- எல்லாத்திரைப்படத்திற்கும் லாஜிக் இருக்க வேண்டும் என்றும் லாஜிக் இல்லாமல் எடுக்கப் படும் திரைப்படங்கள் மக்களால் நிராகரிக்கப் படும் என்றும் பேசப் படுகிறது.
ஆனால் ஒரு தமிழ் திரைப் படம் பெரும்பாலான முக்கிய காட்சிகள் அனைத்திலும் லாஜிக் மீறப் பட்டிருக்கும். சாதாரணமாக நடக்கவேஏஏஏ இயலாத சம்பவங்களைக்கொண்டு பின்னப் பட்டு வெற்றி பெற்ற படம் இது.
இது நம்ம ஆளு
பட்டணத்திற்கு வேளை தேடி வந்த நபர் சுண்டல் விற்க முன்வருகிறார். இதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அடுத்து அதற்காக அந்தணர் வேடம் போடுகிறார். சுண்டல் விற்பதில் வரும் லாபத்தைப்போல பல மடங்கு செலவு செய்து போடப் படும் வேசம் இது. என்ன கொடுமை சார் இது
அடுத்து ரோட்டில் பார்த்து அவரை புரோகிதம் செய்ய அழைகிறார்கள். எங்கேயாவது நடக்குமா?
தவறாக மந்திரம் சொல்வதைப் பார்த்து அந்த ஊர் நாட்டாமை அந்தணர் அவருக்கு இருக்க இடம், படுக்க பாய், சம்பாதிக்க வேலை, அவ்வப்போது இலைப் போட்டு சோறு, தனியாக பாயசம், வடை வேறு கொடுக்கிறார். இந்த நாட்டாமைக் காரர் ஒழுங்காக மந்திரம் சொல்லாததால் தலையில் தீயைத் தூக்கிப்போட்டவர் என்ற பில்டப் வேறு.......
இதையெல்லாம் பார்த்து லவ் வேறு வருமாம்.........
ஒரு தெருவில் நடக்கும் பாட்டுப் போட்டியில் செயித்து கண் ஆபரேசன் செய்யும் அளவு பரிசாம்...............
நாட்டாமைக்காரர் செட்டப் அப்பா அம்மாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்களாம். ஊரில் நடப்பதாக சொன்னாலும் இவ்வளவு படித்தவராக காட்டப்படும் நாட்டாமையை அடிமுட்டாள் ஆக்குகிறார்கள்.
ஒரிஜினல் தன்மை தெரிந்தவுடன் அவர் வாங்கும் சத்தியம் உலகில் எங்கும் இல்லாத ஒரு சத்தியம். கொலை செய்திருக்கலாம். கோபத்தில் என்று நினைத்துக் கொள்ளலாம். இல்லை விவாகரத்து செய்திருக்கலாம். இதைச் செய்யாமல் பெண்ணைத் தொடக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். கொடுமையோ கொடுமை.
இதற்கடுத்து பல பலான சங்கதிகள். கடைசியில் நடக்க வேண்டியது நடக்கிறது. இந்த படம் தீண்டாமை எதிராண கொள்கையை வலியுறுத்தி எடுக்கப் பட்டதாக ஒரு விளக்கம். எப்படி என்றுதான் தெரியவில்லை.
இயக்குநர் பாலகுமாரனாம். இதுவே ஒரு லாஜிக் இல்லாத விஷயம். யாருக்காவது உண்மை தெரியுமா................
தமிழ் மணத்தில் புதிய ஓட்டுமுறை அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு
நான் எழுதிய
| |||
Pathivu Toolbar ©2009thamizmanam.com | |||
யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?
இடுகை மொத்தம் பத்து ஓட்டுக்களும் அதில் எதிர் ஓட்டுகளைக் கழித்து இப்போதைய ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு இரண்டு என்பதும் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. ஓட்டுக்களின் மதிப்பு ஃப்யர் ஃபாக்ஸ் மற்றும் கூகிள் உலாவிகளில் தெரிகிறது. ஏனோ I E உலாவியில் தெரியவில்லை.
இந்த இடுகைக்கு என்ன நிலமை என்று பார்ப்போம்
===========================================================
இது ஒரு மீள்பதிவு. எழுத ஆரம்பித்த மாததில் பதிவிட்டது.
அட நல்ல வித்தியாசமாவே யோசிச்சிருக்கீங்க... ஆமா அது ஏன் இத்தனை வருசம் கழிச்சு அந்தப்படத்த்தோட லாஜீக் பத்தி சொல்றீங்க...? பாக்யராஜ் கூட ஏதாச்சும் பகையா???
ReplyDeleteநன்றி நாஞ்சில் சம்பத்
ReplyDeleteரொம்ப நாள் மனசில இருந்த விஷயம்
படத்தின் வெற்றிக்கு லாஜிக் தேவையில்லை என்று கூற வந்தேன்
இயக்குநர் பாலகுமாரனாம். ஆமாங்க சார் பார்ப்பனர் பலகுமாரன் தான்.மற்றபடி மேற்பார்வை அனைத்தும் பாக்கியராஜ் தான்.
ReplyDeleteலாஜிக்கெல்லாம் பார்த்து படம் பார்த்தால் கோடம்பாக்கத்தில் முதல்வரை தேடமுடியுமா?
நடிகர்களும் முதல்வர் ஆசையில் மிதப்பது கூட லாஜிக்கில்லா லாஜிக்கால்தான் சார்.
பர்ப்பனப்பெண்ணும் நாவிதர் பையனும் திருமணம் செய்யும் போது அங்கு ஜாதி மறுக்கப்படுகிறது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ?
தீண்டாமைக்கு அடிப்படையே ஜாதி தான்.
ஒருவகையில் ஜாதியை மறுக்க வந்த படம் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.
நன்றி.
நான் வலைக்கு புதியவன்
ReplyDeleteஎன் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் ஓவியாசார், தேவா சார்,
ReplyDelete//பர்ப்பனப்பெண்ணும் நாவிதர் பையனும் திருமணம் செய்யும் போது அங்கு ஜாதி மறுக்கப்படுகிறது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ//
ReplyDeleteமிகச்சரியான கருத்து.இக் கதையிலோ கருத்திலோ வில்லங்கமில்லை.ஏனெனில் இது பாக்யராஜ் படம்.உண்மையில் பாலகுமாரன்,சுஜாதா,ஷங்கர், படங்களை கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.மாதிரிக்கு சில கேள்விகள்
1.ஜென்டில் மேன் __ படம் முழுதும் பிராம்மண வாழ்வு காட்டப்படலாம்.மடிசார், அப்பளம்,துளசிமடம் சுற்றி பாடல்..இத்யாதி.ஆனால் கதாநாயகன் கொள்ளை அடிப்பவன்.எனவே அவன் பிறப்பால் பிராமணன் இல்லை.சாணக்யனாக இரு.. சத்திரியனாக இருக்காதே..இது பிரதான வசனம்.நீதிமன்ற காட்சியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனங்கள்.வசனம் பாலகுமாரன்...டைரக்டர் ஷங்கர்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்து வெளிவந்த படம் இந்தியன்.அத்தனை வருடங்கள் வரை இந்தியன் கிழவருக்கு தமிழ் சமூகத்தில் அவலங்கள் காணக்கிடைக்கவில்லை.ஒரு டாக்டரோ, ஒரு போலீசோ,தாசில்தாரோ,இவர் கிழவர் ஆகும் வரை களை எடுக்க வேண்டிய அவசியம் (50 வருடங்களாக) தமிழகத்தில் இல்லை.அத்தனை வருடங்கள் பதவியில் இருந்த அரசு ஊழியர்கள் நல்லவர்கள்.அப்படியானால் அவர்கள் யார்? இட ஒதுக்கீட்டிற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா? இதே பார்வை தான் அந்நியன்,சிவாஜி வரை தொடர்கிறது.அதுவரை ஆட்டோ டிரைவர்,பால்காரர், என வந்த கதாநாயகன் இப்போது சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர் ராக பரிமாணம் எடுக்கிறார்.கலரையும் வெள்ளையாக்கிக் கொள்கிறார்.கலரை பற்றி பேசினால் தமிழகமே கொந்தளிக்கும் என காமெடியன் மூலமாக நக்கல் வேறு.எங்கே போகிறது தமிழ் திரையுலகம்?
ReplyDeleteநன்றி சே.வே.சு ஐயா, இது பெரிய இடுகையாக இட வேண்டிய விஷயம். இணயத்தில் ஓரளவு பிரபளம் அடைந்தபின் எழுதினால் நிறையப்பேரை சென்றடையும்
ReplyDelete//இது பெரிய இடுகையாக இட வேண்டிய விஷயம். //
ReplyDeleteஅந்நியன் குறித்து எனக்கும் சில கேள்விகள்
http://www.payanangal.in/2008/09/vidhathu-karuppu-marmadesam-multiple.html
இன்றைய கேள்வி 1:
சும்மா தூங்குபவர்களை கூட கொல்லும் அந்நியன் திறமையை பின் தள்ளி சிபாரிசுக்கு முன்னுரிமை அளிக்கும் சபா அலுவலரை கொல்லாதது போல் சுஜாதாவும் சங்கரும் கதை அமைத்தது ஏன்.
இன்றைய கேள்வி 2:
தேவாவை ஜெராக்ஸ் கடை என்று கேலிச்ய்பவர்களில் / எழுதுபவர்களில் “சிலர்” இதுபோன்ற ”சில” அப்பட்டமான அறிவு திருட்டுக்களை கண்டு கொள்ளாதது ஏன்.
இன்றைய ஆதங்கம் 1:
தண்டனை / கேலி / பகடி / விமர்சணம் என்பதெல்லாம் செய்யப்பட்ட செயலைப்பொருத்து அமையாமல் செய்த நபரை பொருத்து இருக்கும் நிலை என்று மாறும்
//இன்றைய ஆதங்கம் 1:
ReplyDeleteதண்டனை / கேலி / பகடி / விமர்சணம் என்பதெல்லாம் செய்யப்பட்ட செயலைப்பொருத்து அமையாமல் செய்த நபரை பொருத்து இருக்கும் நிலை என்று மாறும்//
சரியாண கேள்வி அய்யா...
சரி
ReplyDeleteபடத்தை பார்க்கும் போது உங்களுக்கு சிரிப்பு வந்ததா இல்லையா
//புருனோ Bruno said...
ReplyDeleteசரி
படத்தை பார்க்கும் போது உங்களுக்கு சிரிப்பு வந்ததா இல்லையா
//
நண்பர்கள் கூட்டத்தோடு பார்த்தது தல..,
//டக்ளஸ்....... said...
ReplyDelete:)
//
நன்றி தல.,
பழனி பஞ்சாமிர்தம் சாப்பிட இன்னைக்குத்தான் வேளை வந்துச்சு..சூப்பருப்பு..
ReplyDelete//தண்டோரா said...
ReplyDeleteபழனி பஞ்சாமிர்தம் சாப்பிட இன்னைக்குத்தான் வேளை வந்துச்சு..சூப்பருப்பு..
//
நன்றி தல..,