Sunday, April 19, 2009

சமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம்




பேருந்து
பெரிய உந்து
தானியங்கி அல்ல
தனையன் பெயரிலிருந்தாலும்
தனியனுக்கும் சொந்தம் அல்ல



கால அட்டவணை உண்டு
காலம் தாழ்த்தலும் உண்டு
மகளிருக்கு தனி வண்டி
அதுகூட
மண்ணில்தான் ஓடும் வண்டி

அமர இருக்கை உண்டு
நிற்க இடமும் உண்டு
தொங்க படியும் உண்டு
கூரை சாகசமும் உண்டு

உருவாகும்போதே
கண்ணாடி அணிந்தாலும்
இளமையிலேயே முதுமை வந்தாலும்
ஒப்பனை அணிந்து
கற்பனை கலந்து
கவரும் வண்டி

கிராமம் பார்த்தாலும்
நகரம் பார்த்தாலும்
குமரி ஏறினாலும்
கிழவி ஏறினாலும்
பெட்ரோல் ஏறினாலும்
சாராயம் ஏறினாலும்
போதை ஏறாத வண்டி


இளமை பொங்கி நின்றாலும்
எரிபொருள்
நிறம்பி இருந்தாலும்
நடுசாலையில்
நின்று தொலைக்கும் வண்டி
பின்னழகில் கைவைத்து
முன்னோக்கி தள்ளினால்
தானே நகரும் வண்டி


ஓட்டுனர் மாறினாலும்
நடத்துநர் மாறினாலும்
பயணிகள் மாறினாலும்
பாதைகள் மாறினாலும்
கவலை கொள்ளா வண்டி

26 comments:

  1. தலைவர் உள்ளே போனால்
    கல்லை உள்வாங்கும் வண்டி

    ReplyDelete
  2. வணக்கம் பழமைபேசி அவர்களே

    தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமையான கவிதை

    ReplyDelete
  4. வாங்க நேம்ஸ்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. எல்லாரும் வீடு கட்டி கலகுறீங்களெ..
    வாழ்த்துக்கள் டாக்டரே..
    வெற்றி பெறுங்கள்..

    ReplyDelete
  6. இல்லை.. இல்லை.. எனக்கு இல்லை.. பரிசு எனக்கு இல்லை..

    அருமை.. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாங்க டக்ளஸ் சார்,

    லோகு சார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. //ஓட்டுனர் மாறினாலும்
    நடத்துநர் மாறினாலும்
    பயணிகள் மாறினாலும்
    பாதைகள் மாறினாலும்
    கவலை கொள்ளா வண்டி//

    Men May Come
    And
    Men May Go.

    But the Bus Goes On Forever.

    கிங் விஸ்வா
    Carpe Diem.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  9. வாங்க

    கிங் விஸ்வா
    Carpe Diem.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    //But the Bus Goes On Forever.
    //

    அட ஆமால்ல.....

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. முதல் நபரா போட்டிக்கு பதிவு செய்து விட்டிர்கள். போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள். கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  11. நன்றி சந்துரு சார்....

    மறக்காம வாக்கெடுப்பின்போது வாக்குப் பதிவு செய்துவிடுங்கள்

    ReplyDelete
  12. நன்றி வினோத் கவுதம் சார்...,

    ReplyDelete
  13. முதல் பதிவே வெற்றிப் பதிவாய் ஆக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. இளமை பொங்கி நின்றாலும்
    எரிபொருள்
    நிறம்பி இருந்தாலும்
    நடுசாலையில்
    நின்று தொலைக்கும் வண்டி //

    ஹிஹிஹி...... நல்லாருக்கு.

    ReplyDelete
  15. //வெங்கிராஜா said...

    முதல் பதிவே வெற்றிப் பதிவாய் ஆக வாழ்த்துக்கள்!
    //

    நன்றி தல

    ReplyDelete
  16. //விக்னேஷ்வரி said...

    இளமை பொங்கி நின்றாலும்
    எரிபொருள்
    நிறம்பி இருந்தாலும்
    நடுசாலையில்
    நின்று தொலைக்கும் வண்டி //

    ஹிஹிஹி...... நல்லாருக்கு.
    //


    நன்றி தல

    ReplyDelete
  17. கால அட்டவணை உண்டு
    காலம் தாழ்த்தலும் உண்டு
    மகளிருக்கு தனி வண்டி
    அதுகூட
    மண்ணில்தான் ஓடும் வண்டி

    நல்ல வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இப்படி எல்லாம் எழுதி பயமுறுத்துறீங்க பாஸ்

    ReplyDelete
  19. //பிரியமுடன்.........வசந்த் said...

    நல்ல வரிகள்
    வாழ்த்துக்கள்//

    நன்றி தல

    இது போட்டிக்கான இடுகை. மறக்காமல் அங்கேயும் ஓட்டுப் போடுங்கள்

    ReplyDelete
  20. //nila said...

    இப்படி எல்லாம் எழுதி பயமுறுத்துறீங்க பாஸ்
    //

    ஹி ஹி தனித் தன்மையே இது தான் தல

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  21. நல்லா இருக்கு சுரேஷ். உங்களுக்கும் அஞ்சு மார்க் போட்டாச்சு

    ReplyDelete
  22. //S.A. நவாஸுதீன் said...

    நல்லா இருக்கு சுரேஷ். உங்களுக்கும் அஞ்சு மார்க் போட்டாச்சு
    //


    நன்றி சார்..,

    ReplyDelete
  23. பேருந்து கவிதை பேர் உந்துகிறது. அருமை, அருமை.

    ReplyDelete
  24. // சதங்கா (Sathanga) said...

    பேருந்து கவிதை பேர் உந்துகிறது. அருமை, அருமை.//

    நன்றி தல,,,,,

    ReplyDelete
  25. சாலையைவிட நடைபாதையில் அதிகம் ஓடும் வண்டி..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails