பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். இரண்டாம் ஆண்டு போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவருகின்றன. இந்த சூழலில் டேவிஸ் கோப்பைக்கான போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தன. இந்த சூழலில் எதிர்த்து விளையாட இருந்த ஆஸ்திரேலிய அணியினர் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து இருப்பதாக செய்திகள் வருகின்றன்.
இவ்வாறு ரத்து செய்ததால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு அபராதமும், ஓராண்டுக்கு தடையும் விதிக்கப் படலாம் என்று செய்திகள் வெளியாகின்றன
................................................................................................................
இது முதல் நிகழ்வுதான். இனிமேல் பிற கிரிக்கெட் அணிகள் கூட இவ்வாறு கூறலாம். வெளிநாட்டுகள் சொல்லக்கூடிய குறைபாடுகளை உள்நாட்டுக்காரர்களே சொன்னதால் நிஜமாகவே இந்த நாட்டில் பாதுகாப்பு என்பது இல்லையோ என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பே.
இனி மற்ற விளையாட்டு அணிகள் கூட இந்தியா வர பயப் படலாம். ஏன் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் கூட இந்தியா வரத்தயங்கலாம். அப்போது இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
அனைத்து ஆட்டங்களையும் வெளிநாட்டுக்கு மாற்றிவிடுவார்களா? அல்லது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவார்களா?
வெளிநாடுகளிலேயே அனைத்து ஆட்டங்களையும் ஆடுவார்கள் என்றால் அவர்கள் இனி இந்தியா திரும்புவார்களா? இல்லை வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக மாறிவிடுவார்களா? ஏற்கனவே வருடத்தில் முக்கால் பகுதி வெளிநாடுகளில்தான் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.
அப்படி என்றால் இந்திய கிரிக்கெட்? என்ன ஆகும்
.......................................................................................................................
இன்று டென்னிஸ் என்பது ஒவ்வொரு விளையாட்டாக மாறி இந்திய கிரிக்கெட்டையே அழித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.
எச்சரிக்கை அடைவார்களா? இந்திய விளையாட்டுகளைக் காப்பாற்றுவார்களா?
உங்கள் ஆதங்கம் உண்மை..
ReplyDeleteஅருமையான பதிவு..
சேர்த்து விடுகிறேன் தமிழினி அவர்களே
ReplyDelete//லோகு said...
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் உண்மை..
அருமையான பதிவு..
//
நன்றி தல
கிரிக்கெட் என்னங்க கிரிக்கெட்... 2010 காமன் வெல்த் போட்டிகளே கேள்விக்குறியா இருக்கு :(
ReplyDelete//அப்படி என்றால் இந்திய கிரிக்கெட்? என்ன ஆகும்//
//இன்று டென்னிஸ் என்பது ஒவ்வொரு விளையாட்டாக மாறி இந்திய கிரிக்கெட்டையே அழித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை//
2008,நவம்பரிலேயே இந்தியாவிற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது.
வாங்க எட்வின் சார்..,
ReplyDelete//ஆப்பு வைக்கப்பட்டு விட்டது.//
கவலைக்கிடமாகவே உள்ளது.
தங்கள் வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி