நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்।
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும்।
மிகவும் ஜாலியாக தேர்வுகளுக்குச் செல்வார்।
அதன் பிறகு ஒருமுறை கே।ஜி। திரையரங்கில் அந்தப் படத்தை பார்க்க நேரிட்டது। அப்போதெல்லாம் தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் பழைய படங்களைப் போடுவார்கள்।அந்த சூழலில் நாங்கள் காலை காட்சிக்கு சென்றிருந்தோம். படத்தின் துவக்கமே அந்தப் பாடலோடுதான் துவங்குகிறது. வெற்றி என்ற வார்த்தைகளோடு விஞ்ஞானி முருகன் தனது கண்டுபிடிப்பினை செயலருக்குச் சொல்கிறார். வழக்கம்போல் இளமையான பெண் செயலர். வில்லனின் கையாள்,
ஒரு சிறிய குப்பியில் சூரிய சக்தியை அடைத்து வைத்து மாபெரும் அழிவு சக்தியாக அந்த கண்டுபிடிப்பு அமைகிறது. அதனை விஞ்ஞானிகளின் மாநாட்டில் நிரூபித்துவிட்டு அந்த கண்டுபிடிப்பு காகிதங்களை எரித்துவிடுகிறார். [உலக சமாதானம்]. ஆக்க சக்திக்கு ஆராய்ச்சியை தொடங்கப் போவதாக கூறிவிட்டு சுற்றுலா செல்கிறார். நீ இல்லாம ஜாலியா என்று கூறிவிட்டு நாயகியுடன் டூயடபோடுகிறார். பாடல் முடிவில் கொடியவகைத் துப்பாக்கியில் சுடப் படுகிறார். வில்லன் குலாம் அவரை கடத்தி செல்கிறது.
ஒரு வித்தியாசமான முன்னோட்டக்காட்சிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. ஒலி குறைவாக இருப்பதாக நினைப்பவர்கள் நீங்களே கூடுதலாக்கிக் கொள்ளலாம்
ஒரு ஓட்டலில் நடக்கும் துப்பாக்கி சாகஸ நிகழ்ச்சியில் குளிர் பாணம் குடித்துக் கொண்டே சுட்டு விஞ்ஞானியின் செயலரை தோற்கடித்து அறிமுகமாகிறார் ரகசிய உளவாளி ராஜூ. ( இரட்டை வேடம் பாஸூ)
விஞ்ஞானியின் காதலியை சந்தித்து ரகசிய காகிதங்களின் நகல் இருக்கும் இடங்களை தெரிந்துகொண்டு காகிதங்களையும் விஞ்ஞானியையும் மீட்க புறப் படுகிறார்.
காதலியை பலாத்காரம் செய்ய முயலும்போது விஞ்ஞானி மெதுவாக பல திரவங்களைப் போட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது தமிழுக்கு கண்டிப்பாக இன்றுவரை புதுசுதான். ஆராய்ச்சியின் முடிவில் வெடிபொருளைத் தயாரித்து காதலியை மீட்பார். கையுறையெல்லாம் அணிந்து கொண்டு ஆராய்ச்சி செய்வார். புத்தர் சிலையைப் பார்த்த உடன் சித்தம் தெளிந்து விட்டதாக கூறுவார்.
புத்த மடத்தில் ரகசிய காகிதங்களின் ஒரு பகுதியை கைப் பற்ற போகும்போது வில்லனின் அடியாள் அங்கு காத்திருக்க, ராஜூ அடியோ அடி என்று அடிவாங்குவார் வெளியே வந்தவுடன் புனிதமான இடத்தில் சண்டை போட விரும்பவில்லை என்று கூறி திரும்ப அடித்து....................... மத நல்லிணக்கத்தை காப்பாற்றுவார்
ஹாங்காங் கடலில் இருக்கும் ஒரு நபரை சந்திக்கும்போது அந்த வீட்டில் இருக்கும் பெண் ராஜூவுடன் டூயட் கனவில் பாடி விடுவார். அடுத்த நாள் அந்தப் பெண்ணை அழைத்து தன் காதலியை இவதான் உண் அண்ணி என்று அறிமுகப் படுத்துவார். அப்போது அந்தப் பெண் பார்ப்பாரே ஒரு பார்வை போயும்போயும் இவளையா பார்வையிலேயே சொல்லிவிடுவார்.
ஒரு பாடலை முழுக்க முழுக்க நீருக்கடியில் எடுத்திருப்பார்கள். சில க்ளோசப் காட்சிகளைப் பயன்படுத்தி டூப் பயன்படுத்தி இருப்பார்களாஇல்லை உண்மையில் நம்ம ஆளுங்கதானா என்ற சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் நீருக்கடியில் நடணத்தை அமைத்திருப்பார்கள்.
மற்றொரு பாடலில் காலுக்கு அடியில் விமாணம் பறக்கும். நாயகிகள் கவர்ச்சியில் ஜொலிப்பார்கள்.
கட்டைவிரலை மட்டுமே பயன்படுத்தி சண்டை போடுவதாகக்கூட அமைத்திருப்பார்கள்.
பெரிய பெரிய நாய்களுடன் வில்லன் வந்து வம்புக்கு இளுக்கும் போது நாயோட திறமைய அப்புறம் பாரு என்னோட திறமைய இப்ப பாரு என்று ஒரே ஜம்ப்பில் வெளியே வந்து .................................. என்ன சொல்ல
தொழில்நுட்ப பூங்காவில் ஒரு சுற்று சுற்றி.............. கடைசியில் பாட்டெல்லாம் பாடி கண்டு பிடிக்க ஸ்கேட்டிங் எல்லாம் செய்து சண்டை போட்டு கடைசியில் சுபம்.
இருப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தபோது கூட எங்களுக்கு இனித்த கமர்சியல் பாயசம். இந்த தீபாவளிக்கு ரீ ரிலீஸ் ஆகி ஒரு கலக்கி விட்டது . இரண்டுபேர் இந்த படத்தை தமிழில் ரீ மேக்கிக் கொண்டு இருக்குறார்களாம்.
இது ஒரு மீள்பதிவு
-------------------------
இந்தப் படத்தின் முடிவில் எமது அடுத்த வெளியீடு
கிழக்காப்பிரிக்க தீவில் ராஜூஎன்ற விளம்பரப் பலகை இடம் பெறும். விஜயக் காந்த் கூட இதே பெயரில்தான் அடுத்த படம் எடுக்க இருக்கிறாராம்.
===================================================
தீபாவளியன்று உலகத்தொலைக்காட்சி வ்ரலாற்றில் முத்ன்முறையாக ராஜ் டி.வி.யில் இந்தப் படம் ஒளி பரப்பப் படுகிறதாம். பார்த்து ரசியுங்களேன்
=============================================================
இப்போது இது மீள்பதிவு , தீபாவளியன்று படம் பார்த்துவிட்டீர்களா?
==================================================
வருகைக்கு நன்றி, அப்படியே தமிழ்மணம், தமிழீஷ் ஆகியவற்றில் ஓட்டுப் போட்டுவிடுங்கள்.
//பாட்டு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்। அந்தப் பாட்டு//
ReplyDeleteஎங்கள் கல்லூரி விடுதியிலும் தேர்வன்று காலை இது போல் பல பாடல்கள் உண்டு
நினைவில் நிற்பவை - சிங்கம் ஒன்று புறப்பட்டதே.
வித்தியாச கோணத்தில் ஒரு பதிவு.
ReplyDeleteஉத்தம ராசா படத்தில் ஒரு ஜோசியர் செந்திலை நரி மாதிரி என்று சொல்லி கவுண்டமணியிடம் இவனைப் பார்த்தால் வெற்றி என்பார். அதற்கேற்ப செந்திலும் நரி மாதிரி ஊளையிடுவார். உடனே கவுண்டமணி கடன் வசூலிக்க செல்வார்.
எங்க செட்டில் தேர்வு எழுதும் நாளன்று, நரி என்று சொல்லி காலை ஒருவனைப் பார்த்துவிட்டு வருவோம் அவனும் போர்வை பொத்திக்கொண்டு அதே எபெக்ட் கொடுப்பான்.
:-)) வித்தியாசமா இருக்கு அதேசமயம் சுவாரசியமாவும்!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபுருனோ,
தமிழ் பிரியன்,
முரளிகண்ணன்,
சந்தனமுல்லை
அவர்களே.............
மருத்துவர் ஐயா தொழிலை மாற்றுங்கள்
ReplyDelete//நசரேயன் said...
ReplyDeleteமருத்துவர் ஐயா தொழிலை மாற்றுங்கள்
//
கனவுகளின் உலகத்திலும் நாம் சஞ்சரிக்க வேண்டியுள்ளதே தல..,
தல போல் வர்மா......
ReplyDeleteதல இந்த ஒவ்வொரு வரிக்கும் தனிதனி வண்ணம் கொடுப்பது எப்படி?
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteதல போல் வர்மா......
தல இந்த ஒவ்வொரு வரிக்கும் தனிதனி வண்ணம் கொடுப்பது எப்படி?
//
வாங்க நண்பரே..,
புதிய இடுகை எழுதும்போது மேல்பகுதியில் T போட்டு அருகில் பல வண்ணங்கள் இருக்கும். நீங்கள் வர்ணம் பூச் வேண்டிய பகுதியைத் தேர்வுசெய்துவிட்டு அதிலிருந்து ஒரு வண்ணத்தை எடுத்து பூசிவிட வேண்டியதுதான்
வித்தியாசமான பதிவுதான் ... நல்லாருக்கு
ReplyDelete//வழக்கம்போல் இளமையான பெண் செயலர்.//
அது ஏன் சார் எல்லாரோட செக்ரட்டரியும் ரொம்ப இளமையாவே இருக்காங்க...
ரசித்தேன் நண்பா...
ReplyDelete@ஜீவன்
ReplyDelete@நாஞ்சில் பிரதாப்
@T.V.Radhakrishnan
@மாதவராஜ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
நாஞ்சில் பிரதாப் said..
ReplyDelete//அது ஏன் சார் எல்லாரோட செக்ரட்டரியும் ரொம்ப இளமையாவே இருக்காங்க...//
அது ஊதியம் கொடுப்பவரின் தன்மை, தகுதி, ரசனை ஆகியவற்றைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்
In our hostel, songs would be played after returning from exams. e.g. Ponaal pogattum poda.... :)
ReplyDelete// Anonymous said...
ReplyDeleteIn our hostel, songs would be played after returning from exams. e.g. Ponaal pogattum poda.... :)//
நன்றி அனானி அண்ணாச்சி
பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete// பகிர்வுக்கு நன்றி said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.//
உங்கள் அன்பு என்னைப் பரவசப் படுத்துகிறது..,
///முரளிகண்ணன் said...
ReplyDeleteவித்தியாச கோணத்தில் ஒரு பதிவு.
உத்தம ராசா படத்தில் ஒரு ஜோசியர் செந்திலை நரி மாதிரி என்று சொல்லி கவுண்டமணியிடம் இவனைப் பார்த்தால் வெற்றி என்பார். அதற்கேற்ப செந்திலும் நரி மாதிரி ஊளையிடுவார். உடனே கவுண்டமணி கடன் வசூலிக்க செல்வார்.
எங்க செட்டில் தேர்வு எழுதும் நாளன்று, நரி என்று சொல்லி காலை ஒருவனைப் பார்த்துவிட்டு வருவோம் அவனும் போர்வை பொத்திக்கொண்டு அதே எபெக்ட் கொடுப்பான்.
:))))
தலைப்பு வைப்பதில் கில்லாடியா இருப்பீங்க போல இருக்குதே:)
ReplyDeleteசுவரசியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
ReplyDelete//கிருஷ்குமார் said... //
ReplyDeleteநன்றி தல..,
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteதலைப்பு வைப்பதில் கில்லாடியா இருப்பீங்க போல இருக்குதே:)
//
ஹி.., ஹி..,
//Madurai Saravanan said...
ReplyDeleteசுவரசியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
//
நன்றி தல...,