காதலி தேவை
மூன்றாம் ஆண்டு படிக்கும் சொந்தமாக டூவீலர் வைத்திருக்கும் மாணவனுக்கு காதலி தேவை.
தகுதிகள்================================================================
1.அழகான கையெழுத்தில் ரெகார்டு நோட் எழுதும் திறமை அவசியம்.
2.வகுப்பில் நடத்தும் பாடங்களை சொல்லித் தரும் திறமை அவசியம். அது இரண்டாம் ஆண்டு பாடமாய் இருந்தாலும் இருட்டில் சொல்லித் தந்தால் உத்தமம்.
3.காலையில் எழுந்ததும் மாணவர் விடுதிக்கு ஃபோன் செய்து எழுப்பி விடுதல் வேண்டும். மாலையில் அனைவரும் ஃபோனுக்காக காத்திருக்கும் போது தொடந்து ஃபோனில் பேசி எல்லரையும் காய விடுதல் அவசியம்.
4.டூ வீலரில் வருதல் அவசியம்.
5.கல்லூரி முன்னால் இருக்கும் பிள்ளையாரிடம் இருந்து தினமும் பிரசாதம் வாங்கித்தரவேண்டும்.
6.அவ்வப்போது கடன் தருவதற்கு திறமையான ஆளாய் இருத்தல் நலம். குறைந்தபட்சம் சங்கிலியை அடகு வைக்க கலட்டிக் கொடுப்பது வரவேற்கத்தக்கது.
7.நண்பர்களிடம் ஏன் இவரை கெடுக்கறீங்க என்று கேட்டு தாக்க வேண்டும்.
8.அனிமியா, அனோரெக்சியா நெர்வோசா போன்ற வியாதிகள் இருக்கும் பெண்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப் படும்.
------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு
--------------------------------------------------------------------------------------
அனிமியா என்பது ரத்தச் சோகை நோயாகும். மிகவும் வெளுத்துக் காணப்படுவார்கள். பொன்னியின் செல்வன் வானதிபோல் அடிக்கடி மயங்கி விழுவார்கள்.அனோரெக்சியா நெர்வோசா என்பது உடல் எடையை குறைக்கும் எண்ணத்திலேயே இருக்கும் ஒருவகை மன நோய்.(இருப்பத்தைந்து கிலோ இருந்தாலும்..
http://kanavukale.blogspot.com/2008/12/blog-post_4103.html இந்த அடையாளம் சொல்லும் இந்தப் பதிவின் வயதை.., அவ்வளவு பழைய இடுகை. மீண்டும் மீள்பதிவு
எனக்கு தோனாம போச்சே.
ReplyDeleteவாருங்கள் குடுகுடுப்பை ஐயா, தங்கள் ஆதரவுக்கு நன்றி
ReplyDeleteஅதிலும் ஒருபின் குறிப்பு உண்டு.
ReplyDeleteஇது முற்றிலும் தற்காலிகமானது.
//7.நண்பர்களிடம் ஏன் இவரை கெடுக்கறீங்க என்று கேட்டு தாக்க வேண்டும்.//
ReplyDeleteகலக்கல் ... ரியலிஸ்டிக்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புருனோ சார்,
ReplyDeleteசதங்கா சார்.
//இவரை //
ReplyDeleteர் உபயோகப் படுத்தப் படுகிறது
//8.அனிமியா, அனோரெக்சியா நெர்வோசா போன்ற வியாதிகள் இருக்கும் பெண்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப் படும்.//
ReplyDeleteஇது ஏன்??
ஹா ஹா அட்டகாசம் சார்.. எல்லாம் சொந்த அனுவபம் போல இருக்கே...
ReplyDeleteவாங்க சந்தன முல்லை மேடம்,
ReplyDeleteபிளாகர் சந்தனமுல்லை கூறியது...
//8.அனிமியா, அனோரெக்சியா நெர்வோசா போன்ற வியாதிகள் இருக்கும் பெண்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப் படும்.//
இது ஏன்??
//////////////////////////////////
அவர்கள்தானே வெள்ளையாய் ஸ்லிமாய் இருப்பார்கள் நாங்கள் படிக்கும்போது அதுதான் அழகு....
பிளாகர் ராம்சுரேஷ் கூறியது...
ReplyDeleteஹா ஹா அட்டகாசம் சார்.. எல்லாம் சொந்த அனுவபம் போல இருக்கே...
/////////////////////////////
வாங்க சார்.
நான் படிக்கும் காலத்தில் நடந்ததுதான்
ஹா.. ஹா...
ReplyDeleteகாலேஜ்ல படிச்சதவிட இது மாதிரி செஞ்சதுதான் அதிகம் போலிருக்கு...
// இராகவன், நைஜிரியா கூறியது...
ReplyDeleteஹா.. ஹா...
காலேஜ்ல படிச்சதவிட இது மாதிரி செஞ்சதுதான் அதிகம் போலிருக்கு...//
வாங்க ராகவன் சார். கல்லூரி நாட்களின் நினைவுகளைத் தொகுத்து சுட்டியாக கொடுத்துள்ளேன் நேரமிருந்தால் படித்து மகிழுங்கள்.
பெரும்பாலும் நினைத்தாலே இனிக்கும்
good
ReplyDeleteவாங்க Dr.Rudhran சார்.
ReplyDeleteஆதரவிற்கு மிகவும் நன்றி சார்.
//வெள்ளையாய் வத்தலாய் ஒரு பொண்ணு //
ReplyDeleteஅப்போ கமலா காமேஷ் மாதிரி ஒரு பொண்ணுன்னு சொல்லுங்க ...அவங்க தான் பெரும்பாலான படங்கள்ல வெள்ளையாய் வத்தலா வந்துகிட்டு இருந்தாங்க முன்னாடியெல்லாம்?!!!
// மிஸஸ்.டவுட் கூறியது...
ReplyDelete//வெள்ளையாய் வத்தலாய் ஒரு பொண்ணு //
அப்போ கமலா காமேஷ் மாதிரி ஒரு பொண்ணுன்னு சொல்லுங்க ...அவங்க தான் பெரும்பாலான படங்கள்ல வெள்ளையாய் வத்தலா வந்துகிட்டு இருந்தாங்க முன்னாடியெல்லாம்?!!!////
அவங்கதான் கல்லூரி மாணவிகளின் முன் மாதிரியா மேடம்.
வருகைகும் ஆதரவுக்கும் நன்றி
ReplyDeleteகடையம் ஆனந்த் சார்
நல்ல உபயோகமான தகவல் கொடுத்து இருக்கீங்க, ஆனா உபயோக படுத்த முடியாத நிலை
ReplyDelete//நசரேயன் சொன்னது…
ReplyDeleteநல்ல உபயோகமான தகவல் கொடுத்து இருக்கீங்க, ஆனா உபயோக படுத்த முடியாத நிலை!
//
ஆறுதல்களச் சொல்லிகிறேன்!
ஓ, நீங்க பழனிக்காரவுகளா? பழனியேவா, இல்ல, பக்கத்துல கோரிபட்டி, நரிக்கல்பட்டின்னு??
ReplyDeleteவருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
ReplyDeleteநசரேயன் சார்
பழமைபேசி சார்
/// நசரேயன் கூறியது...
ReplyDeleteநல்ல உபயோகமான தகவல் கொடுத்து இருக்கீங்க, ஆனா உபயோக படுத்த முடியாத நிலை///
இதெல்லாம் நாங்க படிக்கும்போதுதான் நடந்தது.
வெறும் பெருமூச்சுதான் விடமுடிந்தது
//பழமைபேசி கூறியது...
ReplyDeleteஓ, நீங்க பழனிக்காரவுகளா? பழனியேவா, இல்ல, பக்கத்துல கோரிபட்டி, நரிக்கல்பட்டின்னு?//
பெரிய கலையம்புத்தூர்.
ஊர் சுற்றுவதும் என் வேலையின் ஒரு பகுதி
//
ReplyDeleteபெரிய கலையம்புத்தூர்.
//
ஓ, தாராபுரம் பாதைக்கு பதிலா உடுமலைப் பாதைன்னு சொல்லுங்க....
விசயகுமார் ஆலைக்காரங்க நீங்க அப்ப?!
//விசயகுமார் ஆலைக்காரங்க நீங்க அப்ப?!//
ReplyDeleteஅவுக சின்ன் க.பு.
நாங்க பெரிய க.பு.
NEENGA ELLAM THIRUNTHAVE MATTENGALA...ORU KAMBERAMANA ANUKKU ALZAGU...PENGAL THANAKAVE VANTHU LOVE PANNANUM....SOME INTELLIGENT GUYS HAS GOT LOTS OF TECHNIQUES TO IMPRESS GIRLS...VERY SIMPLE IDEAS...NEED TO PRACTICE WELL...THATS ALL...BUT I WISH TO REINSTATE THE POINT THAT, IT WILL WORK OUT FOR TRUE LOVE ONLY, BECAUSE OUR MODERN GIRLS ARE VERY SMART, AND THEY EASILY JUDGE GUYS APPROCHES AND OTHER EXTRA CURRICULAR ACTIVITIES...SO THE BEST WAY IS...BE VERY SINCERE IN YOUR ATTEMPET...EVERY THING IS POSSIBLE.
ReplyDeleteநன்றீ பெயரில்லா அவர்களே,
ReplyDeleteதங்கள் மணிமணியான கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
இது சென்ற நூற்றாண்டில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவம். நினைவு கூர்ந்தேன் அவ்வளவுதான்.
தங்கள் பெயருடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது என்பது நமது கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும். நமது எண்ணங்களை சிந்தனைகளை செப்பனிட உதவும். மீண்டும் மீண்டும் வாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள். நம்மை நாமே பக்குவப் படுத்திக் கொள்வோம். உங்களுடைய கருத்துதான் என நாங்கள் தெரிந்து கொள்ள உங்கள் பெயரையும் உபயோகப் படுத்த முயற்சி செய்யுங்கள்
சூப்பர்ங்கண்ணா!
ReplyDeleteவாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
Sharepoint the Great கூறியது...
ReplyDeleteசூப்பர்ங்கண்ணா!
வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கண்ணா...........
ஐயோ கடவுளே இப்பிடியெல்லாம் நடக்குதா உலகத்தில!
ReplyDeleteசுரேஷ் உங்களுக்குத்தானே வெள்ளையா வத்தலா ஒரு பொண்ணு தேடுறீங்க?
ஹேமா கூறியது...
ReplyDeleteஐயோ கடவுளே இப்பிடியெல்லாம் நடக்குதா உலகத்தில!
சுரேஷ் உங்களுக்குத்தானே வெள்ளையா வத்தலா ஒரு பொண்ணு தேடுறீங்க?////////////////////
வாங்க மேடம்.
இது சென்ற நூற்றாண்டில் நடந்தது. நானும் ஒரு பார்வையாளன்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆறாவது பாயிண்டை படிச்சால்தான் கடுப்பாகுது:):):)
ReplyDelete:-))
ReplyDeleteவாங்க ராப் மேடம்.
ReplyDeleteகல்லூரியில் அது..................
வாங்க அமுதா மேடம்
ReplyDelete//
ReplyDeleteகல்லூரி முன்னால் இருக்கும் பிள்ளையாரிடம் இருந்து தினமும் பிரசாதம் வாங்கித்தரவேண்டும்.
//
உண்டகட்டி குடும்பமோ?
////
ReplyDeleteகல்லூரி முன்னால் இருக்கும் பிள்ளையாரிடம் இருந்து தினமும் பிரசாதம் வாங்கித்தரவேண்டும்.
//
உண்டகட்டி குடும்பமோ?//
பக்தி சார்... பக்தி
அவர்கள்தானே வெள்ளையாய் ஸ்லிமாய் இருப்பார்கள் நாங்கள் படிக்கும்போது அதுதான் அழகு....
ReplyDeleteநீங்க படிக்கும்போதா
அப்ப இப்ப இல்லியா
நாந்தான் தெரியாம உள்ளார வந்துட்டனா.
ஹைய்யோ ஹைய்யோ.
அவ்வப்போது கடன் தருவதற்கு திறமையான ஆளாய் இருத்தல் நலம். குறைந்தபட்சம் சங்கிலியை அடகு வைக்க கலட்டிக் கொடுப்பது வரவேற்கத்தக்கது.
ReplyDeleteஹைலைட் இதுதான்.
அமிர்தவர்ஷினி அம்மா வின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete_/\_
ReplyDelete/அவ்வப்போது கடன் தருவதற்கு திறமையான ஆளாய் இருத்தல் நலம். குறைந்தபட்சம் சங்கிலியை அடகு வைக்க கலட்டிக் கொடுப்பது வரவேற்கத்தக்கது.//
ReplyDeleteவரவேற்கத்தக்கது இது போல் காதலி கிடைத்தால் மனுக்கள் வரவேற்க்கப்படுகிறது...
ஹா ஹா அட்டகாசம் :-))))
ReplyDeleteமீள் பதிவு ஓ.கே... :-)
ReplyDeleteநான் இப்போதான் படிக்கிறேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபழமைபேசி
சூரியன்
இயற்கை
கடைக்குட்டி அவர்களே
அட்டகாசம். :))))))
ReplyDeleteஒன்றை விட்டுட்டீங்களே.. missed call கொடுத்தா திரும்ப கூப்பிட்டு பேசனும்.. :)
ReplyDelete//சுல்தான் said...
ReplyDeleteஅட்டகாசம். :))))))
//
நன்றி தல..,
//அனாமிகா said...
ReplyDeleteஒன்றை விட்டுட்டீங்களே.. missed call கொடுத்தா திரும்ப கூப்பிட்டு பேசனும்.. :)
//
தலைமுறை இடைவெளி தல, சேர்த்துவிடலாம்..,