீங்க.., செய்வோம்

=======================================================================

லண்டன் மாநகரில் அவர்களுக்காக பாய்மரக்கப்பல் தயாராக இருக்கிறது.

கம்புவீரன்: யோவ் என்னய்யா இது.., இப்பல்லாம் போக்குவரத்து பயங்கர வேகம்யா.., இப்பப் போய், பாய்மரப் படகு, நீராவி எஞ்சின் அப்படின்னு..,

முக்கியப் பொறுப்பாளர்:-  கம்புவீரா., நீ இப்ப டம்மி பீஸு, வத்தலக் குண்டு வந்த பிறகு தான் உன் வேலை ஆரம்பிக்கும். அதுவரை அடக்கிவாசி

================================================================
கப்பலில் கேப்டன் தனித்தன்மை வாய்ந்த உடையுடன் இருக்கிறார்.

மு.பொ.:- கப்பலை நேராகச் செலுத்துங்கள்

கேப்டன்:- சார் நேரா போனா மேற்கிந்திய தீவுகளுக்குத்தான் போகும். அந்த வழியில போனா என்ன ஆகும்னு அமெரிக்கோ வெஸ்புகி சொல்லிட்டாரு.

மு.பொ. :- எங்க நாட்டுல ஒரு கிராமமே என்ன ஆச்சுன்னு தெரியல, உனக்கு வரலாற்று நக்கல் கேட்குதா போய்யா , சொன்ன வேலையை மட்டும் செய்.

====================================================================

படகு போகும் வழியில் கப்பலின் கேப்டன் முக்கிய பெண் அதிகாரியைப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டே வண்டியை ஓட்ட கப்பல் ஒரு பெரிய பனிப் பாறையில் முட்டி பாய்மரங்கள் எல்லாம் சேதாரம் ஆகிவிடுகின்றன. கப்பலில் இருந்த முக்கிய பணியாளர்கள் இறந்து விடுகிறார்கள்.  சில பெண் அதிகாரிகள் மற்றும் கம்புவீரன் ஆகியோர் மட்டும்  பக்கத்து தீவுக்குள் கரை ஒதுங்குகிறார்கள்.

அந்த தீவில் கறுப்பாக ஆஃப்ரிக்க தேசத்தவர் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் இவர்களை கைது செய்து அவர்களின் தலைவன் முன்னாள் நிறுத்துகிறார்கள்.

தலைவன்:- ஆஹா.., நம் வம்சம் விருத்தி செய்ய சிறந்த பெண்கள் இவர்கள்தான். நாளை பூஜை நடக்கட்டும்.

மூவரும் நடுமைதானத்தில் கட்டிவைக்கப் பட்டிருக்கிறார்கள்.  பல நூறு ஆண்கள் நிர்வாணமாக மது அருந்திய படி பூஜை நடக்கிறது. .....................,
..............................................,
................................                            .......................              ..........................


...............................................................,







...........................



........................................( நடப்பதை எல்லாம் எழுதினால் ஓ.எஸ். கரப்ட் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் வெறும் புள்ளிகள் மட்டும் வைக்கப் பட்டுள்ளன)


இந்த நேரத்தில்  கட்டை அவிழ்த்துக் கொண்ட கம்புவீரன்  உடன் இருக்கும் பெண் அதிகாரிகளுடன் அந்த இடத்தைவிட்டு தப்பி விடுகிறான்.  தனது உடையை இரண்டாக கிழித்து அவர்களை அணியச் சொல்லி விடுகிறான்.  அங்கிருந்து பறக்கும் ஒரு பெரிய பறவையின்  காலில்  கம்புவீரன் தொங்க அவரது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு  பெண்கள் தொங்க  பெரிய பறவை பறந்து வந்து  ஓரிடத்தில் போட்டு விடுகிறது.

எந்த இடம் என்றே தெரியவில்லையே..,

கொஞ்ச தூரம் நடந்து போவோம்.  எதாவது தென்படுகிறதா பார்ப்போம்.

சொல்லிய படியே மூவரும் நடந்து அந்தக் காட்டுக்குள் செல்கிறார்கள். போகும் வழியில் அவர்களது வழியைக் குறுக்கிடும் யானையை அடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டு நடக்கிறார்கள். ஓரிடத்தில்  ஒரு திசை காட்டி கிடக்கிறது.  அதில் வத்தலகுண்டு 30 கி.மீ. என்று எழுதப் பட்டு உள்ளது. ஆனால் அதை கவனிக்காமல் அவர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள்.

உள்ளே செல்லச் செல்ல  ஒரு பாறை தென்படுகிறது.  அந்தப் பாறைக்கு அருகில் ஏதாவது கிடைக்கிறதா என்று கம்புவீரன் பார்க்க உள்ளே இரு நாகரீக மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களிடம் பேச கம்புவீரனுடன் வந்த பெண்கள் முற்படுகிறார்கள்.

அப்போது அந்த மனிதர்கள் தங்களை கவுரவர்கள் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்ன கவுரவர்களா..,

ஆமாம். பாரதப் போரின் முடிவில் உயிர்பிழைத்த கவுரவர்கள் இந்தப் பகுதியில் குடியிருப்பதாகவும் நல்ல செய்தி கிடைத்தால் திரும்பவும் பாரத தேசத்திற்கு திரும்பலாம் என்று இருப்பதாகவும் தங்களை பாண்டவர்களின் ஒற்றர்கள் என்று கைது செய்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவுரவர்களின் மன்னன் 110 ஆம் துரியோதனன் அங்கு வந்து மூவரையும் கைது செய்கிறான்.

அடுத்த பாகத்தில் கண்டிப்பாக முடிந்துவிடும்.

Tuesday, January 19, 2010

ஒரு கப் காஃபியும் பழைய புடவையும்

ரேஷ்மாவிற்கு எப்படி இதை கணவனிடம் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

கணவனின் பேச்சை மீறி எதையும் செய்ய யோசிக்கும் சராசரிப் பெண்ணாக அவள் இருந்துவிட்டாள். இருந்தாலும் கணவன் தடுத்தாலும்கூட லட்சுமி பாட்டிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. அதுவும் லட்சுமி பாட்டியே ஏதாவது பழைய புடவை கொடு என்று கேட்டபோது மறுக்கத் தோன்றவில்லை.  பார்த்துவைப்பதாக சொல்லி அனுப்பி விட்டாள்.


லட்சுமி அந்த பகுதியில் வசிப்பவர்தான். தெருவில் வசிப்பவர்கள் சொல்லும் சின்ன சின்ன வேலைகள் செய்து வருவார். அந்த பகுதி மக்கள் கொடுக்கும் கொஞ்சம் உணவு, கொஞ்சம் உணவுகளில் காலம் தள்ளி வந்தார்.


ஒரு முறை லட்சுமி பாட்டிக்கு பழைய சோறு கொடுக்கும்போது ரேஷ்மாவின் கணவன் பார்த்துவிட்டு தடுத்துவிட்டான். அன்று பெரிய சண்டை. இன்னொரு நாள் பாட்டியிடம் ஒரு ஷாம்பு சாஷே வாங்கி வரச் சொன்னபோது அப்படித்தான், ஷாம்பு போடாவிட்டால் தலையென்ன கெட்டா போய்விடும் என்று சண்டை. 


சில நாட்களுக்கு முன்கூட லட்சுமி பாட்டிக்கு ஒரு கோப்பை காஃபி கொடுத்திருந்தாள். அப்போதுதான் ரேஷ்மாவின் கணவன் வந்து கோபமாகப் பார்த்துவிட்டுச் சென்றான். நல்லவேளை சண்டை இல்லை என்பதே நிம்மதிப் பெருமூச்சாக இருந்தது.


இருந்தாலும் லட்சுமி பாட்டியின் உதவி இல்லாமல் காலம் தள்ளுவது என்பது அந்தத் தெரு ஆட்களுக்கு சிரமான செயல்தான். அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள் சிறிது நேரமானால் கூட பக்கத்துவீட்டில் சொல்லி லட்சுமி பாட்டியை துணைக்கு இருக்கச் சொல்வார்கள். நம்பகமான பாட்டிதான் அவர்.


மாலை நேரத்தில் ஆரம்பித்தாள் ரேஷ்மா.


லட்சுமி பாட்டி பழைய புடவை ஏதாவது இருந்தா கேட்டாங்க.., நானும் தர்ரேன்னு சொல்லிட்டேன். சொல்லிவிட்டு கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


லட்சுமிப் பாட்டியே கேட்டாங்களா..,


ஆமா அவங்களே கேட்டாங்க..,


கொடுத்துட்டயா.., இனித்தான் கொடுக்க போறீயா..,


சும்மா கிடக்கறதுதானே.., கொடுக்கலாம்னு இருக்கேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கொடுக்கலாம்னு...., கொஞ்சம் எரிச்சலால்தான் சொன்னாள். இதைக்கூடவா மறுப்பார்கள்.


அவங்க கேட்டாங்க அப்படிங்கறதுக்காக பழைய புடவை கொடுத்துடாத.., 


ரேஷ்மாவுக்கு கோபம்தான் வந்தது.


புதுசாவே இரண்டு புடவை எடுத்துக் கொடுத்துவிடு. அந்த காலத்தில் பெரிய வாழ்வு வாழ்ந்தவங்க அவங்க.
அவங்களுக்குப் போய் பழசெல்லாம் கொடுத்தா நமக்குத்தான் பாவம் வரும்.  இந்தத் தெருவே அவங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கு. பாவம் பசங்க சரியில்லை. பாட்டி இப்படி இருக்காங்க.


ரேஷ்மாவுக்கு என்னவோ தெரு மக்கள் இன்றும்கூட லட்சுமிப் பாட்டிக்காக கடன் பட்டிருப்பதாகவே பட்டது.

Monday, January 18, 2010

நன்றி,வாழ்த்துக்கள் மற்றும் சபதம்

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்

என்ற கொள்மையுடன் ஆரம்பிக்கப் பட்ட நமது வலைப்பூ வலையுலகில் பல போட்டிகளை சந்தித்து வந்துள்ளது. நமது வலைப்பூவுக்கும் 189 பிந்தொடர்பவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இருந்தாலும் ஒரு மொக்கை வலைப்பூ என்ற பிம்பத்துடனேயே காலத்தை ஓட்டி வரும் நமது வலைப்பூ தமிழ்மணம் நடத்திய போட்டிகளின் முடிவுகளின் படி அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதாகவே கருதுகிறேன். இந்த வலைப்பூவிலிருந்து அனுப்பப்பட்ட 


சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?


விலைமகளே பரவாயில்லை 


ஆகிய இரண்டு இடுகைகளுமே அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தகுதிப் பெற்று இருந்தது. இந்த வலைப்பூவிற்கு பதிவர்கள் மத்தியில் கிடைத்த பெரிய அங்கீகாரமாகவே அமைந்திருந்தது. 


அந்த இடுகைகளுடன் பெரிய பெரிய தலைகளுடன் போட்டிபோட்டதில் நம்மைவிட அதிக ஆதரவு பெற்ற இடுகைகள் நிறைய இருந்த காரணத்தால் அந்த இடுகைகள் வெற்றிக் கனியைப் பெற்று விட்டன. 


எனவே அவர்களுக்கும், அவர்களோடு போட்டியிட்டு வென்ற  மற்ற இடுகைதாரர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


பெரிய பெரிய தலைகளின் இடுகைகளோடு நமது இடுகையையும் இடம் பெற வைத்த தமிழ்மண நிர்வாகத்திற்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஓட்டுப் போட்ட வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஏதோ கிவ் அண்ட் டேக் பாலிஸி மாதிரி ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்தாலும், நம்மை ஊக்குவித்துக் கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


வாசகர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருந்தால் நமது வலைப்பூவில் வரும் எழுத்துக்கள் விரைவில் தத்துவங்களாகக் கருதப் படும் காலம் விரைவில் வந்து விடும் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




Friday, January 15, 2010

கிரகம், கிரகஸ்தன்

சூரியனைச்

சுற்றும் கோள்கள்

குறிப்பிட்ட காலத்தில்

குறிப்பிட்ட பாதையில்

குறிப்பிட்ட வேகத்தில்

துளியும் மாறாமல்

பிசகாமல்

யோசித்து

தானும் குழம்பி

பிறரையும் குழப்பாமல்

தானுண்டு

தன்வேலையுண்டு

என்றிருக்கும்

கோள்களுக்கு இருக்கும்

பெயரை

மனைவிக்கு வைத்த

மாயம் என்ன?

காரணம் தெரியமால்

கழுத்தைச் சொறிந்த

கணங்கள் உண்டு.

கிரகம் பிடித்தால்

தெய்வதிற்கே

சக்தி கிடையாதாம்.

ந்டைசாத்தி

தெய்வத்தையே

பாதுகாக்க வேண்டுமாம்.

அப்ப சரி

அவ்வளவு

பயமும் பாதுகாப்பும்

தேவையாக

இருக்கக்கூடிய

ஒன்று

கிரகம்தான்.

அதாகப் பட்டது

நீயும்

கிரகஸ்தன் தான்

Thursday, January 14, 2010

எந்திரன் படத்திற்கு விளம்பரம் செய்வது எப்படி?

தமிழ் திரையுலகத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டை தன்னுள் எடுத்துக் கொண்டு வரும் படமாக எந்திரன் வர இருக்கிறது. எந்திரன் பட்ஜெட் ஏறக்குறைய தமிழ்திரையுல பட்ஜெட்டாகவே அமைகிறது, தமிழ் திரையுலகத்தினர் நல்வாழ்வு என்பது தமிழ்மக்களின் நல்வாழ்வோட்டு பின்னிப் பினைந்து இருப்பதால் எந்திரன் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதால் ஏதோ நமக்குத் தோன்றும் சில யோசனைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.

பாபா, ஆளவந்தான், கஜேந்திரா போன்ற மாபெரும் சரித்திர படங்களின் வரிசையில் எந்திரன் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  போட்டிக்கு குருவி, ஏகன் போன்ற படங்கல் ரீ ரிலீஸ் ஆகிவிடுமோஎன்ற அச்சமும் சிலரின் நெஞ்சில் இல்லாமல் இல்லை. பாபா படம் வெளியான போது திருப்பூரில் 500 ரூபாய் கொடுத்து நண்பர் ஒருவர் படம்பார்த்தார்.

இப்போது  திண்டுக்கல் சாரதி, காதலை தேடினேன் போன்ற படங்களையே மாபெரும் வெற்றிப் படம் ஆக்கிய சன் டி.வி.க்கு நாமும் சில யோசனைகளைக் கூறுவோம். விடுபட்டுப் போயிருந்தால்  பின்னூட்டங்களில் நீங்களும் கூறுங்களேன்.

யோசனை 1:-

படத்தின் ஸ்டில்களை ஊர் பெரிய மனிதர்களிடன் காட்டி  படத்தைப் பற்றி ஒரு கருத்தினை வாங்கி சன் டி.வி.யில் ஒளிபரப்பலாம். மக்கள் ஸ்டில் என்பதை திரைப்படம் என்று நினைத்துக் கொண்டு படம் பார்ப்பார்கள்.  இணையத்தில் வந்திருக்கிறதா என்பதை தேட ஆரம்பிப்பார்கள் பயங்கர விளம்பரம் கிடைக்கும்.

யோசனை 2=

சன் டி,டிஎச் சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ரகசிய எண் கொடுத்து அதற்கான கட்டணமாக குறைந்த பட்சம் 5000 வசூல் செய்யலாம். அதன் நடுவே  பத்துக்கு பத்து என்ற விகிதத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பி பணத்தை அள்ள முடியும். அதில் இரண்டு நிமிடங்கள் எந்திரன் விளம்பரமே போட்டால் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆசை அனைவரின்ன் மனதிலும் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.

யோசனை 3=

இப்போது பிரிண்ட் போடுவதற்கு ரூ 50,000 தான் செலவாகிறதாம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ரீலீஸ் செய்தால் படத்தைப் பற்றிய பேச்சு வருவதற்குள் பெரிய அளவில் காசு பார்த்து விடலாம். காசுக்கு காசும் ஆச்சு கின்னஸுக்கு கின்னஸும் ஆச்சு.

யோசனை 4=

படம் வெளியாகும் திரையரங்கின் இடைவேளையின் போது சூப்பர் ஸ்டாரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கையைக் காட்டச் சொல்லலாம். ரசிகர்கள் திரையரங்க வாசலில் குவிந்து இருப்பார்கள். நான் எப்ப வருவார் எப்படி வருவார்னு தெரியாட்டியும் கரெக்ட்டா வந்து கையாட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும் கண்டிப்பாக படம் பார்க்க வந்து விடுவார்கள்.

யோசனை 5=

படம்பார்க்க வரும் ரசிகர்கள் டிக்கெட்டின் பாதியை அனுப்பச் சொல்லலாம். அதில் தேர்ந்தெடுக்கப் படும் ரசிகர்களின் வீட்டிற்கு ஐஸ்வர்யாவை அனுப்பி பொங்கல் வைக்கச் சொல்லலாம். தமிழர் புகழை நிலைநிறுத்திய பெருமை கிடைக்கும்.

யோசனை 6=

ஒரு நாள் எந்திரனின் வசூலை திருட்டி டிவிடியால் பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண நிதியாகக் கொடுத்தால் அகில உலக திரையுலகமும் எந்திரன் வெற்றிக்காக பாடுபடும்.

யோசனை 7=

படத்தில் சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.

யோசனை 8=

அமிதாப் வழியை பின்பற்றும் ரஜினி இந்தப் படத்தின் வெளியீட்டின்போது குதா கவா படம் வெளிவந்த போது அமிதாப் கடைபிடித்த வழியை பின்பற்றலாம். ஒரு அருமையான ஒற்றுமை. அந்தப் படத்தின் நாயகி அப்போதைய மூத்த நாயகியான ஸ்ரீதேவி.

யோசனை 9=

படம் பூஜை போட்டு இரண்டு ஆண்டுகள்  நிறைவடைந்ததை முன்னிட்டு ஓராண்டுக்கு மேல் திருட்டு டி.வி.டி வைத்திருப்பவர்களின் உரிமையை ஓரளவு கட்டணம் பெற்றுக்கொண்டு உண்மை என்று அறிவித்துவிடலாம். இதன்மூலம் ஓரளவு வருமாணமும் விளம்பரமும் கிடைத்துவிடும்.

யோசனை 10=

எந்திரன் படம்  injar  என்ற ஃபெரென்ஞ் படத்தின் ரீமேக் என்று ஒரு வதந்தி கிளப்பி விட்டு   injar  என்ற பெயரில் எந்திரனை டப் செய்து வெளியிட்டு உலக அளவில் பணத்தை அள்ளி விடலாம்

டிஸ்கி:-மீள்பதிவுதான்

Tuesday, January 12, 2010

நான் சுத்தமானவள் (நடப்பது 21)

பிள்ளைங்களா......, என்ற குரலோடு வந்தாள் சவீதா. அவள் எப்போதும் அப்படித்தான் சகமாணவிகள் ஜூனியர் மாணவிகள் எல்லோரையும் பிள்ளைங்களா என்றுதான் அழைப்பாள்.  சுமத்ரா  சவீதாவின் குரலைக் கேட்டதும் சற்று நினறாள். ஒரே வகுப்பு மாணவிகள் என்பதால் சேர்ந்தே மாணவியர் விடுதிக்குச் செல்லலாம் என்ற யோசனையும் ஒரு காரணமாக இருந்தது.  சவிதாவும் சுமித்ராவும் சேர்ந்தபின் அவர்கள் இருவர் மட்டுமே கல்லூரியில் இருந்து மாணவியர் விடுதியை நோக்கிச் செல்வது போல இருந்தது. மற்ற மாணவியர் யாருமே அவர்கள் இருவருடம் வரத் தோன்றாதது போல இருவரும் தனித்து விடப் பட்டிருந்தனர்.



சுமித்ரா உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்..,

சொல்லு.., தான் மாணவர் தலைவி என்பதால் ஏதோ பிரச்சனையை தன்னிடம் சொல்லப் போகிறாள். தான் போய்தான் பஞ்சாயத்துச் செய்ய போகிறோம் என்பது போல இருமாப்புடன் கேட்டாள் சுமித்ரா

நீ தீபக் குமாரோட சுத்தரயாம்..,  ஹாஸ்டல்ல பேசிக்கறாங்க...,

சுமித்ராவுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஹாஸ்டல்ல பேசிக்கறாங்களா..,  காலேஜ்ல பேசிக்கறாங்களா..,

இல்ல  எல்லோரும் ஒரு மாதிரியா பேசறாங்க (அதற்கான காரணத்தை அறிய இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்)

நம்ம பசங்கள சுத்த மோசம்டி. எப்ப பாரு அசிங்க அசிங்கமா பேசிட்டு இருப்பாங்க..,

இல்லடி இப்ப கொஞ்சம் வேறமாதிரி சொல்றாங்க..,

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறீங்களாம். பல இடங்களும் போறீங்களாம். ரொம்பவே தப்புத் தப்பா பேசறாங்க..,

எனக்கு எல்லாம் மரத்துப் போச்சுடி.., ஆரம்பத்தில இங்கிலீஷ் குப்பானோட சேர்த்துப் பேசுனாங்க..,  அதற்கப்புறம் சுமனோட சேர்த்துப் பேசுனாங்க

இப்ப தீபக்கோட சேர்த்துப் பேசுறாங்க..,

ரொம்ப தத்துவஞானி மாதிரி பேசாதடி,  முதல் ரெண்டும் வேற..,  இது வேற

ஏண்டி என்னப் பார்த்தா உனக்கு எப்படித்தெரியுது? கொஞ்சம் விரக்தி மற்றும்  கடும் கோபம் கலந்த கலவையாக சுமித்ரா பேசினாள். 

கொஞ்சம் கோபம் படமா நான் சொலறதா கேளு..,

நான் ஏன் நீ சொல்றத கேக்கணும்.  நீ அந்த பசங்க பேசுற பேச்சக் கேட்டுக்கிட்டு என்ங்கூட சண்டைக்கு வற்ர..,

நான் உங்கூட சண்டைக்கு வரல..,  தவிரவும் இப்ப நான் சண்டை போட காரணமும் இல்ல. கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.

நீங்களெல்லாம் என்ன புரிஞ்சிக்க மாட்டீங்க ஆனா நான் உங்கள புரிஞ்சிக்கணுமா..,

இவனுக்கு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஆளோட சேர்த்து பேசுவானுக அதுக்கெல்லாம் நான் டென்சன் ஆக முடியாது..,  அவளுடைய கோபத்தில் அவளுடைய மூக்கு,நெஞ்சு எல்லாம் வெடித்துவிடுவது போல பேச ஆரம்பித்தாள்.

இங்க பாரு சுமித்ரா முதல் இரண்டு மேட்டரும் பசங்க சும்மா சாதரணமா  பேசுனது.  அத யாருமே என்னிக்குமே பெரிசா எடுத்துக்கல..,  அதெல்லாம்  அப்பவே போச்சு. ஆனா இந்த மேட்டர் அப்படி இல்ல..,

ஏண்டி சேர்த்து பேசரவங்க பேசுவீங்க.., அதுல இதெல்லாம் சும்மாவாம். அதெல்லாம் சீரியஸாம். உன்ன இப்படி நிறையப் பேரோடு கிசுகிசுக்க விட்டு அப்புறம் அதெல்லாம் சும்மா அப்படின்னா நீ அமைதியா போயிடுவயா..,

வெட்டியா கோபப் பட்டு பேசிட்டு இருக்காத..,  நீயும் தீபக்கும் இருக்கும் புகைப்படத்தை நாங்க பார்த்தோம். அதுனாலதான் உங்கிட்ட பேசி புரியவைக்கலாம்னு பார்த்தேன். நீ கோபப் படறதப் பார்த்தா ஏண்டா பேசுணொம்னு இருக்கு. சாரிப்பா.., நான் வாரேன்.  சூடாக சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்த சவீதா சொத் என்று சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். சுமித்ரா  மயங்கிக் கிடந்தாள்.

ஏனோ கிராமத்து மருத்துவச்சிகளெல்லாம் சவீதாவின் நினைவுக்கு வந்தார்கள்.
===============>>>>>>>  தொடரும்>>>>>> தொடரும்>>>>>>தொடரும்

இந்தக் கதையின் முந்தைய இருபது பாகங்களுக்கு  இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்   

இருபது வருஷமா தேங்காய் ஸ்ரீனிவாசன் என்ன செய்தார்னு பார்க்க இந்த காணொளியைப் பார்த்து விடுங்கள்



Friday, January 8, 2010

அருளும் பொருளும் கூட்டிய பின்னூட்டம்

பஞ்சவன் மாதேவி பற்றி கேள்வி எழுப்பி நான் கொடுத்த இடுகைக்கு (இடுகை தழுவல்தான்) மறுமொழி கொடுத்த
சங்கர் ,சிங்கக்குட்டி,Starjan ( ஸ்டார்ஜன் ),ஸ்ரீராம்,dondu(#11168674346665545885) s,அக்பர், கடைக்குட்டி,  seemangani உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
=====================================================================


அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.ஆனால் களம் முதல் பாத்திரங்கள் முதல் அனைத்தும் அப்பட்டமான பொ.செ.னின் தழுவலாக எழுந்தது உடையார்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக பொ.செ.னின் நிழலாகக் கூட வர உடையாரால் முடியவில்லை;ஒரவேளை வேறொரு வரலாற்றுச் சூழலை மையமாக எடுத்துக் கொண்டு எழுதி இருந்தால் கூட உடையார் இன்னும் நன்றாக வந்திருக்கக் கூடும் !

பாத்திரப்படைப்புகளைப் பொறுத்த வரை,கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.

பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் பா.கு.அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.

உண்மையில் ராஜராஜனின் பட்டத்து ராணியாக அமர்ந்தவள் வானவன் மாதேவி;அவள் கல்கி சித்தரித்த வானதி அல்ல.

வானதி என்று கல்கி குறிப்பிட்ட பாத்தரத்துக்கு பிறந்தவனே ராஜேந்திரன்;அவனை வளர்க்கும் பொறுப்பையும் குந்தவையே ஏற்றுக கொண்டிருக்கலாம் என்று வரலாறு சுட்டுகிறது.

உடையாரைப் பொறுத்த வரை அது ஒரு இலக்கியத் தரம் மிக்க கதையின் மாதநாவல் காப்பி என்றுதான் சொல்ல வேண்டும்.அநியாயமாக அதற்கு 6 பாகங்கள் வேறு.முழுக்கப் படிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.

இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..

===================================================================

ஒரு இடுகையைவிட அதில் வரும் பின்னூட்டங்கள் இடுகையை எவ்வளவு தூரம் உயர்த்தும் என்பதற்கு இந்தப்பின்னூட்டமே ஒரு அழகிய உதாரணம். நண்பர்க்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்வோம்.

பின்னூட்டம் பற்றிய நமது பகிர்தல்கள் சில..,

----------------------------------------------------------------------------------------------

// அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.//

தங்களின் வருகைக்கும் கூடுதல் தகவல்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் நன்றி

பொ.செ.வின் தொடர்ச்சியாக எழுதப்பட்டதாக பேசிக் கொள்கிறார்கள்

----------------------------------------------------------------------------

//அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.//

உண்மைதான் ஐயா, அதுவும் பொ.செ. போன்ற செம்மை இலக்கியங்களை அவற்றைப் படைத்தவர்களால் கூட பிந்தொடர்ந்து எழுத முடியுமா என்பது கேள்விக் குறியே

------------------------------------------------------------------------------------
//கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.//

நான் நந்தினியைக் கற்பனை பாத்திரமாகப் பார்க்கவில்லை. பொ.செ.வில் சரித்திர ஆதாரத்துடன் கூடிய ஒரு உண்மைப் பாத்திரத்தின் சில குணாதிசயங்களை மட்டும் எடுத்து தனி பாத்திரமாக உலவவிட்டதாகவே கருதுகிறேன்.

இதைப் படித்துவிட்டீர்களா



------------------------------------------------------------------------------------

//பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் //

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

//அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.//

அதற்காகத்தான் அவ்வாறு செய்து விட்டாரோ என்னமோ

--------------------------------------------------------------------------------------------------

//ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.//

எனக்கென்னவோ சில அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கான ஆதாரங்கள் கல்கிக்கு கிடைத்திருக்கக்கூடும். அதை வெளியிட்டுவிடக் கூடாது என்ற உறுதியை மேற்கொண்டு கல்கி முடித்திருப்பார் என்று தோன்றுகிறது

-----------------------------------------------------------------------------------------------------
//இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..//

முதல்முறை படிக்கும்போதே ஒரே மூச்சில் படிக்கத்தூண்டும் வெறி ஊட்டும் கதை அது

-----------------------------------------------------------------------------------------------------

இது பற்றி பலரும் பல இடுகைகளில் பகிர்ந்து கொண்டிருந்தாலும் மீண்டும் ஒரு பகிர்ந்து கொள்ளும்போது மகிழ்வாகவே இருக்கிறது.

Wednesday, January 6, 2010

நந்தினி =/= பஞ்சவன் மாதேவி

பொன்னியின் செல்வன் பதிவெழுதி ரொம்ப நாளாச்சில்ல..,

ஏதாவது எழுதுவோம் என்று சில மாதங்களாக யோசனை இருந்தது.

அப்போது இந்த தளத்தில்  பஞ்சவன் மாதேவி பற்றி எழுதியிருக்கிறார்கள்.

பஞ்சவன் மாதேவி ராஜராஜ சோழனின் மனைவி என்பதற்கு உடையாரை சாட்சி சொல்லுகிறார்.

பஞ்சவன்மாதேவி ராஜேந்திரனின் மனைவி என்பதற்கு உளியின் ஓசையைச் சாட்சி சொல்லுகிறார்.

அந்தக் கதையில் நந்தினி மட்டும்தான் ஒரு குழப்பமான படைப்பு என்றால் பஞ்சவன் மாதேவியுமா?

இல்லை குந்தவை மாதிரி இரண்டுபேர்களா?

உண்மையை நிலையை யாராவது சொல்லுங்களேன்.

பின்குறிப்பு:-
உடையாரின் சில பக்கங்கள் படித்ததுண்டு. அதுவும் விவாதங்களில் பாலகுமாரன் ரசிகர்களை திட்டுவதற்காக..,

உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.

Saturday, January 2, 2010

தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக்

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிட்டன.

அடுத்தக் கட்டமாக வாசகர்களும் பதிவர்களும் பங்கேற்கும் சுற்று நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் படி அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கான  இரண்டு பிரிவு மட்டும் இங்கு பார்ப்போம்.
====================================================================

 பிரிவு: நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்





  1. எல்லைகள் இல்லா உலகம்!







  2. ( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...







  3. நான் கடவுள்







  4. நா.பார்த்தசாரதியின் ‘மொழியின் வழியே’







  5. சுண்ணாம்பு கேட்ட இசக்கி







  6. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி







  7. பெற்றோர்கள் மன்னிக்கவும்







  8. உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!







  9. சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?













  10. ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..



=========================================================================

 பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்





  1. அவர்கள் !!







  2. சாதி ஒழிப்பு: இஸ்லாமே தீர்வு







  3. தந்தியற்ற வீணை







  4. ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?







  5. தலித்தை கொளுத்தினார்கள்







  6. நான் ஒரு கறுப்பினத்தவன், நான் ஒரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்







  7. திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்







  8. விலைமகளே பரவாயில்லை  ======================================================================



 இந்த இரு பிரிவுகளையும் பாருங்கள் . முதல் பிரிவில் 90க்கும் மேற்பட்ட இடுகைகள். பதிவர்களின் வாக்கெடுப்பின்படி அடுத்தக் கட்ட வாக்கெடுப்பிற்கு அனுப்பட்ட இட்டுகைகள்.  இதில் பெரும்பாலானவர்கள்  மிகப் பெரிய வாசகர்கள் கூட்டத்தை தன்னகத்தை அமைத்து வைத்திருப்பவர்கள். அவர்களின் எழுத்தின்மேல் தனிபிரமிப்பே ஏற்படுத்தும் வகையில் எழுதுபவர்கள். இன்றும் பல புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர்கள். இவர்களோடு போட்டி போட என்னை அனுமதித்த அனைத்து பதிவர்களும் நன்றி  நன்றி...,

===============================================================

அப்படியே இடுகைகளுக்கு ஓட்டும் போட்டுவிடுங்கள். ஓட்டுப் போடும் வழிமுறைகளை இந்தச் சுட்டியைத் தட்டி

http://blog.thamizmanam.com/archives/194

http://www.tamilmanam.net/login/register.php தெரிந்து கொள்ளுங்கள்.

மின்னஞ்சலில் வாசிப்பவர்கள் அருள்கூர்ந்து சுட்டிகளின் வழியே பயணம் செய்து வாசகர்களுக்குரிய வாக்குகளை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  முடிந்தவரை 16பிரிவு வாக்குகளையும் வீணாக்காமல் வாக்களித்து விடுங்களேன்..,

Friday, January 1, 2010

புத்தாண்டு ஆஃபர்

அனைவருக்கும்


புத்தாண்டு வாழ்த்துக்கள்..,


வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


நீங்கள் பிந்தொடரும் அனைத்து பக்கங்களையும் நீங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குறீர்கள் என்பதை உறுதி செய்ய ஃபாலோ பட்டனையோ சைன் இன் பட்டனையோ மீண்டும் ஒரு முறை அழுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்..,   உங்கள் நண்பர்கள் நீங்கள் விலகி விட்டதாக வருத்தப் படுவதை இந்த புத்தாண்டு முதல் நாளில் தவிர்த்துவிடுங்கள்.., 

இதன் மூலம் நீங்கள் அந்த தளத்திற்கு வருகை தந்து கொண்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்..,


நட்புகள் செழிக்க

பதிவுலகம் பரவ

வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


Tuesday, December 29, 2009

டபுள் மீனிங் 29-12-09

வழக்கம்போல் சுதந்திரப் பறவையாகவே சுமித்ரா சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ள சாதாரணப் பொறுப்புக்களைக்கூட உடன் படிக்கும் மாணவர்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருந்ததால்  அவளுக்கு தான் ஏதோ ஒரு சாதனை மங்கை போன்ற பெயர் வந்துவிட்டிருந்தது.  அதுவும் சுமன் முன்மொழிந்த நார்த்தி பீஸைத் தோற்கடித்துவிட்டதால் தனக்கு ஒட்டு மொத்த மாணவர்கள் செல்வாக்கும் நிறைந்து இருப்பதாகத் தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருந்தாள்.  அவளை ஓட்ட நினைக்கும் மாணவர்கள் அவள் கையசைத்தாலும் கண்ணசைத்தாலும் சூப்பர் சூப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அவள் தும்மினால் கூட 1967லிருந்து இந்தக் கல்லூரியி இவ்வளவு சூப்பராக தும்ம ஆளே இல்லை என்று சொல்ல ஆரம்பித்திருந்தனர், அதையும் சுமித்ரா நம்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.


இப்படி அதீத நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தவளிடம் உன்னுடன் வந்திருப்பவன் பெயர்  தீஃபக் குமார் என்றதும் அவள் கண்களில் பொறிபறக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் உங்கள் கால்கள் துவளுவது போலத் தோன்றியது.  அவள் த்னியாகத்தான் பொருட்காட்சிக்கு கிளம்பினால் பொருட்காட்சி வாசலில் ஹாய் சொல்லிக் கொண்டு தீபக் குமார் வந்தான். அவளும் ஒரே கல்லூரி என்பதாலும் இப்போதெல்லாம் பலரும் பல பிரச்சனைக்கு தன்னை அனுகுவதாக நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவனுடன் பேசிக் கொண்டுவந்திருந்தாள்.  ஆனால் இவர்கள் இப்படி பேசுவதற்கு உதட்டளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதருவதாகவே தோன்றியது.

தீபக் குமார் அப்போது கையில் பெரிய சைஸ் அப்பளத்துடன் வந்தான். ஒரு அப்பளத்தை  சுமித்ராவிடம் கொடுத்தான். மற்ற மாணவர்களிடம் என்ன பாஸ் நீங்க இதை ஏற்கனவே டேஸ்ட் பண்ணியிருப்பிங்களே...,


பாருடா டபுள் மீனிங் பேசறான். சுமனின் நண்பன் ஒருவன் தனக்கும் தன் அருகில் இருந்தவனுக்கும் மட்டும் கேட்பதுபோல் சொல்லிக் கொண்டது  சுமிதராவுக்கும் சேர்ந்து கேட்டுத் தொலைத்தது. 

இல்லை  எங்களுக்கு இதிலெல்லாம் இண்டரெஸ்ட் இல்ல இது சுமன்..,

நான் அப்படி இல்லப்பா ..,   டேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா சான்ஸ் கிடைச்ச உடனே டேஸ்ட் பண்ணிடுவேன்..,

ஆனால் பாரு..,  இதெல்லாம் ஒருநாள் சாப்பிட்டா ஓ.கே.., டெய்லினா  வயிறும் தாங்காது.., பாக்கெட்டும் தாங்காது..,

ஏண்டா.., இவன் அப்பளத்தைதான சொல்றான்,  எனக்கு என்ணென்னமோ தோணுதுடா..,

ஓ.கே பாஸ் நாங்க கிளம்புறோம். நீங்க நம்ம ஸ்டால பாத்துக்கங்க.., நாங்க சுத்திப் பார்க்கறதுக்கு நிறைய இருக்கு. சுமித்ரா போலாமா?

போம்ம்மா போ..,  போய் சுத்திப்பாரு...,  சுமன் சொன்ன குரல் அவனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது,

தொடரும்............................................................>>>>>

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

============================================================

Monday, December 28, 2009

நீ அறிவாயா?

எழுதிய கடிதம்

உனக்கானது

எழுதிய எழுத்தும்

உனக்காகவே

வடித்திருக்கும்

உணர்வும்

உணக்காகவே..,

கடைசியில்

கையெழுத்திட்டவனும்

உனக்கானவனே..,


உண்மை ஒன்று

உனக்காக

சொல்ல நினைத்தது

ஆனால்

சொல்ல மறந்தது

உனக்காக

அமைந்தது

உனக்கானவனால்

கையெழுத்திடப் பட்டது

வழக்கம்போல்

அடுத்த காகிதத்தில்

அடுத்த உணர்வுகளுடன்

இப்போதெல்லாம்

குப்பைத் தொட்டிக்கு மட்டும்

Friday, December 25, 2009

விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ரீமேக் படம்

விஜய்யின் ரீமேக் படங்களை பார்த்து ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்  வலையுலக கண்மணிகளுக்காக இந்த புதிய ரீமேக் முயற்சி.

இன்றைய விஜய்யின் ரசனைக்கு ஒப்ப, இன்றைய ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில்  இங்கே ஒரு ரீமேக் ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது.

==========================================================================
விஜய்  பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகிறார். வீட்டில் அவர் அப்பா தனது  பல தொழில்கள் சம்பந்தமான டாகுமெண்ட்களை வைத்துக் கொண்டு ஏதாவது ஒன்று நிறுவணத்தை நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆனால் விஜய் தான் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கும் அவரது அப்பாவுக்கும் சண்டை வருகிறது.  அவரது அம்மா இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார். விஜய்  மெரினாவுக்கு நண்பர்களுடன் வந்து விடுகிறார்.

----------------------------------------------------------------------------

நாற்கரச்சாலையில் ஒரு டாப்லெஸ் காரினை பல சுமோக்கள் டயோட்டாக்கள் துரத்துக்கின்றன.  பல வாகனங்களையும் தடைகளையும் தாண்டி வாகனமானது  கத்திபாரா பாலத்தின் மேல் ஏறுகிறது.  காரின் வேகத்தினைக் கட்டுமடுத்த முடியாமல்  தடுமாற அதிலிருக்கும் நாயகி தமன்னா அப்படியே வானத்தில் பறந்துவந்து  மெரினாவில் விழுகிறார்.  அவர் விழும் இடத்திற்கு அருகில்  விஜய் குளித்துக் கொண்டிருக்கிறார்.  இருவரது கண்களும் பேசிக் கொள்கின்றன

இங்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு

விழியில் விழிமோதி இதயக் கதவொன்று திறந்ததே

ஐஸ்ஸும்  ஐஸ்ஸும் க்ராசாகி  ஹார்ட் ஓபன் ஆனதே

கண்ணும் கண்ணும்தான் தெறந்தாச்சு

இப்படி கலவையான பாடல் ஒன்று ஒலிக்கிறது.

-------------------------------------------------------------------------------------

பாடலின் முடிவில்  தமன்னா அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். விஜய்யும் அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து  விஜய்  பைக்கில் சென்னை வீதிகளில் உலா வருகிறார். அப்போது சில சமூக விரோதிகள் அருகில் உள்ள சேரிப் பெண் வம்புக்கிழுக்க  அந்தப் பெண்  அந்த வீதியில் போவோர்  வருவோரையும்  பார்த்துக் காப்பாற்றுமாறு கதறுகிறார்.

அவரது அண்ணா என்ற குரல்  விஜய்  காதில் விழுகிறது.

உடனே அந்தத் தங்கையைக் காப்பாற்ற விஜய் பறந்து வருகிறார்.

அடியாள்: ஏய் யார்ரா நீ.........

விஜய்:  செவுத்தில வந்தா பல்லி..,

பறந்து வர்ரவன் கில்லி.., டா.......

அடியாட்கள் கூட்டத்தினை அடித்து நொறுக்குறார். குறிப்பிட்ட கட்டத்தில் அடியாட்கள் அதிகரித்துக் கொண்டே இருக்க விஜய் அடித்து நொருக்கிக் கொண்டே இருக்கிறார். அப்போது  ராயப்பேட்டை மருத்துவ மனையில் இடம் இல்லை என்று விஜய்க்கு குறுஞ்செய்தி வருகிறது.  உடனே சமுதாய நோக்கு கொண்ட விஜய்  வண்டியைத் திருப்பிக்கொண்டு சென்னையை விட்டு வெளியே வருகிறார்.  கத்திபாரா மேம்பாலம் நோக்கி வரும்போது  கலவரத்தை ஆரம்பித்த  முக்கிய அடியாள் தனது சுமோ வாகனத்துடன் மோதுகிறான். விஜய்  முக்கிய அடியாள் இருவரும் வானத்தில் பறக்கிறார்கள்.

நீ போக வேண்டியது ராயப்பேட்டை ஆஸ்பத்திரி இல்லடா..,

தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரி.., 

http://www.thehindu.com/2009/06/14/images/2009061450310101.jpg
என்று சொல்லி ஒரு உதை விடுகிறார். முக்கிய அடியாள் நேரடியாக தண்டையார் பேட்டையில் போய் விழுகிறார்.

விஜய் அப்படியே வானத்தில் பறந்து  அருகில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் கீழ் கம்பிகளை பிடித்துக் கொள்கிறார். அந்த ஹெலிகாப்டரை தமன்னா ஓட்டிவருகிறார்.

இருவரின் கண்களும் மீண்டும் பேசிக் கொள்கின்றன..  பழைய ட்யூன் மீண்டும் ஒலிக்கிறது.  விஜயின் கை வழுக்குகிறது. தமன்னா தனது இடுப்பு பெல்ட்டை கழட்டிக் கொடுக்கிறார். விஜய் அதன் துணையுடன்   தொடர்ந்து பறந்து வந்து ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் குதித்து விடுகிறார், அடுத்து உள்ள பெண்கள் கல்லூரியில் தமன்னா இறங்கிக் கொள்கிறார். 

விஜய் ஹெலிகாப்டர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டுவந்த நிகழ்ச்சியை  தொலைநோக்கி மூலம் அவரது அண்ணன் தலைவாசல் விஜய் பார்த்துவிடுகிறார். அவர் ராணுவத்தில் ஒரு உயர் பதவியில் வகிப்பவர்.


விஜயின் தலையில் பொறி பறக்கிறது. கட்டிடத்தில் குதித்த விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கிறார். உடனே தலையில் பறக்கும்பொறி நெஞ்சில் பறக்கிறது.  ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே..,




விஜய் தனது தந்தையிடம் சொல்லி  தனது நிறுவனம் ஒன்றைப் பார்க்க ஆரம்பிக்கிறார்.


விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கும் விவகாரம் ராணுவத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குதெரிந்து விடுகிறது. அவர் விஜயை மிரட்டுகிறார்.  தமன்னாவின் அண்ணன் என்பதால் விஜய் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்.


விஜய்க்கு புத்திமதி சொல்லும் வகையில்  விஜயின் நிறுவனத்திற்கு வந்து செல்கிறார். இந்தக் காட்சிகளை விஜயின் தொழில் போட்டியாளர்கள் கவனித்து விடுகிறார்கள். அவர்கள் தமன்னாவைத் தூக்க தயாராகிறார்கள்.
தமன்னாவை மறக்க முடியாமல் தடுமாறும் விஜய் தூக்கத்தை இழக்கிறார். அதை சரிசெய்யும் வகையில் அனைத்து நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். பல நாட்கள் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் ரக்சியம்  கின்னஸ் புத்தகத்திற்கு தெரிந்துவிடுகிறது. விஜய் தூங்க நினைக்கும்போதெல்லாம் தமன்னா மிஸ்டு கால் கொடுத்து கடலை போடுவதால் விஜய் துளியும் தூங்காமல் வேலை செய்கிறார்.

விஜய் தூங்க நினைப்பதால் என்னைத்தாலாட்ட வருவாளா என்று பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறார்.  விஜயைப் பார்த்து தூங்க வைப்பதற்காக தமன்னா விஜயின் நிறுவனத்தை அனுகுகிறார்.  கின்னஸ் சாதனையை நேரடியாக ஒளிபரப்பும் கேமிரா மேனா இருக்கும் மூன்றாவது அண்ணன் தமன்னா விஜயிடம் நேரில் கடலை போடுவதைப் பார்த்து காட்டிரி ஆகிரார்.  விஜயைக் கொள்ள முயற்சிக்கிறார்.  விஜயின் நண்பர்களை காப்பாற்றி அவரை அவரின் அப்பாவிடம் அழைத்துச் செல்கிறார்கள்.

விஜயின் அப்பா தமன்னாவைப் பார்த்து இது போன்ற சப்பை ஃபிகர்களை விட்டுவிடுமாறும்  விஜய்க்கு  குருவி த்ரிஷா, அ.த,ம. ஷ்ரேயா, வில்லு நயந்தாரா, வேட்டைக்காரன் அனுஷ்கா போன்று நச் ஐட்டமாக பார்ப்பதாகச் சொல்லுகிறார்.

அதெல்லாம் மார்க்கெட் போன ஆளுங்க...,  
இவ இவ இவ..  
மார்கழி மாசத்துக்கு ஏத்த ஆளு...,  என்று பன்ச் டயலாக் விடுகிறார்.  டரியலான அவரது அப்பா அடியாட்களை அனுப்புகிறார்.  இரு குடும்பத்தாரும் மிரட்டுவதால் விஜயின் நண்பனின் தந்தை  மும்பை தாதாவிடம் அனுப்புகின்றனர்.

மும்பை தாதா  தனது அடியாட்களுடன்  இந்திப் பாடல் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரிடம்  விஜயின் நண்பர் அறிமுகப் படுத்தி வைக்கிறார்.

இந்த மும்பை மாநகரிலே முமைத்கான் முன்னிலையிலே நாளை உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று  மும்பைதாதா அறிவித்துவிடுகிறார்.  முமைத் கானின் ஆட்டமும் நடக்க ஆரம்பித்து விடுகிறார்.

திருமணத்திற்கு முன்பு ஜோடிகள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து உடை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

உடை மாற்றும்போது  ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொள்கின்றனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துக் கொண்டு சென்னையை நோக்கி வந்து விடுகிறார்கள்


=============================================================

வீட்டிற்கு திரும்பிய விஜய் மற்றும் தமன்னா எதிலும் பிடிப்பே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரூக்கிறார்கள், அப்போது விஜயின் பழைய அழுக்குத் துணிகள் சலவைக்குப் போய் திரும்பிவருகின்றன, அப்போது அதில் இருக்கும் லேடிஸ் பெல்ட விஜயின் அம்மாவின் பார்வைக்கு தட்டுப் படுகிறது.
அது ஒரு முக்கிய தருணத்தில் தமன்னாவிடம் இருந்து விஜய்யின் இடுப்பில் சிக்கிக் கொண்டு அவரிடமே தங்கி விட்ட ஒரு நினைவுச் சின்னம்.


பின்னர் அவர் தமன்னாவின் அப்பாவிடம் பேசி பெல்ட்டைத் திருப்பிக் கொடுக்க வருவதாக  சொல்லுகிறார். விஜய் அப்பா, அம்மா, நண்பர்கள் சகிதம் தமன்னாவின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே  தமன்னாவின் பெரிய, சிறிய நடு அண்ணன்கள் வரிசையாக நின்று வரவேற்கிறார்கள்.


அவர்கள் கையில் துப்பாக்கி, விஜயின் அப்பாவிடம் அவரது சொத்து மற்றும் நிறுவனங்களை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு மிரட்டுகிறார்கள். உடனே  விஜயும் தனது கையிலிருந்து அதிவேக துப்பாக்கியால் பெரிய அண்ணனை மடக்கிவிடுகிறார்.

தனிவழில வர நான் தளபதியில்லடா 

உன்வழியிலயே வந்து 

உன்னையே மடக்குற இளைய தளபதிடா...,

உடனடியாக ஃபிளாஷ்பேக் விரிகிறது
================================================
ஃபிளாஷ்பேக் காட்சி:-


உலக பயங்கரவாதியான தமன்னாவின் குடும்பத்தினரை பிடிக்க இண்டர்போல் போலிஸ் தனித் திட்டம் போடுகிறார்கள்.  அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார். பின்னர் அவர் தமன்னாவை நெருங்குவது, மும்பை ஆட்களை மடக்க முடியாமல் போனது போன்றவை ஃபிளாஷ் பேக்கில் வருகின்றன..,


தமன்னாவின் காதல் உண்மைக்காதல் என்பதால் சட்டம் அவரை குற்றவாளியல்ல என்று விடுதலை செய்து விடுகிறது

இந்தியாவைக் காத்த இந்தியாவின் இளைய தளபதிக்கு பதக்கங்களும் மாலை மரியாதைகளும் குவிகின்றன
விஜய் தமன்னாவை மணந்து கொண்டு காதலுக்கு மரியாதை செய்து விடுகிறார்

============================================================

அடியாள்;  நீ யார் மேல கைவெச்சிருக்க தெரியமா?

ஹீரோ:-  உன்மேல யார் கைவச்சிருக்கா தெரியுமா?

வசனம் இடம் பெற்ற படம் மனதில் இருக்கிறதா  நண்பர்களே...,

=============================================================
இது மீள்பதிவாக இருந்தாலும் வாசகர்கள் ஓட்டுக்கள் போட்டால் தமிழ்மணப் பரிந்துரை பகுதிக்குச் செல்லும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

Thursday, December 24, 2009

50% கண்ணீர் 50% செந்நீர்

விஜயின் அடுத்த படத்திற்கான அதிரடிக் கதை  நமது வலைப்பூவில் வெளியாக இருக்கிறது..,

நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்த கதைக்கு புதிய ட்ரீட்மெண்ட்..,

கண்ணீரும் செந்நீரும் கலந்து எழுதப் பட்ட காதல் சரித்திரம்..,

அதிரடி சந்திப்பு,, அருமையான காதல்

பாம்பே கடத்தல் மன்னர்களிடம்  புகுந்து வெளியேறல்

கடத்தல் முதலைகளின் பாசப் பிணைப்பு

தியாகம் உருக்கம்

பின் இணைப்பு

கிளைமாக்ஸில் ஃபிளாஸ்பேக்

சுபம்

விரைவில் எதிர்பாருங்கள்.

==========================================================

Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only Gumuk means gumuk only
Achak means achak only Gumuk means gumuk only...

இது எனது இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டத்தின் ஒரு பகுதி. எழுதியவர் விரும்பினால் அவரது பெயர் வெளியிடப்படும். விரும்பாவிட்டாலும் சிலகாலம் கழித்து வெளியிடப்படும். ஏனெனில் இது என்னை ரசிக்க வைத்த பகுதி

Wednesday, December 23, 2009

மகன்களுக்குள் பிரச்சனை இல்லை. மூன்றாவது மருமகளே காரணம் .=நன்றி முகிலன்

ஒரு ஊரில் ஒரு குடும்பம். அங்க மூணு பசங்க.., மூணு பேருக்கும் மூணு வகையான வேலை..,  மூணாவது பையன் கொஞ்சம் வசதியா இருக்காராம். (அவருக்கு ஐ.டி. பார்க் வச்சுக் கொடுத்ததெல்லாம் குடும்ப தலைவர்தான் என்பது சரித்திரம்) .  இப்போ மூணாவது பையனோட வருமானத்துக்குத் தகுந்த வாழக்க்கைத்தரம் இல்லைனு மூணாவது மருமகள் நினைக்கிறாராம்ம். அதனால் சாம பேத தான தண்டங்களை உபயோகப் படுத்தி தனிக்குடித்தனத்துக்கு  உறுதி வாங்கி இருக்கிறாராம்.

எனது


தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

பதிவிற்கு தொடர்ச்சியாக முகிலன் அவர்கள்


குற்றம் - நடந்தது என்ன?  இடுகை இட்டிருக்கிறார்.


ஆனால் அந்த இடுகையிலேயே  இது குடும்பத்தை வளர்ப்பதற்கான முயற்சி அல்ல. தனிக்குடித்தனம்  மூன்றாவது மருமகளின்  வீம்புக்காகவும், வரட்டுக் கவுரவத்திற்கான முயற்சியே என்று என்னைப் போன்றவர்களின் எண்ணத்திற்கு ஆதரவு இடுகை போட்டிருக்கிறார் அவருக்கு நன்றி.


=====================================================
அவரது இன்னொரு இடுகையில்

கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்.

என்று சொல்லி யிருக்கிறார். அந்த இடுகையையும் ரசித்துவிடுங்கள்.

அண்ணா, எம்.ஜி.யார், விஜய்



விஜய் அவர்களின் புதிய படமாக உரிமைக்குரல் வரப்போவதாக கில்லிகளின் வலைப்பூவில் செய்தி வெளியாகி உள்ளது. உடனடியாக உரிமைக்குரல் பழைய படத்தினை நினைவு படுத்திய போது தென்பட்ட பாடல்தான் இது. அதன் வரி வடிவம் இதோ

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )


எத்தனையோ பாடல்களை மறுவடிவம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற பாடல்களுக்கு மறுவடிவம் கொடுத்தால் மக்களிடம் சென்றடையுமே என்ற ஒரு ஆசை தோன்றியது. அதே நேரத்தில் இன்பமே பாடல் எங்கோ ஒலிப்பதும் கேட்டது. நல்ல பாடல்களை, நல்ல பாடல்களாகவே மக்களிடம் மறுவடிவம் கொடுத்து சேர்க்கமுடியவே முடியாதா?

பின்குறிப்பு:- விஜய்க்கும் பிடித்த வார்த்தை, ண்ணா. எல்லாப் படங்களிலும் இந்த வார்த்தையை பலமுறை உச்சரிக்கிறார். இந்தப் பாடலிலும் ண்ணா வருவதால் இந்த பாடலை அவர் உபயோகப் படுத்திக் கொள்வார் என நம்பலாம்.

2.இது ஒரு மீள்பதிவு

3. அண்ணா நூற்றாண்டுவிழாவில் நமது பங்களிப்புகளை இந்த இடுகைகள் மூலம் படித்துக் கொள்ளுங்கள்.
அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

அண்ணா 11.9.09

இறைவனிடம் சில கேள்விகள்..

1.
வானத்தை மேலும்
பூமியைக் கீழும்
ஏன் படைத்தான்
இறைவா..

2.
தமிழை தமிழனும்
ஆங்கிலத்தை ஆங்கிலேயனும்
தாய்மொழியாக கொள்ளுமாறு
ஏன் படைத்தாய்
இறைவா...


3.
தலையில் ஏன்
முடி படைத்தாய்...
பின்னர்
வழுக்கை என்றோர்
நிலையை
ஏன் படைத்தாய்....


4.
காய்களை சைவம் என்றாய்
மாமிசத்தை அசைவம் என்றாய்
ஏன்..


5.
பெட்ரோலை
உலகிற்களித்தாய்.. ஆனால்
அதில்
டீசல், மண்ணெண்ணெய்
என்ற பிரிவுகளையும் படைத்தாய்.
ஏன் இறைவா.. ஏன்..?

ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

Monday, December 21, 2009

தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

Telungana....some stupid questions 


என்ற ஆங்கில் வலைப்பூ பக்கம்  போக நேர்ந்தது. பின்னே ஃபாலோவர் என்றால் போய் படித்துவிடுவோமே..,  அதில் இருந்த சில கேள்விகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

1. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தெலுங்கானா மாவட்டங்களிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரிலிருந்து வந்தனர்?  மாஸ்கோ அல்லது நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களா? அவர்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தனர்?


2.ஒருவேளை தெலுங்கானா என்று ஒரு மாநிலம் கொடுக்கப் பட்டால் அப்போது அங்கிருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்? 

இப்போது தெலுங்கானா பகுதியில் இருக்கும் சோமாலியன் நிலப்பிரபுக்களும் உகாண்டாவைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் தூக்கி யெறியப் படுவார்களா?


3. ஒருவேளை அப்படி ஒரு மாநிலம் கொடுக்கப்பட்டால் அங்கு ஆட்சி புரிய எந்த கட்சிகள் வருவார்கள்? காங்கிரஸ்,தெலுகுதேசம், தெலுங்கானா ராஸ்ட்ரீய சமிதி,பிரஜா ராஜ்யம்?   இத்தனைநாள் தெலுங்கானா முன்னேற்றத்திற்கு உதவாத கட்சிகளிடம் இனிமேல் எப்படி எதிர்பார்க்கமுடியும்?


==============================================

இவை தவிர மேலும் பல கேள்விகளை கேட்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

==================================================

இவர் தவிர இவர் மகனுக்கும் பல  சந்தேகங்கள் தோன்றுவதுண்டு.. குறிப்பாக வேட்டைக்காரன் படம் பார்த்தபின் தோன்றிய சந்தேகங்கள் அர்த்தமுள்ளவை. ஒரு எட்டுவேண்டுமானால் போய் படித்துவாருங்கள்.

The incomplete man

Sunday, December 20, 2009

பிந்தொடர்பவர்கள் பட்டியலில் பிரச்சனையா?

பல பதிவுகளில் தங்கள் பிந்தொடர்பவர்களைக் காணவில்லை என்று இடுகைகளைப் பார்த்திருக்கிறோம்.

சிலர் முகப்புக் களத்தில் இருக்கும்போது மட்டும் பிந்தொடர்பவர்களாக இருப்பதாகவும் முகப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டால் அவர்களும் ஒதுங்கிக் கொள்வதாகவும் கூட ஒரு பேச்சு அடிபடுகிறது.

இப்படிப்பட்ட பேச்சுக்கள் அடிப்பட்ட காலத்திலேயே பின்னூட்டப் பெயர்களின் மூலமாக நண்பர்களின் இடுகைக்குச் செல்லும்போது அவர்களின்   /profile/  ல் நமது பெயர் இருக்கிறதா என்று பார்ப்பது உண்டு. பிந்தொடர்பவர்கள் பற்றி பிரச்சனை ஆரம்பித்த காலத்திலேயே எனது வலைப்பூவிற்கு தொடர்வருகையாளர் ஒருவரின்  /profile/ ல் பிந்தொடரும் வலைப்பூக்களில் என்வலைப்பூவின் பெயர் இல்லை.  எனது பிந்தொடர்பவர் பட்டியலிலும் அவர்பெயர் இல்லை.  ஆனால் இன்றுவரை எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறார். 

கண்டிப்பாக அவர் பிந்தொடர்பவர்கள் பட்டியலிருந்து தனது பெயரை துண்டித்திருக்க மாட்டார். அவர் மட்டுமல்ல யாருமே பெயரை துண்டிக்கும் அளவுக்கு மெனக் கெட மாட்டார்கள் என்பது எனது கருத்து. விருப்பம் இல்லையென்றால் இடுகையைப் படிக்க மாட்டார்கள் அவ்வளவுதான்.

எனது  சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் ந...  

இடுகையின்போது கூட நட்புடன் ஜமால் மற்றும் லோகு ஆகியோர் தங்கள் பெயரை நான் விட்டுவிட்டதாக உரிமையுடன் சுட்டிக் காட்டினர். 

அப்படியென்றால் ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகிறது. பிந்தொடர்பவர் பட்டியல் தொழில்நுட்பத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது.  எனது கருத்தினை நான் சொல்லிவிட்டேன். தொழில்நுட்பப்பதிவர்கள் வழிகாட்டுவார்கள் என்று நம்புவோம்.

பின்குறிப்பு:- இன்று எனது பிந்தொடர்பவர்கள் பட்டியலில் எண்ணிக்கை குறைந்துவிட்டது அதனால்தான் இப்படி ஒரு இடுகை.

Saturday, December 19, 2009

வேட்டைக்காரனுக்கு நன்றி

வறட்சியாய் போய் கொண்டிருந்த பதிவுலகில் ஹிட் மழைகளை குவிய காரணமானவன் வேட்டைக்காரன்.


முண்ணனி பதிவர்களே ஒரு நாளைக்கு ஐந்நூறு ஹிட்டுகளுக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருந்த காலம் போய்  வேட்டைக்காரன் என்ற பெயர் கொண்ட பதிவுகள் எல்லாம் இன்று ஆயிரம் ஹிட்டுகள் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணமாக அமைந்த வேட்டைக்காரனுக்கு
நன்றி
நன்றி 
நன்றி

http://www.southgossips.com/wp-content/uploads/2009/12/vettaikaran-12_001.jpg










http://icdn.indiaglitz.com/tamil/gallery/Movies/vettaikkaran/vettaikaran091209_19.jpg 



==============================================================


முதல் பகுதி வேட்டைக்காரன் இனிய துவக்கம்    
அமெரிக்க ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது பற்றி அமெரிக்க மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் தொடர்ச்சியாக வேட்டைக்காரனுக்கு தந்தி அடிக்கிறார்கள். அந்த தந்திகள் தமிழ்நாட்டை வந்தடைகிறது. தந்திகாரர் வேட்டைக்காரன் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் வேட்டைக்காரனின் இருப்பிடத்தைத் தேடுகிறார்.

அப்போது ஒரு பெரியவர்: நீ நிக்கறதே அவரோட எல்லையிலதான். நீ தந்தியைப் படி அப்பு.., வேட்டைக்காரனுக்கு கண்டிப்பா கேட்கும்
என்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்

=================================================



இரண்டாம்பாகம்நாசாவுக்குள் போன நம்மாளு
நாசாவின் ஈசானி மூலையில் ஒரு ஒருவம் அசைவது கண்காணிப்பு காமிராவில் தெரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தபோது அந்த உருவம் ஆசிய முகமாகத் தெரிய வந்தது.

மீசையில்லாத மொழுமொழு உருவம்.... அது...



ஹண்ட்டர்..,

அமெரிக்க அதிபர் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். ஹண்ட்டர் இப்போது வளர்ந்துவரும் ஒரு கடத்தல் மன்னன். அவன் எப்படி இங்கே?

உடனே அதிபர் ஹண்ட்டருக்கு அலைபேசியில் அழைக்கிறார்.

நான் ரொம்ப பிஸி. அப்புறம் ஃபோன் பண்ணுங்க என்று ஹண்ட்டர் பதில் சொல்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்
===================================================================



மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி


நான்
ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்..
இனி திருமபவெல்லாம் முடியாது. என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அங்கே பதினைந்து வயது தமிழரசன் நிற்கிறான்.


நீங்கெல்லாம் படிக்க போங்க.. நான் படிக்க வைக்கறேன்.


பதினைந்து வய்து தமிழரசனின் குரல் உறுதியாக ஒலிக்கிறது.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்


 ============================================

நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்

உலக அமைதி கொஞ்ச நாட்களாகவே கேள்விக் குறியானது. ஆஃப்பிரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக உலகப் பொருளாதாரமே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பின்னே அந்த நாட்டில் இருந்துதானே உலக நாடுகளுக்கு தங்கமும் வைரமும் வருகின்றன.

இதனால் இந்திய நாட்டில் நடக்கும் பல திருமணங்களில் நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.  


முழுதும் படிக்க அழுத்துங்கள்

=================================================


Friday, December 18, 2009

வேட்டைக்காரன் விமர்சனம் கல்கியில்

[Vettaikaran[10].jpg]


 கல்கியில் வந்த வேட்டைக்காரன் விமர்சனம் இது. இது பற்றிய முழு இடுகையை அகொதீகழகப்  பிரமுகர் வரைந்திருக்கிறார். இங்கே சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

Wednesday, December 16, 2009

உலர்ந்த உணர்வுகள்

தெரியவில்லை

மீண்டும்

உன்னைப் பார்த்தபோது

உள்ளுக்குள் வந்த

உணர்வுகளின் தன்மை..,

கல்லூரி தேவதையாய்  நீ

உலவிய போது கூட

ரசிகனாய் கூட

இருந்த நினைவு இல்லை

நட்பாய் பழகிய

நாட்களில் கூட

நண்பனாய்  இருந்த

நினைவு இல்லை.

ஒரு பெண்ணாய்

உன்னைப் பார்த்த

நினைவு

இல்லவே இல்லை,


ஆனால்

இன்று

இப்படி ஒரு பெண்

என்னோடு

பல காலம்

பழகியிருக்கிறாள்

என்பதாக

தோன்றும்போது

காரணம்

புரியவில்லை,

எப்போது

என் கண்களுக்கு

பெண்ணானாய்?

ஒன்றும்

புரியவில்லை





உன்முகத்தின்

ஜொலிப்பு


நகைப்பின் தகைப்பு


பேச்சோடு அசையும்

கைவிரல்கள்

காற்றோடு

உலாவும்

முடிக் கற்றைகள்

உடலோடு இணைந்த

உடைகள்

நாம் பழகிய

நாட்களிலும்

இப்படித்தான்

இருந்தாயா?


ஏனோ தெரியவில்லை

உன்னைப்

பார்த்தபின்

உன்னை

மறந்து விட்டேன்.

புதிய

உணர்வை

உணர்ந்துகொண்டேன்

உணர்வின்

உணர்வு

உணர முடிந்தால்

நீயும் உணர்ந்திருப்பாய்

இல்லை

உணர்வில்

உலர்ந்திருப்பாய்

உணர்வுகள்

உலர்ந்திருந்தால்

உன்னைக்

கண்டிருக்கலாம்

உன்னைக்

கண்டதால்

உணர்வுகள்

உணர்த்தியிருக்கலாம்,

உண்மையைச்

சொன்னால்

உன்னை நான்

கண்டிருக்கவே கூடாது..,

Saturday, December 12, 2009

அசோக் குமார்

குணாளின் வாழ்க்கையில் இதற்கு முன் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்
http://www.nilacharal.com/images/212/mkthyagarajan.jpgகுணாளின் தன் மனைவியின் படுக்கையறையில் தனது தந்தையின் இளம்மனைவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இனிமேல் உன்முகத்தையே பார்க்க மாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு வெளியேறிவிடுகிறார்.

அசோகர் புத்திர சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். நாடு கடத்தப்பட்ட மகனை திரும்ப அழைக்கும் விதமாக கடிதம் எழுதச் சொல்லி அதில் கையெழுத்திடுகிறார், ஆனால் அந்த கடிதத்தில் குணாளின் கண்களை குடுடாக்கும்படி எழுதி அதை தட்ச சீலத்திற்கு அணுப்புகிறார் அசோகரின் இளம் மனைவி. தட்ச சீலத்தின் பொறுப்பில் இருக்கும் மகேந்திரர் இந்த கடிதத்தை குணாளிடம் காட்ட குணாள் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசுகிறார், பின்னர் தனது தந்தையின் சபத்தை நிறைவேற்ற தனது கண்களை தானே குருடாக்கிக் கொண்டு தட்ச சீலத்தைவிட்டு வெளியேறுகிறார்,

அப்போது புத்த துறவி அவருக்கு வழிகாட்டுகிறார்.  நாட்டைவிட்டு வெளியேறிய குணாளின் மனைவி தனது கணவனின் பாடலைக்கேட்டு அவரைக் கண்டுபிடித்துவிடுகிறார்.  இருவரும் ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் பிச்சை எடுத்து வரும்போது  குழந்தை இறந்துவிடுகிறது, அது தெரியாமலேயே குணாள் தாலாட்டுப் பாடுகிறார்.

பின்னர் வேறொரு நகரம் நோக்கிச் செல்கிறார்கள்.  அந்த நகரத்திற்கு அசோகச் சக்க்ரவர்த்தி வந்திருக்கிறார், அவருக்கு புத்த பிட்சுவின் பாடல் கேட்கிறது,. அசோகர் புத்த பிட்சுவை அழைத்துவரச் சொல்கிறார். காவலர்கள் குணாளனை அழைத்துவருகிறார்கள். குருடர்களை அரசர் பார்க்கக்கூடாது என்பதற்காக அவரை திரைச்சீலைக்கு பின்னாள் இருந்து பாடச் சொல்கிறார்கள் . குணாள் அந்தப் பழைய பாடலைப் பாட  அசோகர் அவரைக் கண்டு பிடித்துவிடுகிறார்.

பின்னர் தன் மகனின் கண்கள் குருடான விதத்தினை அறிந்து பொங்கி எழுகிறார், அப்போது பழைய புத்த பிட்சு வந்து புத்தர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு பாட்டைப் பாட குணாளின் கண்கள் திறந்து கொள்ள

சுபம்.


அதில் இடம் பெறிருந்த சில பாடல்கள்

-------------------------------------
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே

-------------------------------------

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

அண்டரிலே அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பல
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரதிலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானதிலே சரச கானத்தில் தேவா

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உன்னைக் கண்டு மயங்காத பேகளுண்டோ?

மேலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

Thursday, December 10, 2009

கருணை காட்டுமா? தமிழ்மணம்

நான் தமிழ்மணம் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  நான் கலந்துகொள்ள தொடுப்புகள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

விருதுகள் 2009 - உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?

 

 இடுகையில் பலமுறை பின்னூட்டம் மூலம் சொல்லிவிட்டேன்.  7ம்தேதியிலிருந்து பின்னூட்டம் மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 7, 8 தேதிகளில் கணினியில் அமர நேரம் இல்லாததால் அலைபேசி மூலம் பின்னூட்டம் இட்டிருந்தேன். நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.  எப்படி அனுப்புவது என்று புரியவில்லை.


Tuesday, December 8, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

அறிவிப்பு:  இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. அதனால் இதில் வரும் கருத்துக்களுக்கு நான் சொந்தக்காரன் அல்ல. யாருக்கேனும் மனம் புண்பட்டால் நீக்கிவிடுகிறேன்.  இதை முதலில் எழுதியவர் பெயர் அல்லது பதிவின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களின் பெயரையும் தொடுப்பையும் போட்டுவிடுவோம்.

இது எனது கற்பனை அல்ல என்பதற்கு இதில் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கும் எனக்கும் வெகுதூரம் என்பதே சாட்சி.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails