Monday, April 20, 2009

வெட்டோரிக்கு ஒரு நியாயம் /கும்ளேக்கு ஒரு நியாயம்

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதியதில் டெல்லி வென்றது. சிற்ப்பாக பந்து வீசி துவக்க விக்கெட்டுகளை வீழ்த்திய வெட்டோரி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்..

அவருக்கு நாம் வாழ்த்து சொல்லி விடுவோம்..

அதற்கு முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெங்களூரு அணியும் ஆடிய ஆட்டத்தை நினைவு படுத்திப் பாருங்கள். வழக்கம்போல் சுவர்போல் டிராவிட் நிலைத்து ஆடி அரைசதம் எடுத்தார். அதன்காரண்மாகவோ என்னவோ பெங்களூரு அணி 133 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

மிகச் சுலபமாக எடுக்க கூடிய ஓட்டங்களை துரத்த ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கிய சூழலில் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் பிரவீன்

அடுத்து பந்துவீசிய கும்ளே திறம்பட பந்து வீசி நான்கு ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப் படவில்லை...

ஆனாலும் வெற்றிக்காரணமாக இருந்த கும்ளேக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்....

..............................................................................................

18 comments:

 1. கும்ப்ளே எடுத்தது அனைத்தும் இறுதி விக்கெட்டுகள்.. அவர் பந்து வீச வரும் போது கிட்டத்தட்ட ஜெயித்தாகி விட்டது.. ஆனால் திராவிட் தான் தோல்வியை தவிர்க்க செய்தார் என்பதே எனது கருத்து டாக்டர் சார்..

  ReplyDelete
 2. வாங்க லோகு சார்..

  தவிர கடைசி விக்கெட்டுகளை மின்னல் வேகத்தில் எடுத்தவர் கும்ளேதானே. வெறும் பதினொன்பது பந்துகளில் எடுத்துவிட்டார்.

  இதில் ஏதாவது ஒரு ஜோடி நின்றிருந்தாலும் அடுத்துவரக் கூடியவர்கள் அடித்து வென்றிருக்கக் கூறும்.

  முன்னொரு காலத்தில் ஜடேஜா ஒரே ஓவரில் கடைசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது சரித்திரம் சொல்லும் செய்தி

  ReplyDelete
 3. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...

  ReplyDelete
 4. உங்க கருத்தும் சரி தான்

  ReplyDelete
 5. உள்ளேன் ஐயா.

  நான்தான் உலக மகா கும்ப்ளே ரசிகன் என்பது பலர் அறிந்த சங்கதி என்றாலும், இந்த விஷயத்தில் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை தல.

  நீங்க சொல்ற அந்த ஜடேஜா மேட்ச் நிலைமை வேறு, வெட்டோரி மேட்ச் நிலைமை வேறு மற்றும் கும்ப்ளே மேட்ச் நிலைமை வேறு.

  இன்னொரு விஷயத்தை கவனித்தீர்களா? சமீப காலங்களில் வெட்டோரி ஒரு சிறந்த பேட்ஸ்மென் ஆக விளையாடினாலும் அவரின் டெஸ்ட் மேட்ச் பந்து வீச்சு படு மோசமாகி விட்டது (பங்களாதேஷ் ஜிம்பாப்வே தவிர்த்து).

  வெட்டோரி ஒரு ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர் ஆகி வருவதும் உண்மை.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.

  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 6. //வெட்டோரி ஒரு ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர் ஆகி வருவதும் உண்மை// என்பதை வெட்டோரி ஒரு 20/20 ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர் ஆகி வருவதும் உண்மை என்று வாசிக்கவும்.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.

  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 7. இந்த IPL போட்டிகளே ஒரு கூட்டுக் கொள்ளை. அதுல வெளயாடுரவங்க, நடத்துரவங்க எல்லாம் கூட்டுக் களவானிங்க. இப்படி நம்மல உசுப்பேத்தி உசுப்பேத்தி அவனுங்க பணத்த மூட்ட மூட்டையா கொள்ளையடிச்சுகிட்ருக்கானுங்க. இதுல இவரு எவனுக்கு மேன் ஆப் தி மேட்ச்னு கவல படுராரு.

  ReplyDelete
 8. வாங்க டக்ளஸ் சார்,

  சுரேஷ் சார்,

  கிங்ஸ் சார்,

  பணங்காட்டான் சார்

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

  ReplyDelete
 9. King Viswa said...

  வெட்டோரி மேட்ச் நிலைமை வேறு மற்றும் கும்ப்ளே மேட்ச் நிலைமை வேறு. //


  உண்மைதான் தல...

  கும்ளே விக்கெட் எடுக்கும் போது வெற்றி உறுதிப் படவில்லை.. தவிரவும் வாய்ப்பு சமம்தான்..

  வேகமாக விக்கெட் விழுந்ததால் அது தெரியவில்லையோ என்னமோ......

  ReplyDelete
 10. //King Viswa said...

  சமீப காலங்களில் வெட்டோரி ஒரு சிறந்த பேட்ஸ்மென் ஆக விளையாடி//


  டெஸ்ட் ஆட்டங்களில் ஒரு வசதி உண்டு.

  முண்ணனி மட்டையாளர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தவுடன் பின் வரிசையில் இறங்குபவர்கள் அவுட் ஆகாமல் பார்த்துக் கொண்டாலே பெரிய பெயர் கிடைக்கும், அப்படியே ரன்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டால் நல்ல மட்டையாளர் என்ற பெயர் கிடைத்துவிடும்

  அந்த பாணியில் கும்ளே பெரிய மட்டையாளராக மாறினார். இப்போது வெட்டோரியும் முண்ணனி பிண்ணனி மட்டையாளராக மாறிவருகிறார்.

  ReplyDelete
 11. //பனங்காட்டான் said...

  இந்த IPL போட்டிகளே ஒரு கூட்டுக் கொள்ளை. //  பொழுது போக்குச் சமாச்சாரங்களை அப்படி சொல்லக் கூடாது தல்....

  அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள்..

  ReplyDelete
 12. சுரேஷ் என்னதான் சொல்லுங்கள்... ஐ பி எல் இந்தியாவில் நடந்த போது இருந்த அன்னியோன்யம் சுத்தமாக வற்றி போய் விட்டது இந்த அத்தியாத்தில். ஒரே ஆறுதல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஒரு தொடர் அமைய போவது தான்.

  வெட்டோரி இப்போதைக்கு ஒரு டேஞ்சரஸ் குறுகிய கிரிக்கெட் பவுலர் என்பதில் இருவேறு கருத்தில்லை... கும்ப்ளே இன்னும் ஒரு போட்டியில் எப்படி ஆடுகிறார் என்று பார்த்து விட்டு பாராட்டுகளை வைத்து கொள்ளலாமே...ஆனாலும், ஒளிவெளிச்சத்தில் கீழ் என்ற காரணம் இருந்தாலும், 5 விக்கெட்டு நல்ல ஒரு முயற்சி தான்.

  ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்டெயில் பீஸ்: ராணி காமிக்ஸ் வலைப்பூவில் தொடர்பவர் ஆனதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

  ReplyDelete
 13. எனக்கென்னவோ வெட்டோரி விக்கெட் மட்டுமல்ல ஒரு ரன் அவுட், ஒரு முக்கியமான கேட்ச் வேறு பிடிச்சிருக்கார்.

  ஒரு விக்கட் தவிர எல்லா விக்கட்லயும் அவுரோட பங்கு இருக்கு.

  ஆனா கும்ப்ளே?/?

  ReplyDelete
 14. வாங்க

  ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ் அவர்களே

  ரிஷி (கடைசி பக்கம் அவர்களே

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வெட்டோரிக்கு ஆட்டநாயகன் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது..

  கும்ளேதான் வெற்றிக்கு காரணம் என்கிறேன் நான்..

  ReplyDelete
 15. //ЯR said..

  கும்ப்ளே இன்னும் ஒரு போட்டியில் எப்படி ஆடுகிறார் என்று பார்த்து விட்டு பாராட்டுகளை வைத்து கொள்ளலாமே.//

  இந்த ஆட்டத்தில் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது என் கருத்து

  ReplyDelete
 16. உண்மை சுரேஷ்... ஆனால் ஆட்டத்தின் போக்கில் விட்டு பார்க்கும் போது... டிராவிடின் அரை சதம் மூலம் தான் ஒளி விளக்கின் கீழ் இவர் 5 விக்கெட் எடுக்க சாத்தியம் கொடுத்தது.... ஆகவே தான், டிராவிடிடம் விருது குடுக்கபட்டிருக்கும்.

  கும்ப்ளே நேற்றைய போட்டியில் திறம்பட பந்து வீச முடியவில்லை பார்த்தீர்களா... கும்ப்ளே இப்போதைய நிலைமையில் சப்போர்ட் பவுலர் என்ற நிலையில் தான் காலம் தள்ள முடியும்... With all due respect to his credentials

  ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 17. நண்பர் சுரேஷ், என் வலைப்பூவை தொடர்பவராக இணைந்து கொண்டமைக்கு நன்றிகள். தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

  ReplyDelete
 18. தங்களின் ஆதரவும் கோரப்படுகிறது கனவுகளின் காதலன் அவர்களே...

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails