Wednesday, April 22, 2009

நான்கு கொள்ளையர்கள்

http://mimg.sulekha.com/hindi/don-1978/Stills/don5.jpg


அடிபிறழாமல் எழுதுக என்று தமிழ் பாடத்தில் கேட்பார்கள்। அது போல் அமைந்த படங்கள்தான்। அமிதாப்பின் டான்ம் ரஜினியின் பில்லாவும்।தான் வளர்க்கும் குழந்தைகளுக்காக தன் உயிரையே பணயம் வைத்து உலகத்தையே அச்சுறுத்தும் கடத்தல் கூட்டத்தைப் பிடிக்க உதவும் தெருப்பாடகன் ராஜாவின் கதைதான் பில்லா॥ அதுதான் டான்। அமிதாப்பின் படத்தில் இருக்கும் கதை திரைக்கதை, கதாப்பாத்திரங்களின் உடைகள் பெயர்கள் அனைத்தும் ஒரே மாதிரி அமைத்திருப்பார்கள்। ரஜினிக்கு மட்டும் பில்லா என்று பெயர் வைத்து இருப்பார்கள்। யார் கொடுத்த யோசனையோ॥ தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரம் ப்ளாஷ்பேக் மற்றும் உடைகள் அனைத்தும் மறுபதிப்பு செய்யப் பட்ட படம் தான் பில்லா। டான் மேல் ரசிகர்களுக்கு ஏற்படும் மலைப்பும் அப்பாவி ராஜாமேல் ஏற்படும் பரிதாபமும், ரசிகர்களின் அனுதாபமும்... தப்பிக்க அவரது முயற்சிகளுக்கு ரசிகர்களின் விசில்களும் இரண்டின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தன। பில்லாவின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு। அது பெரும்பாலான தமிழ்ரசிகர்களுக்கு டான் ப்ற்றி தெரியாததும், தெரிந்தவர்கள் பார்க்க முடியாததுமே..........

இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஷாரூக் கான் ரீமேக் செய்கிறார்। திரைக்கதையில் புதுமைகள் புகுத்த முற்படுகிறார்கள்। ஆனால் கதையிலேயே லேசான திருத்தங்கள் செய்யப் படுகின்றன।

கதையில் ஏற்படுத்தும் சின்ன மாறுதல் எவ்வாறு கதையையே மாற்றீ விடுகிறது என்பதனை ஏற்கனவே பார்த்துள்ளோம்। விரும்புவர்கள் இந்தச் சுட்டியில் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்.ஷாரூக்கினை ஆள்மாறாட்டத்திற்கு அனுப்பியவர்தான் கொள்ளைக் கூட்டத்தலைவன் என்னும்போது ஷாருக் மட்டுமல்ல நாம்கூட குழம்பி விடுகிறோம்। ஷாரூக் கொஞ்சம் யோசித்து ஒரு காரணம் கண்டு பிடித்து அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கொள்ளும்போது நம் மணம் அதை ஏற்க மறுக்கிறது। இருந்தாலும் படம் பிரமாண்டமாகச் செல்லும் போது அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நாமும் சென்று விடுகிறோம்। இந்திய சினிமாக்களுக்கு லாஜிக் தேவையில்லை என்பது மற்றொரு முறை நிரூபணமாகிறது।அடுத்து வைப்பதுதான் பெரிய ஆப்பு ரசிகனுக்கு வைப்பதாக நினைத்து தனக்குத்தானே வைத்துக் கொண்டது। கடைசியில் உயிருடன் இருப்பது ஒரிஜினல் டான் தானாம்। அப்பாவியை அவன் கொண்று விட்டதாக காட்டும்போது ரசிகர்களுக்கு ஏமாற்றமே..... மும்பை தாதாக்கள் வெற்றி பெறுவதாக அமைக்கப் படும் கதைகளுக்கு வைக்கப் பட்ட பெரிய ஆப்பாகவே கருத வேண்டும்। பாஷாவின் உயிரைக் காப்பற்றியது போல் டானைக் காப்பற்றியது ரசிகற்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை। இரண்டாம் முறை பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தில் வரும் திருப்பங்கள் உப்புச் ச்ப்பில்லாமல் அமைகின்றன। பாஷாவில் கதை தெரிந்தவர்களுக்கு பாஷா எப்பொது பொங்கி எழுவார் என்பது தெரிந்தாலும் ஒரு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகும்। இதில் தெரிந்து விட்டதால் தேவையில்லாமல் டான் ஓடி ஒளிவதாகத் தோன்றும் ஒரு தமாஷாக அமைந்திருக்கும்।இதே நிலைதான் கொடி பற்க்குது படத்துக்கும் ஏற்பட்டது। விக் வைத்த, விக் வைக்காத ரஜினிகள் மாறீ மாறி சவால் விடும்போது ஏற்படும் த்ரில் இருவரும் ஒரே ஆள் என்பது தெரிந்தபின் சப் பென்று ஆகிவிடுகிறது। இரண்டாம் முறை பார்க்கும்போது த்மாஷு தமாஷு.....ஒட்டு மொத்தத்தில் டான் (ஷாருக்) எல்லாத்தையும் ஏமாத்திடுச்சு


அஜித்தின் பில்லாவின் வெற்றிக்கு ரஜினியின் பில்லாவும் ஒரு காரணம்। திரைக்கதையில் துணைப் பாத்திரங்களை மட்டும் வெட்டி விட்டு ஒரு ஆங்கில டப்பிங் படம் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்। இதற்கு நயன் மற்றும் நமீ ஆகியோரின் உதவி பெரும் பங்கு வகிப்பார்கள்। மொத்தத்தில் ஷாரூக் தோற்றதால் அஜித் வென்றார் என்றே சொல்லலாம்।


இப்போது தெலுங்கிலும் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்
Image
மறக்காமல் மேல் நோக்கிய தமிழ்மண கட்டை விரலிலும், தமிழிஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்இது ஒரு மீள்பதிவு

16 comments:

 1. டாக்டர் சார், இன்னிக்கு நாந்தா மொத பேசண்ட்...

  நல்ல அலசல், நல்லாருக்கு..

  ReplyDelete
 2. சுரேஷ் தலைவரே....
  உங்கள் கட்டுரை அருமை...
  ஒரு திருத்தம் பில்லா படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிட்டு இருக்கு.

  ReplyDelete
 3. படங்களை அலசுவதில் சுரேசுக்கு நிகர் யாருமில்லை!!

  ReplyDelete
 4. அமிதாப்பின் கம்பீரம், ரஜினியின் ஸ்டைல் இன்னும் யாருக்கும் வரவில்லை!

  ReplyDelete
 5. தலைப்பு படம் அருமை.

  ReplyDelete
 6. நன்றி லோகு சார்...

  ஜெட்லீ சார்....


  தேவன்மயம் சார்..

  சேரபாலா சார்..

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

  ReplyDelete
 7. //ஜெட்லி said...

  சுரேஷ் தலைவரே....
  உங்கள் கட்டுரை அருமை...
  ஒரு திருத்தம் பில்லா படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிட்டு இருக்கு.
  //


  ஓ.கே.தல..

  ReplyDelete
 8. //thevanmayam said...

  அமிதாப்பின் கம்பீரம், ரஜினியின் ஸ்டைல் இன்னும் யாருக்கும் வரவில்லை!
  //


  அவர்களுக்கு நிகர் அவர்களே....

  ReplyDelete
 9. அஜித்தின் பில்லா கூட ரசிக்கும்படிதான் இருந்தது

  ReplyDelete
 10. தெலுகுல இது ஏற்கனவே NTR நடிச்சிருக்காரு. அங்கயும் இரண்டாம் பதிப்பு தான் :-)

  ReplyDelete
 11. தெலுங்கில் பில்லா படம் செம்ம ப்ளாப் என்று தெலுங்கு பட்சி ஒன்று கூறியது. அஜீத் நடித்த போதே கொஞ்சம் ஓவர் ஸ்டைல் என்று பீல் பண்ணியவர்கள் இருக்கும் போது 4 ஹிட் படம் குடுத்த பிராபாஸ் எல்லாம் சூபபர் ஸ்டார் ரேஞ்சுக்கு நடித்தன் விளைவு என்று புரிகிறது...

  அப்பா சாமிங்களா பில்லாவுக்கு இனிமேலா கல்தா குடுங்கப்பா... ஒரே மொந்தையில் எவ்ள நாள் தான் குடிக்கிறது.... அவ்வ்வ்வ்வ்வ...

  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 12. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
  http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

  ReplyDelete
 13. தல,

  சமீப பதிவுகள் எனக்கு சைட் பாரில் அப்டேட் ஆக மறுக்கின்றன. இதில் அயல் நாட்டு சதி இருக்குமோ?

  ReplyDelete
 14. ரஜினியின் பில்லாவில் ஒரு இயல்பான நகைச்சுவை இருக்கும். அஜித்தின் பில்லாவில் இது மிஸ்ஸிங். ஆனாலும் ஒரு stylish movie.

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails