Thursday, April 30, 2009

குடியிருந்த கோவில் ரீமேக்கில் ரஜினிகாந்த்

குடியிருந்த கோவில் படம் பார்த்து இருக்கிறீர்களா.........

MGR அவர்களின் வெற்றிப் படங்களில் ஒன்று. முழுநீள சண்டைப் படமாகவும், உடைகளில் ஸ்டைலில் தனித்தன்மையுடன் விளங்கும் படம். வில்லனாகவும், நாயகனாகவும் மாறி மாறி திற்மைகாட்டியிருப்பார். நாயகிகளின் ஆடலுடன் பாடல்களும் இடம் பெற்றிருக்கும்.

ரஜினி காந்த் அவர்களின் ரீமேக் சரித்திரம் உலகறிந்த விஷ்யம்.சிவாஜி படத்தில் கூட ரிக் ஷாகாரன் எம்.ஜி.ஆர், வசந்தமாளிகை சிவாஜி, சகலகலா வல்லவன் கமல் என ஒரு கலக்கி இருப்பார்.

குடியிருந்த கோவில் படத்தை ரஜினியை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனைதான். (கற்பனையின் முடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது)

http://movies.ndtv.com/captionthis/images/rajinikanth.jpg

..................................................................................................................................................................

இயக்குநர்: குடியிருந்த கோவில் படத்தை சூப்பர் ஸ்டாருக்காக எடுக்க போறோம். எந்த மாதிரி மாற்றங்கள் செய்யலாம்.


துணை இயக்குநர்: முதல் சண்டைய அப்படியே வச்சுக்கலாம்ண்ணே... சென்னை முழுதும் கார் சேஸிங், சூப்பர்ஸ்டார் செஞ்சு ரொம்பநாளாச்சு....
வில்லன் எம்ஜியார் தப்பிக்கிறதுக்கு ஒரு துப்பாக்கில சுடுறாரு. இன்றைய ட்ரெண்டுக்கு பெரிய கண்ட்டெயிணர் ஃபுல்லா துப்பாக்கியா வச்சு சுட வைக்கலாம்னே.... அஜித் ரசிகனா மாறினா நம்மாலுக எல்லாம் திரும்பவும் நம்ம கூடாரத்துக்கே வந்திருவாய்ங்க

இணை இயக்குநர்: உயர் போலீஸ் அதிகாரியா மேஜர் சுந்தரராஜன் ரோலுக்கு யாரைப் போடலாம். சுஜாதா ஃபிலிம்ஸ் எடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க..

தயாரிப்பாளரையே போட்டுவிடலாம். இல்லைன்னா பிரபு சார கூப்பிட்டுக்கலாம்ணே...

இயக்குநர்: வில்லன் எம்ஜியார், கோமா ஸ்டேஜுக்கு போறாரே.. அந்த சீன்லாம் அப்படியே வச்சுக்கலாமா....,

துணை இயக்குநர்: சாக வைச்சிடலாம்னே அப்பத்தான் கேரக்டர் நிக்கும்.
இணை இயக்குநர்: கோமாவுல வச்சிக்கலாம்னே. கடைசியில் யோசிச்சிக்கலாம்ணே

இயக்குநர்: சரிப்பா; ஹீரோ எம்ஜியார் எம்ஜியார். ஓப்பனிங் சாங்

என்னைத் தெரியுமா........................ வருவாரே. சூப்பர் ஸ்டாருக்கு அப்படியே வச்சிடலாமா....

து.இ. ; அண்ணே அது ஹோட்டல்ல ஆடமாதிரி இருக்குண்ணே... அத அப்படியே மக்களோடு மக்களா ஆட மாதிரி எடுத்துக்கலாம்ணே

நாட்டுக்குள்ளே தலைவருக்கு ஒரு பேரு இருக்குண்ணே.. அத நாம காப்பத்துணும்ல...

இயக்குநர்: ஹீரோ எம்ஜியார வில்லன் இடத்துக்கு மாத்திறது எல்லாம் அப்படியே வச்சிக்கலாம். தலைவர் அங்க போய் பிரமை புடிச்ச மாதிரி உக்கார வச்சிடலாம். அங்க போய் உலக பயங்கரவாதி மேப் எடுப்பாரே அந்த சீனை கொஞ்சம் மாடர்ணா எடுக்கணுமே..

து. இ;- அண்ணே.. மேப்புனா ஒரே பக்கம்ணே.. டைரி வச்சுக்கலாம்னே 365 பக்கம் இருக்கும்ணே ..,

இ.இ:- அண்ணே இப்ப அல்ட்ரா மாடர்ண் பென் டிரைவ் பிளாப்பி இப்படி போவோம்னே..

இயக்குநர்:- ஏம்ப்பா கவர்ச்சியா ராஜஸ்ரீ நடனம் போடுவாங்களே.. என்ன பண்ணலாம்.

து.இ: அண்ணே நயந்தாரா.. அனுஷ்கா இப்படி பல பேர் இருக்காங்கண்ணே.. டூ பீஸ்ல நடக்க விட்டர்லாம்

இயக்குநர்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலதான் சுகம் சுகம் பாட்டுக்கு யார புக் பண்ணலாம்..

து. இ: இந்தில இருந்து யாரையாவது வர வச்சுக்கலாம்ணே.. அந்த காலத்தில் ஹெலன்லாம் வச்சு உத்தம புத்திரன்ல இருந்து ஒரு 30 வருஷம் அவங்க வந்து கவர்ச்சி நடனம் ஆடிக் கொடுத்திருக்காங்க. இப்ப கரிஷ்மா வைக் கூப்பிடுவோம். தலைவர் சந்தோஷப் படுவார்.

இயக்குநர்:- ஹீரோ எம்ஜியார் வில்லனோட எடத்துக்கு போன பிறகு ஸ்டேஜ்ல டேன்ஸ் போடுவாரே.. அதை அப்படியே வச்சுக்கலாம்னே

துள்ளுவதே இளமை.... பாட்டு சூப்பரா இருக்கும்ல்ல..

து,இ:- அண்ணே அத ரீமிக்ஸ் பண்ணி வேறபடத்தில போட்டுட்டாணுகண்ணே. நாம அந்த இடத்துல நான் யார் நான் யார் பாட்ட வச்சுக்கலாம்..

அமாண்ணே .. ஹிந்திலயும் அந்தப் பாட்ட அப்படியே வச்சுக்கலாம்ண்ணே

மே ஹூ கோன்.. மே ஹூ கோன்.. மே ஹூ கோன்

மே ஹூ .. மே ஹூ மே ஹூ கோன் கோன் கோன் ..............

இயக்குநர்:- தம்பி இந்தில கூட நீ பாட்டு எழுதுவயாடா...... நீ ஒரு பன் மொழி வித்தகண்டா,,,,,,,

து. இ.:- அண்ணே நம்பியாரும் இதே க்ரூப்ல இருந்தா வில்லன் எம்ஜியார் டம்மியா போயிருவார்னே.. அந்தப் படத்தில் அவர ஹீரோ ஆக்கிடுவாங்க அதனால பரவாயில்ல.ஆனா பாருங்க நம்ம படத்தில் தலைவர் வில்லன்ணே


இயக்குநர்: இப்ப என்னடா பண்ணறது?



து.இ. அதுக்கு ஒரு யோசனைண்ணே... நம்பியார அமெரிக்காவிலிருந்து வர வச்சிடலாம். அப்ப வில்லன் ஹீரோ மெயின் வில்லன் ஆக்கிடலாம்.

இயக்குநர்: ரைட்.. பாட்டு முடிஞ்சதும் போலீஸ் போய் அரெஸ்ட் பண்ண போராங்க........ நாம தான் வில்லன் எம்ஜியாரை சாக வைக்கறமாதிரி கதை பண்ணலாம்ண்ணு சொல்லியிருக்கமே ...

இந்த இடத்துல ஏதாவது சொல்லுங்கப்பா...

து. இயக்குநர்;- அண்ணே ஆள்மாறாட்டம் பண்ற போலீஸ் ஆபிஸரை போட்டு தள்ளிடலாம்ண்ணே படம் பயங்கர திரில் ஆயிடும்..

தலைவர்,  வில்லன் ரஜினி இல்ல..., ஹீரோ ரஜினின்னு போராட ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தா பட்டைய கிளப்பும்ண்ணே...

இயக்குநர்:- நினைச்சண்டா....................... புது திரைக்கதை எழுத எழுத எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கேண்ணு பார்த்தா............. அப்படியே பில்லா படத்தைச் சொல்லிட்டு இருக்கீங்களேடா.....

து. இ.:= அண்ணே ஏற்கனவே குடியிருந்த கோவிலை பில்லான்னு எடுத்துட்டாங்கண்ணே............ வில்லன் எம்ஜியாரை உயிரோட விட்டு கொஞ்சம் குழப்பி ஷாரூக்கும் டான் படம் எடுத்திட்டாருண்ணே.......

அமிதாப்புக்கு அந்தப் படம் டான்னுன்னே.... எண்டியாருக்கு யுகேந்தர்ன்னேhttp://blog-imgs-32.fc2.com/c/u/r/currynokobushi/yugandhar.jpg
http://blog-imgs-32.fc2.com/c/u/r/currynokobushi/yugandhar.jpg

இந்த இடத்தில அதப் பத்தி விரிவா ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கண்ணே...


இயக்குநர்: சரி இந்தப் படத்தை விடுங்கடா............. வேற ஏதாவது படத்தை ரீமேக் பண்ணிக்கலாம்.

16 comments:

  1. ஹா ஹா.. முடியலங்க..

    நெம்ப ரசிச்சேங்க.. நீங்கஎழுதுனதுலேயே (இன்னும் முடிக்காம இருக்கும்)காலேஜ் கதை வருமே அந்த தொடர் பதிவும்... இந்தப் பதிவும் என் ஃபேவெரட் :-)

    ReplyDelete
  2. வாங்க கடைக்குட்டி..,

    வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி

    ReplyDelete
  3. அட இதுவரை அமிதாப்பின் டான் தான் ஒரிஜினல் என்று எண்ணி இருந்தேன்... ஆனால் அதை கூட எம்ஜிஆர் படத்துடன் ஒப்பிட்டு விட்டீர்களே... கூடவே அந்த க்ளோசிங் பஞ்ச், வித் என்டிஆர் பட ஸ்டில் அருமை. இந்த வயதில் அவருக்கு இது தேவையா என்பது போல இருக்கிறது.

    கூடவே, பழைய பதிவுகளுக்கு சுட்டி அமைக்கும் தங்கள் சாமர்த்தியம் டாப் க்ளாஸ் தான் போங்கள் சுரேஷ்.

    கலக்கி அடியுங்கள் அதிரடி அலசலை....

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  4. கலக்கறிங்க தலைவரே......
    அப்படி இப்படி சொல்லி டான் படமே ரீமேக்நு சொல்லிடிங்க.
    உங்கள் கண்டுபிடிப்பு தொடரட்டும்.

    ReplyDelete
  5. //ЯR [comicology] said...

    அட இதுவரை அமிதாப்பின் டான் தான் ஒரிஜினல் என்று எண்ணி இருந்தேன்... ஆனால் அதை கூட எம்ஜிஆர் படத்துடன் ஒப்பிட்டு விட்டீர்களே//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரஃபிக்ராஜா சார்.


    [[[[[[[[[நான் யார் நான் யார் பாட்ட வச்சுக்கலாம்..

    அமாண்ணே .. ஹிந்திலயும் அந்தப் பாட்ட அப்படியே வச்சுக்கலாம்ண்ணே

    மே ஹூ கோன்.. மே ஹூ கோன்.. மே ஹூ கோன்

    மே ஹூ .. மே ஹூ மே ஹூ கோன் கோன் கோன் ..............]]]]]]]]]]]]


    இதுதான் இந்த கட்டுரைக்கே அஸ்திவாரமாக ஆதாரமாக அமைந்தது

    ReplyDelete
  6. //ЯR [comicology] said...

    , வித் என்டிஆர் பட ஸ்டில் அருமை. இந்த வயதில் அவருக்கு இது தேவையா என்பது போல இருக்கிறது.
    //


    படம் 79லேயே வந்துவிட்டதாம். நாயகிகூட ரஜினி கமல் ஆளுதான்

    ReplyDelete
  7. //ஜெட்லி said...

    கலக்கறிங்க தலைவரே......
    அப்படி இப்படி சொல்லி டான் படமே ரீமேக்நு சொல்லிடிங்க.
    உங்கள் கண்டுபிடிப்பு தொடரட்டும்.
    //


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..

    யார் கண்டா.... இந்தியலயும் ஏற்கனவே குடியிருந்த கோவில் வந்திருக்கோ என்னவோ...

    ReplyDelete
  8. நல்ல கற்பனை...
    இத நீங்க நம்ம விஜயகாந்துக்கோ அல்லது நம்ம டீஆர் க்கோ செய்தா இன்னும் சூப்பரா இருக்கும்...
    :)))

    ReplyDelete
  9. //வழிப்போக்கன் said...
    நல்ல கற்பனை...
    இத நீங்க நம்ம விஜயகாந்துக்கோ அல்லது நம்ம டீஆர் க்கோ செய்தா இன்னும் சூப்பரா இருக்கும்...
    :)))//

    vijay kanth kku enna padam thala

    t.r. kku appadi entha padamum varalaye thala

    ReplyDelete
  10. @குடிகாரன் நன்றி தல
    @T.V.Radhakrishnan நன்றி தல

    ReplyDelete
  11. பயமுறுத்திட்டீங்களே?

    ReplyDelete
  12. ஹிந்தி China Town - ஷம்மி கபூர் நடித்தது தான் தமிழில் குடியிருந்த கோவில் ஆகி மீண்டும் ஹிந்தியில் Don ஆகி, தமிழில் பில்லா ஆகி, மீண்டும் Don ஆகி பில்லா ஆனது. இதேபோல், எங்க வீட்டு பிள்ளை ஹிந்தி, தெலுங்கு, மலையாலத்தில் மாற்றமாகி, பின்பு கதாநாயகனை கதாநாயகியாக்கி மீண்டும் ஒரு ரவுண்டு அனைத்து மொழிகளிலும் வந்தது.

    ReplyDelete
  13. //அப்பாதுரை said...

    பயமுறுத்திட்டீங்களே? //

    இல்லை இது உண்மை

    ReplyDelete
  14. //IRSHAD JEDDY said...

    ஹிந்தி China Town - ஷம்மி கபூர் நடித்தது தான் தமிழில் குடியிருந்த கோவில் ஆகி மீண்டும் ஹிந்தியில் Don ஆகி, தமிழில் பில்லா ஆகி, மீண்டும் Don ஆகி பில்லா ஆனது. இதேபோல், எங்க வீட்டு பிள்ளை ஹிந்தி, தெலுங்கு, மலையாலத்தில் மாற்றமாகி, பின்பு கதாநாயகனை கதாநாயகியாக்கி மீண்டும் ஒரு ரவுண்டு அனைத்து மொழிகளிலும் வந்தது. //



    தகவலுக்கு நன்றி தல்.,

    உலகம் உருண்டை அல்லவா..,

    எங்க வீட்டுப் பிள்ளைகளை குழந்தைகளாக மாற்றியும் படம் வந்திருக்கிறது

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails