Friday, April 17, 2009

டோனி தேசத்தை அவமானப் படுத்திவிட்டாரா?

இந்த ஆண்டு ஏப்ரல்-14ல் பத்ம விருதுகள் வழங்கப் பட்டு விட்டன.. தமிழ்மான வீரராக விவேக் போய் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அதே நேரத்தில் டோனி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. ஹர்பஜன்சிங் ஏதோ குடும்பசூழல் காரணமாக வரவில்லையாம். இவர்கள் அதே நேரத்தில் ஏதோ விளம்பர நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கில் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு அனைவரும் இது போன்ற உயரிய விருதுகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சுற்றறிக்கை அனுப்பப் போவதாக கூறியுள்ளார்.

1.என்ன நடக்கிறது அங்கே..?


2.இது போன்ற விருதுகள் ஏன் மக்களிடம் முக்கியத்துவம் இழந்துவிட்டன?இந்த விருதுகள் மிக உயர்ந்தவை என்ற எண்ணத்தை எப்படி மீண்டும் மீட்டுவருவது?

3.இதைவிட விளம்பர நிகழ்ச்சிகள் முக்கியமா? அந்த அளவு பணத்தேவை விளையாட்டுவீரர்களுக்கு இருக்கிறதா?

4.ஐபியெல் இடம் மாறியதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? அப்படி இருந்தால்.........

5.இது டோனியின் பெற்றோருக்கு தெரியுமா? மற்றவர்களைவிட டோனியின் பெற்றோர் பத்திரிக்கைகள் சந்திப்பில் மிக முதிர்ச்சியுடன் பேசுகிறார்கள்.

6.வெளிநாட்டில் விளையாட சென்றிருந்தால் சிறப்பு அனுமதி கொடுத்து அவர்களை விருது அனுப்பி இருக்க வேண்டாமா?(கிரிக்கெட் விளையாடுவதே தேசத்தின் மானத்தைக் காக்க என்றுதானே கூறுகிறார்கள்)

7 comments:

  1. இதே விருதுக்கு பதில் பத்து கோடிபணம் கொடுக்குறதா இருந்தா வந்து இருப்பாங்க!

    ReplyDelete
  2. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை!!

    ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று ‘டிக்டேட்’ செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றே நினைக்கிறேன் (மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் வாராதவரை)!!! இதே நடிகைகளோ அல்லது பணம் வரக்கூடிய விஷயமாகவோ இருந்தால் போயிருக்கலாம், ஆனால் அது அவரவர் விருப்பம்!

    முதலில் இது போன்ற விருதுகளே தரப்படுவதில்லை, வாங்கப்படுகிறது என்ற சூழலில் இதை ஏன் ஒரு பெரிய குற்றமாக பார்க்க வேண்டும்? ஒரு உதாரணம், எந்த விருது நிகழ்ச்சியோ, அல்லது, தமிழ் திரையுலகம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விழாவிலுமோ கலைஞர் கலந்து கொண்டாலும், அஜீத் கலந்து கொள்வதில்லை பதிலாக திரைப்படங்களில் நடிக்கிறார் என்பதற்காக, அவர் தமிழ் திரையுலகை அவமானப் படுத்தி விட்டார் என்று அர்த்தமா?

    இப்படி டிக்டேட் செய்வதால்தான், மற்றவர்களை நிஜ வாழ்க்கையிலும் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்!!!

    இதைக் குற்றம் குற்றம் என்று சொன்னதிலிருந்து என் மண்டையை குடையும் கேள்வி இது!!!

    ReplyDelete
  3. என்னது,

    டோனி தேசத்தை அவமானப்படுத்தி விட்டாரா?


    கிங் விஸ்வா
    Carpe Diem

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  4. THEVAYELLADHAVARGALUKKUELLAM KODUPATHAL THEVAYILLADHA VIRUDHU ENDRU NINAITHIRUPARGAL





    PONGAYA NEENGALUM UNGA VIRUDUM

    IVANGADAN DESATHAI AVAMANAPADUTARANGALAM

    IYYO COMEDY COMEDY

    ReplyDelete
  5. அண்ணே... என்னண்ணே இது ... சுய சாதனைக்காகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினாலும் பிளவு பட்டு இருந்த அணியை ஒரு தனி ஆள் நல்ல நிர்வாகத் திறமையோடு இந்திய கிரிக்கெட் அணியை முன்னடத்தி வெற்றிபெற செய்கிறார். அவரையும் அரசியல் செய்து நிம்மதி இழக்க செய்து அணியை மீண்டும் தோல்வி பாதைக்கு அழைத்து சென்றுவிடுவார்கள் போல இருக்கே.

    ReplyDelete
  6. ஒருவன் விருதுக்கோ அல்லது பரிசுக்கோ தலைவணங்க, முதலாவது விருதை தகுதிக்கு தரப்பட்டதாக நினைக்கவேண்டும். இரண்டாவது விருதினால் தான் பெருமை அடைவதாக நினைக்க வேண்டும். பிறகு, அவனுக்கு விருது வழங்கும் நாளில் நேரம் ஒத்துப்பட்டு வரவேண்டும். இங்கு இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஐபிஎல் சென்றுள்ளதை பார்த்தால், முதல் இரண்டு காரணங்களில்தான் இடிக்கிறது.

    வராதவர்களுக்கு விருதை வாபஸ் வாங்கி விட்டு இனி எந்த அரசு விருதிற்க்கும் பரிசீலனை செய்யாமல் இருந்தால் அதுவே மற்ற எல்லோர்க்கும் நல்ல பாடமாகும். என்ன நான் சொல்வது?

    ReplyDelete
  7. //முதலில் இது போன்ற விருதுகளே தரப்படுவதில்லை, வாங்கப்படுகிறது என்ற சூழலில் இதை ஏன் ஒரு பெரிய குற்றமாக பார்க்க வேண்டும்?//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails