Thursday, November 24, 2011

ராமன், சீதை உதாரணத் தம்பதிகளா?

டிஸ்கி:- புராண, இதிகாச கதைகள் எதிர்ப்பாளர்கள் மனம் புண்படும் விதமாக இந்த இடுகை இருப்பதாக நினைத்தால் சற்று ஒதுங்கி நில்லுங்கள்.


ஏக பத்தினி விரதனாக ராமனையும், பதிவிரதையாக சீதையும் பலரும் உதாரணமாகச் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால யாராவது ராமன், சீதையை உதாரணத் தம்பதியாகச் சொல்லிப் பார்த்திருக்கிறோமா? எங்காவது உதாராணத் தம்பதிகள் கதை ஏதாவது இருக்கிறதா?


கண்ணகி கதையிலும் சரியான தம்பதிகள் கிடையாது.

சாவித்ரி கதையிலும் சத்தியவான் டம்மி பீஸ்தான்.


அனுசூயா கதையோ தலை சுற்றவைக்கக் கூடியது.


இவர்கள் கதையில் எல்லாம் கணவர்களைப் பற்றி பெரிதாக எதுவும் இல்லாத நிலையில் சீதையின் கணவர் மட்டும் பத்தினி விரதனாக காட்டப் படுகிறார். 


ஒரே ஒரு மனைவியோடு  அவரையும் காட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சிக் கட்டிலில் இருந்ததால் அவரைப் பற்றி இவ்வாறான புகழ்ச்சி மொழிகளை பரப்பி இருப்பார்களோ..


சீதையாக நடித்ததால்தான் கணவனைப் பிரிந்து மனைவி படும் வேதனை புரிந்தது என்று நயந்தாரா சொன்னதாக செய்திகள் வந்து இருக்கின்றன. சீதையாக நடிக்க அவர் அசைவ உணவுகளை தவிர்த்ததாக வேறு சொல்லி இருக்கிறார்.  சீதை சுத்த சைவம் என்று கம்பராமாயணத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எங்காவது சொல்லி இருக்கிறார்களா..?  ராமன் சீதையைப் பிரிந்த பின்னர் புலால் உண்பதை தவிர்த்ததாக வேறு பேசிக் கொள்கிறார்கள். இது பற்றி கம்ப, வால்மீகி ராமாயணங்களில் ஏதாவது சொல்லி இருக்கிறார்களா..?


Sunday, November 6, 2011

ஜேம்ஸ் பாண்ட், சூப்பர் ஹீரோவாக சூர்யா நடிக்கும் புத்தம் புதிய படம்

ஸ்பைடர் மேன், பேட் மேன் கதைகள் படிக்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படும். அப்படியே அந்தக் காட்சிகளில் நாமும் இருப்பது போன்ற ஒரு உணர்வு. அந்தப் படங்கள் திரைப்படங்களாக வந்தபோது  லாஜிக் பற்றியெல்லாம் கவலைப் படாமல் பிரமிப்புடன் ரசித்துப் பார்த்தோம். கதாநாயகனுக்காக இல்லாமல், கதாப்பாத்திரத்துக்காக பெரிய அளவில் ரசிகர்களை சேர்த்து வைத்த கதாப்பாத்திரங்கள் அவை.  சீன்கானரி வேண்டுமானால் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தைவிட அதிகமாக ரசிகர்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் பிய்ர்ஸ் பிரஸ்ணனைவிட ஜேம்ஸ்பாண்ட்க்குத்தான் ரசிகர்கள் கூட்டம்  இருக்கும். தமிழில் கூட இதுமாதிரி சூப்பர் ஹீரோ படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன்.  ஆனாலும் அவை இரண்டாம்பாகம் மூன்றாம்பாகம் வந்தமாதிரியெல்லாம் இடுப்பதில்லை.

இரும்புக்கை மாயாவி கதை பார்த்திருப்பீர்கள்.  ஆய்வகத்தில் நடக்கும் ஒரு விபத்தின் காரணமாக மாயாவிக்கு அதீத சக்தி வரும். ஸ்பைடர் மேணுக்கும் அப்படித்தான். அவரின் வில்லன்களுக்கும் அப்படித்தான்.  கந்தசாமி, வேலாயுதம் போன்றவர்களுக்கு இதுபோன்ற விபத்து நடக்காவிட்டாலும் மக்களைப் பாதுகாக்க மிகுந்த சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள். 

அப்படிப்பட்ட ஒரு கதை இப்போது சூர்யாவிற்கு வாய்த்துள்ளது. ஆய்வக உதவியோடு அதிபயங்கர சக்திகள் அவர் உடலில் ஏற்றப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை விஜய் ஏலத்தில் எடுத்துவிட்டதால்  இவரது படத்துக்கு சீன உளவாளிகளை பயன்படுத்துகிறார்கள்.  அவர்களின் அழிவு சக்தியை சமாளிக்க இந்திய தேசமே நடுநடுங்கிக் கொண்டிருக்கும்போது  சூர்யா தனது அதி அற்புத சக்தியைப் பயன்படுத்தி  சாரூக்கான், சடன்பிரேக் போட்டு ட்ரெயினை நிறுத்துவது போல கொடிய அழிவு ஆயுதங்களின் சக்தியை சூர்யா தடுத்து நிறுத்துகிறார்


ஹலோ ஹலோ என்ன இந்தப் படம் ஏற்கனவே வந்து விட்டதா? ஐயா அது வேற அது பல்லவ தமிழ் இளவரசன் துறவரம் போய் இந்திய தேசத்தை வெல்ல தனியாக ஒரு நாட்டு மக்களை தயார்படுத்திய கதை.  அட அதுவும் இல்லையா? பரவாயில்லை விடுங்கள். சூர்யா, ஏ.ஆர் முருகதாஸிடம் சொல்லி அதி அற்புத சக்தி வாய்ந்த சூர்யாவின் அடுத்த அடுத்த சாகஸங்களை வெளிவிடச் சொல்லுங்கள். நமக்கு ஜாலியாக இருக்கும்

Monday, October 17, 2011

பவர் ஸ்டார் படம் மச்சி


பவர் ஸ்டாட் பத்தி தெரியாத தகவல்கள் இன்னைக்கு யூட்யூப்ல தெரிஞ்சிக்கிட்டேன். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Wednesday, October 5, 2011

ஸ்ட்ராங்கான மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்


https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/305116_267436236629976_192867670753500_811266_220613920_n.jpg     









மனைவி நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா ஒரு சக்கரம் இல்லாட்டிக்கூட வண்டி ஓட்டலாம் அப்படிங்கறதா எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க பாருங்க

Tuesday, August 9, 2011

நயன் தாரா, ஆன்மீகம், இந்திய அரசியல் சட்டம்

நயந்தாரா இன்று இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் சொல்கின்றன.  அவர் திருமணம் செய்து கொள்ள வசதியாகத்தான் இந்து மதத்திற்கு மாறியதாக சில நண்பர்களும் ஊடகங்களும் கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களின் சொந்த விஷயம் என்றாலும்கூட நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. கேள்விகள் கண்டிப்பாக நயந்தாராவின் சொந்த வாழ்க்கை பற்றி அல்ல. எனவே எனது குழப்பங்களுக்கு விடை சொல்ல நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து நயந்தாராவின் சொந்த வாழ்க்கைக்குள் நுழைய வேண்டாம்.

1.சட்டப் படியோ அல்லது மத முறைப் படியோ ஒருவர் இந்து மதத்திற்கு மாற முடியுமா?

2.இந்து மத கடவுள்களை வணங்குபவர்கள், பின்பற்றுபவர்கள் சட்டப் படி இந்துக்கள் என்று அழைக்கப் படுவார்களா?

3.இந்து மதத்திற்கு மாற முடியும் என்றால், மதத்தில் நுழைந்து விட்டு சாதிக்குள் நுழையாமல் இருக்க முடியுமா?

4.மதத்திற்குள் நுழைபவர்கள் சாதிக்குள் நுழைய முடியும் என்றால் எந்த சாதிக்குள் நுழையலாம்?

5. இந்து மதத்தின் ஒரு சாதியில் இருந்து வேறொரு சாதிக்கு மாறமுடியுமா?  அப்படி மாறினால் சட்டப் படி செல்லுபடியாகுமா? அவர்களுக்கு அரசில் சலுகைக்கள் ( இட ஒதுக்கீடு, கலப்புத் திருமண உதவிகள் கிடைக்குமா?

Friday, June 24, 2011

900/1200 க்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்

இன்றைய தேதியில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக பெற்றோர் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  (சில பெற்றோர் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் சீட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வோம்). தமிழ்நாட்டில் கட் ஆஃப் மதிப்பெண் ஒன்று இரண்டு குறைந்தால் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் சில லட்சங்கள் அதிகம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம்.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர 900 மதிப்பெண் எடுத்தாலே கூடப் போதும். ஆனால் என்ன கீழே கொடுக்கப் பட்டிருப்பதுபோல மதிப்பெண் வாங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

உயிரியல்- 200/200
வேதியியல் 200/200
இயற்பியல் 200/200
கணிதம் 100/200
தமிழ் 100/200
ஆங்கிலம் 100/200

நம்பினால் நம்புங்கள் மேலே உள்ளமாதிரி மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் கண்டிப்பாக உங்களது 900 மதிப்பெண்ணுக்கே எம்.பி.பி.எஸ் சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

Sunday, June 12, 2011

அசைந்த திரை அஞ்சன விழிகள் - நான் ஒரு வாசகன்


சென்ற பகுதியில் சுங்க அதிகாரி இளையபல்லவனை தனியாக அழைத்து பேசுகிறார் என்ற சந்தேகம் வந்த்தல்லவா? கலிங்கத்தின் ஊழிய்ம் செய்தாலும் பிறப்பால் தமிழனாக இருந்த்தால் அந்த சுங்க அதிகாரி கருண்காரப் பல்லவனுக்கு உதவி செய்வதாக சொல்லுகிறார் ஆசிரியர். (உடனே நமது உள்மனது நம்ப்பிட்ட்டோம் நம்ம்ம்ம்ப்பிட்ட்ட்டோம் என்று உரக்கச் சொல்கிறது)  கருணாகரப் பல்லவனே சில கேள்விகளை கேட்கிறார். முறையான பயணமாக முறைப்படிக் கப்பலில் வந்து அரச முத்திரை மோதிரத்தைக் காட்டியவனை அனுப்பாமல் ஏன் தனியே அழைத்து வந்தீர்கள் என்று கேட்கிறார்.  அதற்கு சுங்க அதிகாரி தங்கள் கொண்டு வரும் பத்திரத்தில் கலிங்க துறைமுகங்களை சோழநாட்டுக்குச் சொந்தமாக்கும் வகையில் எழுதப் பட்டுள்ளதால்  தாங்கள் சிறையில் அடைக்கப் படுவீர்கள் என்றும் பின்னர் கொள்ளப் படுவீர்கள் என்றும் சொல்கிறார்.  பத்திரத்தில் எழுதப் பட்டுள்ளதை சுங்க அதிகாரி சொன்னதைக் கேட்ட்தும் இளைய பல்லவன் அதிர்ச்சி அடைந்த்தாக நாவலாசிரியர் சொல்கிறார். 


ஏற்கனவே நம்ப்பிட்ட்ட்ட்டோம் என்று நமது உள்மனது சொன்ன வார்த்தைகள் இப்போது எதிரொலிக்க ஆரம்பிக்கின்றன.
சோழநாட்டு ஒற்ற்ர்கள் இங்கு அதிக அளவில் உலவுவதாகவும், சோழநாடு கலிங்கத்தின் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் உலாவுவதாகவும் அதனால் சோழநாட்டவர்கள் பலரும் கைது செய்யப் பட்டுவருவதாகவும் சொல்கிறார்.


இந்த நேரத்தில் பாலூர் துறைமுகத்திற்கும், தமிழகத்தின் மற்ற துறைமுகங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை சாண்டில்யன் விளக்குகிறார். ஆங்கில நாவலாசிரியர்கள் பொதுவாக தங்கள் நாவல்களில் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விளக்குவார்கள். 

குறிப்பாக ஒரு பைக் மெக்கானிக் பைக்கை ரிப்பேர் செய்வதாகட்டும் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதாகட்டும் ஒருவரியில் சொல்லாமல் அங்கும் நடக்கும் செயல்கள் நம் கண் முன்பே நடப்பது போல சொல்லுவார்கள்.  ஒவ்வொரு படியாக அதன சாதகபாதகங்கள் மாற்றுவழிகள் எல்லாவற்றையும் அலசுவார்கள். ஒரு நாவல் படிக்கும்போது பல்வேறு செய்திகளைப் பார்த்துப் பழகிய உணர்வினை வாசகனுக்கு ஏற்படுத்துவார்கள். தற்போதைய தமிழ் நாவல் ஆசிரியர்களில் தொழில்நுட்ப ரீதியாக வாசகனுக்கு கற்றல் அனுப்வத்தை கொடுப்பவர்கள் மிக்க் குறைவாக உள்ளனர். 


தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இரவில் நடமாடுவது கூட கண்காணிப்பிற்க்கு உள்ளாக்கப் பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அதுமட்டுமல்ல, அது மட்டுமல்ல என்ற ரீதியில் சிறிது நேரம் பேசி விட்டு சோழ நாட்டு இளவல் அம்மங்கா தேவியின் மகன் ராஜராஜ நரேந்திர செல்வனும் ( கவனிக்க சோழன் என்று சொல்லவில்லை ) கைது செய்யப் பட்டுள்ளதாக சொன்னதும்தான் சென்ற பகுதியின் கடைசியில் சொன்ன வாக்கியத்தை உணர்ச்சி வசப் பட்டு இளையபல்லவன் உச்சரிக்கிறான். (அத்தனை துணிவா கலிங்கத்து பீமனுக்கு)

சென்ற பகுதியிலேயே அதைக் கேட்ட வீர்ர்கள் இளையப்ல்லவனை நோக்கிப் பாய அவர்களை கொண்டுவிடுகிறான். அமளி துமளி கிளம்புகிறது. அராபியர் அங்கியுடன் இளையப்ல்லவன் தப்பிச் செல்கிறான். பின்னர் அந்த அங்கியைத்துறந்து பாலூரின் வீதிகளில் ஓடுகிறான். படிக்கும் நமக்கென்னவோ நாமும் சேர்ந்து ஓடுவதுபோலவே தோன்றுகிறது. அவனை கலிங்கத்து வீர்ர்கள் துற்த்துகிறார்கள்.


ஒரு வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறான். அந்த அறைக்கு ஒரு பெண் வருகிறார்கள் சாண்டில்யன் ரசிகர்களுக்கு உடனே நிமிர்ந்து உங்கார்ந்து கொள்வார்கள். வழங்கமான சாண்டில்யன் டச். ஆமாம் அந்தப் பெண் உடைமாற்ற தொடங்குகிறார். தமிழர் பண்பாட்டைக் காக்கும் வகையில் கண்களை மூடிக்கொண்ட இளைய பல்லவன் திறைச்சீலையைப் பிடிக்க சத்தம் கேட்டு அந்தப் பெண் இளையனைப் பார்க்க இந்தப் பகுதி அப்படியே அடுத்த பகுதிக்கு பயணம் செய்கிறது.


அந்தப் பெண் உடை மாற்றும் அழகை அப்படியே காப்பி பேஸ்ட் பாணியில் டைப் செய்யலாம். திரட்டிகள் நம் தளத்தை தடைசெய்து விட்டால் நாம் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணமாக நாம் அதை ஒரே வரியில் முடித்து விட்டோம்.


இந்த பகுதியில் புதிதாக தப்பிப் போய் ஒரு பெண் உடைமாற்றும் மாளிகையில் ஒளிந்து கொள்வது மட்டுமே இணைந்துள்ளது.. மற்ற்படி சென்ற பாகத்தின்விளக்க உரையாக மட்டுமே இந்தப் பகுதி அமைந்துள்ளது..

இந்தப் பகுதியின் நமது சந்தேகங்கள். புதிதாக பெரியதாக் இல்லாவிட்டாலும் கூட இந்த நாவலின் கற்பனைக் கதாபாத்திரங்கள் எவை எவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது. பொதுவாக சரித்திர கதைகளில் சில கற்பனைக் கதாபாத்திரங்கள் உலவும். அந்த கதாபாத்திரம் இல்லாவிட்டால் அந்தக் கதையே நமக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடிய அபாயம் பல நாவல்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக பொன்னியின் செல்வனில் ந்ந்தினி பாத்திரம் கற்பனை என்கிறார்கள்.  ந்ந்தினி இல்லாமல் பொன்னியின் செல்வனில் ஏதாவது கிக் இருந்திடுமா? குறைந்த பட்சம் ந்ந்தினி போன்ற கவர்ச்சி இல்லாவிட்டாலும் ஒரு கிழவியாவது இருந்திருந்தால்தானே பல இடங்கள் நகர்ந்திருக்க முடியும். சுத்தமாக ந்ந்தினியே இல்லையென்றால்......

சரி அதை அங்கேயே விடுங்கள் எனது எண்ணமெல்லாம் இதுவரை நாம் சந்தித்த எந்த எந்த பாத்திரங்கள் கற்பனை எவை உண்மை.  என்பதுத்தான். போகப் போகப் பார்ப்போம்.

Thursday, June 2, 2011

சாண்டில்யனின் கடல்புறா - ஒரு வாசகனின் அனுபவம்

இளைய பல்லவன்

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த களப்போர் என்ற வாக்கியத்தோடு கடல்புறா தொடங்குகிறது. சாண்டில்யன் ஒரு இளமைதுள்ளும் ஒரு எழுத்தாளரின் அடையாளமாக அந்த வரிகள் விளங்குகின்றன்.  காஞ்சியில் சோழமன்னன் குலோத்துங்கள் இருக்கும்போதே அவனது படைகள்  கலிங்க நாட்டை அழித்தது என்று கலிங்கத்து பரணியில் பாடி இருக்கிறார்களாம். அதைத்தான் மேற்கோள் காட்டுகிறார் என்று நினைத்தால் கூடவே இன்னொரு விளக்கமும் கொடுக்கிறார். அதாவது காஞ்சி என்பது பெண்களில் அணியும் ஒரு ஆபரணம். கலிங்கம் என்பது ஆடை. ஆக பெண்ணின் நகை களையாமல் உடைகள் குலைந்த களப் போர்.  என்பதாக அந்த வாக்கியத்தைக் குறிக்கிறார். முதல் வரி படிக்கும்போதே ஜிவ்வென்று இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இதைப் படித்திருந்தால் நமது அறிவு மேலும் வளர்ந்திருக்குமே என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது.


பாலூர் துறைமுகம். பாலூரா துறைமுகம் என்றழைக்கப் படும் இடத்தில் நமது கதை துவங்குகிறது அந்த இடம் கோதாவரி ஆற்றின் முடிவில் இருக்கிறதாம். கோதாவரி ஆற்றீன் துணையாறுகள் கலந்து கடலில் கலப்பதையே புணர்தலுக்கு ஒப்பிடுகிறார் நாவல் ஆசிரியர். சித்திரா பவுர்ணமியின் அதிகாலை வேளையில் கடற்கரையை ஒப்பிட்டு அந்த இடத்தையே நம் கண்முன்னால் கொண்டுவரும் அவர் கிரேக்க, அரேப்பிய சீன் வணிகர்களையும் அவர்தம் தோற்றம்,. ஆடைகள் ஆகியவை பற்றி விளக்குகிறார்.  அதே  நேரத்தில் பேய் அடிமைகள் என்றொரு பதத்தினை அவர் உபயோகப் படுத்துகிறார். அவர்கள் நீக்ரோக்கள் ( எனது ஒரு இடுகையின்போது இந்தப் பதத்தினை நீக்குமாறு நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார், அப்போது நீக்கிவிட்டேன். இப்போது இதற்கு பதிலாக வேறுபதம்  எனக்கு தெரியாத காரணத்தாலும் நாவலாசிரியர் உபயோகப் படுத்தியதாலும் அப்படியே எழுதியுள்ளேன். ) அவர்களை அரேபியர்கள் சீனர்களுக்கு விற்றதாக புதினத்தில் சொல்லப் பட்டுள்ளது.  ஆந்திர மக்களும் வட நாட்டினரும் கூட வாணிகம் செய்ய இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும். மேலைதேசம், கீழைநாட்டினரும் கலந்து இருந்த இடமாக இருந்தாலும் தமிழ் மக்கள் அங்கு அதிகம் வாழ்ந்ததாலேயே அந்த இடம் பாலூர் என்று அழைக்கப் பட்டதாக கூறியுள்ளார்.

கடல், கரை, மக்கள் , வாணிகம் ஆகியவற்றை விளக்கிவிட்டு நாயகன் அறிமுகம் செய்கிறார்.  ரஜினியின் அறிமுகக் காட்சியை விட விஜய் அறிமுகக் காட்சியை விட, ஏன் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசனின் அறிமுகக் காட்சியை விட இந்த கதை நாயகனின் அறிமுகக் காட்சி அமர்களமாக அமைந்திருக்கிறது.  ஒரு படகில் இருந்து புரவியுடன் நாயகன் இறங்கி வருகிறார். அவர் கால் வைத்த உடனேயே கலிங்கத்துப் போரின் வித்து விதைக்கப் பட்டதாகவும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகரித்து விட்டதாகவும் சூரியனின் ஒளிக் கதிர்களுக்கே ஒளிவந்ததாகவும் சொல்லுகிறார். நெற்றி, முடி, கன்னம் கன்னத்தழும்பு என வர்ணித்துவிட்டு அவருக்கு வயது 21 என்று சொல்லுகிறார். மக்களே குறித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 21 வயதில் ஒரு ஆண்மகனுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன என்பது போகப் போக்த் தெரியும்.

அவர் கையில் வைத்திருக்கும் வாளினை விளக்கும்போது அவர் ஒன்று ஏழையில்லை என்று சொல்லி வர்ண்னை செய்கிறார்,.  அவரது வாளின் வர்ணனையே பிரமிப்பாக இருக்கிறது . இந்த வாளின் வர்ணனைகளை ராணாவிற்கு அப்படியே உபயோகப் படுத்திக் கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.

அடுத்ததாக அந்த வீரர் சுங்கச் சாவடிக்குள் நுழைகிறார். அந்த சாவடியை மண்டபம் என்றே நமக்கு ஆசிரியர் அறிமுகப் படுத்துகிறார். அங்கு சுங்கப் பணம் வசூலிக்கப் படுவது, சுங்க முத்திரை இடப் படுவது என்பது பற்றியெல்லாம் சொல்லப் படுகின்றன.

ஒரு நாவலில் சொல்ல வேண்டிய இடங்களில் கதைகளோடு இன்னபிற பல செய்திகளும் பதியப் பட வேண்டும் என்பதில் ஆசிரியர் முனைப்புடனேயே இருக்கிறார். கடல்புறா முடிக்கும்போது நாம்  11ம்நூற்றாண்டின் பல செய்திகளையும் நம்மோடு  உள்வாங்கிக் கொண்டிருப்போம் என்றே நம்பலாம்.


நமது நாயகர் வணிகரல்லாத பயணிகளின் பரிசோதனைப் பகுதிக்கு வந்து தன் உடமைகளைப் பரிசோதிக்க கொடுத்துவிட்டு முத்திரை மோதிரத்தைக் காட்டுகிறார். அந்த முத்திரை மோதிரத்தைப் பார்த்த உடன் அந்த அதிகாரி நமது வீரரை தனியே அழைத்துச் செல்லுகிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது தனது இடத்தில் வேறொரு நபரையும் இறுத்திச் செல்வதையும் நாவலாசிரியர் சொல்லிச் செல்லுகிறார். பதிலி நபர்கள் என்னேரமும் தயாராக இருக்கும் செய்தியையும் ஒவ்வொரு இடத்திலும் மக்களுக்கு சேவை செய்ய தேவையான நபர்கள் எந்நேரமும் இருக்கும் வகையிலும் திடீரென தற்செயல் விடுப்பு எடுத்தால் கூட அந்த இடத்திற்கு வேறொரு நபர் உடனடியாக பணியாற்றும் வகையில் செயல் பாடு இருந்தததையும் நம்மால் உணரமுடிகிறது.

தனியே அழைத்து வந்து மோதிரத்தின் மதிப்பைப் பற்றி கேட்கிறார் அந்த அதிகாரி. நமக்கென்னவோ  அதிலிருந்து பெர்செண்டேஜ் கேட்பார் போல என்று தோன்றியது. அதே எண்ணம்தான் வீரருக்கும் தோன்றியிருக்கும் போல ஆயிரம் பொற்கழஞ்சுகள் என்று மதிப்பைச் சொல்லி அதற்கும் வரிவிதித்தால் கட்டி விடுவதாகச் சொல்லுகிறார்.

அதிகாரி  இப்போது தெளிவாக அந்த மோதிரத்தை, முத்திரை ஒரு சிலரே அணிய முடியும் அதனால் கேட்டதாக சொல்ல அது தனக்குத் தெரியும் என்று வீரர் கூறுகிறார்.  அதுவும் ராஜ வம்சத்தினர் தான் என்று சொல்லி விட்டு தாங்கள் என்று ஒரு இழு இழுக்கிறார்,

கருணாகரப் பல்லவர் என்று பதிலைச் சொல்லுகிறார்.  இளைய பல்லவரா? என்று கேட்டு உறுதி படுத்திக் கொள்கிறா.  பிரமிப்புடன் இருக்கும்போதே இளைய பல்லவர் விடைபெற்றுக் கொள்ள தாங்கள் போகப் போகும் இடம் எது என்று கேட்கிறார் சுங்க அதிகாரி. அதற்கு இவர்  கோடிக்கரை கூளவாணிகன் மாளிகை என்று கூறுகிறார். அபப்டியென்றால் எனது வீட்டில் தங்கி நடு இரவில் செல்லுமாறு சொல்லுகிறார்.  ஏன் இப்போது செல்லவேண்டாம் என்று கேட்கும்போது  அந்த சுங்க அதிகாரி சில விஷயங்களை சொல்ல அந்த கலிங்க பீமனுக்கு அவ்வளவு துணிச்சலா என்று உரக்கச் சொல்லி விடுகிறார். அது கலிங்க சுங்கச் சாவடி ஆகையால அங்கிருக்கும் கலிங்க வீரர்கள் வாளுடம் அவரை நெருங்குகிறார்கள் இப்போது இந்த பகுதி முடிவடைந்து தொடரும் போடப் படுகிறது.


இப்போது நம் மனதில் எழக்கூடிய கேள்விகள். பதில்கள்

1.யார் இந்த இளைய , கருநாகர பல்லவர்.? பொதுவாக கருநாக என்று பெயர் வைத்திருந்தால் சரித்திர கதைகளில் வில்லனாகத்தான் இருப்பார்.

2.அவர் ஏன் கலிங்க துறைமுகத்திற்கு வருகிறார்?  அவர் வந்ததால்தான் இந்தக் கதை இந்த இடத்தில் துவங்கி இருக்கிறது.

3 சுங்க அதிகாரி ஏன் இளைய பல்லவரை ஓரம் கட்டுகிறார்? நடுநிசிவரை வீட்டில் மறைந்திருந்து இரவில் பயணம் செய்யச் சொல்ல காரணம் என்ன? இவரைப் பார்த்தால் கலிங்க தேசத் துரோகி போல் உள்ளது.

4. இளைய பல்லவருக்கு கோபம் வரும் அளவு அப்படி என்ன சொன்னார்? அது சில பாகங்களில் தெரிந்து விடக்கூடியது தான் என்றாலும் ஆவலாகத்தான் இருக்கிறது.

Saturday, May 28, 2011

சிங்கப்பூரில் ரஜினி ( காணொளிகளுடன்)

சிங்கப்பூருக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருக்கும் ரஜினிகாந்த நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு பூரண நலத்துடன் தாயகம் திரும்பி ராணா, ஜீணா, நீனாம் கானா, இந்தன்னா, இத்தண்ணா என்று பல படங்களில் நடித்து மகிழ்ச்சியாக வாழுவதற்கு நம்மால் முடிந்த பிராத்தனைகளை செய்வோம்.

ஏற்கனவே ஒரு முறை ரஜினி உடல்நலம் இல்லாதபோதும்  அவரது குருநாதர் கே.பாலசந்தரின் ஏற்பாட்டின்படி  சிங்கப்பூர்தா அப்போது அங்கு படமாக்கப் பட்டதுதான் நினைத்தாலே இனிக்கும்.

இந்தப் படம் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே வந்திருந்தாலும்கூட  ஒரு சராசரி மாணவனாக கல்லூரியில் காலடி எடுத்த வைத்த காலத்தில் நம்மைப் போன்ற ஒரு ஜீவனாக தோன்றிய பாத்திரம்தான் இந்த காணொளியில் வரும் ரஜினி. நமக்கே இவ்வாறு தோன்றியதென்றால் அந்தக் கால கட்ட மாணவர்களுக்கு தங்களில் ஒருவராக ரஜினி தோன்றியிருப்பார். தங்களில் ஒருவராக முதல்மதிப்பெண் வாங்கிய மாணவரை தலைக்குமேல் தூக்கிக் கொண்டாடும் சகமாணவர்களாக அப்போது ரஜினியை நினைத்துப் பார்த்திருப்பார்கள்.

இந்த்க் குறிப்பிட்ட காட்சியில்  துவக்கத்தில் ரஜினி காட்டும் அலட்சியம் பின்னா அவர் காட்டும் பதட்டம். அதையெல்லாம் விளக்கும் சக்தி நமக்கு இருப்பதாகவே தோன்றவில்லை.


ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கமே ரஜினியை மனதில் வைத்து ரஜினிக்காக மட்டுமே செய்தது போல இருக்கும். கொஞ்சம் பிசகினாலும்  என்னவோ போல ஆகிவிடும் கதாபாத்திரம் அது.  ரஜினியின் நண்பர் வீட்டில் விடைபெரும்போதும், கமல் வீட்டில் கிளம்பும்போது நகைச்சுவை செய்யும்போது பரிசோதனை செய்யும்போதும் விமானத்திலும் நிதானமாக மீண்டும் மீண்டும் ரசிக்கலாம்.





மேடை நிகழ்ச்சிகளின்போது மாணவர்கள் பலரும் சேர்ந்துதான் அந்த கலைநிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பேர் குறிப்பாக அன்று மட்டும் நிகழ்ச்சிகளை ரசிக்கும் நபர்கள் முன்னால் நிற்கும் மாணவனைத்தான் பாராட்டுவார்கள். கதை திரைக்கதை எழுதும் அதாவது ரூம்போட்டு யோசிக்கும் நபர்களுக்கு பாராட்டு மிக மெதுவாகத்தான் கிடைக்கும். அந்த உணர்வை ரஜினி இந்தப் பாடலின்போது அழகாக வெளிக்காட்டுவார்.  அது.................



முதன்முதலாக நகரத்திற்கு செல்லும் மாணவனுக்கும் இந்தப் படத்தில் வரும் ரஜினிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.





இது ஒரு பக்தி பாட்டுன்னும் சொல்லலாம். ஒரு ஆட்டத்தில் ரிசர்வ் பிளேயர் எப்படி தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நன்கு உபயோகப் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாக இந்தக் கதாபாத்திரம் எனக்குப் படுகிறது.


முப்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்ற ரஜினி நலமுடன் திரும்பியத்தைப் போல இம்முறையும் நல்லபடி திரும்பி வர அனைவரும் பிராத்தனை செய்வோம்

Friday, May 27, 2011

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு சவால்

நாட்டில் எல்லோரும் ரொம்ப சீரியஸா யோசனை பண்ணிட்டு இருக்காங்க. சீரியஸா அப்படிங்கறத தீவிரமான்னு எழுதலாமான்னு யோசித்து பார்த்தால் தப்பா அர்த்தம் வந்திருந்தும் நினைச்சால் ஒரு வேளை அதையே மக்கள்  அதுதான் சரி என்று சொல்லி விடுவார்கள் என்று சீரியஸா என்றே எழுதி விட்டேன்.

கொஞ்சம் மென்மையாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்த போது  சில மென்மையான பாடலகள் நினைவுக்கு வந்தன. அதில் ஒரு பாடல்தான் இது.



ஆனந்த தாகம்
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி
மலர்கொடி நேரம் பார்க்குமே
உரிமையில் என்மயில் ஆடும் முன்
ஆடும் முன்
உன்மழைக்காலம் போய்விடும்
ஆசைஆகிவிட நேர்ந்திடும்
நேருமோ....
ராத்திரி அலைகள் ஓயட்டும்
...
மூத்தவர் தலைகள் சாயட்டும்
..
தீபத்தின் விழிகள் மூடட்டும்
....
ஆடை கொடு
ஆளை விடு
தேகம் கொடு
போதும் விடு
தாகம் ஊருதே
......
( மௌனம்)

வலைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே
கன்னியின் மேனி வேர்க்குதே
ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே
அடராமா..,

பேசும் ஓசை இங்கு கேட்குதே கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே தூண்டாதோ
அணைகளை வெள்ளம் தாண்டுதே
ஆசைநாகம் வந்து தீண்டுதே

நாணம் வந்து போகின்றது
தீயில் விஷம் சேர்கின்றது
கண்கள் மூடுதே
......(மௌனம்

அனைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே..



அதில் ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடல் என்ன ராகம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் இசைக் கோர்வைகள் தனித்தனியாக அசத்தும். அதைவிட  பாடகர்கள் பாடுவதே மிக அழகாக வேறொருவரால் இப்படிக் கொண்டுவர முடியுமா என்பது போல நேர்த்தியாக வடிவமைத்திருப்பார்கள். படத்தின் பெய்ர் தெரியவில்லை. வா இந்தப் பக்கம், ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது என்றெல்லாம் யூ ட்யூப் பக்கம் பேசி இருப்பார்கள். இந்தப் பாடல் பெரும்பாலானவர்களுக்கு புதிதாக் கேட்பதாகவே அமைந்திருக்கும்.


=======================================================================







எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் , நிலாவே, நிலாவே

நான் காண்பதே உன் கோலமே அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

உள்ளத்தின் தீபம் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ

கல்லானவன் பூவாகிறேன் கண்ணேஏஏஏ உன்னைஐஐஐ எண்ணீஈஈஈ

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான் நீ நாம்ம்ம்ம்



இந்தப் பாடல் பதின்ம வயதில் கேட்டு இருந்தாலும் சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. கமல்ஹாசனை மனதில் நிறுத்தியே அசைப்போட்டு வந்த பாடல். கேட்ட்கும்போதெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கும்.  கதாநாயகி பாண்டியனின் போலீஸ் அக்காதான்.
இந்தப் பாடலை கேட்கும்போதே  அலைகள் ஆர்ப்பரிப்பதும்  உள்ளத்தில் புயல் அடிப்பதும்  படக்காட்சியைப் பார்க்காமலேயே நமது உள்ளத்தில் தோன்றும். அதுவும் அந்த கடைசி வரிகள்.  மீண்டும் ஒரு முறை இளைஞனாக மாறி களவு காதலைச் செய்யலாமா என்று தோன்ற வைக்கும். பாடலைப் பார்க்கும்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 2.50க்கு பின் வரும் நடன அசைவுகள் க்க்க்கிரேட்.,

=======================================================================







வேண்டும் வேண்டும் உங்கள் உறவு,
வெண்பனி தென்றல் உள்ளவரையில்..,

தோன்றும் இளமை, தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்..,

நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடைமழையில் நான் நனைந்திட வேண்டும்

உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்

இந்தப் பாடல் சமீப கால அரசியலில் முதல் இரண்டு வரிகளுக்காக பாடப் பட்டு வந்த பாடல். சிவாஜி, ஸ்ரீபிரியா காதல் கோடிகளாக இந்தப் பாடலைப் பாடினாலும் கூட கதை தந்தை சிவாஜிக்கும், மகள் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையேயானது.  தாயார் ஸ்ரீப்ரியா மகளை பெற்றவுடன் ஓய்வு பெற்றுவிடுவார்.  படம் முடியும் போது இதே பாடலை மகள் தந்தையைப் பார்த்து பாடுவார் என்றால் படத்தின் புரட்சியைப் புரிந்துதான் ஆக வேண்டும். இந்தப் படத்தோடு  மூன்றாம் பிறை, மூன்று முகம் ஆகிய வெளியானதாக பேசிக் கொள்கிறார்கள்.

கடைசி வரியைப் பாடும்போது  ஸ்ரீப்பிரியாவின் கண்களே தனிக் கவிதையாக ஒளிரும்.


டிஸ்கி:- இந்தப் பாடல்களில் இளையராஜாவின் பணி கலந்துள்ள பாடல்களை  கேட்டதும் சொல்லுங்களேன்.

Sunday, May 15, 2011

ஏமாந்திட்டீங்களே இளைய தளபதி

ஒருவழியாக அப்படி இப்படி என்று ஒருமாத கால இடைவெளிக்குப் பின்னர் முடிவுகள் வந்து விட்டன. அதிமுக தலைவர்  நான்காவது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறார். அவர்தான் ஆட்சி அமைப்பார் என்று பெரும்பான்மையான பதிவர்கள் வளைத்து வளைத்து பதிவிட்டுக் கொண்டிருந்தனர். இணைய அளவில் பலரும் பிரச்சாரங்களில் பின்னி எடுத்துக் கொண்டிருந்தனர்.  சற்றும் எதிர்பாராத வகையில் அவர் வென்று நான்காவது முறையாக முதல்வராகப் போகும் வேளையில் அவர்ருக்கு ஆதரவாக இடுகைகள் இட்டுக் கொண்டிருந்த பதிவர்களே இது மாற்றத்திற்கான வாக்கு.  திமுக ஆட்சியைப் பிடிக்காதவர்கள் வாக்கு என்று சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள்.    ஒரு கட்சி பிடிக்காத நிலையில் அடுத்த கட்சிக்கு வாக்களித்தாக வேண்டிய நிலையில் தள்ளப் பட்டதாக வலைப்பூக்களிலும் ,  முகநூல்களிலும் ட்விட்டர்களிலும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.


பாருங்கள் இளைய தளபதி அவர்களே, பேசாமல் நீங்கள் ஒரு கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் பங்கெடுத்து இருக்கலாம். மாற்று அணி தேவை என்று நினைப்பவர்கள் உங்களுக்கு வாக்களித்து இருப்பார்கள். நீங்கள் தேர்தலில் நிற்காமல் பெரியார் வழியைப் பின்பற்றுவதாக சொல்லி கொண்டு இருக்கலாம். ஒரு வேளை தேசியக் கட்சியாக மாறினால்  காந்தி வழி என்று கூட சொல்லிக் கொண்டு சுற்றலாம்.  உங்கள் தந்தையை முதல்வராக்கி ரசித்திருக்கலாம். உங்கள் தாயாரை ஐ.நா.சபையில் பாடவைத்து அழகுபார்த்திருக்கலாம்.

மாணவர்கள் சபை என்று ஒன்றை புதிதாக உருவாக்கி அதில் உங்கள் மகனை முதல்வராக்கி ரசித்திருக்கலாம்.

நம்நாட்டில் நடிகரைத்தான் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒரு தயாரிப்பாளரை, இயக்குநரை, ஒரு வசன்க்காரரை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.  நீங்கள் தேர்தலில் நிற்காமல் இருக்கும் காரணத்தால்  பதவியை விரும்பா பத்தரை மாற்றுத் தங்கள் என்ற பட்டத்தை அமெரிக்கா, இங்கிலாந்து , ஈராக் போன்ற எல்லா நாடுகளிலும் அவரவர் மொழியில் பெயர் வைத்து உங்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.


இப்போது பாருங்கள் நமது பதிவர்களை மூன்றாவது அணி இல்லாத சூழலில் புலம்ப விட்டு விட்டீர்களே, 1996ல் ரஜினி எவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டாரோ அதே போல் நீங்களும் இந்த 2011ல் கோட்டை விட்டுவிட்டீர்கள் இளைய தளபதி அவர்களே.......,






ஒரு சந்தேகம்: கீழே வரும் முன்னோட்டத்தில் 0.50ல் சந்தானம் பேசும் வசனம் விஜய்க்கு தெரிந்து வைத்ததுதானா?







விஜய் எதிரிகளை பழிவாங்கி விட்டதாக சந்தானம் சொன்னவுடன் விஜய் எவ்வளவு மகிழ்ச்சியாக சிரிக்கிறார். அதே போல் தாங்கள் ஆதரித்த கட்சி ஜெயித்த போது கூட அதை மகிழ்ச்சியாக் கொண்டாடாமல் வேறு வழியில்லாமல் ஆதரித்தோம் என்று சொல்லிக் கொண்டு சுற்றுவது எந்த வகை என்று தெரியவில்லை.  இத்தனைக்கும்  திமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கூட புதிய ஆட்சிக்கு வாழ்த்து சொல்லிவிட்டார்கள்.

Wednesday, May 11, 2011

தமிழகம் முழுவதும் நாங்கள் எடுத்த எக்ஸிட்போல் கருத்துக் கணிப்புகள்

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து முடிவு செய்தோம்.  நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் எல்லாம் பார்த்தால் ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதற்கும் ஆள் இருந்தது. கேள்விகளைத் தயார் செய்து வைத்தோம்.

1.இது வரை இருந்த முதல்வர்களில் நன்றாக செயல்பட்டவர் யார்? இந்த தேர்தலில் யார் முதல்வராக வர ஆசைப் படுகிறீர்கள்?

2.புதிய சட்ட சபையில் அதிமுக எத்த்னை இடங்களைப் பிடிக்கும்? திமுக எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மற்ற அணிகளுக்கு எவ்வளவு?

3 கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் இந்திய அளவை ஒப்பு நோக்க அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

4.விலைவாசி அதிகரிப்பு இந்திய அளவைவிட் குறைந்திருக்கிறதா? அதிகரித்திருக்கிறதா?

5. தொலைக்காட்சி, ஸ்டவ், கிரைண்டர் பிரச்சாரம் எடுபடுமா?

6.ஊழல் ஒரு பிரச்சனையாக இருக்குமா?

7.அரசியல் தலைவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறீர்களா?

8.வடிவேலுவின் பிரச்சாரம் எடுபடுமா?   வடிவேலு அடுத்த கருப்பு எம்.ஜி.ஆர் ஆக மாறி திமுக வெற்றிக்கு உதவுவாரா?

9.மின்வெட்டு தேர்தல் பிரச்சனையா?


10.இந்திய அரசியலில் தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?




இப்படியெல்லாம்  கேள்விகளை வைத்துக் கொண்டு மூத்த நண்பர் ஒருவரிடம் கேள்வித்தாள் பற்றி கருத்துக் கேட்டோம். அவரும் சில விஷய்ங்களைப் பேசி விட்டு, யார் யாரிடம் எல்லாம் கொடுத்து கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டார். நாங்களும் பெரும்பாலான நண்பர்கள் பெயர் மற்றும் அவரது நண்பர்கள் என்று 150-200 பெயர்களைச் சொன்னோம். 

இது போன்ற வாக்கெடுப்பு ஏற்றவகையில் பலதரப் பட்ட வேளை செய்பவர்கள். பல ஊர்களில் குடியிருப்பவர்கள், பல்வேறு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று பரவலாக இருப்பதையும் சொன்னோம்.

அவர் உடனே சில கேள்விகளில் சில மாற்றங்கள் சொன்னார். 

முதல் கேள்விக்கு சச்சின் பெயரை சேர்த்துக் கொள்

இரண்டாவது கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்த்துக்கொள்

மூன்று நான்காவது கேள்விக்கு கேள்வி புரிகிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பினைக் கொடு


என்பது மாதிரி வரிசையாகச் சொன்னார். எனக்கென்னவோ கேள்வித்தாளில், சச்சின் பெயரைச் சேர்த்தால் அவர்தான் முதலிடம் வருவார் என்று தோன்றியது. இது போன்று அவர் சொன்ன மாற்றங்களில் மொத்தமாக குழம்பி நின்றதும் அவரே சொன்னார்.   உங்க லிஸ்ட் பாருங்கப்பா, அவங்களெல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு நீங்க யோசித்து சில எண்களைப் போட்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டு விடு அவ்வளவுதான் விஷயம். இதுக்கு போய் பக்கம் பக்கமா அச்சிட்டு அதை விநியோகித்து, அதை தபாலில் திரும்பப் பெற்று, அதை தொகுத்து.., அதற்குள் உண்மையான முடிவுகளே வந்து விடும்  என்று சொல்லி விட்டார்.


Tuesday, May 10, 2011

சூப்பர் ஸ்டார் s/o பொன்னி

இந்தக் கதை ஒரு சரித்திரக் கதைதான் கி.பி.26ம் நூற்றாண்டில்  நடப்பதாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இதன் முதல் பாகத்திற்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்.

ஜேம்ஸ் வாண்டி கைது செய்யப் பட்டதும் அதிர்ச்சி அடைந்தான். இந்தியாவிற்குள் நுழையும்போதே இப்படி ஆகவேண்டுமா? அதுவும் தனது தலைவன் ப்ளாக்பூட் ராஜா கொடுத்த வேளையை முடிக்கும் முன்பே இப்படி கைது செய்யப் படுவதா? இது தனது வீரத்திற்கு இழுக்கல்லவா? பேசாமல் தனது நண்பன் அபிஷேக் மாறனின் பெயரைச் சொல்லித் தப்பி விடலாமா?  அவனது எண்ணத்தில் முதலில் தான் அபிஷேக் மாறனின் நண்பனாக உள்ளே நுழைந்து சிரிது இலைப்பாறி விட்டு பின்னர் சென்னையை நோக்கிச் செல்வது என்றுதான் திட்டம் இருந்தது,  


ஜேம்ஸ் வாண்டியைக் கைது  செய்த வீரர்கள்  நேரடியாக மும்பை நக்ரின் தலைவரான ஷாம்ப்பூ சென்ங்கர் முன்பாக நிறுத்தினர்.  வாண்டி எப்படி என்ன சொல்லலாம் என்று குழம்பிக்கொண்டு இருந்த போதே இடி இடியென சத்தத்துடன் ஒருவர் வ்ந்து கொண்டிருந்தார். அது ஏதோ எண்ணைப் போடாத புராதாண காலத்து கதவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தபோது அது ஒரு தனிநபரின் சிரிப்பாகவும் அந்த நபரின் முகத்தில் முக்கால்வாசி மீசையால் மறைக்கப் பட்டிருந்ததையும் கண்டான். அவனுக்கு பின்னால் ஒரு இளைஞன் ஓடுவருவதுபோல்  நடந்து  வந்து கொண்டிருந்தான்.  அவன்  வாண்டிக்குத் தெரிந்தவந்தான். அவன் நமது அபிஷேக் மாறன் தான்.  அபிஷேக் மாறனே 6 அடி உயரம் இருப்பான்.  ஆனால் அவனே ஒரு சிறுவன் போல் காட்சி அளிக்கும் படி இருந்ததென்றால் அந்த மீசைக்காரரின்  தோற்றத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.


அப்பா, விடுங்கள் இவனை, இவன் எனது நண்பன்  ஜேம்ஸ் வாண்டி. ஐரிஷ் நாட்டு யூத்து,


இப்போது அந்தப் பெரியவரும்,  மும்பைத் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நானும் இவனும் ஒன்றாகப் படித்தோம். ஐரிஷ் நாட்டின் ஒரு காலத்தில் இவனது பெற்றோர் முக்கிய அரசியல் கட்சியை சொந்தமாக வைத்திருந்தனர். பின்னர் ஜனநாயகம் தலைத்தோங்க  இப்போது தேசம் விட்டு தேசம் வந்து விட்டான்.   மிகச் சிறந்த வீரன்.  கணிணியை கண் அசைவிலேயே இயக்குவான் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே   ஷாம்ப்பூ சென்ங்கர்  அவன் கண்கள் போன திசையைக் கண்டு  அதிர்ந்தார்.  அவன் கண் போன திசை யில் இருந்த மாடத்தில்  இளவரசி கரினா காற்றுவாங்கிக் கொண்டிருந்தார்.   இருந்தாலும் ஏற்கனவே  அபிஷேக் மாறன், கரினாவை எனது நண்பனுக்குத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வர ஜேம்ஸ் வாண்டி மேல் ஆத்திரமும், அதே நேரத்தில்  அபிஷேக் கின் கணக்கு தப்பாது என்ற எண்ணமும் மேலோங்கி இருந்ததால்   ஒரு இனம் புரியாத உணர்வு  ஷாம்ப்பூ சென்ங்கருக்கு ஏற்பட்டது,


அபிஷேக் மாறனே ஜேம்ஸ் வாண்டியை அழைத்துச் சென்று அந்த மா....பெரும் மனிதரிடம் அறிமுகப் படுத்திவைத்தான்.  மாமா இவந்தான் ஜேம்ஸ் வாண்டி,   நாங்கள் படிக்கும் காலத்திலேயே இவன் உங்கள் ரசிகன்.  இவனது மடிக் கணிணியின் வால்பேப்பரே உங்கள் படம் தான் வைத்திருப்பான். உங்களை சந்திக்க வேண்டுமென்பது இவனது நீண்ட கால ஆசை. எதிர் பாராத விதமாக அவன் இங்கு வரும் போதே நீங்களும் இங்கு இருக்கிறீர்கள் என்றான்.


அப்படியானால் இவர்....... இழுத்தான் வாண்டி


இவர்தான் நமது கல்லூரிக்கால நாயகன் பெரிய மீசைக் காரர். பல என்கவுண்டர்களை எளிமையாகப் போட்டவர். ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக அந்திய தேசங்களிலும் புகுந்து என்கவுண்டர் போடுவதில் வல்லவர்.  


தலைவா என்று கூவி விட்டான் ஜேம்ஸ் வாண்டி.  அபிஷேக் மாறனின் புகழுரைகளிலும், ஜேம்ஸ் வாண்டியின் கூவுதலிலும் உச்சி குளிர்ந்த பெரிய மீசைக்காரர் தனது  மின்னல் அடிக்கும் வெண் மீசையைத் தடவிக் கொண்டே    அபிஷேக் மாறா உன் நண்பனுக்கு  அட்சயாவில்  தங்க ஏற்பாடு செய்து விடு.  அங்கே இருக்கும்  உள்ளரங்கத்தில் இன்று 16ம் கீட் வின்ஸ்லெட்டின் கட்டை விரல் நடனம் இருக்கிறது. உன் நண்பன் மிகவும் மகிழ்வான். என்று சொல்லிக் கொண்டு  அபிஷேக் மாறனின் தந்தையை அழைத்துக் கொண்டு சென்றார்.



எப்படியோ விடுதலை ஆகி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாலும்  ஜேம்ஸ் வாண்டியின் மனதில் வரும் வழியில் பார்த்த அழகியின் அங்கங்களே நெளிந்து கொண்டிருந்தன.  மேற்கத்திய பாணியில் புரட்சிப் பெண்கள் அணியும் வகையில் வளைவுகளையும் நெளிவுகளையும் சுளிவுகளையும் மேடுகளையும் பள்ளங்களையும்  காட்டி ஆடை அணிந்திருந்த அந்த மங்கை வடக்கத்தி பெண்கள் போல் முக்காடு போட்டு முகத்தை மறைத்திருந்தாள். அந்த முகமூடியை  கண்டுபிடித்தவன் மட்டும் இப்போது வாண்டியின் கையில் கையில் கிடைத்தால் கைமா செய்திருப்பான். 

[padmawedding2.gif]

இதே நேரத்தில் அபிஷேக் மாறன் எதேதோ பேசிக் கொண்டிருந்தான். வாண்டியும் ஊ ஊக் கொட்டிக் கொண்டே வந்தான். அவன் எண்ணமெல்லாம்  அந்த அழகியைப் பற்றியே இருந்தது.    மாறனே ஒரு கட்டத்தில் என்ன சிந்தனை பலமாக இருக்கிறது என்று கேட்டபோது தடுமாறிப் போனான்.  இருந்தாலும் வழியில் தான் கண்ட அழகியைப் பற்றிச் சொன்னான். அந்த பெரிய வாகனத்தில் வந்த மங்கையைப் பற்றி சொன்னான். உடனே அபிஷேக் மாறனும்  பெரிய சிந்தனை வசப் பட்டவனாக அந்த கதையை யாரிடம் சொல்ல.., கேட்பவர்கள் எல்லாம் கால்சட்டை கிழியும் அளவு சிரிக்கிறார்கள்.உள்ளாடை உரியும் அளவு சிரிக்கிறார்கள். அந்த மங்கை பெரிய மீசைக் காரரின் மனைவி,  நார்வே பகுதிக்கு ஒரு என்கவுண்டருக்குப் போனபோது இந்த நாரீமணியைப் பிடித்து வந்திருக்கிறார்.


இதைச் சொன்னபோது வயசானாலும் உன் இளமை போகல என்றும், வாட் ஏ மேன் என்ற வசனத்திற்கும்  ஒரு கமல் ரசிகர்,  ரஜினி ரசிகரை வம்புக்கிழுத்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது. அவர்களின் ரசிகர்களின் சண்டைத்தான் ஐந்து நூற்றாண்டு கழித்தும் தொடர்கிறது என்றால் இந்த பெரிய மிசைக்காரரும் அதே பாணிக்குப் போகிறாரே என்று வியந்தான் ஜேம்ஸ் வாண்டி.  

அந்த அழகியை அவர் போகும் இடங்களில் எல்லாம் தனி ரதம் கொண்டே அழைத்து செல்கிறார். ஆனால் அவளை யார் கண்ணிலும் அவளைக்காட்டுவதில்லை. நீ பார்த்திருப்பது உலக அதிசயங்களில் ஒன்று.  இந்த நிகழ்ச்சியை இணைய வாக்கெடுப்பில் விட்டால்  கள்ள ஓட்டுப் போடாமலேயே முதல் இடம் பிடிக்கும் என்றான்.


இளம் பெண்ணை மணந்த வயதாவனர்கள் கதை எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல.., என்று நினைத்துக் கொண்டே வந்த ஜேம்ஸ் வாண்டி பக்கத்தில் இருந்த  இருக்கையில் அமர்ந்த வாரே தூங்க ஆரம்பித்தான்.  எழுப்ப நினைத்த  அபிஷேக் மாறன் அப்படியே அவனை விட்டுவிட்டு மற்ற வேளைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.


நடு இரவில் கண்விளித்த ஜேம்ஸ் வாண்டிக்கு பசி வயிற்றைக் கிள்ள அந்த மாளிகையை ஒரு சுற்று சுற்றீ வர ஆரம்பித்தான். அங்கிருந்த ஒரு நீராதாரம் ஒன்றில் ஒரு கொஞ்சம் நீரும், காஃபியாதாரத்திலிருந்து ஒரு கோப்பை காஃப்பியும் பிடித்தான். தானியங்கி பீஸ்ஜா மூளையிலிருந்து ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்ட அவன் ஓரிடத்தில் வந்து நின்றான். அங்கே அவன் கண்ட காட்சியில் அப்படியே சமைந்து போனான்.  இந்தியாவின் முக்கிய அரசிய்ல பிரமுகர்கள் பெரும்பான்மையோர் அங்கே குழுமியிருந்தனர். பார்த்தவுடனே யூகித்து விட்டான்.   இது ஏதோ அதிபயங்கர ஆலோசனைக் கூட்டமென்பதை...................,

தொடரும்...,

+2 வெற்றி, மாயை அல்லது பிரமை

பனிரெண்டு முடித்தவர்களுக்கான தேர்வு முடிவு வந்து விட்டது, மதிப்பெண் தரவரிசை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் இடம் பிடித்த மாணவர்களை தலையில் தூக்கிவைத்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஊக்கப் படுத்துவது அவசியம்தான்,. அதற்காக கிரிக்கெட் அணிக்கு வரவேற்பு கொடுப்பதுப்போல விளம்பரம் அவசியம்தானா!

10ல் நல்ல மதிப்பெண் வாங்கி 12ல் தடுமாறிப் போனவர்கள் கதி என்ன?

12ல் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவம் எடுக்கிறார்கள்.  ஒரு சிலர் மட்டுமே லட்சியமாக பொறியியல் எடுக்கிறார்கள். மற்றவர்கள் மருத்துவம் கிடைக்காததால் பொறியியல் எடுக்கிறார்கள். ஆனால் இந்த ஓட்டப் பந்தயத்தில் முன்னிலை பெற்றவர்கள் நிலை. படிப்பு முடிக்கவே ஆறு ஆண்டுகள்.  சற்று பின் தங்கியவர்கள் நான்கு ஆண்டுகளில் நல்ல வேலைக்குப் போய் விடுகிறார்கள்.  பலர் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் 6 ஆண்டுகளில் மருத்துவம் படித்தவர்களில் சில முண்ணனி கல்லூரிகளில் முதுகலை படிக்கவில்லை என்றால் எதிர்காலமே இல்லை என்ற அளவில் தன்னம்பிக்கையை வளர்த்துவைத்து மேலும் மேலும்  போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதிலேயே காலம் தள்ள வைக்கிறார்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள்.


பொறியியல் சேர்ந்தவர்களில்கூட அனைவரும் லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. பலரும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். சிலபல ஆண்டுகள் லட்சங்களில் புரண்டவர்கள் கூட அதன்பின் கல்லூரி ஆசிரியர்களாக சொற்ப சம்பளத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல் கிடைக்காதவர்கள் அத்தோடு அழிந்து போய்விட்டார்களா? என்றால் அப்படி இல்லை. ஆசிரியர் பள்ளிகளில் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளி, கல்லூரிகளின் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வென்று பணியில் சேர்ந்தவர்கள் மிகச் சிறிய வயதிலேயே மேற்கண்ட பிரிவு மாணவர்களைவிட அதிகமாக வெகுகாலம் சம்பாதிக்கும் நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

பொறியியல், மருத்துவம், ஆசிரியர் பணி வாய்ப்புக்கள் கிடைக்காமல் கலை அறிவியல பட்டப் படிப்பு போய் பின்னர், நிர்வாகப் படிப்போ, இந்திய ஆட்சிப் பணிக்கோ போனவர்களும் அதிகம்.

இது எதற்கும் வழி இல்லாமல் போன அளவு மதிப்பெண் எடுத்தவர்களின் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டதா என்றால் அதுவும் கிடையாது.  அவர்களும் தங்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.பலர் மிக நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள்.

என்னொடு ஒன்பதாம் வகுப்புப் படித்த நண்பர் ஒருவர், மூன்றுமுறை ஒன்பதாம் வகுப்பில் தோல்வி. நகரில் உள்ள முண்ணனி கடை ஒன்றில் அன்றாடக் கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம் எந்த சொத்தும் கிடையாது.  முதலாளிக்கு விசுவாசமாக இருந்தார். சில ஆண்டுகள் கூலித் தொழியாளியாக காலந்தள்ளியவர் பின்னர் அங்கேயே ஓட்டுநராக மாறினார், யார் அவரது வண்டியில் ஏறினாலும் மிகவும் பணிவுடன் விருப்பத்திற்கேற்ப ஓட்டுவார். மணம் கோணாமல் பார்த்துக் கொள்வார். இன்று அவருக்குச் சொந்தமாக ஏழு வண்டிகள் உள்ளன. ஒவ்வொரு வண்டியும் வங்கிக் கடன் மூலம் வாங்கியது. சிபாரிசு மற்றும் கியாரண்டிக் கையெழுத்துக்கள் அவரது விசுவாதத்தின் மூலம் சம்பாதித்த மனிதர்கள் போட்டதுதான். கடனை வெகுவிரைவில் அடைத்துவிடுவார். இப்போது ஓட்டுநர்களும் இவரிடம் பணிக்கு உள்ளனர். இவர் இன்னும் பழைய முதலாளியிடம் மாதச் சம்பளத்தில்தான் பணிக்கு இருக்கிறார்.



மதிப்பெண்களாக குவித்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலைக்குச் சென்றவர்கள் வென்றவர்களாக கருதமுடியுமா? என்றால் அதுவும் இல்லை. வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. சமுதாயக் கட்டமைப்பில் வாழும் நம்மால் நம் சந்ததிகளை உருப்படியாக உருவாக்கும் லடமை இருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் வெறும் உருப்படிக்களாக போய்விடும் ஆபத்தும் இருக்கிறது,  அதில் தோல்வி கண்டால் அவர்கள் பெற்ற வெற்றிகளையெல்லாம் அவர்களின் குழந்தைகள் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.

அப்படியென்றால் என்ன செய்வது? வாழ்க்கையில் படிப்பு முக்கியமில்லையா?  மதிப்பெண்கள் அவசியமில்லையா? முதல் மதிப்பெண்க்கள் பெற்றவர்களைப் பாராட்ட வேண்டாமா?

பாராட்டுங்கள். வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியைப்போல பாராட்டு மழையில் மூழ்கடிக்கடித்துவிடாதீர்கள். அவர்கள் போக வெண்டிய பாதைகள் நிறைய உள்ளன. இந்த வெற்றியை அடித்தளமாக பயன்படுத்தி சாதிக்க வேண்டிய விஷய்ங்கள் நிறைய உள்ளன.  அதில் கவனம் செலுத்த்ச் சொல்லுங்கள்.

தோல்வி அடைந்தவர்கள் ( இந்தப் பாராட்டுக் கொண்டாட்டங்கள் இரண்டாம், மூன்றாம் நிலைபெற்றவர்களை தோற்றவர்கள் போல சித்தரிக்கின்றன)  மனம் வெம்பும் அளவிற்கு கொண்டாட்டங்கள் தேவையே இல்லை.

வாழ்க்கையில் ஒரு நிலை அவ்வளவுதான். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதுபோல . அதை மட்டும் வைத்துக் கொண்டு  அடகுவைக்கக்கூட முடியாது.

சென்ற ஆண்டு போட்டதுதான். மீள்பதிவு

Monday, May 9, 2011

இந்த ஆண்டு பதினொன்று சேரும் மாணவர்களுக்கு..,

இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துவிட்டன.   இன்னும் சில நாட்களுக்கு மாறி மாறி வாழ்த்துக்களும்  பேட்டிகளும் வந்து கொண்டே இருக்கும்.    ஒவ்வொரு பள்ளியிலும் எம் மாணவர்களும் இத்தனை பேர் 1100+  , இத்தனை பேர் 1150+ , இத்தனை பேர் 1200+ என்றெல்லாம் மாறி மாறி விளம்பரம் கொடுப்பார்கள்.




அந்த விளம்பரங்கள் இப்போது வருவதைவிட 10ம் வகுப்பு முடிவுகள் வந்த பின்பு இன்னும் அதிகமாக இருக்கும்.  இந்த -------+  விளம்பரம் போடும் பள்ளிகள் எல்லாம் பெரும்பாலும் 475க்கும் மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கும் பள்ளிகளாக இருக்கும்.   முடிந்தால் இன்று வெளியாகியுள்ள + 2 தேர்வுகளில் ஒவ்வொரு தனித் தனி மாணவனும் +2ல் எடுத்த மதிப்பெண் சதவீதம் எவ்வளவு அதே மாணவன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதம் எவ்வளவு என்பது பற்றி  ஒரு ஒப்புமை பாருங்களேன்.  பெரும்பாலான பள்ளிகள் இதில் தோல்வியே அடைகின்றன.



பல 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்டு மதிப்பெண் வாங்கியவர்கள் 90-95ல் வந்து நிற்கிறார்கள்.  பல 90 % + மாணவர்கள் 90க்கும் கீழே போகிறார்கள்.  இவ்வாறு பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண் சதவிகிதத்தை இரண்டு ஆண்டுகளில் குறைத்திருக்கும் பள்ளிகளில் பல மாணவர்கள் 1150க்கும் மேல் வாங்கியிருந்தால் அது அந்த மாணவர்களால் வாங்கப் பட்டதா? அந்த பள்ளி கொடுத்த பயிற்சியினால் வாங்கப் பட்டதா? 



எனவே மாணவர்களே, மாணவர்களின் பெற்றோரே இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த கோணத்திலும் ஒரு முறை ஆய்வு செய்து பின்னர்  பள்ளியை முடிவு செய்யலாமே? மாணவர்களின் ஆளுமைத் திறன், போராடும் தன்மை போன்ற பல விஷயங்கள் முக்கியாக இருந்தாலும் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் தலையாய இடம் பிடித்து நிற்கின்றன. நமக்குத் தேவை சிறந்த பயிற்சி அளித்து உயர்வடையச் செய்யும் பள்ளிகளே.   சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டு அவர்களின் சிறப்பான உழைப்பால் தாங்கள் பெயர் வாங்கிக் கொண்டு நிற்கும் பள்ளிகள் அல்ல


பின் குறிப்பு:- இவ்வாறு மதிப்பெண் வாங்கியிருப்பதாக விளம்பரம் செய்யும் பள்ளிகள் அந்த மாணவர்களின்  10 வகுப்பு மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்தால் சொல்லுங்களேன்.

பின்குறிப்பு 2: இணைய்ம மூலம் அதை தெரிந்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா?

பின்குறிப்பு3:- உங்களுக்கு தெரிந்து இவ்வாறு மதிப்பெண் சதவிகிதம் குறைந்த மாணவர்கள் அதிகமா? அதிகரித்த மாணவர்கள் அதிகமா?


Friday, May 6, 2011

ஜோதிகா கார்த்தி நிச்சயதார்த்ததிற்கு ஏன் வரவில்லை?

சிவக்குமார் தனது மகனுக்கு தனது விருப்பப்படி தானே தனது சுற்றமும் நட்பும் சூழ முன்னின்று ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து இருக்கிறார்.

கொடுமுடிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நிச்சயம் நடந்ததாக செய்திகளும் படங்களும் வந்துள்ளன. சூர்யாவும் இருந்திருக்கிறார்.

http://panippulam.com/panippulamcom/padam/cinema/karthi-engament%20_1_.jpg


ஆனால் ஜோதிகாவும், அவர்களது குழந்தையும் காணவில்லை.

வழக்க்மாக சிவகுமார் வீட்டுப் பெண்களின் மேல் காமிரா விழாமல் பார்த்துக் கொள்வது போல இந்த நிகழ்ச்சியிலும் ஜோவும், குழந்தையும்  படங்கள் வெளிவராமல் பார்த்துக் கொண்டனரா?



இல்லை  ஜோவுக்கு இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் உரிமை மறுக்கப் படுகிறதா?


அவ்வாறு மறுக்கப் பட்டால்  அதற்கு அவர் காதல் திருமணம் செய்து கொண்டது காரணமா?   

கொடிசீயா- கோவையில் நடக்கும் திருமணத்திற்காவது ஜோ வருவாரா?

குடும்பத்தின் மூத்த மருமகளுக்கு  அவருக்கு உரிய மரியாதை கிடைக்குமா?


=========================================================================

இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்படியே 
பாபா s/o பொன்னி   படிச்சு கருத்து சொல்லிட்டு போங்க

பாபா s/o பொன்னி

இந்த கதை கிபி 26ஆம் நூற்றாண்டில் நடைபெறுவதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கதை எழுத தமிழில் நான்படித்த சில பல நாவல்கள் தூண்டுகோளாக இருந்துள்ளன. அந்த சில பல நாவலக்ளை திரைப்படம் எடுப்பதற்காக திரைக்கதை அமைப்பதற்காக மிகவும் சிரமப் படுவதாக செய்திகள் உலாவருகின்றன.  கி.பி26ஆம் நூற்றாண்டில் உலகளாவிய நிலையில் அப்போதைய திரையுலகின் உபயோகப் படுத்திக் கொள்ளும் வகையில் பரம்பரை பரம்ப்ரையாக நாம் கேட்டு ரசித்த படித்த ரசித்த சிலபல கதைகளை  கி.பி.26ஆம் நூற்றாண்டிற்கேற்ப எழுதியுள்ளேன்.   இதில் வாசகர்கள் சொல்லும் சிலமாற்றங்களையும் செய்ய நான் தயாராக இருப்பதால் வாசகரக்ளின் எண்ணங்கள் வரவேற்கப் படுகின்றன.





 அரபிக்கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. தனது பறக்கும் குதிரையில் ஜேம்ஸ் வாண்டி  வந்து கொண்டு இருந்தான்.  பறக்கும் குதிரை என்பது 25ம்நூற்றாண்டில் கண்டறியப் பட்ட ஒரு புதுமையான வாகனம்.  இருவர் பயணம் செய்யக்கூடிய  நீர் நிலம், காற்றில் பறக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்ட ஒரு வாகணம்.   இன்னும்கூட முழுமைப் படுத்தப் பட வேண்டும் என்று வாண்டி நினைத்துக் கொண்டே வந்தான்.  அவன் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறான். சில நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அரபிக் க்டல்முழுவதும் நீரால் நிறைந்திருக்குமாம். எப்போதும் ஆர்ப்பரிக்கும் அலைகளாக ஆங்காங்கா கோவா போன்ற கடற்கரை மக்களிடம் விளையாடிக்கொண்டிருக்குமாம்.  23ம்நூற்றாண்டின் மத்தியில்  உலகில் உணவுப் புரட்சி ஏற்பட்ட பிறகு  உலகநாடுகளின் உணவு மையமாக இந்தியா உருவெடுத்தது. உலகில் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தியாவிலிருந்துதான் உணவு அனுப்பப் படும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியா சொல்லும் வார்த்தைகளை தட்ட முடியாத நிலை இப்போது இருக்கிறதென்றால் அது அந்த உணவுப் புரட்சியையே சாரும்.  மக்கள் வாழும் இடங்களில் விவசாயத்திற்கு ஏற்ற பகுதிகள் எல்லாம் விவசாய பூமியாக மாற்றப் பட்டு  அவர்களுக்கு குடியிருப்புக்கள் கடலில் அமைக்கப் பட்டன.  இந்தியா தேசம் செய்த இந்த இயற்கை ஆக்ரமிப்புக்களை உலக நாடுகள் தட்டிக் கேட்க முடியாமல் போனது.  உலக ஒற்றுமை சபைகூட இந்தியாவின் கைப் பாவையாக மாறிப் போனதாலும்  உணவுக்காக இந்தியாவிடம் கைகட்டி நிற்க வேண்டிய  நிலை இருந்ததாலும்  இந்தியா இதை மிகச் சுலபமாக செய்து கொண்டிருந்தது.




தனது பயணம் இந்திய அரசியலில் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கப்போகிறது என்பது ஜேம்ஸ் வாண்டி க்கு தெரிந்துதான் இருந்தது. ஆனால் அவனையும் மீறி எவ்வளவு சிக்கல்கள் வரப் போகின்றன. அதுவும் தன்னால் உருவாக்கப் படும் முடிச்சுக்கள், தான் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் என்பவை அவனுக்கு தெரிந்திருக்க நியாமில்லை.    அவனது ஆளுநர் ப்ளாக்பூட் ராஜா அவனுக்கு கொடுத்த வேளையை நினைத்துப் பார்த்தான்.  அவனிடம் இரண்டு சிப் களைக் கொடுத்து அதை ப்ளாக்பூட் ராஜா தனது தந்தையிடமும், சகோதரியிடமும் கொடுக்குமாறு சொல்லியிருந்தார்.  ஆனால் ஒருவருக்கு கொடுப்பது இன்னொருவருக்குத் தெரியாகக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு சொல்லி அனுப்பி இருந்தார்.  எப்படி சென்னை அரண்மனைக்குள் நுழைவது என்பதே ஒரு கேள்வி என்றாலும்.  அவரது  சகோதரி பாண்டிச்சேரியில் தங்கி இருந்தார். சென்னையில் வேலைமுடித்துவிட்டு பாண்டிச்சேரி செல்வதுதான் அவனது வேளை.



மும்பை நகருக்குள் நுழையும் முன்பே அவன் சுதாரித்துக் கொண்டுதான் இருந்தான். நகரிலும் நகருக்கு வெளியேயும் மாணவர்களும் இளைஞர்களும் ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் தங்கள் அலைபேசி மூலமாக உலவிக் கொண்டே இருந்தார்கள். தாங்கள் பார்க்கும் நிகழ்வுகள், புதிய மனிதர்கள் ஆகியவற்றை அவர்கள் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார்கள் .  உளவுத் துறைக்கு உதவிகரமாக இருந்ததால் பொது சுதந்திரம் என்ற பெயரில் அரசும் இதை ஆதரித்து வந்தது. யாராவது ஒரு இளைஞன் தன்னையோ , தனது வாகனத்தையோ அந்தத் தளங்களில் போட்டு காமெடி ஃபீஸ் ஆக்கிவிட்டால் தனது ஆளுநரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்பதை ஜேம்ஸ் வாண்டி அறிந்தே இருந்தான்.  ப்ளாக்பூட் ராஜா  சுவிட்ஜர்லாந்தில் கவுரவ ஆளுநராக இருந்தாலும்  அவர்  இந்திய மன்னரின்  மூத்த மகன் ஆவார்.  ஐரோப்பிய நாடுகளை  கண்காணிக்கவும்,  ப்ளாக்பூட் ராஜாவின் தாத்தா அங்கே இருந்ததாலும் அங்கே அனுப்பி இருந்தார்.    இதையெல்லாம் விட  இன்னொரு நிகழ்வும் இருந்தது.  தாய்லாந்து நாட்டுடன் ஏற்பட்ட போரில் அன்னாட்டையே அழித்து அன்னாட்டின் மன்னனின் தலையை சாலையில் எட்டி உதைத்து தனது கோபத்தைக் காட்டியவர் அவர்.  


இன்று தனது தந்தை கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கைப்பாவையாக இருப்பதாக தகவல் கிடைத்ததால்தான்  தனது நம்பிக்கைக்கு உரிய ஒற்றனாக ஜேம்ஸ் வாண்டியை  அனுப்பி இருந்தார்.


மும்பை நகரில்  நுழையும்பொதே ஜேம்ஸ் வாண்டி அவனது நண்பன் அபிஷேக் மாறன் அங்கே இருப்பதால் அவன் வீட்டிற்கு சென்று சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம் என்று நினைத்தான். தவிர இந்திய அரசியல் நிலவரங்களை அவனிடம் தெரிந்து கொண்டால் தனது பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைத்தான்.

வழியில் இரண்டு மனிதர்கள் ரஜினி பெரியவரா, கமல் பெரியவரா என்பது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தனர்.  ரஜினி, கமல் இருவரும் 20ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இரு பெரும் நடிகர்கள். அவர்களின் பெயர் 5 நூற்றாண்டுகள் கழித்தும் ரசிகர்களால் பேசப் பட்டு வருகிறது என்றால் அதற்கு இவ்வாறாக சண்டை போடும் ரசிகர்களும், உணவுப் புரட்சியால் சென்னை நகரில் நடப்பவை உலகம் முழுவதும் எதிரொலிப்பதுமே காரணமாக இருந்தது.


அபிஷேக் மாறனின் அரண்மனைக்கு ரகசியமாக செல்லலாமா? அல்லது நேர் வழியிலேயே உள்ளே நுழையலாமா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போதே  ஒரு அதி நவீன ரதம் ( தமிழின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்ததால் கார் என்பதை ரதம் என்றே பெரும்பாலான நாடுகளில் அழைத்து வந்தனர்).   அதில் உள்ளவர்கள் யார் என்பதே வெளியே தெரியாத வகையில் வடிவமைக்கப் பட்டுந்தாலும்  அதன் கதவை சற்றே திறந்து மூடிய கணநேரத்தில் உள்ளே அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து  பிரமித்து போனான்.  அழகு என்றால்...............

அதற்குமேல் அவனால் சிந்திக்கமுடியவில்லை. மேற்கத்திய பாணி கலந்த வட இந்திய முறையில் உடை அனிந்திருந்தார். அதாவத் முகத்தினை திரையிட்டு இருந்த அவர் உடலின் பல பாகங்களையும் வெட்டவெளிச்சமாக காட்டிக் கொண்டிருந்தார்.   ஒரு இந்தியப் பெண்ணின் அழகைப் பருகுவது வாண்டிக்கு அதுவே முதல் முறை. சில நிமிடங்களில் அவன் தன்னிலைக்கு வந்தவுடன் அந்த வாகனம் யாருடையது? அதில் உள்ளவர்கள் யார் என்பதையெல்லாம் தனது தகவல் தளத்திலிருந்து பெற்றுக் கொண்டான். அந்த ரதம்  மாமன்னரின் பிரதம தளபதியுடையது என்றும் அதில் உள்ள பெண்மணி  அவரது இளம் மனைவி என்பதையும் அறிந்து கொண்டான்.   மேலும் தகவல்களை விசாரிக்க எத்தனிக்கையில்    அபிஷேக் மாறனின் படைவீரர்கள் அவனைக் கைது செய்து  அபிஷேக் மாறனின் தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.



தொடரும்

Thursday, May 5, 2011

தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் (இருபத்தைந்தாம் பாகம்)


சுமித்ராவின் ஊருக்குள் நுழையும்போது எங்களுக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பெண் விஷயம் அதுவும் ஆள் கடத்தல்,  அரிவாள் கல்யாணம் என்றெல்லாம் கொஞ்சம் குடல் நடுங்கித்தான் போய் இருந்தது,  இருந்தாலும் சுமன் உடன் வந்ததால் எங்களுக்குப் பயம் இல்லாமல் ஊருக்குள் நுழைந்தோம்.

வழியிலே சுமத்ராவின் தந்தையை பார்த்தோம்.  தீஃபக் குமாரை மீட்பதற்காக எங்களுடன் வந்த தீஃபக்கின் நண்பர்கள் ஆடையுடன் சிறுநீர் கழித்து விடுவதைப் போல நடுநடுங்கி அமர்ந்திருந்தனர். சச்சின் தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல்

அன்கிள்,  சுமன் வீட்டுக்கு வந்தோம். உங்க தோட்டமும் இங்கதான் இருக்குன்னு சொன்னாங்க, அதுதான் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.

ஒன்னுமே நடக்காதுபோல சுமன் கூறியது அங்கிருந்த மற்றவர்களுக்கு கிளியைக் கொடுத்தது.

அவரும் மாணவர்களை வரவேற்றுப் பேசி இள்நீர் எல்லாம் போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

காணாமல் போன தீபக்கைப் பற்றி விசாரிக்குமாறு அவன் நண்பன்கள் கேட்டபோதும் அவனைப் பற்றி நேரடியாக விசாரிக்க தைரியம் இல்லாமல் இருந்தனர்.

அவரிடம் இருந்து விடை பெறும்நேரம் வந்த போது அவரும் தனது அறிவிப்பினை வெளியிட்டார்.   சுமித்ராவிற்கு தேர்வுகள் முடிந்த பிரகு திருமணம் செய்வதாக இருக்கிறோம்.


மாப்பிள்ளை.., இழுத்தோம்.

ம் அதெல்லாம் பார்த்து பலகாலம் ஆச்சுப்பா....,  இவ படிப்ப முடிச்ச உடனே கல்யாணம் செய்ய வேண்டியதுதான்.   உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கும்ப்பா..  அவர்தங்கச்சி கூட உங்க கல்லூரில கொஞ்ச நாள் படிச்சா.., அப்புறம் அவங்க ஊர் பக்கமே இடம் மாற்றம் வாங்கிட்டு போய்ட்டா........


எங்களுக்கு ஒன்றும் நினைவில் இல்லை. (எங்களைப் போலவே நீங்களும் 2, 3, 4 ம் பாகங்களை படித்தால் நினைவிற்கு வரும்).

அப்போதும் கூட தீபக்கைப் பற்றி விசாரிக்க எங்களுக்கு தைரியம் வரவில்லை.

எல்லோரும் கிளம்பிய பின்னர் டேஞ்சர் டயபாலிக் அவரை அணுகி அன்கிள் காலேஜில கொஞ்சம் பிரச்சனை.

கேள்விப் பட்டேன்ப்பா..  சுமித்ராட்ட சொல்லியிருக்கறேன். இது அவளது தந்தையார்

முடிஞ்ச வரைக்கும் நீயே சமாளி, முடியலேண்ணா எங்கிட்ட சொல்லு.., அப்புறம் பாரு கதையைன்னு..,

 நீங்களே கதைய முடிச்சிடுவீங்களா..., ஏனோ எங்கள் வாயை விட்டு வார்த்தைகள் வெளிவரவில்லை


அவ எம்பொண்ணுல்ல  எந்த ஒரு பிரச்சனையும் அள்ளி முழுங்கிடுவா., மீசையை முறுக்கிக் கொண்டே அவர் சொன்னார்.

சுமித்ராவின் திமிருக்கு ஆணிவேரே இவர் மீசை முறுக்குவதில் இருக்கிறதா? 




சுமித்ரா ஜடைய சுத்திக்கிட்டே பேசுறது கூட இவர் மீசை முறுக்கிக்கிடே பேசற மாதிரித்தானா?



அப்படி என்றால் தீ*பக் குமார் காணாமல் போனதற்கும் சுமத்ராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?  திகிலுடன் வெளியேறி விடுதி வந்து சேர்ந்தோம்.


பின்னர் விசாரித்ததில்  தீபக் குமார் அவர் பெயருக்கு ஏற்ப ஒரு தோழியுடன் ஊட்டி சென்று விட்டார் என்பதும் அவரது நண்பர்கள் அலப்பறை விட்டு இருந்ததனர் என்பதும் தெரிந்தது.

=======================================================

பின்னர் பயிற்சிக் காலத்தில் சுமத்ராவிற்கு திருமணம் நடைபெற்றது.  சுமன் சிலநாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டுவந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு கடும் ஒத்தாசை செய்து கொண்டிருந்தான்.  திருமண நாளன்று ஹ்ருத்திக் ரோஷன் நினைப்பில் லேசான தாடியுடன் திருமண மேடைக்கு எங்களோடு வந்தான்.


அப்போதுதான் சுமத்ராவின் கணவர் அவனைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டார். எந்த கேள்வி என்பதை அறிய முதல் பாகத்திற்குச் செல்லுங்கள். அதனால் என்ன நடந்தது என்பதை அறிய அடுத்தடுத்த பாகங்களுக்குச் செல்லுங்கள்.


சுபம்      


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

பதினாறாம் பகுதி sweet sixteen

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை

இருபதாம் பகுதி டபுள் மீனிங்

இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள்

இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே

இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா

இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?




இந்தப் பாடலின் முதல் மூன்று வரிகள் எழுதிய பாடகர் யாரென்று கண்டுபிடியுங்களேன்

Wednesday, May 4, 2011

விஜயகாந்த், சிம்பு Vs ஒசாமா

டிஸ்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப் பட்டது. யார் மனதாவது புண்பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

பாகிஸ்தானில் நேரடியாக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கி அமெரிக்கா லேடன் மகன் ஒசாமாவை அழித்துவிட்டது. இதில் பாகிஸ்தானுக்கு தங்கியதும் தெரியாது. இவர்கள் அழித்ததும் தெரியாது என்ற நிலைப் பாடுகளை கடைபிடித்துவருகிறார்கள்.


அமெரிக்க தலைமையிடம் இப்போது ஊடக நண்பர்களால் பெரிதும் நோண்ட முடியாத காரணத்தால்  அந்த படையில் இருந்த வீரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம்  நமது ஊடகங்கள் பேட்டி எடுக்கின்றன. அப்போது கீழ்கண்ட நபர்கள் அங்கிருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்:-


ரஜினி காந்த்: -  உண்மையில் என்ன நடந்ததுன்னா என்ன சுத்தி நிறைய ஊடக நண்பர்கள் இருந்தார்கள். அப்போது நான் கோப்பில் கையெழுத்து போடுவதுபோல படம் எடுக்க விரும்பினார்கள். அப்போது கைதவறி அந்த கோப்பில் கையெழுத்து விழுந்துவிட்டது. நான் எப்போதும் உலக நாடுகளின் இறையாண்மைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்


கமல்ஹாசன்:-  ஓ.கே. ஃப்ரண்ட்ஸ். இப்ப நடந்தது ஒத்திகைதான்.  திரும்பிக்கங்க நான்  உண்மையான நடவடிக்கை எடுக்கணும். இது ஹைலி கான்ஃபிடன்ஷியல்.


விஜய்காந்த் :-   என் கையால செத்தால் சொர்க்கம் நிச்சயம்.  அதுனாலத்தான் சாக வைச்சேன். 


அஜித் குமார்:-  நல்ல காரியம் செய்யமுன்னு ஆசை இருந்தா போதும் செய்திடலாம். அதனால் நான் ராணுவத்தை இன்னொயோட கலைச்சிடறேன்.

விஜய்:- (மனசுக்குள்ளயே) ஐயோ அப்பா இப்ப என்ன பண்ண

தங்கபாலு: சதாம் ஹூசைன் கொல்லப் பட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

டோனி:-  ஒருவேளை இதில் நாங்க தோற்றுப் போயிருந்தால் ஏன் பாகிஸ்தான் போன?  அவங்ககிட்ட ஏன் அனுமதி வாங்கல? அப்படின்னெல்லாம் கேள்வி வந்திருக்கும். ஆனா நல்லவேளை நாங்க ஜெயிச்சிட்டோம். அதிலயும் ஹெலிகாப்டர் ஷாட் ல ஜெயித்தது சந்தோஷமா இருக்கு.

யுவராஜ்சிங்:-  நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல ஒரு முக்கியமான நபருக்காகத்தான்னு .  அது எங்க அண்ணன் விஜயகாந்துக்குத்தான் சமர்ப்பணம். ஏன்னா அவர் படம் பார்த்துத்தான் நான் சண்டையே பழகினேன்.


சிலம்பரசன்:- என்ன வாழ்க்கைடா இது?  செத்தவன்கூட இருந்தது அவன் மனைவி இல்லையாமே!



தனுஷ்:- நாங்களெல்லாம் ஒண்டியா ஆள்கிடைச்சா கும்மு கும்முனு கும்முவோம். இதுல ஒசாமாவே கிடைச்சா..,



Sunday, May 1, 2011

விஜயகாந்தின் மே டே வந்திருந்தால்....,

தமிழக வரலாற்றில் பாதியில் நின்றுபோன பல திரைப்படங்கள் உண்டு. பூஜை மட்டும் போடப் பட்டு நின்றுபோன திரைப் படங்கள் உண்டு. சில படங்கள் வந்ததால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பல மாற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.  எம்ஜியார், சிவாஜி எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன், கமலஹாசன் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன், மருதநாயகம்  போல  விஜயகாந்த் எடுக்க நினைத்த மே டே என்ற ஆங்கிலப் படமும் ஒன்று.  நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அந்த படம்  வரப் போகிறது வரப் போகிறது என்று காத்து கிடந்தோம்.  ஒரு முறை அந்தப் படம் வந்து விட்டது.  ஆங்கிலப் படத்திற்கு நம்மை விட மாட்டார்கள். இருந்தாலும் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று நகரத்திற்குச் சென்று ஏமாந்து வந்த கதை கூட ஒரு முறை நடந்தது.

அந்தப் படம் வந்திருந்தால் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கும் என்று நினைத்தபோது

1. கேப்டன் என்பவர் கர்னலாக மாறி இருப்பார்.

2.அகில உலக நடிகர் சங்க தலைவர் ஆகி இருப்பார். அவருக்கு இணையாக ஷரன் ஸ்டோன், சோஃபியா லாரண்ஸ் வந்திருப்பார்கள். குஷ்பு ஒரு மூலையில் இருந்திருப்பார்.

3.அவ்ரது படத்தில் பாகிஸ்தான் வில்லனுக்குப் பதிலாக செவ்வாய் தோஷ வில்லன் இருப்பார். பாகிஸ்தான் வில்லனை வைத்தால் பாகிஸ்தானில் படம் ஓடுவது சிரமம் அல்லவா..,

4. உலகத்தொழிலாளர்கள் அனைவரும் இவரது கையால் அடிவாங்க தயாராக காத்து இருப்பார்கள் . ஏனென்றால் இவரிடம் அடிவாங்கினால் மகாராஜா ஆகிவிட்லாம்.

5 வடிவேலுவின் மதுரை மணம் வீசும் ஆங்கிலம் உலகம் முழுவதும் பாவி இருக்கும்.  அமரிக்கன் இங்கிலீஷ், ஃப்ரென்ச் இங்கிலீத் போல் மேஜூரா இங்கிலீஷ் நமக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கும்.

6.வைகை ஆற்றைப் பார்க்கவும், உலக அதிசயமாம் நிரம்பி வழியும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை பார்க்கவும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம்  மக்கள் குவிந்து கொண்டிருப்பார்கள். கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற படங்களுக்கெல்லாம் உலக அளவில் மார்க்கெட் கிடைத்திருக்கும்.

7. இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு அழைப்பு வந்திருக்கும். அவரது பயணத்திட்டம் முன்கூட்டியே திட்டமிடப் பட்டிருப்பதால் கலந்து கொண்டிருக்க மாட்டார்.  பத்தோடு பதினைந்தாக நேரிட்டிருக்கும் என்று எதிர் அணியினரால் பிரச்சாரம் செய்யப் பட்டிருப்பார்.


8.இந்தப் பாட்டு வந்திருக்காது




9. ஆனா இவ்வளவு நல்லா செயல் பட்டு சென்னையை காப்பாற்றுப்வர் வாஷிங்டனைக் காப்பாற்ற போயிருப்பார்.



10.இந்தக் காட்சிகளை உலகமே ரசித்து இருக்கும்.

உண்மையான புரட்சி எப்போது?

மேதினம், தொழிலாளர் தினம் இவை பற்றி பேசும்போதெல்லாம் அலசப் படும் வார்த்தைதான் புரட்சி.  தொழிலாளர்களை சுரண்டி, விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சுபவர்களிடம் இருந்து மக்களை விடுவிப்பது என்பதுதான் புரட்சி என்பதாக பலரும் பொருள் கொண்டிருக்கிறார்கள்.   பொதுவுடமைத் தத்துவமே  பணம் நிறைய சேர்த்து வைத்திருப்பவர்களிடமிருந்து  பிடுங்கி மற்றவர்களுக்கு கொடுப்பது என்பதாக உருவகப் படுத்தி இருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு லாபத்தில் சரி பங்கு கொடுக்க வேண்டும் என்பதாக பல திரைப்படங்கள் சில, பல ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கின்றன.

நாம் புரிந்து கொண்டிருக்கும் பொதுவுடமைத் தத்துவம் அப்படித்தான். நாம் மட்டும் என்றில்லை ரஷ்ய தேசம் கூட அப்படித்தான் போல. பொதுவுடமையை நாம் புரிந்து கொள்ளாததுதான் நம் பிரச்சனை.


ஒரு தேநீர் கடை இருக்கிறது. அதில் வேலை செய்ய தேநீர் போடுபவர்,  போண்டா போடுபவர், மேசை துடைப்பவர், சில நேரங்களில் பரிமாறுபவர் இருப்பார்கள். தனிநபராக சிறிய கடை வைத்திருக்கும்போது எல்லாமே ஒருவராக இருப்பார். லாபம் முழுவதும் அவருக்குத்தான். கொஞ்சம் பெரிய அளவில் கடை வளரும்போது தனித்தனி நபர்களாக வேலைக்கு வைத்திருக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஆனால் பல நேரங்களில் அவ்வாறு எதிர்பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அப்படி என்றால் முழுவதும் முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டுதான் போக வேண்டுமா?   ஒவ்வொரு தொழிலாளிக்கும் முதலாளியால் அல்லது முதலாளியின் தொழிலாளியால் ஒவ்வொரு வேலையுமே நிர்ணயிக்கப் பட்டிருக்குமே அப்போது அவரவர் அவரவர் வேலை செய்ய வேண்டுமே என்ன செய்வது?  சில மாதங்களுக்கு முன் இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட ஒரு தொழிலாளியை இயந்திரத்தை உடைக்காமல் காப்பாற்ற நினைத்து  உயிரைப் பலிக் கொடுத்த மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் .  அதற்கென்ன காரணம். அந்த இயந்திரத்தின் செயல் வேகம் தெரியாதவர்களா?  தெரியாதவர்கள் என்றால் தொழிலாளியா? அலலது தொழிலாளியின் மேற்பார்வையாளரான (  முதலாளியின் )  தொழிலாளியா? அப்படி என்றால் அவர் அந்த இடத்தில் தொழிலாளியைக் காப்பாற்ற என்ன செய்து இருக்க வேண்டும். இயந்திரத்தை உடைத்திருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டுத்தொகையை கட்டச் சொல்லி இருக்க மாட்டார்களா? அல்லது இன்சூரண்ஸ் கம்பெணீயிலிருந்து கொடுத்திருக்க மாட்டார்களா?   கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தால் கேள்விகள் வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கான முழுக்காரணம்  முதலாளிகள் தொழிலாளிகளின் நிலையை அறியாமல் இருப்பதும்.   மேற்பார்வை செய்ப்வர்களுக்கு உற்பத்தியை பெருக்குவதற்காக எதையும் செய்து முதலாளியிடம் நல்ல பேர் வாங்க நினைப்பவர்களும்தான்.   முதலாளியிடம் நல்ல பேர் வாங்கினால் அவர் சம்பளம் கொஞ்சம் சேர்த்துக் கொடுப்பார். 


பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் பல மடங்கு அடுக்குகளாக தொழிற்சாலைகள் வைத்து செய்து கொண்டிருக்கிறார்களே?  இதையே சிறு தொழிற்சாலைகளாக மாற்றிச் செய்ய முடியாதா?  ஒவ்வொரு உதிரி பாகத்தையும் தயாரிப்பதை யாராவது ஒருவரிடம் இருந்து கொடுத்து பெற்றுக் கொள்ள முடியாதா?


பல பொம்மைகளை சைனா தயாரிப்புகள் என்று சொல்லுகிறார்களே.., குறிப்பாக கோயில் திருவிழாக்களில் விற்கப் படும் பொம்மைகள். அவைகளை சைனாவின் பெயரினைச் சொல்லித்தான் விற்கவேண்டுமா? சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி செட்டுக்கள் என்று டிரான்ஸிஸ்டர், டேப் களை விற்பார்களே அவையெல்லாம் இன்று சைனா என்று சொல்லி விற்கவேண்டிய அவசியம் என்ன?  

அலை பேசிகள் பலவும் சைனாத் தயாரிப்புகளாக வந்து இறங்குகின்றனவே. அதையெலாம் நம் ஊரிலேயே தயாரிக்க முடியாதா? இந்திய நிறுவனங்களின் சில தயாரிப்புகளில் நேட் இன் சைனா என்று எழுதப் பட்டு இருக்கிறதே அதையெல்லாம் இந்தியாவிலேயே தயாரிக்க முடியாதா? அதன் ஒவ்வொரு உதிரி பாகங்களையும் இந்தியாவில் இருக்கும் ம்க்களிடமே தயாரித்துக் கொடுக்க சொல்லி தொழிலகளை பரவலாக்க முடியாதா? ஏகபோக உரிமையாக ஒருவரிடமே எல்லாவற்றையும் குவிப்பதை விட பலரையும் முதலாளிகளாக மாற்ற முடியாதா? 


சில தொழில்களில் பெரிய முதலீடு தேவை என்று சொன்னாலும் கூட திருப்பூர் போன்ற இடங்களில் குறிப்பிட்ட வேலைகளை தனியே எடுத்து செய்பவர்கள் இருக்கிறார்கள். பீஸ் ரேட் என்று சொல்லுவார்கள். அவர்களில் டெய்லர்களுக்கு ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய அமையும் (இன்றிருக்கும் தேக்க நிலை தற்காலிகமானதுதான்) . ஆனாலும்கூட அவர்கள் முதலாளிகளாக மாறிவிட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இத்தனைக்கும்  கம்பூனிஸ்ட்களின் பல வடிவங்கள் அங்கு நிறியை இருக்கின்றன. 


அப்படி யென்றால்  மாற்றத்தினை யார் ஏற்படுத்துவது?  க்ம்யூனிசப் பாதையில் அனைத்து சொத்துக்களை பொதுவுடமை யாக்கினால் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற உணர்வு மழுங்கு போய் விடுமே?

ஆயுதம் ஏந்தி  சுரண்டல் பேர்களிடமிருந்து மக்களின் பங்கைப் பிரித்துக் கொடுப்பது நல்ல வழியா என்றால் அதுவும் கிடையாது. சுரண்டல் பேர்வழிகள்  ஆயுதம் ஏந்திய இன்னும் பலரை அதிக சம்மளத்துக்கு வேளைக்கு வைத்துக் கொண்டு இன்னும் தைரியமாக சுரண்டத் தொடங்குவார்கள். அப்படியென்றால் என்னதான் செய்வது என்று தோன்றலாம். 



ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக  தனிநபர்கள் போராடுகிறார்களே அவர்களுக்கு ஆதரவு தரலாமா? அவர்கள் மூலம் சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த முடியுமா என்றால் அதுவும் சிரமமான காரியமே. இது போன்ற தனிநபர்கள் முக்கியக் குழுக்களில் தங்களின் செல்வாக்கு மிக்கவர்களை இடம் பிடிக்க வைத்து  அவர்க்ளின் வளத்திற்காக போராடுகிறார்களே தவிர மக்களின் நலம் மிகக் குறைவாகவே இருக்கிறது.

அப்ப்டியென்றால் என்னதான் செய்ய முடியும்.  இன்றைய சூழலில் பொதுவுடமையை நிலைநாட்டுதல் என்பது ஜனநாயகத்தால் மட்டுமே முடியும். ஒரு இயக்கம், மக்களால் நடத்தப் படும் மக்களுக்காக நடத்தப் படும் இயக்கம மட்டுமே அதை சாதிக்க முடியும்.  மக்களின் மூலமாக  தெளிவான கருத்துக்களை அடித்தட்டு சமுதாயம் வரைக்கும் கொண்டு செல்லுதல் வேண்டும்.  ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கையை ஏற்படுத்தும் வகையில் அந்த இயக்கம் செயல் படுதல் வேண்டும்.  இயக்கத்தில் இருக்கும் அனைத்து நபர்களின் வாழ்க்கையையும் கவனித்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டும்.  தலைமை ஏற்று நடத்தும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அந்த அமைப்பின் செயல்வீரர்களுக்கு இருக்க வேண்டும்.   குறிப்பாக பதவி ஆசை பிடித்தவர்களிடம் அந்த இயத்தினர் விலை போகக் கூடாது. ஆனாலும் அவர்கள் ஜன்நாயகத்தில் பங்கேற்ற வேண்டும்.  

பதவி ஆசை பிடித்தவர்களிடம் விலை போக ஆரம்பித்தால் அந்த இயக்கமே பதவி ஆசை பிடித்தவர்கள் கைக்கு போய் விடும்.   அரசியலில் இறங்காமல் மக்களுக்காக சேவை மட்டும் செய்து கொண்டு ஒரு இயக்கம இயங்க முடியுமா? இயக்க முடியுமா என்றால் அதில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன.  அரசியலில் இயங்க முடியவில்லை என்றால் அந்த இயக்கம் ஒரு மிரட்டல் இயக்கமாகவே செயல் படும்.  பெரும்பாலும் பேரங்களில் படிந்துவிடக் கூடிய இயக்கமாகவும், நான் நல்லவன் என்று மட்டுமே சொல்லமுடியும். என்னுடம் இருப்பவர்கள் எப்படி என்றெல்லாம் சொல்லமுடியாது போன்ற தத்துவ வித்தகங்களை சொல்லவேண்டிய ஒரு சூழல்  அந்தப் போராளிகளுக்கு வந்து விடும். 

ஒரு இயக்கம், முழுக்க முழுக்க மக்களால் நடத்தப் படும் இயக்கம் சாத்தியமா என்றால் அது சாத்தீயமே, ஏற்கனவெ தமிழகத்தில் பெரியார் அது போன்ற ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து தமிழ்கம் முழுவதும் கொண்டு சேர்த்தார்.  ஆனால் அரசியலில் ஈடுபடுத்தவில்லை.   அவர்கள் அரசிய்லில் இறங்கி சில பல கட்டங்கள் தாண்டிய பிறகும் கூட மற்ற மாநிலங்களை விட ஓரளவு நேர்த்தியாக தமிழகம் இருப்பதற்கு அவர் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.  இப்போது கூட ஊழல் ஒழிப்பு என்ற  ஒளியில் குவிந்த மக்கள் எத்துணை பேர். இவர்களை யெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும்.  ஆனால் இந்த் ஒருங்கிணைப்பு என்ற செயல் மட்டும் ஒரு தலைவனால் மட்டுமே நடக்கிறது. நடந்திருக்கிறது.



ஒவ்வொரு சமுதயாத்திலும் இந்தத் தேவை ஏற்படும்போது ஒரு மனிதர் தோன்றுகிறார். ஒரு மதத்தினை அமைக்கிறார். அந்த மதத்திறு ஒரு கொள்கைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.  இதுதான் காலம்காலமாக நடந்து வ்ந்திருக்கும் நிலைகள். இன்றைக்கு அவை கட்சிகளாக மாறி இருக்கின்றன.  அப்படி ஒரு தலைவன்  என்ற நிலையில் கொள்கை என்று அமைந்தால்  ஒரு பெரிய மாற்றமாக அமையும். ஆனால் அந்த கொளகையையும்கூட நாம் நம் வசதிக்கு ஏற்றாற்போல புரிந்து கொள்ளும் நிலைமையும் இருக்கிறது. 

முற்போக்கு சிந்தனையாக செயல் பட வேண்டிய மதங்கள் விலங்குகளாக , கைக்கால்களை கட்டிப் போடும் விலங்குகளாக மாறியது இந்த இடத்தில்தான்.  அந்த நிலையை மாற்ற படிக்கும் வழக்கத்தினை அதிகப் படுத்த வேண்டும் என்பதைவிட  உருவாக்க வேண்டும் என்றே சொல்லவேண்டும்.  பல பட்டங்கள் வாங்கியவர்களிடம்  கூட தினமும் செய்தித்தாள் படிக்கும்வழக்கம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.  தினமலர், தினத்தந்திம் தினமணி போன்றவை ஒரு கட்சியை ஆதரித்தும்,  பரபரப்புக்காக செய்தி வெளிவிடுவதால்  அதைப் படிப்பதில்லை என்று சொல்லுவார்கள். அபப்டியென்றால் டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஹிண்டு போன்றவை படிக்கிறார்களா என்றால் அதுவும் இருக்காது. குறைந்த பட்சம் அனைத்து இரண்டு மூன்று பத்திரிக்கைகளாவது படிக்க வேண்டும். ஏதாவது புத்தகங்கள் கதைப் புத்தகங்கள் கூட பரவாயில்லை. ஏதாவது படித்துக் கொண்டும் அதைப் பற்றிப் பொதுவில் பேசும் பேசும் வழக்கமும் வந்தால் கருத்துக்களை ஆராய்ச்சி செய்யும் நிலை உருவாகும்.  குறிப்பிட்ட காலகட்டங்களில் நல்ல புத்தகங்களையும் பற்றி பேசும் நிலை உருவாகும். ஒவ்வொரு பணியிடத்திலும் இரண்டு மூன்று தினசரிகள் மற்றும் சில பல புத்தகங்களை வைத்து படிப்பகங்களை உருவாக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களையும் சபையில் வைத்துப் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான்  கருத்துக்கள் முன்னிலை படுத்தப் படும். சிந்தனைகள் செயல் படத் துவங்கும். உண்மையான புரட்சி உலகை வசப் படுத்தும். வளப் படுத்தும்.

Tuesday, April 26, 2011

அவன் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுது அவன் கெட்டவந்தான்

http://2.bp.blogspot.com/_6V2wLbrjr_Q/TItl7r-Sn-I/AAAAAAAAALc/4Re9oY2MMzw/s1600/9137_big.jpg

ஜான் டேவிட் 1996-97 களில் பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெற்ற பெயர். உச்ச நீதி மன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு பின்னர் மீண்டும் பத்திரிக்கைகளில் இடம் பெற்று வருகிறது.  சுடச் சுட செய்திகளையும் விமர்சனஙகளையும் தரும் வலைப்பூக்கள் மீண்டும் அந்த நிகழ்ச்சிகளை அசை போட்டு வருகின்றன.   இந்த இடுகை அந்த நிகழ்ச்சி பற்றியோ தீர்ப்புக்கள் பற்றியோ பேசப் போவதில்லை. குறிப்பாக ராக்கிங்கிற்கு துளிகூட ஆதரவு தரப் போவதில்லை. ராக்கிங் ஒழிய காரணமானவர்களை கைகூப்பி நன்றி சொல்பவர்களில் நானும் ஒருவந்தான்.

தீர்ப்பு வெளிவந்த உடன் வந்த இடுகை ஒன்றில் பின்னூட்டம் போட்டவர்கள் சொன்ன சில வார்த்தைகளே என்னை இதை எழுதத் தூண்டின.

ஒரு நபர் தன்னை ஜான் டேவிட்டுடன் படித்ததாக அறிமுகப் படுத்திக்க்கொண்டு ஜான் டேவிட் பள்ளியிலேயே கராத்தா கற்றுக் கொண்டு ஒரு அடிதடிப் பையனாக இருந்தார் என்று கூறுகிறார்.


படிக்கும் காலங்களில் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வது என்பதும், தவறுகளைப் பார்த்துக் கோபப் படுவதும் என்னைப் பொறுத்தவரை மிகவும் நல்ல விஷயங்கள். பள்ளிக் காலங்களில் வரும் கோபத்தால் வரும் பின்விளைவுகளையும் அதனை சமாளிக்கும் வல்லமையும் பள்ளிக் காலத்திலேயே வருவது மிகப் பெரிய வரம். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் நமக்கு உதவ பெற்றோர் நண்பர்கள் என்று பலரும் வருவார்கள். பிற்காலத்தில் அதே தவறை நாம் செய்தால் நமக்கு உதவ மிகச் சிலரே வருவார்கள் அவர்களும் யோசித்துத்தான் செய்வார்கள். கல்லூரிக் காலங்களில் இது போன்ற தவறுகளைப் பார்த்து பொங்கும் இயல்புடையவர்கள்தான் மாணவர் பேரவை போன்ற அமைப்புகளை நடத்த முடியும்.  மாணவர் பேரவை வழிநடத்துவது என்பது மிகப் பெரிய நிறுவனத்தை வழிநடத்துவது போன்ற அதில் கிடைக்கும் அனுபவங்கள் விலை மதிப்பற்றவை.


இன்னொரு பெருந்தகை அவன் முகத்தைப் பார்த்தாலே சகிக்கவில்லை. வில்லன் போல உள்ளது என்கிறார். அகத்தின் அழகு முகத்தில் என்று சொன்னால்கூட அவரவர் பார்க்கும் கோணத்தில்தான் அது அமையும். முகம் என்பது நம்மால் விரும்பிப் பெற்றுக் கொள்வது அல்ல. நம் முன்னோர் நமக்கு அளிக்கும் சொத்து. அது தவிர அவரவர் வழித்தோன்றல்களே அவரவர்க்கு அழகாகத் தெரிவார்கள். உலக அழகி லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் இந்திய மக்களுக்கு அழகிகளாகவா தெரிந்தார்கள்.   மேற்கத்த்தியவர்க்கு மேற்கு அழகு, கிழக்கத்தியவற்கு கிழக்கு அழகு .அழகு என்று மெச்சிக் கொள்ளலாமே தவிர ஒரு குறிப்பிட அமைப்பில் முகம் உடையவர்களை கொடியவர்கள் என்று சொல்ல யார் அவர்களுக்கு உரிமை கொடுத்தது?


உங்களுக்கு அந்த முக அமைப்பு பிடிக்கவில்லை என்றால் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் அவ்வளவுதான் சொல்லமுடியும்.



எங்கள் கல்லூரியில் மூத்த நண்பர் இருந்தார். அவரது நடந்து போனாலே இளையவர்கள் பயந்து நடுங்குவார்கள். எனக்குத் தெரிந்து யாரையும் அவர் அடித்ததோ, திட்டியதோ கிடையாது.  அவர் பார்வையே ராஜபார்வை என்று சொல்லலாம். அவரது வகுப்பு மாணவர்களுக்கு அவர் மிக இனிமையானவர். எங்களைப் போல சில இளையவர்களுக்கு அவர் இனிமையானவர் மட்டுமல்ல  ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.  கல்லூரியின் பெரும்பகுதி மாணவர்கள் பயந்து நடுங்கிய அவர் நிர்வகிக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ஆண்டு ஐ.எஸ். ஓ 9000 தரச் சான்று இந்த ஆண்டு பெற்றிருக்கிறது. நெய்வேலிப் பகுதியில் இருக்கிறது அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஒரு அரசு அலுவலகம். அதுவும் ஏழை எளிய மக்கள், பிணியாளர்கள் தினமும் வந்து போகும் இடம் ஐ.எஸ்.ஓ.  தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என்றால் அதன் நிர்வாகி எவ்வளவு பெரிய ஆளுமைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.  அவரைப் பார்த்து பயந்தவர் இன்று வாய் பிளந்து நிற்கிறார்கள்.   அவரது சக மருத்துவர் சொன்னார் அண்ணாச்சியைப் பார்த்து அனைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் பயம். அவர் சொன்னால் உடனே அதை செய்துவிடுவார்கள் அதனால்தான் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மிக எளிதில் ஐ.எஸ்.ஓ  தரச் சான்றிதல் பெற முடிந்தது என்றார்.


எப்படித்தான் நம் மக்கள் ஒரு நபர் பள்ளிக் கல்லூரியில் துடுக்காக இருப்பதையும்  முகம் தமிழ் மண்ணோடு கலந்து இருப்பதையும் வைத்து ஒரு முடிவு கட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை.

====================================================
1996 நிகழ்ச்சி என்பது விபத்து. அதில் பாதிக்கப் பட்டவர் ஓரேயடியாய் போய்விட்டார். அவர் பெற்றோரும் அறப்பணிகள், கல்விப்பணிகள் என்று காலந்தள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பாதிப்பை ஏற்படுத்தியவர் குடும்பத்திற்கு மாறாத ரணமாக மாறி அழுந்திக் கொண்டே இருக்கிறது. கல்வியாளர்களும் அந்த விபத்தினைப் பயன்படுத்தி ராக்கிங்கை பெருமளவு ஒழித்து விட்டார்கள். கடும் சட்டங்களையும் கொண்டுவந்து விட்டார்கள்.

============================================================





=====================================================================


=====================================================================



இந்த மாதிரி படங்கள் இந்தியாவில் 1957லேயே வந்துவிட்டன. இன்னும் நம் மக்கள்தான் உணர மறுக்கிறார்கள்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails