Monday, April 6, 2009

ரஜினிக்கு நடிக்கத்தெரியுமா/தெரியாதா?

ரஜினி...

மூன்றேழுத்தில் என்மூச்சிருக்கும் என்று சொன்ன தமிழ்திரை உலகை கட்டிப்போட்ட அடுத்த தலைமுறை மூன்றெழுத்து மந்திரம்.

ரஜினியின் நடிப்பு பலநேரங்களில் கேள்வி கேட்கப் பட்டுள்ளது. கேலி செய்யப் பட்டுள்ளது. அதற்கு பதில்சொல்லும் ஒரு காட்சிதான் இந்த வீடியோ






எம்ஜியாரும் சிவாஜியும் மக்கள் மனதில் நிறைந்த தெல்லாம் முழுநீளக் கதாபாத்திரங்களும் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களின் மூலம். ஆனால் ரஜினி பெயர் வாங்கியது துண்டுக்கதாபாத்திரங்களில் , ஆபூர்வராகங்கள், மூன்றுமுடிச்சு, 16 வயதினிலே, நான்வாழவைப்பேன் போன்ற படங்களின் மூலமே மக்களின் மனம் கவர்ந்தவர்.

இப்போது நிலைமை இன்னும் மோசம். அவருக்கு நடிக்க கிடைக்கும் ஓரிரு காட்சிகளில் முழுதிறமையும் காட்டவேண்டிய சூழலில் இருக்கிறார். அப்படிப்பட்ட காட்சிதான் பாஷாவில் வந்த காட்சி.

இரண்டு வார்த்தை, நான்கே எழுத்து இதுதான் அவர் வாய்விட்டுப் பேசிய வார்த்தை. மற்றதெல்லாம் அவரது உடல்மொழியும், முகபாவனையும்,கண்களும் பேசியவையே.. அவர் மிகச் சிறந்த நடிகர் என்பதற்கு இது ஒன்றே போதுமே..

45 comments:

  1. நல்ல அலசல் மற்றும் ஒப்பீடு டாக்டரே...

    ReplyDelete
  2. வாங்க டக்ளஸ் அண்ணே..

    நேம்ஸ் அண்ணே....

    ReplyDelete
  3. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களை விட்டுட்டீங்களே அண்ணே...

    முள்ளும் மலரும் படத்தில் வர்ற "ரெண்டு கையும்,ரெண்டு காலும் இல்லைனா கூட பொழைசுக்குவான் சார் இந்த காளி" என்ற காட்சி ரஜினியின் நடிப்பில் எனக்கு பிடித்த ஒன்று...

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம் சார். நீங்க சொன்ன படங்கள் எல்லாம் அவருக்கு நடிக்க வாய்ப்பு உள்ள படங்கள், நான் சொன்ன படங்கள் சுத்தமாக வாய்ப்பே இல்லாத படங்கள்..

    அதில் தனது திறமையை காட்டியவர் ரஜினிகாந்த் அவர்கள்

    ReplyDelete
  5. முழுக்க உண்மை
    ஏதோ ரஜினியின் நடிப்பை கேலி செய்யா விட்டால் தம்மையும் மட்டமாய் நினைத்து விடுவரோ என்று நினைத்தே பலபேர் அவரை கேலி செய்கின்றனர்.
    அவர் படங்கள் தர்க்க பூர்வமானதாக இல்லாவிடினும் அவர் நடிப்பு சிறந்தது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  6. //தர்ஷன் said...

    முழுக்க உண்மை
    ஏதோ ரஜினியின் நடிப்பை கேலி செய்யா விட்டால் தம்மையும் மட்டமாய் நினைத்து விடுவரோ என்று நினைத்தே பலபேர் அவரை கேலி செய்கின்றனர்.//




    அதுதான் தல உண்மை

    ReplyDelete
  7. தலைவர பத்தி பதிவா??? ஓட்டு போட்டு வரேன் அப்புறம் படிக்கலாம்

    ReplyDelete
  8. நல்ல ஒப்பீடுதான் அண்ணே!! ஆனா.. நடிக்க வருமான்னு கேக்குறத நான் வன்மையாக் கண்டிக்கிறேன்... அவ்ர் நடக்குறது.. பேசுறது.. எல்லாம் ஸ்டைல் .. அதனால அவர் ஒன்னும் பண்றதில்லன்னு சொல்றத நான் ஒட்துக்க மாட்டேன்...

    கேமராவ பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சா..ச்சும்மா அதிரும்.. அதுக்கு அவர் எடுத்துக் கொள்ளும் உழைப்பு.. மெச்ச வேண்டிய ஒன்றுதான்..

    மொத்ததில் என் பின்னூட்டத்தின் நோக்கம்.. ரஜினியாய் இருப்பதும்.. அவரைப்போல் நடிப்பதும் சுலபமானது அல்ல!!!! :-)

    ReplyDelete
  9. வாங்க கடைக்குட்டி அவர்களே...

    ரஜினி பெரிய நடிகர்தான்... அதற்கு பெரிய ஆதாரம் அவர்காலத்தில் வரும் மற்ற நடிகர்களின் படங்கள்..

    அவற்றைப் பார்த்துவிட்டு ரஜினிபடங்களைப் பார்த்தால் உண்மை புலப்படும்

    ReplyDelete
  10. உண்மைதான் அண்ணா, அவரது ஸ்டைலே ஒரு தனி நடிப்புத் திறமைதான் இல்லையா?

    ReplyDelete
  11. s u p e r . scene. Rajinikanth The Ever Green Boss

    ReplyDelete
  12. //Subankan said...

    உண்மைதான் அண்ணா, அவரது ஸ்டைலே ஒரு தனி நடிப்புத் திறமைதான் இல்லையா?
    //

    மேலே குறிப்பிட்ட காட்சியில், அவர் பல விதமாக ரசங்களைக் கொண்டுவந்திருப்பார்.

    ReplyDelete
  13. //Amazing Photos said...

    s u p e r . scene. Rajinikanth The Ever Green Boss
    //


    யே.....ஸ்>.

    ReplyDelete
  14. //sayrabala said...

    sariyana parvai + alasal
    //


    நன்றிதல

    ReplyDelete
  15. உண்மைதான் தலைவரே

    //இரண்டு வார்த்தை, நான்கே எழுத்து இதுதான் அவர் வாய்விட்டுப் பேசிய வார்த்தை. மற்றதெல்லாம் அவரது உடல்மொழியும், முகபாவனையும்,கண்களும் பேசியவையே.. அவர் மிகச் சிறந்த நடிகர் என்பதற்கு இது ஒன்றே போதுமே..//

    வழிமொழிகிறேன்

    அதே நேரம் இந்த காட்சிகளின் பிண்ணனி இசையை மறுபடி கவனியுங்கள்

    என்னவோ உலகிலேயே ஒருவருக்குத்தான் பிண்ணனி இசை போடத்தெரியும் என்று சில “அதி மேதாவிகள்” கூறுகிறார்களே.

    அவர்களுக்கும் இந்த காட்சியை போட்டு காட்ட வேண்டும்.. தேவாவின் திறமையை காட்ட

    ReplyDelete
  16. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமை.

    தேவாவை விமர்சிப்பவர்கள் இந்த படத்தை மட்டும் மறந்து விடுவார்கள் :) :) :)

    ReplyDelete
  17. //
    ரஜினியின் நடிப்பு பலநேரங்களில் கேள்வி கேட்கப் பட்டுள்ளது. கேலி செய்யப் பட்டுள்ளது. அதற்கு சாட்சியான ஒரு காட்சிதான் இந்த வீடியோ
    //

    சரியான நெத்தியடி பதிவு...

    ரஜினியெல்லாம் ஒரு நடிகனா, என்ன நடிக்க தெரியும் என்று கேட்பவர்களுக்கு சரியான பதில்...

    ஒரு படத்தில் ரஜினியின் சுமைகள் மிக அதிகம்...உணர்ச்சியை கொட்டி கலைப்படம் போல் நடித்தால் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் காரர்கள், தியேட்டரில் வேலை செய்பவர்கள், திரை உலக தொழிலாளிகள் என்று பலருக்கும் அதில் பிரச்சினை...

    ரஜினிக்கு நடிக்க தெரியுமா என்று கேட்பவர்கள், திருட்டு வி.சி.டியில் மூழ்கி இருந்த தமிழ் மக்களை மீண்டும் தியேட்டருக்கு இழுத்து வந்தது ரஜினியின் படையப்பா, சந்திரமுகி, சிவாஜி என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்...

    காய்த்த மரமே கல்லடி படும்போது, கனிந்த மரம் கல்லடி படுவதில் ஆச்சரியமில்லை..

    ReplyDelete
  18. //
    புருனோ Bruno said...
    உண்மைதான் தலைவரே

    வழிமொழிகிறேன்

    அதே நேரம் இந்த காட்சிகளின் பிண்ணனி இசையை மறுபடி கவனியுங்கள்

    என்னவோ உலகிலேயே ஒருவருக்குத்தான் பிண்ணனி இசை போடத்தெரியும் என்று சில “அதி மேதாவிகள்” கூறுகிறார்களே.

    அவர்களுக்கும் இந்த காட்சியை போட்டு காட்ட வேண்டும்.. தேவாவின் திறமையை காட்ட
    //

    டாக்டர் ப்ரூனோவின் கருத்தை நான் முற்றிலும் வழி மொழிகிறேன்...

    தேவா திறமையில்லாதவர் அல்ல...மிக எளிமையான, அணுகுவதற்கு இலகுவானவர்....ராஜாவையோ, ரஹ்மானையோ அணுக முடியாதவர்கள், அதற்கான பணம்/செல்வாக்கு இல்லாதவர்கள் அணுகுவது தேவாவையே.. மிகக் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு இசை அமைக்க் மட்டுமே பத்து மாதம் ஆகும் என்பதை தாங்க முடியாது....அவர்களுக்கும் இசைந்து இசையமைப்பவர் தேவா...

    ராஜா, ரகுமானின் பாடல்களை விட, தேவாவின் பாடல்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவை...குத்துப் பாடல்களாக இருந்தாலும்!

    ReplyDelete
  19. அண்ணா,

    தப்பா எடுத்துக்காதீங்க...ஆனா உங்க பேஜ் லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது...தமிழ் மணத்துல ஓட்டுப் போடலாம்னு நினைச்சேன்...ஆனா பேஜே லோட் ஆக மாட்டேங்குது...

    ஒரு வேளை, அந்த பூ கொட்றதையெல்லாம் எடுத்துட்டா கொஞ்சம் ஃபாஸ்டா லோட் ஆகலாம்...

    ReplyDelete
  20. வாங்க ப்ருனோ சார், அது சரி சார். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  21. //நீங்கள் இவ்வாறு ஓட்டுப் போடுவதால் உங்களுக்கு சில துளி நேரம் மட்டுமே செலவாகும். ஆனால் எனக்கு மிகப் பெரிய வலிமையைக் கொடுக்கும்//

    அது!

    ReplyDelete
  22. //ஏதோ ரஜினியின் நடிப்பை கேலி செய்யா விட்டால் தம்மையும் மட்டமாய் நினைத்து விடுவரோ என்று நினைத்தே பலபேர் அவரை கேலி செய்கின்றனர்.//
    உண்மை.

    ReplyDelete
  23. அவர் நடிக்ககூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் ரசிகர்கள்.ரஜினி நல்ல நடிகர்தான்.

    ReplyDelete
  24. //என்.இனியவன் said... //

    உண்மைதான் தல. வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  25. //குடுகுடுப்பை said...

    அவர் நடிக்ககூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் ரசிகர்கள்
    //


    ???


    வருகைக்கு நன்றி பிரதமரே...

    ReplyDelete
  26. //Sriram has left a new comment on the post "மூன்றும் சேர்ந்த கூட்டணி":

    ஆனா ஒரு வருத்தம் எனக்கு உண்டு சுரேஷ் அண்ணே...
    அப்ப எல்லாம் கதையில ஒரு கதாப்பாத்திரம் ஆக செவ்வனே செய்து இருப்பார். இப்போது எல்லாம் கதையே இவருக்காக எழுதப் படுகிறது..//


    இடம் மாறினாலும் பின்னூட்டம் இட்ட உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  27. ரஜினிக்கு நடிக்க தெரியுமோ தெரியாதோ ... உங்களக்கு எழுத தெரியுமா....

    ReplyDelete
  28. அட்டகாசம் தல.

    உள்ளே போ.

    வெங்கட்,
    வெடிகுண்டு வெங்கட்.

    ReplyDelete
  29. //Scorpion King said...

    ரஜினிக்கு நடிக்க தெரியுமோ தெரியாதோ ... உங்களக்கு எழுத தெரியுமா....
    //


    தெரியலயேப்பா.. (டொய்ண்ட டொய்ண்ட டொய்)

    ReplyDelete
  30. //வெங்கட்,
    வெடிகுண்டு வெங்கட்.//

    ஓஓ அதுதான் பெயர் காரணமா........

    ReplyDelete
  31. //தெரியலயேப்பா.. (டொய்ண்ட டொய்ண்ட டொய்)//

    வேண்டுமென்றால் நாயகன் கமல் மாதிரி நினைத்து வாசித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  32. //புருனோ Bruno said...

    //தெரியலயேப்பா.. (டொய்ண்ட டொய்ண்ட டொய்)//

    வேண்டுமென்றால் நாயகன் கமல் மாதிரி நினைத்து வாசித்துக்கொள்ளுங்கள்
    //



    (டொய்ண்ட டொய்ண்ட டொய்)//

    அதே MUSIC தான் தல...

    ReplyDelete
  33. இவனுங்கதான் (சிலர் மட்டும்) நடிக்கத் தெரியுமா/ தெரியாதா? மக்களை ஏமாத்துறார்னு சொல்லிக்கிட்டு திரியுறானுவ...
    அவர் பாட்டுக்கு அவர் வேலையை செஞ்சுக்கிட்டு இருக்கார்!.... ஜெயிக்க முடியாதவர்கள்தான் இதெல்லாம் சொல்லிகிட்டு திரியறது!
    வுட்டுத் தள்ளுங்க பாஸ்!

    ReplyDelete
  34. //Vijay said...

    வுட்டுத் தள்ளுங்க பாஸ்!//

    யெஸ் பாஸ்

    ReplyDelete
  35. என்றுமே ரஜினிக்கு நடிக்க வரும் என என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஸ்டைல் மற்றும் நடிப்பையும் குழப்பிக்கொள்ள வேண்டாமே .

    ReplyDelete
  36. //JEEVAFLORA said...
    என்றுமே ரஜினிக்கு நடிக்க வரும் என என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஸ்டைல் மற்றும் நடிப்பையும் குழப்பிக்கொள்ள வேண்டாமே .
    //

    அழுவது மட்டுமே நடிப்பு என்று நினைக்கிறீர்களா தல..

    கோபப்படுவதும் நடிப்புதான் தல..

    ரஜினி சிறந்த நடிகர் என்பதற்கான விளக்கத்தையும் சாட்சியாக படச்சுருளையும் தந்துள்ளேன்..

    நான் தந்துள்ள காட்சியில் கண்களில் சிறிது அழுகையும் அதையும்மீறி கோபமும் அதையும் மீறி வீரமும் வெளிப்படுத்துவார். கொஞ்சம் பாருங்க தல..

    வருகைக்கும் தங்கள் கருத்தினை பதிவு செய்ததற்கும் நன்றி தல

    ReplyDelete
  37. ஜானி படத்தில் சீதேவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரஜினியிடம் கேட்க, ரஜினி அதை மறுத்து பிறகு சம்மதிக்கும் காட்சிக்கு ஈடாக எந்த ஒரு படத்திலும் நடிப்பை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தவில்லை.

    அந்த காட்சியை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  38. //அழுவது மட்டுமே நடிப்பு என்று நினைக்கிறீர்களா தல..//

    அது தான் தல பிரச்சனையே

    அழுவது மட்டுமே நடிப்பு என்ற தவறான எண்ணம் தான் சிக்கலே

    ReplyDelete
  39. என்ன தல?! ரஜினிக்கு நடிக்க தெரியுமோ தெரியாதோ! சரி, அத விடுங்க.

    ஆனா, உங்க கவலையை மறந்து சிரிக்க ஒரு விசையம் இதே காட்சியை வைத்து சொல்லவா?

    அவர் கண்ணும் குரலும் நடித்துள்ள அந்த காட்சியை அதே பின்னணி இசையுடன் வேறு எந்த நடிகரையும் கண்ணை மூடி யோசித்து பாருங்கள்...சரி சரி அடக்க முடியாமா சிரிச்சா பக்கத்துல இருங்கவுங்க தப்பா நினைச்சுக்க போறாங்க :-)

    அப்படி யோசிக்க முடியவில்லை என்றால் கவலை பட வேண்டாம், பகவதி பாருங்கள் :-) அப்புறம் சிரிச்சு சிரிச்சு இனிக்கு உங்க ஆஸ்பத்திரிக்கு விடுமுறைதான் :-)

    அது சரி, என்ன எங்க பக்கம் இப்ப ஆளையே காணோம்? வேலை பளுவா?

    ReplyDelete
  40. நல்ல பதிவு.. முள்ளும் மலரும்ல தலைவர் நடிப்பு பற்றிய என்னுடைய பதிவு...

    http://salemvasanth.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  41. @nagoreismail
    @புருனோ Bruno
    @negamam
    @சிங்கக்குட்டி
    @சேலம் வசந்த்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails