Tuesday, April 5, 2011

விஜய காந்தின் ஓட்டு வங்கியும் ரஜினியும்

இந்திய அரசியலில் மூன்றாவது அணி என்று பேசுவார்கள்; நான்காம் அணி கூட உருவாக்கிக் கொண்டார்கள். அதுபோல் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்காற்றினால் மாநில அளவில் மாவட்டக் கட்சிகள் வளரத் தானே செய்யும்


மாவட்டக் கட்சி என்ற வடிவத்தை நாம் யோசித்தால் நமது மாவட்டங்கள் அப்படி ஒன்றும் பெரிய பரப்பளவு உள்ளவை அல்ல. புதுவை மாநிலமே சிறிய அளவில் இருப்பதால் தான் தமிழகக் கட்சிகள் அங்கே கிளைகளை வெற்றிகரமாக நடத்த முடிகிறது. நமது மாவட்டங்கள் சின்னதாக இருப்பதால் சில நேரங்களில் சில மாவட்டங்கள் பரவி ஒரு கட்சி இருக்க முடியும். தமிழ் முழுவதும் தெரிந்த தலைகளால் அதை மாநிலக் கட்சியாகக் கூட மாற்ற முடியும்.

பொதுவாக நமது மக்கள் கட்சியில் சேர்வது என்பது பெரும்பாலும் மக்களுக்கு சேவை செய்வது என்பதைவிட தனக்கு ஒரு பின்புலமாக பக்க பலமாக இருக்கும் என்ற நிலையில் கட்சிகளில் சேர்கிறார்கள். திறமையாக செயலாற்றத் தெரிந்தவர்கள் மேலும் மேலும் பெரிய அளவில் வளருவதற்கு தற்போதுள்ள சூழலில் பழைய அரசியல் கட்சிகளில் இடம் இருப்பதில்லை. ஏற்கனவே கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களும் அவர்களோடு தோள்நின்ற இளவல்களும் அந்தக் கட்சிகளில் முக்கிய நிலையில் இருப்பதால் புதிதாக பதவி எதிர்பார்த்து கட்சிகளில் சேர்பவர்களுக்கு பதவிகள் என்பது வார்டு செயலாளர் என்பதை தாண்டுவது என்பதே குறைவு.

இந்த சூழலில் புதிதாகக் கட்சி யார் ஆரம்பித்தாலும் இது போன்று பதவி இல்லாமல் சிரமப் படும் நபர்கள் புதிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைக்குத் தகுந்த பதவிகளை அடைந்து மக்கள் சேவைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.

விஜய காந்த் கட்சி ஆரம்பித்த போது கூட அதுதான் நடந்தது. உழைத்து கட்சியில் முன்னேற விரும்பியவர்களும் ஏற்கனவே ஓரளவு முன்னேறியவர்கள் சுதந்திரமாக செயலாற்ற விரும்பியவர்களும் கட்சியில் சேர்ந்து உழைக்கின்றனர். அவர்களது உழைப்பின் காரணமாகவும் தமிழ்நாடு தெரிந்த கட்சித்தலைமையின் காரணமாகவும் அந்த உழைப்பினை ஓட்டுக்களாக மாற்ற முடிகிறது.

பொதுவாக கட்சிமாறித் தலைமை இருந்தால் இந்த வட்ட அளவில், பேரூராட்சி, ஊராட்சி அளவிளான த்லைகளால் தொடர்ந்து போராட முடியாது. நேற்றைய எதிரியை இன்றைய நண்பனாக ஒரு சிலரால் ஒரு சிலரை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அப்படிப் பட்ட சூழலில் கீழ்மட்டத்தலைவர்களால் தொடர்ந்து திறம்படச் செயலாற்றுவது மிகக் கடினம். ஆனால் விஜயக் காந்த் தனியாக நிற்பது இவர்களுக்கு தங்கள் திறமையைக் காட்டவும், தங்களை வளர்த்துக் கொள்ளவும் மிக உபயோகமாக இருக்கிறது.

நடுநிலை ஓட்டுக்களும், முக்கியக் கட்சிகளை பிடிக்காத ஓட்டுக்களும் விஜயக் காந்த்துக்கு விழுந்ததாக பேசுகிறார்கள். ஆனால் நகரங்களில் கிராமங்களில் யார் தோற்கவேண்டும் என்று போடப் படும் ஓட்டுக்களே அதிகம்.(யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடு,நம்பியாருக்கு மட்டும் ஓட்டுப் போட்டுராத.. என்ற வசனத்தை கேட்டு இருக்குறீர்களா). பெருநகரங்களிலும் ஓரளவு வளர்ந்த நகரங்களிலும் முக்கிய கட்சிகளை பிடிக்காதவர்கள் வாக்களிக்கவே போக மாட்டார்கள். இவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் புதிதாக பெரிய அளவில் ஓட்டு வாங்கக் கூடிய மற்ற மாவட்டக் கட்சிகளுக்கும், ஜாதிக்கட்சிகளுக்கும் உள்ள நிலை கூட இதுதான்.


முக்கிய இரு கட்சிகளைப் பிடிக்காதவர்களின் ஓட்டுக்கள் என்றால் பகுஜன் சாமாஜ்கட்சி, பா.ஜ.க போன்று பிரதமர் வேட்பாளரை தன்னகத்தே வைத்திருந்த கட்சிகளுத்தான் அந்த ஓட்டுக்கள் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை

தலைவரின் மீதான நம்பிக்கை பெரிய அளவில் இருந்தாலும் கூட அவரால் கிடைக்கக் கூடிய பலன்களை வாங்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய நகர, கிராம, வார்டு தலைகளின் உழைப்பே ஓட்டு வங்கிகளை ஏற்படுத்த முடியும்.

இன்றைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த தலைவர்கள் கூட குறைவாகவே இருக்கிறார்கள். அதுபோல இந்தியா முழுவதும் தெரிந்த தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுக்குக் கூட நேரடியாகச் சந்தித்துப் பேசக் கூடிய அடுத்தடுத்த கட்ட தலைவர்கள் இந்தியா முழுவதும் இருப்பதும் கேள்விக்குறியே...

அதனால்தான் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் இது போன்று உழைக்கும் திறமை வாய்ந்தவர்கள் அவர்களது கட்சியில் முதலில் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்களை கட்சித்தலமை அதிகமாக உபயோகப் படுத்திக் கொள்ள தெரிந்திருந்தால் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிகிறது.

அவ்வாறாக ஒரு புதிய அரசியல் கட்சி ஓட்டுக்கள் அதிகம் வாங்கினால் அது இவர்களைப்போன்ற இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவரைகளைப் பொறுத்தே அமையும்.

நடிகர்களின் நற்பணி மன்றங்களில் (இப்போது ரசிகர் மன்றம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?) ஆட்கள் சேருவதும் இதற்காகத்தான். தங்கள் தலைவனை தெய்வமாக நினைத்து பாலாபிஷேகம் செய்வர்கள் ஒரு கட்டத்தில் தங்களை பூசாரிகளாக நினைத்துக் கொண்டு பூசாரிக்கு உரிய மரியாதையையும், காணிக்கைகளையும் எதிர்பார்க்க ஆரம்பித்து அதற்கான அடிப்படையாகவே இதில் உழைக்கின்றனர்.

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் சேருபவர்கள் இதுபோன்ற பல கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்தே சேருகிறார்கள்.

அவ்வாறு புதிய கட்சி ஆரம்பிக்கும்போது ஏதாவது உணர்ச்சிகரமான பிரச்சனைகளை முன்னிறுத்தி கட்சி ஆரம்பித்தாள். மற்றவர்கள் பெறக்கூடிய ஓட்டுகள் குறையும். ஆரம்பிப்பவர் பெறக்கூடிய ஓட்டுக்கள் வெற்றியைக் குவிக்கும்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது சூழல் அப்படித்தான். தி.மு.க. இந்திரா கூட்டு, எதிரணியான ராஜாஜி-காமராஜ் கட்சிகள் வழுவிழந்த சூழல். அந்த சூழலில் தி.மு.க.வின் பொருளாளரான எம்.ஜி.யார் (இப்போது மு.க.ஸ்டாலின் பொருளாளராக இருக்கிறார்) தனியே பிரிந்து வந்து ஒரு உணர்ச்சிகரமான உரைகள் நிகழ்த்தப் படுகிறது. அந்த கட்டத்தில் வந்த எம்.ஜி.யார் பாடல்களைக் கேட்டாலே ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

என்.டி.யார் கட்சி ஆரம்பித்த சூழல் இன்னும் அபாரமாக இருக்கும். எம்ஜியாரைப் போல என்டியார் இருபது ஆண்டுகாலம் ஒரு அரசியல் கட்சிக்கு உழைத்தவரல்ல.மூன்று சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவரும் அல்ல. எம்ஜியார் போல தெருதெருவாக பிரச்சாரம் செய்த அனுபவமும் அவருக்குக் கிடையாது. ஆனாலும் அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய காங்கிரஸ் முதலவர் கட்சித் தலைமையை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு பொழுது முழுதும் காத்திருக்கிறார், ஆனால் கட்சித்தலைமை அவரை நிராகரித்துச் செல்கிறார்கள். அது ஒரு உட்கட்சி விவகாரம். ஆனால் அந்த பிரச்சனையை ஆந்திர மக்களின் ஒட்டு மொத்த கவுரவ பிரச்சனையாக என்டியார் எடுத்துக் கொண்டு ஒரு கட்சி ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். அவரது பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியில்லாமல் மற்றவர்கள் தோற்கிறார்கள். 84ல் அதிபயங்கர காங்கிரஸ் அலை அடித்தபோது கூட ஆந்திராவில் தெலுகுதேசம் கட்சிதான் பெருவாரியான வெற்றி அடைந்தது என்பதும் பிரதான எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தது என்பது சரித்திரம்.

96ல்கூட ஒரு உணர்ச்சிகரமான சூழல் நிலவியது. புதிதாக மூப்பனார் கட்சி தொடங்கினார். அவரது கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கூட்டணிக்கு எல்லாமே பிரச்சார பிரம்மாஸ்திரமாக அமைந்தது. தூர்தர்ஸனில் ஒலிபரப்பான ஒரு சாதாரண பேட்டி(தொலைக்காட்சி நிலையத்தை பொருத்தவரை அந்தப் பேட்டி பத்தோடு பதினொன்று) கூட தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி பெட்டிகளிலும் பார்க்கப் பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

ஆனால் சிரஞ்சீவிக்கோ, விஜயகாந்த்துக்கோ இப்படி ஒரு சூழல் இல்லை, இருந்தாலும் அவர்கள் குறிப்பிடத்தக்க ஓட்டுப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களது கீழ்மட்டத்தலைவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

தமிழகத்தில் எத்தனையோ பெரிய தலைவர்கள் தனியே கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது ஒரு உணர்ச்சிகரமான சூழல் இல்லை. தாய் கட்சியிலிருந்து வெளியேறியவர்களுடன் புதிதாகக் கட்சியில் வந்தவ்ர்கள் கடை மட்டம் வரை மற்ற கட்சிகளை எதிர்த்து வேலை பார்க்கும் தொண்டர்கள் இல்லாத சூழலில் தோல்வியையே தழுவி யிருக்கிறார்கள். (தலைவருக்குத்தான் மற்ற தலைவரோடு பிரச்சனை. கீழே உள்ளவர்களுக்கு மற்ற நண்பர்களோடு பிரச்சனை இல்லையே. அப்புறம் எங்கே கடும் எதிர்ப்பைக் காட்டுவது)

இன்றைய சூழலில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இணைத்து கடுமையாக அரசியல் பணி செய்யும் நிலையில் உள்ள யார் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்தாலும் அவர்களால் நிறைய ஓட்டுக்களைப் பெற முடியும். ஆனால் அந்தத் தகுதி நடிகர்களுக்கு அதிகமாக இருப்பதால் நடிகர்கள் பலரும் கட்சி ஆரம்பிக்கும் ஆவலில் இருக்கிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் கூட இம்ரான்கான் மாதிரி கட்சி ஆரம்பிக்க நினைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் நற்பணி மன்றங்களை ஆரம்பித்து அடிப்படைப் பணிகளைச் செய்ய வேண்டும்.

உண்மையில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், விஜய் அரசியலுக்கு வந்தாலும் இரண்டாம் கட்ட மூன்றாம் நான்காம்நிலை த்லைவர்களின் தொண்டர்களி ன் உழைப்பினை பெறும் திறமை இருந்தால் மட்டுமே ஓட்டுக்களைப் பெறமுடியும். அவர்களின் முகத்திற்காகவெல்லாம் ஓட்டு விழவேவிழாது



டிஸ்கி ; இது போன தேர்தல் முடிந்த பின் எழுதியது. இன்றைய விஜயகாந்த்க்கு இதெல்லாம் தெரியுமா?   என்று நினைத்த போது என்னவோ போல் இருந்தது. த்ங்களிடம் மீண்டும் பகிர்ந்து கொள்ள ஒரு மீள்பதிவு

27 comments:

  1. ஒப்பமுக்கு அமுக்க வந்தேன்...இடுகைய அப்பறமேல்ட்டு வந்து படிக்கேன்...

    ReplyDelete
  2. சரியாகத்தான் கணித்திருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  3. வருங்கால முதல்வர் அண்ணன் சுரேஷ்,

    வாழ்க, வாழ்க.

    ReplyDelete
  4. //யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடு,நம்பியாருக்கு மட்டும் ஓட்டுப் போட்டுராத.. என்ற வசனத்தை கேட்டு இருக்குறீர்களா// உண்மைதான் தல.

    இவன் ஜெயிக்க வேண்டும் என்பதை விட, அவன் தோற்க வேண்டும் என்பதே இங்கு முக்கியம்.

    ReplyDelete
  5. //உண்மையில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், விஜய் அரசியலுக்கு வந்தாலும் இரண்டாம் கட்ட மூன்றாம் நான்காம்நிலை த்லைவர்களின் தொண்டர்களி ன் உழைப்பினை பெறும் திறமை இருந்தால் மட்டுமே ஓட்டுக்களைப் பெறமுடியும். அவர்களின் முகத்திற்காகவெல்லாம் ஓட்டு விழவேவிழாது//

    தல,

    என்ன சொல்றீங்க? அப்பா நம்ம கார்த்திக் முதல்வர் ஆகவே முடியாதா?

    ReplyDelete
  6. //அவர்களின் முகத்திற்காகவெல்லாம் ஓட்டு விழவேவிழாது// நூறு சதவீதம் உண்மை தல.ஆனால், நீங்கள் இப்படி கூறுவது பப்ளிக் செண்டிமெண்டுக்கு எதிரா இருக்கே? அப்போ, மருத்துவர் விஜய் முதல்வர், பிரதமர் ஆகும் கனவெல்லாம் நிஜம் ஆகாதா?

    ReplyDelete
  7. தல,

    ஆனால் நீங்க சொல்வதில் உள்ள உண்மையை இந்த தலைவர்கள் உணர்ந்தால் தான் அவர்கள் தொடர்ந்து களத்தில் இருக்க முடியும். அடுத்த கட்ட தரும் அவர்களின் உழைப்பின் தலைவர்கள் முககியத்துவத்தை உணர்ந்தால் கேப்டன் சில இரண்டாம் நிலை தலைவர்களை இன்னும் அதிகமாக மதிப்பார்.

    அவரின் வோட்டு வங்கி அதிகரித்து வருவதை கவனித்தீர்களா? மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா அல்லது இது மற்ற கட்சி வெறுப்பினால் விழுந்த வோட்டா?

    ReplyDelete
  8. //பழமைபேசி said...

    ஒப்பமுக்கு அமுக்க வந்தேன்...இடுகைய அப்பறமேல்ட்டு வந்து படிக்கேன்...
    //

    நன்றி ஐயா..,

    ReplyDelete
  9. //r.selvakkumar said...

    சரியாகத்தான் கணித்திருக்கின்றீர்கள்.
    //

    நன்றி தல..,

    அப்புடியே ஓட்டுக்களும் போட்டுவிடுங்கள்

    ReplyDelete
  10. ஆனால் சிரஞ்சீவிக்கோ, விஜயகாந்த்துக்கோ இப்படி ஒரு சூழல் இல்லை, இருந்தாலும் அவர்கள் குறிப்பிடத்தக்க ஓட்டுப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களது கீழ்மட்டத்தலைவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றுதான் பொருள். //

    சரியான அலசல், எந்த கட்சியின் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பது அந்த கட்சியின் கீழ்மட்டத்தலைவர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை சுரேஷ். வாக்காளர்களின் நாடி பிடித்து பார்க்க கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் ஸ்டெதஸ்கோப் அவர்கள்.

    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் விஜய்காந்த் மற்றும் சிரஞ்சீவி கட்சிகள், Vote Swing கர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன ? :)

    ÇómícólógÝ

    ReplyDelete
  11. //King Viswa said...

    வருங்கால முதல்வர் அண்ணன் சுரேஷ்,

    வாழ்க, வாழ்க.
    //


    வாங்க தல..,

    உங்களுக்காக நிறைய இடுகைகள் வெயிட்டிங்

    ReplyDelete
  12. //King Viswa said...

    அவரின் வோட்டு வங்கி அதிகரித்து வருவதை கவனித்தீர்களா? மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா அல்லது இது மற்ற கட்சி வெறுப்பினால் விழுந்த வோட்டா?//


    மற்ற கட்சிகளின்மீதான் வெறுப்பு ஒரு காரணமாக இருந்தாலும் அதனை ஓட்டுக்களாக மாற்றுவது கீழ்மட்டத்தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது

    ReplyDelete
  13. //வா(வ)ரம் said...

    யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

    யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.

    படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

    “வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

    வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
    //

    என்ன அநியாயம். அந்தச் சுட்டி என் வலைப்பூவுக்கே வருகிறது. அந்த இடுகை என் தளத்தில் இருப்பதாகக் காட்டப் படுகிறது. ஆனால் என் வலைப்பூவில் இல்லை என்றும் காட்டுகீறது,.


    என்னையும் மீறி என் தளத்தில் யாராவது ஏதும் பதிவிட முடியுமா?

    வரம்..

    எனக்கு ஒரு வழி சொல்லுங்க..,

    வருகைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டியதற்கும் நன்றி

    ReplyDelete
  14. //Rafiq Raja said...

    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் விஜய்காந்த் மற்றும் சிரஞ்சீவி கட்சிகள், Vote Swing கர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன ? :)

    //


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  15. // ஒரு புதிய அரசியல் கட்சி ஓட்டுக்கள் அதிகம் வாங்கினால் அது இவர்களைப்போன்ற இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவரைகளைப் பொறுத்தே அமையும்.
    //
    உண்மை பாஸ் ,,, அது எந்த கட்சியா இருந்தாலும் இவர்களை நம்பித்தான்...

    ReplyDelete
  16. /சூரியன் said...
    // ஒரு புதிய அரசியல் கட்சி ஓட்டுக்கள் அதிகம் வாங்கினால் அது இவர்களைப்போன்ற இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவரைகளைப் பொறுத்தே அமையும்.
    //
    உண்மை பாஸ் ,,, அது எந்த கட்சியா இருந்தாலும் இவர்களை நம்பித்தான்...//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..

    அப்புடியே ஓட்டுக்களும் போட்டுவிடுங்கள்

    ReplyDelete
  17. நான் நாலாவது படிக்கும் போது ரஜினி அரசியல்க்கு வர்றாருன்னாருங்க...

    காலேஜே முடிச்சாச்சு..

    என்னதான் சொன்னாலும் ஒரு சமயோஜித சாணக்கியத்தனம்தேவை தானே டாக்டரே

    ReplyDelete
  18. //கடைக்குட்டி said...

    நான் நாலாவது படிக்கும் போது ரஜினி அரசியல்க்கு வர்றாருன்னாருங்க...

    காலேஜே முடிச்சாச்சு..

    என்னதான் சொன்னாலும் ஒரு சமயோஜித சாணக்கியத்தனம்தேவை தானே டாக்டரே
    //

    அவர் எப்ப வரணுமோ அப்ப வருவார்.

    ReplyDelete
  19. அவரு நூறு வயசானாலும் வரேன் வரேன் தான் சொல்வாரு தலைவரே..

    ஆமாம் என் பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை
    இது போல் எழுத வேண்டாம் என்று சொல்றிங்களா.....

    ReplyDelete
  20. அரசியலை துவைத்து போட்டு நல்ல 'அலசல்' கொடுத்திருகிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. //ஜெட்லி said...

    அவரு நூறு வயசானாலும் வரேன் வரேன் தான் சொல்வாரு தலைவரே..

    ஆமாம் என் பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை
    இது போல் எழுத வேண்டாம் என்று சொல்றிங்களா.....
    //




    வாங்க தல..,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    உங்களின் இடுகைக்களுக்கு நான் கொடுத்துள்ள பின்னூட்டங்கள் நேர்மறையானவையே..,

    ஷ்ரேயாவைப் பார்த்துக் கொடுத்த பின்னூட்டம் உங்களை குழப்பியிருக்கும் என்று நினைக்கிறேன்.இனிமேல் குழப்பம் வரும்வகை பின்னூட்டங்களை தவிர்த்துவிடுகிறேன். நான் எப்போதும் எதிர்மறைக் கருத்துக்களை மென்மையான வார்த்தைகளால் நேரடியாகவே கூறிவிடுவேன்

    ReplyDelete
  22. //Sukumar Swaminathan said...

    அரசியலை துவைத்து போட்டு நல்ல 'அலசல்' கொடுத்திருகிறீர்கள்... வாழ்த்துக்கள்...
    //

    நன்றி தல..,

    ReplyDelete
  23. //Congrats!

    Your story titled 'விஜயகாந்த் வாங்கிய ஓட்டுக்களும் ரஜினியின் அரசியல் பிரவேசமும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st June 2009 07:50:01 AM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/68768

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    நன்றி தமிழீஷ்

    ReplyDelete
  24. அன்னைக்கொரு பேச்சு, இன்னைக்கொரு பேச்சு எல்லாங் கெடையாது... அதே பேச்சுத்தேன்.... இஃகிஃகி!

    ReplyDelete
  25. அருமையான கருத்துக்கள்

    ReplyDelete
  26. பழனி வள்ளல் சுரேஷ் வாழ்க‌

    ReplyDelete
  27. @பழமைபேசி
    @Starjan ( ஸ்டார்ஜன் )

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails