Wednesday, June 10, 2009

ஆஃப்ரிக்காவில் வேட்டைக்காரன்

உலக அமைதி கொஞ்ச நாட்களாகவே கேள்விக் குறியானது. ஆஃப்பிரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக உலகப் பொருளாதாரமே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பின்னே அந்த நாட்டில் இருந்துதானே உலக நாடுகளுக்கு தங்கமும் வைரமும் வருகின்றன.

இதனால் இந்திய நாட்டில் நடக்கும் பல திருமணங்களில் நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.

இந்தியாவில் பல சமூக நல அமைப்புகள் பற்பல போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்த ஆரம்பித்தன..

அந்த ஆஃப்பிரிக்க நாட்டின் தூதர்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அகில உலகமும் அஞ்சி நடுங்கும் ஹண்ட்டரை அணுகினார்கள். அந்த நாட்டின் தூதர்களுக்கும் வேட்டைக்காரச் சாமிக்கும் என்ன தொடர்பு? அவர் எவ்வாறு அந்தப் பதவிக்கு வந்தனர் என்பதை இந்தச் சுட்டி மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

=========================================================

இந்தக் கதையில் முதல் பாகம் வேட்டைக்காரன் இனிய துவக்கம்

இரண்டாம் பாகம் நாசாவுக்குள் போன நம்மாளு

மூன்றாம் பாகம் வேட்டைக்காரச் சாமி

சுட்டிகள் மூலம் படித்து மகிழுங்கள்

==========================================================

ஹண்ட்டர் நேரடியாக தனி விமானம் மூலமாக அந்த ஆஃப்பிரிக்க நாட்டுக்குச் செல்கிறார். அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களிடம் பேச்சுவார்த்தை செய்கிறார்.


நாம ஒரு பாதையில போனா அந்தப் பாதையை நாமே மறந்திடனும்.


அப்பத்தான் நம்மள ரவுடின்னு நாலு பேர் ஒத்துக்குவான்.


நீங்க இப்ப வன்முறைப் பாதையில போறீங்க. அத மறந்திடுங்

என்று மனதில் பதியுமாறு எடுத்துரைக்கிறார்.

தனது 15 வயதில் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டது. தனது சமூகமே ஒடுக்கப் பட்டது பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். எவ்வாறு தான் நிழல் உலகத் தொழில் செய்து தனது மக்களை உயர்த்தினார் என்பது பற்றியும் கூறுகிறார்.

மீண்டும் ஒரு முறை

நாம ஒரு பாதையில போனா அந்தப் பாதையை நாமே மறந்திடனும்.

நீங்க இப்ப வன்முறைப் பாதையில போறீங்க. அத மறந்திடுங்க

என்று சொல்கிறார்.

அங்கிருக்கும் வன்முறைக் குழுக்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் நாட்டின் வளத்தைக் கொண்டு அவர்கள் மிகப் பெரிய தேசத்தை உருவாக்குகிறார்கள். அந்த நாட்டின் புதிய கொடியை அறிமுகப் படுத்துவதற்கான ஒரு மாபெரும் கூட்டம் அந்த நாட்டின் தலை நகரில் நடக்கிறது.

அந்த நாட்டின் உள்நாட்டு கலவரம் முடிந்ததால் கடும் கோபத்திற்கு உள்ளாகிறார் மார்க் ஜீரோடாஸ்க். அவர்தான் அந்த நாட்டின் பெரும்பாலான போராட்டக்குழுக்களுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். வேட்டைக்காரச் சாமியை அழிப்பதற்காக 100குழல் இயந்திரத் துப்பாக்கியை இடது கையில் தூக்கிக் கொண்டு 1000சி.சி. பைக்கில் அந்த இடத்துக்கு வருகிறார். துப்பாக்கியை உபயோகப் படுத்தினால் மக்களுக்கு அழிவு ஏற்படும் என்பதால் இருவரும் கை மற்றும் கால்களைப் பயன்படுத்தி ஒரு பயங்கர சண்டை போடுகிறார்கள். நடுவில் கண்களையும் உபயோகப் படுத்துகிறார்கள். சண்டையின் முடிவில் வேட்டைக்காரன் ஜெயித்துவிடுகிறார்.

வில்லன் ஜீரோடாஸ்க்கை தூக்கி கடலுக்குள் போடப் போகிறார். அப்போது துப்பாக்கியுடன் இந்திய முப்படை தளபதி வருகிறார்.

தமிழ்! நீ கடத்தல் மன்னன் ஹண்ட்டர் இல்ல.. இந்தியாவின் தளபதி நீ... அவன விட்டுடு..
நீ போன வழியை நீயே மறந்திடு

என்கிறார்.

ஜீரோடாஸ்க்கை கீழே போட்டுவிட்டு வேட்டைக்காரன்@ தொழிலதிபர் தமிழரசன் நடந்துவருகிறார்.

ஜீரோடாஸ்க் கீழே கிடக்கும் 100குழல் இயந்திர துப்பாக்கியை தூக்கி வேட்டைக்காரனை சுட்டுத் தள்ளப் பார்க்கிறான்.

அதற்குள் அந்த விழாவுக்கு வந்திருந்த பல்வேறுநாட்டுத் தாய்மார்கள் தங்கள் கையில் துப்பாக்கியை எடுத்து ஜீரோடாஸ்க்கை சுட்டுத் தள்ளுகிறார்கள்.


என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க..,

இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்த்தாங்க..,(முதல் அத்தியாயம்)


ஆனால் இப்ப இந்த உலக தாய்மார்கள் எல்லாம் எனக்கு உயிர் ஊட்டி இருக்காங்க..,

எங்கெங்க தாய்மார்கள் இருக்காங்களோ அங்கெல்லாம் என்னோட உரிமைக் குரல் ஒலிச்சிக்கிட்டே தான் இருக்கும்.என்ற வசனத்துடன்

விரைவில் எதிர்பாருங்கள் உரிமைக்குரல்..,

தங்க எழுத்துக்கள் தோன்றுகின்றன.
25 comments:

 1. விரைவில் எதிர்பாருங்கள் உரிமைக்குரல்..,
  //

  பாத்துருவோம் . வேற என்ன வேல..

  ReplyDelete
 2. //தங்க எழுத்துக்கள் தோன்றுகின்றன.


  தமிழ்! நீ கடத்தல் மன்னன் ஹண்ட்டர் இல்ல.. இந்தியாவின் தளபதி நீ... அவன விட்டுடு..
  //

  ஹா ஹா.. சுமா படம் பாக்குற மாதிரிசொல்றீக டாக்டரே..

  ReplyDelete
 3. ஓட்டு போட்டாச்சு :-)

  தல புது படம் போட்டு இருக்கீக..

  என்ன என் படத்துக்கு போட்டியா???

  எனக்கு தம்பி மாதிரி இருக்கீகங்கவோவ் !!!

  ReplyDelete
 4. நான் இன்னும் வேட்டைகாரனே முடிக்கலை.. நீங்க ஒரு வேக புயல்

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  கடைக்குட்டி, நசரேசன் அவர்களே..,

  ReplyDelete
 6. தல
  எப்படி ஸ்மால் கேப்ல அடிச்சு பின்னுறிங்க..

  ReplyDelete
 7. //வினோத்கெளதம் said...

  தல
  எப்படி ஸ்மால் கேப்ல அடிச்சு பின்னுறிங்க.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...,

  ReplyDelete
 8. //T.V.Radhakrishnan said...

  :-)))
  June 10, 2009 10:21 PM //

  நன்றி தல..,

  ReplyDelete
 9. அவ்வ்வ்வ்வ்வ்வ்......
  ம்ம்ம்ம்ம்ம்முடியல அ அ அ அ அ .....

  ReplyDelete
 10. டெய்லி பட்டய கிளப்புறீங்களே தல

  ReplyDelete
 11. //இளைய பல்லவன் said...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்......
  ம்ம்ம்ம்ம்ம்முடியல அ அ அ அ அ .....
  //

  வாங்க தல..,

  உங்க பதிவுக்காக நாங்க எல்லாரும் காத்துக்கிட்டு இருக்கோம்

  ReplyDelete
 12. //பிரியமுடன்.........வசந்த் said...

  டெய்லி பட்டய கிளப்புறீங்களே தல
  // நன்றி தல

  //காமிக்ஸ் பிரியன் said...

  super.
  //

  நன்றி தல..,

  ReplyDelete
 13. போட்டுட்டேன் ஓட்டு!!

  ReplyDelete
 14. டெம்ப்ளேட் மாத்துவதில் சூரப்புலி !!

  ReplyDelete
 15. //நாம ஒரு பாதையில போனா அந்தப் பாதையை நாமே மறந்திடனும்.


  அப்பத்தான் நம்மள ரவுடின்னு நாலு பேர் ஒத்துக்குவான்//

  சரியா சொன்னீங்க தல

  :)

  ReplyDelete
 16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவன்மாயம்சார், கன்னா சார்..,

  ReplyDelete
 17. ஹாஹாஹாஹாஹா....

  ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல... :)
  -வினோ

  ReplyDelete
 18. இந்த Template கூட நல்லாருக்கு சுரேஷ்...

  -வினோ

  ReplyDelete
 19. //நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.
  //
  சூப்பர் வரிகள்!

  ReplyDelete
 20. // ARASIAL said...

  இந்த Template கூட நல்லாருக்கு சுரேஷ்...

  -வினோ//

  நன்றி தல

  ReplyDelete
 21. // பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  //நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.
  //
  சூப்பர் வரிகள்!//


  நன்றி தல..,

  ReplyDelete
 22. இன்னுமா இந்த உலகம் வேட்டைகாரன நம்பிகிட்டு இருக்கு.

  ReplyDelete
 23. // Naandanta Nee... said...

  இன்னுமா இந்த உலகம் வேட்டைகாரன நம்பிகிட்டு இருக்கு.//

  வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவரே..,

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails