Sunday, December 7, 2008

ரீமேக் பெயர் இல்லா திரைப்படங்கள் பாகம் 2

http://www.prakritifoundation.com/events03/indirav/c1.jpg


தில்லானா மோகனாம்பாள்
தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றிச்சித்திரம் நாவலாக வந்து வெற்றி பெற்ற வெகு சில சினிமாக்களில் இதுவும் ஒன்றாம். நாதஸ்வர வித்வான் சிக்கல் சண்முக சுந்தரத்திற்கும் நாட்டிய பேரொளி மோகனாவுக்கும் இடையே யான ஈகோ கலந்த கலவையான மோதலுடன் கூடிய காதல் கதை. 68ல் வந்ததாம். அப்படி என்றால் இருவரின் வயதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சிவாஜி தனது நடிப்பாலும், பத்மினி தனது நடனத்திறமையாலும் அந்தக் குறை தெரியாமல் செய்து விடுவார்கள். ஆனால் போஸ்டரில் பத்மினியின் வயது தெரிந்துவிடும்.


நாதஸ்வர கலைஞருக்கும் நடனசிகாமணிக்கும் காதல்...
நடண்சிகாமணி யின் தாயின் தோழர் நடண சிகாமணியை ஜமீந்தார் ஒருவருக்கு சின்னவீடாக செட்டப் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு அவர்களின் ஈகோவை பயன்படுத்திக் கொள்கிறார். போட்டி நடக்குமுன் கத்திக் குத்து நடக்கிறது. நலந்தானா பாட்டு பாடுகிறார். பல செண்டிமெண்ட் காட்சிகளுடன் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சிக்கல் சண்முக சுந்தரத்திற்கும் ஜில்ஜில் ரமாமணிக்கும் [படத்தில் மனோரமா ஆச்சிக்கு பலபெயர்கள்] உள்ள தூய்மையான நட்பு. ஆயிரம் படங்கள் ஆண் பெண் நட்பை உயர்த்தி எடுத்துருந்தாலும் தமிழில் இவ்வளவு இயல்பாக ஆழமாக யாரும் எடுத்ததாக தெரியவில்லை.

கரகாட்டகாரன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilEKkPEXKVCbWoy4DLSeQflvfw9G1cuht2YaBO49oXrW3S2W4V9x_jYTBSDvEc1e08nh-18otf1QIb46-2W0SqphKeoeN-sWRCw0uVQpyuJnt_0iYoY3Uz4qt5sk2JjkN27KSwZI1WwPw/s400/karagaattakkaaran.jpg

88ல் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வெற்றி பெற்ற படம். அதே போல் இரண்டு கலைஞர்கள். நாதஸ்வரத்தையம் நாட்டியத்தையும் ஒருங்கிணைத்து இருவரையும் நாட்டுப் புர கலையான கரகாட்டக் காரர்களாக மாற்றியிருப்பார்கள். அங்கே நாகேஷ் செய்த வேடத்தை இங்கே அக்கா கணவர் செய்வார். நாயகியை உள்ளூர் நாட்டாமைக்கு மணமுடித்து வைக்கப் பார்ப்பார். காதலர்கள் பிரிவுத்துயரைச் சந்தித்து போட்டு நடனம், பூமிதி நடணம் ஆடி கத்திக் குத்தெல்லாம் வாங்கி கடைசியில் சுபம்.

இந்தப் படத்தில் நகைச்சுவை சுவையாய் அமைந்து படத்திற்கு தூணாக நின்றது என்றே சொல்லலாம். வாழைப்பழ காமெடி, ஜப்பான்ல ஜாக்கி ஜான் கூப்டாஆஆக. அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்டாஆஆக.. ஜோக்கெல்லாம் பரபரப்பானவை.




Gamesfather Video

அண்ணன் -தங்கை, அக்கா-தம்பி என்று கூறிக் கொண்டு பின்னாலில் கழுத்தில் மாலையுடன் வந்து நிற்கும் கலாசாரத்தை சன்னமாக சாடி இருப்பார்கள்.

படத்தில் ஒரு ப்ளஸ் பாயிண்ட் ஜோடியில் இருவரும் இளைஞர்கள், சினிமா கரகத்தை அழகாக ஆடினார்கள்.


சங்கமம்



ஏ.ஆர்.ரெகுமான் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டாக ஆன பின்னர் சுரேஷ் கிருஸ்ணாவின் இயக்கத்தில் 99ல் வந்தது. இதில் ஒருவர் நாட்டுப் புற ஆட்டக்காரர். {அது என்ன ஆட்டம் என்று தெளிவாய் தெரியவில்லை}. பெண்மணியோ பரதக் கலைஞர். இங்கேயும் ஈகோ வருகிறது. நடனப் பெண்மணிமேல் ஆசைப் படுகிறார். இங்கேயும் கத்திக் குத்து. சீனியர் ஆட்டக்காரரின் பிணத்தினை வைத்துக் கொண்டு தெருவில் ஆடி பரத கலைஞர் சம்பாதிக்கும் அதே அளவு பணத்தினை சம்பாதிக்கிறார். கடைசியில் என்னென்னமோ நடந்து சுபம்.

இது அதி பயங்கர தோல்வியை சந்தித்த படம். மேடையில் ஆடும் பரதம். எல்.கே.ஜி குழந்தை ஆடுவதைப் பார்ப்பது போல் பார்த்தால் மிக அழகாக இருக்கும் அதற்கு தகுந்த செட் எல்லாம் போட்டிருப்பார்கள். ரகுமாணும் தனது முழு உழைப்பைக் கொடுத்திருப்பார். ஏ.ஆர்.ஆர் முழு திறமையும் காட்டியிருப்பார்கள்.


முன்னதில் நலந்தானா.. இதி சௌக்கியமா...
மொத்தத்தில் ஆட்டம்

==================================================


ரீமேக் என்ற பெயர் இல்லாமல் வந்த மற்ற சில திரைப் படங்களையும் பற்றி அறிய இந்தச் சுட்டியை அழுத்துங்கள்





45 comments:

  1. மூணு படத்திலும் சிறந்த படம் எது?

    அத சொல்லிருந்தா நல்லாருந்துருக்கும்..

    ஹிஹி

    ReplyDelete
  2. முதல் ரெண்டு படம்தான் நல்லா இருந்தது. கடைசிப்படம் சுமார்தான்.

    ReplyDelete
  3. வணக்கம் அதிஷா சார், சின்ன அம்மிணி மேடம்.

    முதல் படத்தில் இருவருவே ஒரிஜினல் கலைஞர்களாக வாழ்ந்திருப்பார்கள்.

    இரண்டாவதில் சினிமா கரகத்தை சிற்ப்பாக செய்து இருப்பார்கள்.

    மூன்றாவதில் ரகுமான் ஆடுவதை மொத்தமாக கிராமிய கலை என்று கூறி இருப்பார்கள். நாயகி ஆடுவது என்னவகை என்று என்னைப் போன்ற சாமானியர்களுக்கு புரியாதவகையில் எடுத்திருப்பார்கள்

    ReplyDelete
  4. பதிவை விட, நீங்கள் பின்னூட்டத்தில் சொன்ன பதிலை ரசித்தேன்.

    ReplyDelete
  5. முதல் படம் சூப்பர்.

    ரெண்டாவது..... ஏழைக்கேத்த எள்ளூருண்டை வகை. ஆனாலும் கனகாவின் கண் பேசும் இடங்களும், நம்ம பசுநேசரின் களங்கமில்லாத கிராமத்துப் பார்வைகளும்(???) பரவாயில்லாம நல்லா இருந்துச்சு.

    மூனாவது.......

    அடப்போங்கப்பா.....வீட்டுலே வேலை நிறைய இருக்கு.

    ReplyDelete
  6. தில்லானா, கரகாட்டக்காரன் சூப்பர். மூனாவத ஒரு படமாவே என்னால ஏத்துக்கமுடியல. அப்போ குமுதம் விமர்சனத்தில உச்சி வெயிலில் தார் ரோட்டில் செருப்பு இல்லாமல் நடப்பவ்ன் சங்கடத்தை நாட்டியம் என்றால் எப்படி என்று கிண்டியிருந்தார்கள்

    ReplyDelete
  7. என்னங்க.. சங்கமத்த இந்த வாரு வாருறீங்க.. :((

    அதுல மணிவண்ணன் கேரக்டர் அசத்தலா இருக்கும்ங்க.. படத்துல உருப்படியா இருந்தது பாட்டுக்கு அப்புறம் அவரோட நடிப்புத்தான்..

    நீங்களே படங்களோட தரவரிசைய வருச வாரியா பிரிச்சுட்டீங்க போல :))

    ReplyDelete
  8. நல்ல ஒப்பீடு,

    தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன், சங்கமம் இவைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

    அருமையான திரைப்படங்கள்.

    தில்லானா மோகனாம்பாளின் ஒவ்வொரு வசனமும் மனதில் நின்றது போல் மற்ற இரண்டு படங்களும் நிற்காமல் இருப்பது சற்று குறையே!

    ReplyDelete
  9. அதுல மணிவண்ணன் கேரக்டர் அசத்தலா இருக்கும்ங்க.. படத்துல உருப்படியா இருந்தது பாட்டுக்கு அப்புறம் அவரோட நடிப்புத்தான்..
    //

    நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  10. சங்கமத்தின் சிறப்பு, ஒரு தேசிய விருது...

    படம் ரொம்ப செயற்கையா தெரியும்...

    ReplyDelete
  11. லிங்க் சரியில்லிங்க...

    ReplyDelete
  12. தில்லானா மோகனாம்பாள் காலத்தால் அழியாத காவியம்.

    கரகாட்டகாரன் காமெடி இருக்கும் வரை அதுவும் இருக்கும்

    சங்கமம் மணிவண்ணன் நடிப்பிற்க்காக ஓகே

    ReplyDelete
  13. மூன்று படங்களிலும் சந்தேகமே இல்லாமல் சிறந்த படம் 'தில்லானா மோகனாம்பாள்'தான்.

    இசை + நடிப்பு + திரைக்கதை என எல்லாமே கச்சிதமாக அமைந்த 'கிளாசிகல் மசாலா' படம்.

    சிக்கல் சண்முக சுந்தரத்திற்கும் ஜில்ஜில் ரமாமணிக்கும் உள்ள தூய்மையான ஆண் பெண் நட்பு பற்றி இது வரையிலும் யாரும் சிந்தித்ததில்லை. அந்த வகையில் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்.

    கரகாட்டக்காரனில் கிராமத்து ஜிகினா பூச்சுகள் தூக்கலாக (உறுத்தலாகவும்) இருந்தாலும் வாழைப்பழ காமெடி எல்லாவற்றையும் சரிகட்டிவிட்டது.
    எனக்குத் தெரிந்து ஒரு ஜோக் ஒரு படத்தை ஓட வைத்தது என்றால், அது இந்தப் படம் மட்டும்தான்.

    சங்கமம் பாடல் மற்றும் மணிவண்ணனைத் தவிர, மற்ற எல்லாமே குறைகள்தான்.

    இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ஆயிரம் படங்கள் ஆண் பெண் நட்பை உயர்த்தி எடுத்துருந்தாலும் தமிழில் இவ்வளவு இயல்பாக ஆழமாக யாரும் எடுத்ததாக தெரியவில்லை.

    ReplyDelete
  14. //சுரேஷ் கிருஸ்ணாவின் இயக்கத்தில் 98ல் வந்தது. //

    1999ல் வந்தது. சரியாக சொல்லவேண்டுமென்றால் 1999 ஜூலை என்று நினைக்கிறேன்

    --
    கண்டிப்பாக ஒரே நபருக்கு இந்த மூன்று படங்களும் பிடிக்காது.

    காரணம் மூன்று வெவ்வேறு வகையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.
    --

    ReplyDelete
  15. சின்ன அம்மணி சொன்னது தான் என் கருத்தும், சங்கமம் படு போர், ரகுமானின் வீணான உழைப்பு

    ReplyDelete
  16. அடுத்தது சங்கமம் சாதிய குறியீடுகளை வெளிப்படையாக எதிர்த்த படம்

    முதல் இரண்டு படங்களிலும் காதலுக்கு எதிரி ஈகோ, அல்லது பணம் தான்

    காதலர்கள் அவர்களின் காதலை உணர்ந்த பின் சங்கமத்தில் தான் சாதியும் காதலை பிரிப்பதாக காட்டியிருப்பார்கள்.

    ReplyDelete
  17. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி,


    வடகரை வேலன் சார்


    துளசி கோபால் மேடம்


    குடுகுடுப்பை சார்


    சென்ஷி சார்


    புதுகைத் தென்றல் சார்


    சரவணகுமரன் சார்


    கிரி சார்

    r.selvakkumar சார்



    புருனோ Bruno சார்


    கானா பிரபா சார்

    ReplyDelete
  18. புதுகைத் தென்றல் சார்//


    :))))))))))))

    ennoda profilea saria parunga

    ReplyDelete
  19. //சங்கமத்தில் தான் சாதியும் காதலை பிரிப்பதாக காட்டியிருப்பார்கள்.//



    உண்மை.


    ஆனால் மணிவண்ணன் பல இடங்களில் நாமெல்லாம் ஒரே இனம் கலைஞர்கள் என்ற இனம் என்று சொல்லி கொண்டிருப்பார்.


    பல படங்கள் ஜாதி என்பது காதலுக்கு தடையில்லை என்று சொல்லி இருந்தாலும் ஜாதி தேவையில்லை சொல்லும் படங்கள் ஏதும் உள்ளதா சார்...

    காதலர்கள் தங்களுக்கு ஜாதி தேவையில்லை என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்...

    ReplyDelete
  20. லிங்க் சரி செய்து விட்டேன் சரவணகுமரன் சார்

    ReplyDelete
  21. மன்னிக்கவும் புதுகைத் தென்றல் மேடம்..

    பார்த்து சரிசெய்துவிட்டேன்

    ReplyDelete
  22. //கரகாட்டக்காரனில் கிராமத்து ஜிகினா பூச்சுகள் தூக்கலாக (உறுத்தலாகவும்) இருந்தாலும் // @r.selvakkumar


    இல்லை சார்.. அரிதாரம் பூசுபவர்களின் வாழ்க்கையைக் காட்டும்போது கொஞ்சம் பூச்சுக்கள் அதிகமாக இருப்பது போல் மற்றவர்களுக்கு தோன்றும்.

    ReplyDelete
  23. ///மணிவண்ணன் கேரக்டர் அசத்தலா இருக்கும்ங்க.. படத்துல உருப்படியா இருந்தது பாட்டுக்கு அப்புறம் அவரோட நடிப்புத்தான்../// @சென்ஷி சார்.


    உண்மை கோட் மற்றும் மெடல் போன்றவற்றை அணிந்து கொண்டு நடக்கும் நடை உண்மையான கலைஞரால் மட்டுமே முடியும். இவருக்கு ஈடான பாத்திரம் மற்ற படங்களீல் இல்லை.

    ReplyDelete
  24. //கனகாவின் கண் பேசும் இடங்களும், நம்ம பசுநேசரின் களங்கமில்லாத கிராமத்துப் பார்வைகளும்(???)//


    பசுநேசரின் மிகப் பெரிய பலம் அதுதான். அந்த களங்கமில்லாத கிராமத்து பார்வையை நம்பி எடுக்கப் பட்ட படங்கள் அனைத்தும் வெற்றி.
    [அவை மட்டும்]

    ReplyDelete
  25. கலக்கல் கம்ப்பேரிஷன்.. தொடருங்க..

    ReplyDelete
  26. படிக்க இன்ட்ரெஸ்ட்டா இருக்கேனு உட்கார்ந்திட்டேன்.. (நாங்க மூட் அவுட்ல இருக்கோம் அதான் சரியா கமெண்ட்டிலை)

    ReplyDelete
  27. தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் இரண்டும் சூப்பர்...சங்கமம் குப்பை.

    ReplyDelete
  28. தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் இரண்டும் நல்ல படங்கள், சங்கமம் சுமார்தான்

    ReplyDelete
  29. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    narsim சார்

    PoornimaSaran மேடம்

    தங்ஸ் சார்

    நசரேயன் சார்

    ReplyDelete
  30. திருமணத்திற்குப் பிறகு நானும் தங்க்ஸும் தியேட்டரில் சேர்ந்து பார்த்த ஒரே அரைப் படம் சங்கமம். அப்போதுதான் ரிலீசாகியிருந்தது. தியேட்டரில் மொத்தம் 20-25 பேர்தான் இருப்பார்கள். இடைவேளையில் வெளியே வந்து விட்டோம்.

    தியேட்டர் வாட்ச் மேன், இன்டர்வலுக்கு மேல ரொம்ப நல்லா இருக்கும் சார் என்று சொன்னார். ஆனாலும் வந்துவிட்டோம். (கொசுவத்தி சுத்த வைத்துவிட்டீர்கள்:))

    முழுதாகப் பார்த்தது சன் தொலைக்காட்சியில். அப்படி ஒன்றும் மோசமாகத் தெரியவில்லை.

    மூன்றிலும் இசைக் கலைஞர்களின் காதலைச் சொல்லியிருந்தாலும் களம் வேறானது. என்னைப் பொறுத்தவரை சங்கமம் நல்ல படம்தான்.

    ReplyDelete
  31. ஒருவேளை சங்கம நாயகிக்கு ஆடத்தெரிந்திருந்தால்..........


    கண்டிப்பாக ஓடியிருக்கும் இளையபல்லவன் சார்

    ReplyDelete
  32. திரைப்படத்துறை வாழும்வரை வாழ்ந்துகொண்டிருப்பாள் தில்லானா மோகனாம்பாள்தான்.சிவாஜி கணேசன் அவர்கள் பத்மினி அவர்கள் மனோரமா மற்றும் நாகேஷ் அவர்களின் நடிப்பாற்றலை நினைத்தாலே மனதில் படம் ஓடும்.

    ReplyDelete
  33. வாருங்கள் ஹேமா மேடம்..


    உண்மை அந்தப் படத்தில் துணை நடிகர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்பு இருந்தது. நாகேஷ் அவர்கள் ஏறக்குறைய வில்லனாக நடித்த முதல் படம்

    ReplyDelete
  34. என்னங்க பெரிய தலையெல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க உங்க கடைக்கி,,,

    கலக்குங்க,,,

    பதிவு சூப்பர்.. :-)

    ReplyDelete
  35. சார்! நிறைய விஷயம் இருக்கு.

    இதைப் பற்றி விட்டுப்போன தகவல்கள்:-

    மூன்று தலைமுறை இருக்கிறது.1968 to 1999.

    தி.மோ.இது விகடனில் தொடர்கதையாக வந்தது.எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு.அவர் மனதில் T.N.ராஜரத்தினம் பிள்ளை/கமலா(டான்சர்)
    வைத்து எழுதினார்.அந்நாளில் வாசகர்கள் ஆத்மார்த்தமாக படித்தார்கள்.அந்த கேரக்டர்களுடன் வாழ்ந்தார்கள்.நாகேஷ் காமெடி உச்சம்.இசையும் சூப்பர்.பாலய்யா நாகேஷ் என்கவுண்டர் டாப்கிளாஸ் காமெடி.Man of the match நாகேஷ்.

    கரககாட்டக்காரன்:

    திமோவின் cheap version.இதில் ராஜாவின் கிராமிய இசை உச்சம்.ராஜா ஒரு பாட்டு எழுதி பாடியிருக்கிறார்.மதுரையில் செம்ம ஓட்டம் ஒடியது.
    கவுண்டர் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்.நாதஸ்வர விதவன்களை மட்டமாக காட்டக்கூடாது என்பதாக.
    வழக்கமான அருவருப்பு காமெடி இருக்காது.

    (ராஜாவின் இசையை கட்டுரையில் கண்டுகொள்ளாமல் விட்டது
    பெரிய மைனஸ்)

    திமோவில் இருக்கும் கிளாஸ் காமெடி இதில் கிடையாது. தலைமுறை மாற எல்லாம் மாறுகிறது.

    சங்கமம்:

    சுமார் படம்.படத்தில் கேரகடர்கள் ஒட்டவில்லை.
    ரகுமான் இசையும் சுமார்தான்.

    என்னுடைய சாய்ஸ் தில்லானா மோகனாம்பாள்தான்.

    //கழுத்தில் மாலையுடன் வந்து நிற்கும் கலாசாரத்தை சன்னமாக சாடி இருப்பார்கள்//

    என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவில் ஜாதி,கலாச்சாரம்,கம்யூனிட்டி எல்லாம் சீரியஸாக
    கையாள மாட்டார்கள். படம் போணி ஆகாது.படம் எடுப்பவர்களின் குறி பணம்தான்.மக்களுக்கும் பிடிக்காது.மக்கள் வேண்டுவது பொழுது போக்கு.

    ReplyDelete
  36. சினிமா அலசல் நன்றாக இருக்கு நண்பா

    ReplyDelete
  37. //கடைக்குட்டி said...

    என்னங்க பெரிய தலையெல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க உங்க கடைக்கி,,,

    கலக்குங்க,,,

    பதிவு சூப்பர்.. :-)
    //


    நன்றி நண்பா..,

    ReplyDelete
  38. //கே.ரவிஷங்கர் said...

    சார்! நிறைய விஷயம் இருக்கு.

    இதைப் பற்றி விட்டுப்போன தகவல்கள்:-//


    நன்றி சார்..,

    இது என்னுடைய ஆரம்பகாலப் பதிவு. முதன் முதலாக என்னுடைய வலைப் பூ பக்கம் இருநூறு பேர் ஒரே நாளில் வந்தது. இந்த இடுகைக்குத்தான்.

    அதாவது ஒன்றாம் வகுப்பு மாணவனின் எழுத்துப்போல நிறையப் பேரை ரசிக்க வைத்து ஊக்கம் கொடுக்க வைத்தது இந்தப் பதிவுதான்.

    இம்முறை திரைக்காட்சிகள் சிலவும் படங்களையும் சேர்த்து மீள்பதிவிட்டேன். நீங்களும் வந்து மேலதிக தகவல்கள் கொடுத்து பதிவினை மேலும் மேம்படுத்தியமைக்கு ந்ன்றி.

    ReplyDelete
  39. //ஆ.ஞானசேகரன் said...

    சினிமா அலசல் நன்றாக இருக்கு நண்பா
    //

    நன்றி நண்பரே..,

    ReplyDelete
  40. என்னடா இந்த பதிவை ஏற்கனவே படித்த மாறி இருக்கேன்னு நினைச்சுகிட்டே படிச்சேன்... மீள் பதிவா.... ஆனாலும் நிறைய விஷயங்கள் கூட்டி விட்டீர்கள்.....

    சங்கமத்தில் தொலைந்ததை தவிர, மற்றவை ஏ1 ரகம்.

    ReplyDelete
  41. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளைய கவி அவர்களே..,

    ReplyDelete
  42. //Rafiq Raja said...

    என்னடா இந்த பதிவை ஏற்கனவே படித்த மாறி இருக்கேன்னு நினைச்சுகிட்டே படிச்சேன்... மீள் பதிவா.... ஆனாலும் நிறைய விஷயங்கள் கூட்டி விட்டீர்கள்.....//

    நன்றி தல..,

    ReplyDelete
  43. //Rafiq Raja said...


    சங்கமத்தில் தொலைந்ததை தவிர, மற்றவை ஏ1 ரகம்.//


    சொல்லுங்க தல..,

    அதையும் சேர்த்துவிடுவோம்

    ReplyDelete
  44. சபாஷ் மீனா கூட உள்ளத்தை அள்ளித் தந்ததாமே.
    ;-)

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails