பதிவுலகிலும், மருத்துவத்துறையிலும் பல புத்தகங்களையும், பதிவுகளையும் செய்துள்ள மரு.புருனோ அவர்களின் எழுத்துக்கள் இப்போது வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் வர ஆரம்பித்திருக்கின்றன. அவருக்கும் அவரது எழுத்துக்களை பிரசுரித்திருக்கும் ஆனந்த விகடனுக்கும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொண்டு 13.12.2008ல் எழுதப் பட்ட இடுகைக்குச் செல்வோம்.
=================================================
தமிழ் மண நட்சத்திர பதிவர் இளைய பல்லவன் அவர்களுக்கு நன்றியைக் கூறிக்கொண்டு துவங்கலாம். அவரது சக்கரவியூகத்தை விடாமல் படித்துவரும் தீவிர ரசிகர்களீல் நாணும் ஒருவன்.எல்லோரையும் போலத்தான் சிறுவர் மலரில்தான் தொடங்கியது எனது வாசிப்பனுபவம். ஓரே வித்தியாசம். நாங்கள் சிறுவர் வண்ண மலரில் இருந்தே ஆரம்பித்து விட்டோம்.
ரசித்து படிக்க ஆரம்பித்தது என எடுத்துக் கொண்டால் அது கடல் புறாதான். குமுதத்தில் வந்து கொண்டு இருந்தது. (கண்டிப்பாக முதல் முறை வந்தபோது அல்ல.) பிட் பிட் டாக படிப்போம். லதா படம் வேறு இருக்கும். ஏறக்குறைய பிட் பார்ப்பது போல்தான். நிரஞ்சனாவும் மஞ்சளழகியும்............ ம்....... அப்புறம் சரித்திர கதைகள் படித்தோம். பெரும்பாலும் சாண்டில்யன் கோவி இப்படித்தான் போனது. நாடோடி மன்னன் படம் வேறு பார்த்துவிட்டதால் சரித்திர கதைக ள் மீது ஒரு வெறியே உண்டாகி விட்டது.
இதெல்லாம் நாம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடந்து கொண்டிருந்தது. அதுவரையில் நமக்கு தமிழ் பாடம் நினைத்தாலே கசக்கும். அதில் நான் வாங்கும் மதிப்பென்கள் என்னை ஒரு முன்னிலை மாணவனாக வரவிடாமலேயே செய்வதால் கூடுதல் எரிச்சல் வேறு....
பத்தில் திரு ஆறுமுகம் அவர்கள் தமிழாசிரியராக வந்தார். முதல் கேள்வி யாருக்கு தமிழ் கஷ்டம்? கையை தூக்கு விட்டேன். அவர் பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அந்த வகுப்பில் மரபு கவிதை கூட எழுதுவோம் என்று சொல்லி சுற்றிக் கொண்டிருந்தோம். இங்குதான் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு காலாண்டு விடுமுறையில் அதைப் படித்தோம்.
பொன்னியின் செல்வன் கதையில் பொ.செ.வின் அறிமுகம் படு பிரமாண்டாமாய் ஆனால் பாதிக் கதைக்கு மேல்தான் அமையும். ஆனால் அவர் வந்தபிறகு ஒவ்வொரு காட்சியும் படு பிரமாண்டமாய் இருக்கும். அந்தக் காட்சிகளுக்கு பயந்துதான் திரைப் படம் எடுக்கும் முயற்சியை பெறீஈஈஈய பெறீஈஈஈய தலைகளெல்லாம் ஓடியிருப்பார்கள்.
அந்தப் புத்தகம் படித்தபிறகு எந்த கதை படித்தாலும் அதில் இருந்து எடுத்தது போலவே இருக்கும். தேவியின் குடும்ப கதைகள் படிக்கும்போது கூட அந்த உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை.
பத்து முடித்து பதிணொண்ணு வந்த பிறகு தொழிற்கல்வி படிக்க வேண்டும் தமிழில் பாஸ் செய்தால் போதும் என்று சொல்லி விட்டு அப்படி படி இப்படி படி என்று சொல்லி தீக்கதிர், தந்தி மணி மலரோடு நின்றது படிக்கும் வழக்கம்.
கல்லூரியில் சூப்பர். 150 ஏக்கரில் ஒரு கல்லூரி, விடுதி, விளையாட்டு மைதானம், மொத்தமாக ஒரு சுற்று சுவர். அதில் நூலகம் உண்டு துறை நூலகள் மட்டும். விடுதியில் வரும் ஹிண்டு மணி என சுருங்கியது வட்டம்.
அந்த கால கட்டத்தில் பல சுவர் பத்திரிக்கைகள் கல்லூரிக்குள் வலம் வரத் தொடங்கின. அதெல்லாம் படிக்கத் தொடங்கினோம். நம்பினால் நம்புங்கள். முதன்முதலில் மோனிகா லெவின்ஸ்கி மேட்டர் எனக்கு சுவர் பத்திரிக்கை கார்ட்டூன் மூலமாக தெரிந்தது.
பாடப்புத்தகங்கள் படித்தல் என்பதே ஒரு போராட்டம் என்ற சூழலிலேயே போன நூற்றாண்டும் கழிந்தது சில நாட்களில் கல்லூரியும், பிறகு பயிற்சியும். பட்டம் பெற்றபின் நேரே பிறந்த ஊருக்கே பயணம். திரும்பவும் படிக்க வேண்டுமாம். கசப்பு கசப்பாய் இருந்தபோது நான் பார்த்த புத்தகங்கள் மரு.புருனோ அவர்களுடையது. அவரது புத்தகங்கள் எனது நிலைப் பாட்டையே மாற்றியமைத்தது. துறை சார்ந்த நூற்களை அவரது புத்தகங்களின் உதவியுடன் படித்தபோது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.
அவரது வழிகாட்டலே இணையப் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்ததும் எழுத ஆரம்பித்தது. இப்போது இணையத்தில் எல்லாவற்றையும் படிக்க வாய்ப்பு கிடைப்பதால் பதிண்ம வயதில் படித்த உணர்வுடனேயே மீண்டும் படிக்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை இளைய பல்லவன் அவர்களுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சதீசு குமார் அவர்களை
அழைக்கிறேன்.
//அவரது மாற வர்மனை விடாமல் படித்துவரும் தீவிர ரசிகர்களீல் நாணும் ஒருவன்.//
ReplyDeleteஇளைய பல்லவன் எழுதறது ‘சக்கரவியூகம்'. இதுலேர்ந்து தெரியுது, அவரோட பதிவ படிக்கறதே இல்லேன்னு.. இதுல ரசிகர் வேரையாம்.. ஏன்பா இந்த பொய்யி.. :))
'மாற வர்மன்' நர்சிம் எழுதுறாரு.. :)))
வாருங்கள் சதீசு குமார்
ReplyDelete//இளைய பல்லவன் எழுதறது ‘சக்கரவியூகம்'.//
விழித்துக் கொண்டே கனவு கண்டதால்...........
ஹி............
ஹி...............
சரிசெய்து விட்டேன்.
தீவிரமாக படித்துக் கொண்டு இருந்ததால் ஸ்லிப் ஆஃப் தி ஹேண்ட்.
உங்களையும் தொடர அழைத்திருக்கிறார். நானும் அழைத்து விட்டேன்.
வாருங்கள்
வாறுங்கள்
//நான் பார்த்த புத்தகங்கள் மரு.புருனோ அவர்களுடையது. அவரது புத்தகங்கள் எனது நிலைப் பாட்டையே மாற்றியமைத்தது. துறை சார்ந்த நூற்களை அவரது புத்தகங்களின் உதவியுடன் படித்தபோது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.//
ReplyDelete:) :) :)
வருகைக்கு நன்றீ புருனோ Bruno சார்.
ReplyDeleteகுறிப்பிட்டுள்ளது தங்களைப் பற்றித்தான்
ஆஹா, டெரரா தலைப்பு வச்சிருக்கீங்களே..ஆடிப் போயிட்டேன்.:))
ReplyDeleteஎப்படியோ என் பெயர் வாசகர் பரிந்துரை பகுதியில வந்திருக்கே. அதுவரைக்கும் சந்தோஷம்.
இருங்க படிச்சிட்டு வரேன்.
சிம்பிளா முடிச்சிட்டீங்க.
ReplyDeleteவிரிவா இதன் தொடர் பதிவு போடுங்க.:))
வாங்க இளைய பல்லவன் சார்.
ReplyDeleteதங்களின் அழைப்புக்கும் வருகைக்குக் கருத்துக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி
என்ன சார் கவ்ர்ச்சிப்படம் இதனால் தான் பக்கம் திறக்க நேரமெடுக்கிறதோ?
ReplyDelete//என்ன சார் கவ்ர்ச்சிப்படம் இதனால் தான் பக்கம் திறக்க நேரமெடுக்கிறதோ?//
ReplyDeleteவாங்க சார்.. ஆடிட் போயிட்டீங்களா..
ரொம்ப நாளா ஆளக் காணோமே..
க.ப. நீக்கி விட்டேன்
சரியாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteசூப்பர் அனுபவங்கள்:):):) மருத்துவர் புருனோ அவர்களைப் பற்றிய தங்களின் தகவல்கள் எனக்கு புதிது. நன்றி:):):) நீங்கள் சரித்திர நாவல்கள் குறித்து கூறியிருப்பது அருமை:):):) நான் படிச்சதில்லை. ஆனால் படித்த அனைவருமே உங்களைப் போலத்தான் பொன்னியின் செல்வனைப் பற்றிக் கூறுகிறார்கள். அதனை படமாக்கினால் யாருடைய எதிர்பார்ப்பையும், பாத்திரப் படைப்பு என்கிற அளவில் கூட திருப்தி படுத்த முடியாது என்று கூறுவார்கள்:):):) கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மோனிகா லெவின்ஸ்கி விஷயம் உங்களுக்கு முன்னயே தெரியும்னு பீத்திக்கிரீங்களா:):):)
ReplyDeleteசார் உங்கள் மாவட்டத்திலிருந்து ஒரு மருத்துவர் எங்கள் ஆ.சு.நி. க்கு புது வருகை.மரு.உமாமஹேஸ்வரி/நரிகால்பட்டி/இன்று தான் பணியேற்றார்.
ReplyDeletehttp://rprajanayahem.blogspot.com/2008_10_01_archive.html
ReplyDeleteபாலகுமாரன் பற்றி பாக்கியராஜ் சொன்னது இங்கே
//மோனிகா லெவின்ஸ்கி விஷயம் உங்களுக்கு முன்னயே தெரியும்னு பீத்திக்கிரீங்களா:):):)//
ReplyDeleteஇல்லை மேடம். சுவர் பத்திரிக்கையில் வரும்வரை எனக்குத்தெரியாது என்று கூற வந்தேன்.
மாவட்டத்திலிருந்து ஒரு மருத்துவர்//
ReplyDeleteவாழ்த்துக்கள். நானும் அவரும் ஒரே நாளில் ஒரே இடத்தில் துறையில் நுழைந்தவர்கள்
உற்சாகப் படுத்தியதற்கு நன்றி ராப் மேடம்.
ReplyDeleteபடித்து விடுகிறேன் சே.வே.சு. சார்.