சமீப காலமாய் இளைஞர்களை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அருந்ததி படத்தின் விளம்பரங்களிலேயே ஆயிரம் சந்திரமுகி ஒன்றாய் வந்தது போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கிற்கு ரசிகர்களை இழுக்கும் படங்களில் ரஜினி படங்கலுக்கு நிகராக அருந்ததி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம்.
அதே பாணியில் ரஜினிக்கு ஒரு கதை யோசித்தபோது தான் நாம் ஏற்கனவே எழுதிய கதை நினைவுக்கு வந்தது. அதை உங்களின் பார்வைக்கு மீள்பதிவாகக் கொடுக்கிறோம். துளி கூட மாற்றி அமைக்காமல் அப்படியே ஒரு மீள்பதிவு.
==========================================================
எந்திரன் புத்தம்புதிய கதை
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பரிசாக இந்த பொற்காவியத்தை அவரது காலில் சமர்க்கிறோம்.
யந்திரன் entirely different entertainment
முதல் காட்சியில் நாயகன் சங்கராயனிலிருந்து இறங்கி வருகிறார். நாட்டிலேயே முதல்முறையாக பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு வருகிறார்.
அவரது பெற்றோர் அவருக்கு திருமண்த்திற்கு பெண் பார்க்கிறார்கள். இந்திய கலாச்சாரத்திற்கு தகுந்த பெண்ணாய் பார்க்கிறார். கேரளாவிற்குச் செல்கிறார். போகும் வழியில் பொள்ளாட்சி ரோட்டில் ஒரு பாட்டு. உடன் ஆட ஸ்ரேயா..
கேரளாவில் அவரை வில்லன் கூட்டத்தினர் கடத்தி விடுகின்றனர். தலமை மந்திரவாதி திலகன்,, தலைவரின் உடலில் ஒரு யந்திர தகட்டை வைத்து விடுகிறார். யந்திர தகடு உடலில் சேர்ந்த உடன் தலைவர் வில்லன் கூட்டத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.
வில்லன் கூட்டத்தினர், உலகில் உள்ள பெரும்தலைகள் பலரை கொண்று குவிக்க ஆணையிடுகின்றனர். முதலில் ரஷ்யத் தொழில் அதிபரை கொல்கிறார். அதனை ஒரு அழகி விடியோ எடுத்து விடுகிறார். அடுத்து ஜெர்ம்னிக்குச் செல்கிறார்.
இந்த நிலையில் தலைவர் யந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரின் குடும்பத்திற்கு தெரிந்துவிடுகிறது. உடனே இமயமலையில் 1000ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மகான் அமிதாப்ஜியிடம் செல்கின்றனர். அவர் தனது தவ வலிமையால் தலைவரின் ஆன்மாவைத்தனியாக பிரித்து தலைவரைக் காப்பாற்ற அனுப்புகிறார். தலைவரின் ஆன்மா மனித உருக் கொண்டு தலைவரை காப்பாற்றச் செல்கிறார்.
இந்த நிலையில் எந்திரத் தலைவர் அமரிக்கா செல்கிறார். கடல் கடந்து செல்லும் சக்தியை அமிதாப்ஜி தராததால் ஆத்ம சக்தி திரும்பி விடுகிறார்.
கடல் கடந்து செல்லும் சக்தியை ஆதித்ய கணேசச் சித்தரிடம் தான் இருக்கிறது. அவர் விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீங்கிவிட்டார். அவரை வரவைக்க சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்கிறார். அந்த பூசைகளை அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் செய்ய வேண்டும் என்கிறார்.
ஐஸ்வர்யா பூஜைகள் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜெர்மானிய தொழிலதிபரைத் தலைவர் ஐ.நா. சபை வாசலில் வைத்துக் கொண்று விடுகிறார். அடுத்த கட்ட பூஜையாக இமயமலை பனிக்கு நடுவே பூங்குண்டம் அமைத்து அங்கே கிடைக்கும் இலைகளை ஆடையாக அணிந்து நடணம் ஆடி பூஜை செய்கிறார்.கூடவே ஐந்து இளம் கன்னிப்பெண்களும் ஆடுகிறார்கள். தலைவர் செய்த கொலையால் உலகமே பரபரப்பாகிறது. இந்தியாவின் மேல் போர் தொடுக்க அமரிக்கா திட்டமிடுகிறது.
அடுத்த கட்டமாக அமெரிக்க ஜனாதிபதியை முடிக்கும் பணி கொடுக்க்ப் படுகிறது. தலைவர் மறுத்து விடுகிறார். வில்லன் குரூப் மந்திர வாதிகள் அதீத கோபம் அடைகிறார்கள். ஐஸ்வர்யாவின் பூஜை காரணமாக ஆதித்ய கணேச சித்தர் தோன்றி பல ரகசியங்களைச் சொல்கிறார்.இந்த வலுவான பாத்திரத்தை சிவாஜி சாருக்கு கொடுக்கிறார்கள். முழுக்க கிராபிக்ஸ்.
தலைவரின் நாடி, நரம்பு, ரத்தம், சதை, நகம், பனியன், ஜட்டி எல்லாமே நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருப்பதால் தலைவர் என்றுமே தவறு செய்யமாட்டார். இதுவரை அவர் கொன்றவர்கள் எல்லாம் உலக பயங்கரவாதிகள். அவர் என்றுமே நல்லவர்களை எதிர்க்க மாட்டார். என்று கூறுகிறார். அடுத்த ரகசியத்தையும் கூறுகிறார். தலைவர் பிறந்த அன்றுதான் வானில் துருவ நட்சத்திரம் காணாமல் போனது. அத்னால் தலைவர்தான் துருவ நட்சத்திரம். இதை வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆதம சக்தி அமெரிக்கா செல்லும் சக்தியைக் கொடுக்கிறார்.
வில்லன் கோஷ்டி யெந்திரனை அடைத்துவைத்து விட்டு இந்தியா முழுவதும் குண்டு வைக்கின்றனர். ஆத்ம சக்தி அமெரிக்கா சென்று விட்டு, யெந்திரனை விடிவித்து இந்தியா அனுப்பிவிட்டு அங்கே அவர் தங்கிவிடுகிறார். தலைவர் அனைத்து இடங்களிலும் குண்டுகளை எடுக்கிறார். அங்கே அமெரிக்க ஜணாதிபதியைக் காப்பற்றும் பொறுப்பை ஆத்மாவும். இந்தியாவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை யெந்திரனும் செய்கிறார்கள். கூடவே ஐஸ்ஸும் போய் மிகவும் உதவி செய்கிறார். அங்கே தலைவர்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கணை உதவி செய்கிறார்.
கடைசியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் தலைவர் காப்பாற்றீவிடுகிறார். இந்த நிலையில் வெளி கிரகங்களீலிருந்து இரண்டு வாகண்ங்கள் வருகின்றன. அதில் இருந்து இறங்குபவர்கள் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிவிட்டு
யூனிவர்ஸ் முழுவதும் உன்னை வென்றிட யாரு...
பிரபஞ்ச நாயகனே ........
பாட்டுடன் படம் முடிவடைகிறது.
டாங்கர் வண்டியில் துரத்தும் படைகளைப் பார்த்து தலைவரின் வசனம்..
யெந்திரனுக்கே யெந்திரமா........
தலைவர் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளும்போது பேசும் வசனம்
நான் ஒருத்தனக் கொண்ணா நூறு பேரை கொண்ண மாதிரி
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டக் டக் என்று பயணம் செய்துவிட்டு
ஆண்டவன் சொன்னான் அமெரிக்கா வந்தேன்
ஆண்டவன் சொன்னான் அமெரிக்காவிலிருந்து வந்தேன்
சொல்லி பல வகைகளில் கலகல்ப்பாக்கலாம்.
பின்குறிப்பு:-
வழ்க்கமாக ரஜினி படமென்றால் பழைய ரஜினி படங்களீன் சாயல் இருந்தே தீர வேண்டும். அதனை ஓரளவே நிறைவேற்ற முடிந்தது.
========================================================
நாம் எழுதிய பிற எந்திரன் கதைகளை இங்கே.
அடுத்ததாக இங்கே நீங்கள் படிக்கலாம்
========================================================
முதலிலேயே எழுதிவிட்டதாலும் அதிலும் தமிழுக்காக எழுதியதாலும் அருந்ததி அளவுக்கு ரத்தம் சேர்க்கப் படவில்லை.
//முதலிலேயே எழுதிவிட்டதாலும் அதிலும் தமிழுக்காக எழுதியதாலும் அருந்ததி அளவுக்கு ரத்தம் சேர்க்கப் படவில்லை.//
ReplyDeleteஉண்மைதான். ஆனால் நன்றாக இருந்த்த்து.
//Subankan said...
ReplyDelete//முதலிலேயே எழுதிவிட்டதாலும் அதிலும் தமிழுக்காக எழுதியதாலும் அருந்ததி அளவுக்கு ரத்தம் சேர்க்கப் படவில்லை.//
உண்மைதான். ஆனால் நன்றாக இருந்த்த்து.
//
நன்றி தல
ஆமா. இங்க என்ன நடக்குது..!
ReplyDeleteநான் எங்கே இருக்கேன்..
சங்கர் உங்கள மைண்ட்ல வச்சுருக்கார்.. தேவைப்படும் போது Use பண்ணிக்குவார்..
ReplyDeleteநம்ம கடைப்பக்கம் வாங்க..
http://muttalpaiyan.blogspot.com/
வாருங்கள் டக்ளஸ் அண்ணே....
ReplyDeleteலோகு அண்ணா....
கருத்துக்களுக்கு நன்றி
rajini ya vidarathaa illangala...:-))
ReplyDeleteSureஷ் அண்ணே,
ReplyDeleteநேத்து தான் உங்க பழைய பதிவுகள் எல்லாம் படிச்சேன். கொன்னுட்டீங்க போங்க.
அதுவும் ரஜினி பற்றிய பதிவுகளும், கிரிக்கெட் பற்றிய பதிவுகளும் சூப்பர்.
தொடர்ந்து கலக்குங்க தல.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
//இயற்கை said...
ReplyDeleterajini ya vidarathaa illangala...:-))
//
ஆமாங்க தல
//தொடர்ந்து கலக்குங்க தல.
ReplyDeleteகிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்//
நன்றி தல