1. ஒரு முதலமைச்சர் (சம்பவம் நடக்கும்போது அல்ல) ஒரு நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்து இயக்கினார். அவர் யார்? அந்த நாடகம் எது? அந்த நாடகத்தை எழுதியவர் யார்?
எழுதி இயக்கி நடித்தவர் அண்ணா . நாடகம் சந்திரோதயம்
2.புதுக்கவிதைக்கு அண்ணா பயன்படுத்திய சொல் தெரியுமா?
புதுப்பா
3. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களை பின்தொடராமல், தங்கள் பணியை செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பிய
முதலமைச்சர் யார்? அவரது கட்சித் தலைவர் நாற்காலியில் இருந்தவர் யார்?
அண்ணா. அப்பொது கட்சித் தலைவர் நாற்காலி பெரியாருக்காக காத்திருந்தது.
4. ஓர் இரவு படத்திற்கு அண்ணா வாங்கிய ஊதியம் எவ்வள்வு?
ரூ.20,000.
5.
நண்பர்களிடமிருந்தும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களை படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும், அக்கறையும் அக மகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும், அக்கறையும், அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும், அறிவுத்தெளிவும், ஆராய்ச்சி திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும்.
இந்த வரிகளை எழுதியவர் யார்?
நாவலர் நெடுஞ்செழியன்.
============================================================
அண்ணா - சில கேள்விகள் 12.9.09 இடுகைக்கான பதில்கள்
1.அறிஞர் அண்ணா படித்த தொடக்கப் பள்ளியின் பெயர் என்ன?
பச்சையப்பன் தொடக்கப் பள்ளி 1914ல்
2.அண்ணாவின் முதல் சிறுகதை எந்த ஆண்டு, அந்தப் பத்திரிக்கையில் வெளியானது?
11.2.34ல் கொரக்கரக்கோ சிறுகதை ஆனந்த விகடனில் வெளியானது.
3.அண்ணா, பெரியாரை எங்கு முதன்முதலில் சந்தித்தார்?
1934ல் திருப்பூரில் செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதன்முதலில் சந்தித்தார்.
4.1938ல் திருமதி ராணியம்மை அவர்கள் எதற்காக அண்ணாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்?
இந்தியை எதிர்க்க தூண்டியதற்காக சிறை சென்றதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
5.நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக்கும் தீர்மானம் எந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது? 44 சேலம் மாநாடு
6.நல்லதம்பி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் யார்?
என்.எஸ். கிருஸ்ணன்
7.கண்ணீர் துளிகள் என்றால் என்ன?
பெரியார்-மணியம்மை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பட்டியல் கண்ணீர்துளிகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது
8.ஆரிய மாயை நூலுக்காக அண்ணாவுக்கு கிடைத்த சன்மானம் என்ன?
ரூ.700 அபராதமும் கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறைத் தண்டனை
9.தி.மு.க. மாநிலக் கட்சியாக ஏற்கப்பட்டபோது அதன் சின்னம் என்ன?
2.3.58ல் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றபோது அதன் சின்னமாக உதய சூரியன் இருந்தது.
10.அண்ணா முதல்வரான உடன் போட்ட உத்தரவு.....,
இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்தார்.
=============================================================
தெரியாத தகவல்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி..
ReplyDelete(அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணா விளங்குகின்றார், முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் அண்ணா)
ReplyDeleteஅருமையான பதிவு ..........
நல்ல பகிர்வு
ReplyDeleteஅறிஞர் அண்ணாவைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்த பதிவு
நல்ல பகிர்வு
ReplyDeleteஅறிஞர் அண்ணாவைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்த பதிவு
அண்ணா நூற்றாண்டு நிறைவில் அரிய தகவல்களை வினா -விடை வடிவில் வெளியிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteபதில் சொல்லிட்டேனா ... எப்பூடி !!!
ReplyDeleteநான் சொன்னா என்ன நீங்க சொன்னா என்ன
@லோகு
ReplyDelete@உலவு.காம்
@அபுஅஃப்ஸர்
@தமிழ் ஓவியா
@Starjan ( ஸ்டார்ஜன் )
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...,
உங்கள் அன்புக்கு என் பதிவில் ஒரு நன்றி சுரேஷ்.
ReplyDeletehttp://singakkutti.blogspot.com/2009/09/blog-post_12.html