என்ன பிரச்சனை அவனுக்கு। பெரும்பாலான பசங்களுக்கு வருவதுதான்। பவித்ரா அவனை காதலிக்க முடியாது என்று கூறி விட்டிருந்தாள்। அதனால் தண்ணியடித்தே தீருவது என்ற முடிவில் இருந்தான்।
சென்ற மாதமும் இப்படித்தான்। தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டதால் தண்ணியடிக்கஆறு மாதத்திற்கு முன் இப்படித்தான் வகுப்பு மாணவிகள் மைதானத்திற்கு வந்திருந்தனர்। கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது। வேலன் டக் அவுட்। அவமானம் பிடுங்கி கொண்டுவந்தது। தண்ணியடிக்க நினைத்தான்। காசில்லை। அருகில் உள்ள நகரில் சித்தப்பா போலிசாக இருந்தார்। அவரிடம் போய் ஏதாவது காரணம் சொல்லி காசு வாங்கி வரலாம் என்று । வீட்டில் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் சண்டை சித்தப்பா வீட்டில் சிகரெட் பிடித்தாராம்। பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடும் என்று கூறி சண்டை। சிகறெட்டிற்கே இப்படி என்றால் தண்ணியடிக்க ...................... பயந்துபோய் வந்துவிட்டான்।
நினைத்தான்। அவன் வீடு ஞாபகம் வந்தது அவனது வீட்டில் யாருமே தண்ணியடிக்கும் வழக்கம்
கிடையாது। தூரத்து உறவினர் ஒருவர் தண்ணியடிக்கும் வழ்க்கம் உள்ளவர் ஒருநாள்
அப்பாவைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார்। வரும்போது போதை எல்லாம் கிடையாது।
அதற்கே தாத்தா கொதித்து எழுந்து விட்டார்। குடிகார நாயுடன் எல்லாம் என்ன உனக்கு
பழக்கம் என்று அப்பாவை தாளித்து எடுத்து விட்டார்। அதை நினைத்த உடனே வியர்த்து
ஒழுகிவிட்டது। அப்புறம் எங்கே தண்ணியடிப்பது । வாங்கி வைத்த சரக்கெல்லாம்
ரூம்மேட் தான் அடித்தான்।
டி।வி।யில் ஒரு சினிமா விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது। எதோ சாமி திருவிழா॥ சாராயம்
சாமிக்கு பிடித்ததாம் அதனால் அதற்கு கணக்குப் பார்க்க கூடாதாம்। சேய் நம்ம ஊரும்
தான் இருக்கிறதே........................
சைடி டிஷ் எல்லாம் ரெடி செய்து விட்டாயிற்று। செல்ஃபோன் சிணுங்கியது। பார்த்தான் பவித்ராதான்। ஒரு சப்பை ஃபிகர் மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்। எடுக்கலாமா வேண்டாமா ................................ யோசித்துக் கொண்டே இருந்தான்। ரூம் மேட் வரட்டும் । தண்ணியப் போட்டு விட்டு ஃபோனை போட்டு அவ நாக்கப் புடுங்கற மாதிரி கேள்வி கேட்க வேண்டும்। அவ மூஞ்சிய கண்ணாடியில் பார்த்திருப்பாளா.... பொங்கிக் கொண்டு வந்தது।
ரூம்மேட் வேறு இன்னும் காணவில்லை। அதற்குள் பவித்ரா நான்குமுறை ஃபோன்போட்டு
விட்டாள்। சரி பேசித்தொலைப்போம்। ஏற்கனவே யோசித்து வைத்த வசனங்களை ஒரு முறை
ரிகர்சல் பார்த்துக் கொண்டான்। ஃபோனை ஆன் செய்த உடன் காதில் வைத்தான்। பேச
நினைத்தான்। அந்த முனை பேசிக் கொண்டே இருந்தது। ஏதோ சொல்ல ஆரம்பித்தான்।
சிலவார்த்தைகள் பேசபேச மீண்டும் அந்தமுனை பேசிக்கொண்டே இருந்தது। கடைசியில் சோகமாக சரி என்று சொல்லி
முடித்தான்। ரூம்மேட் வந்தான்।
மச்சி......... வேலன் சோகமாக ஆரம்பித்தான்। கவலைய விடுரா இந்த பொம்பளங்களே இப்படித்தான் சிவப்பு ரோஜாக்கள் ஸ்டைலில் சொல்லிக் கொண்டே பரப்பி வைக்க ஆரம்பித்தான்।
இல்லடா। பவி இப்ப பேசிச்சு......................
சரி।
அவளுக்கு ஓ।கே।வாம்।
சரி விடுடா .................. வழக்கம்போல் நானே குடிக்கறேன்। உனக்கு சேத்தி வாங்கி உனக்கும் சேத்து தண்ணியடிக்கறது பழகி போன விஷயம் தானே॥ ரூம் மேட் சொல்லிக் கொண்டே ஊற்ற ஆரம்பித்தான்॥
இல்லடா... இந்த சந்தோஷத்த எல்லாரும் தண்ணியடிச்சு கொண்டாடுவோம்டா என்று சொல்லிக்
கொண்டே வேலணும் தண்ணியடிக்க ஆரம்பித்தான்.
இது ஒரு மீள்பதிவு
வழக்கம்போல் தமிழ்மண மேல்நோக்கிய கட்டைவிரலிலும், தமிழீஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்
ஹி ஹி ஹி
ReplyDeleteஆனால் இது கற்பனைக்கதைதானே
நீங்க படிக்கும் போது விடுதி தொலைபேசிதானே உண்டு
கைபேசி கிடையாதே
//இது கற்பனைக்கதைதானே//
ReplyDeleteஉண்மை
சிகரெட்டின் உதிர்ந்த சாம்பலில் ......
எழுதி வெளியிட்ட பின் வேறு வடிவத்தில் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. பின்னர் சிகரெட்டுக்குப் பதில் தண்ணிய வைத்து எல்லா பாயிண்டையும் சேர்த்துப் பிசைந்து கதை பண்ணிணேன்.
சுரேஷ்!
ReplyDeleteநம்ம ஹாஸ்டல் ரூம
அப்படியே கண்
முன்னாடி
கொண்டாந்திட்டிங்க
புள்ள!
ஊத்துங்க இன்னோரு
ரவுண்டு ஏத்துவொம்
தேவா.
உங்க வலைக்கு வந்துட்டேன் . கதை படிச்சுட்டேன்.
ReplyDeleteநல்லா இருக்கு. கொஞ்சம் பைன் டியூன் பண்ணனும் . (உண்மையான விமர்சனம் தாங்க)
நான் நாயகன் குடிக்க மாட்டான் என்று நினைத்தேன்.ஆனால் anti-climax.இதுதான் “நச்”
என்ன பொருத்த வரைக்கும் cuttingஇல் இருந்து god என்று எதை சொன்னாலும் ஒரு சுவாரசியமாக சொல்லணும் அதான் நம்ம பாலிசி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரினி அம்மா, K.Ravishankar...
ReplyDeleteகலக்கிட்டிங்க புள்ள!
ReplyDeleteஓப்பன் பண்ணினவொடனேயே படிக்கிறதுக்கு முன்னால அந்த அனிமேஷனைப் பார்த்து சிரிச்சிட்டேன்பா...!
ReplyDeleteகதைப் பத்திதான் நமக்கு மேலை நம்மாளுக சொல்லிட்டாங்களே..!
//hevanmayam said...
ReplyDeleteகலக்கிட்டிங்க புள்ள!
//
நன்றி தல
//டக்ளஸ்....... said...
ReplyDeleteஓப்பன் பண்ணினவொடனேயே படிக்கிறதுக்கு முன்னால அந்த அனிமேஷனைப் பார்த்து சிரிச்சிட்டேன்பா...!
கதைப் பத்திதான் நமக்கு மேலை நம்மாளுக சொல்லிட்டாங்களே..!
//
காதல்ல இதெல்லாம் சகஜம் தல
கலக்கிட்டிங்க
ReplyDeleteகதை சூப்பரா இருக்கு.. எனக்கொரு நைண்டி போடுங்கண்ணே!
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
நல்லா இருக்கு கதை.
ReplyDeleteromba nalla iruku sir..
ReplyDeleteநல்ல ட்விஸ்ட்
ReplyDeleteதலைவரே கதை ட்விஸ்ட் அருமை.
ReplyDelete