Wednesday, December 3, 2008

தற்கொலையின் விளிம்பில்...........................

தற்கொலை செய்து கொள்பவர்கள் எழுதிய கடிதத்தை படித்தோ நண்பர்கள் சொல்லும் காரணங்களையோ கேட்டால் அனைவருக்கும் பரிதாபத்துடன் ஒரு சிரிப்பு தோன்றும்। இந்தப் பிரச்சனைகள் நமக்கும்தானே இருக்கின்றன। அப்புறம் ஏன் இவர்கள் மட்டும் தற்கொலை முடிவை தேடிகிறார்கள்। மனவலிமை இல்லாதவர்கள்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றால் அதனையும் யாரும் ஏற்க மாட்டார்கள்। அதற்குத்தான் அதிகமான மனவலிமை அதிகம் தேவை என்றும் சொல்லிக் கொள்வார்கள்। புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அதிகமாய் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் பெண்களாகவும், அதில் வெற்றி பெருபவர்கள் ஆண்களாகவும் அமைகிறார்கள்।



முதற்காரணம் குறிப்பிட்ட சம்பவத்திக் காரணமான நிகழ்ச்சி நடைபெற்ற பின் மற்றவர்களை எதிர்கொள்வதை அவர்கள் தவிர்க்கப் பார்க்கிறார்கள்। உடனடியாக அந்த முடிவை எடுக்கிறார்கள்। பெரும்பாலும் இந்த எண்ணம் உடனடியாகவே ஏற்படுகிறது। இந்த எண்ணம் பெரும்பாலும் வெகு காலத்திற்கு முன்னரே ஏற்பட்டு குறிப்பிட்ட சம்பவம் தூண்டுகோளாக அமைகிறது।



இன்னொரு வகையினர் உடனிருப்பவர்களை பயமுறுத்துவதற்காக செய்வது இதில் அவர்கள் வெற்றியடைகிறார்கள்। அதாவது தோல்வியடைந்தால் அதில் வெற்றியாகவும் வெற்றியடைந்தால் அது தோல்வியாகவும் அமைகிறது। இதில் ஒரு வகையினர் ஒன்றுமே செய்யாமல் செய்து விட்டதாக சொல்லி ரகளை பண்ணுவார்கள்। இவர்களுக்கு கிராமத்தில் கொடுக்கும் மருந்து சிறப்பாக அமையும்



(...............................................................................................................) இன்னொருமுறையில் தளபதி ரஜினியை அடிப்பது போல் முழங்காலில் நிற்க வைத்து கைகளை பின்னால் கட்டி வைத்து வாந்தி எடுக்க வைத்தால் இரண்டாம் முறை முயற்சிக்கும் எண்ணமே தோன்றாமல் போய்விடும்



இன்னொரு வகை। நோய்வாய் பட்ட நிலையிலும் மற்றவர்களால் கைவிடப் பட்டநிலையிலும் எடுக்கப் படும் முடிவு। இதற்கு என்ன தீர்வு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்।


சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வந்தது, மூன்றாம் முறையாக பெண்குழந்தை பிறந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்। இவர் எந்த உணர்வில் தற்கொலை செய்திருப்பார் என்று ஏதாவது தெரிகிறதா............................


இதி விடுபட்ட கருத்துக்களை பின்னூட்டமாகக்கொடுங்களேன்

3 comments:

  1. //விடுபட்ட கருத்துக்களை பின்னூட்டமாகக்கொடுங்களேன்//


    தற்கொலை பற்றி எனது கருத்து கதையாக இங்கே:
    http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post.html

    ReplyDelete
  2. //அதாவது தோல்வியடைந்தால் அதில் வெற்றியாகவும் வெற்றியடைந்தால் அது தோல்வியாகவும் அமைகிறது।//

    முரண் !!

    // இதில் ஒரு வகையினர் ஒன்றுமே செய்யாமல் செய்து விட்டதாக சொல்லி ரகளை பண்ணுவார்கள்। இவர்களுக்கு கிராமத்தில் கொடுக்கும் மருந்து சிறப்பாக அமையும்//

    நம்ம வைத்தியமும் கூட சிறப்பாகத்தான் இருக்கும் - stomach tube போட்டு stomach wash

    அதுக்கு பிறகு அவன் பக்டோனை பார்த்தாலே ஓடி விடுவான்

    ReplyDelete
  3. சார், மிரட்டுவதற்காக தற்கொலை செய்து கொள்வதாக நடிப்பவர்கள், தற்கொலை முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் அவர்களது பயமுறுத்தும் முயற்சியில் தோல்வி அடைவதையும்,


    தற்கொலை முயற்சியில் தோல்வி அடையும்போது அனைவரும் பயந்துவிடுகிறார்கள் அல்லவா.. அதனை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்தேன் அவ்வளவுதான்..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails