தாங்கள் மனம் வருந்தக் கூடாது। உங்கள் மீது மிகுந்த அன்பு பாசம், மரியாதை எல்லாம் வைத்துள்ளேன், ஆனால்......., ஆனால்..........., நான் நம்ம இன்ஸ்பெக்டர் செழியனை காதலிக்கிறேன்।மிகவும் தயங்கி பில்டப் கொடுத்து நாயகன் ஃபீல் பண்ணாம இருக்க ரொம்ப கஷ்டப் பட்டு டயலாக் பேசி சமாதானப் படுத்துவார்.
இந்த மாதிரி சூழலில் எவ்வளவு ஆழமான் சோகம் பிழிந்தெடுக்கும் பாடல் போட்டிருக்கலாம்। ஆனால் ஜாலியான ஒரு பாடலை போட்டிருப்பார்கள்। ஏன்னா நாயகனும் மாமன் மகளீன் தோழியை லவ்விட்டு இருப்பார்। அவரும் இதே மாதிரி ஃபீல் பண்ணுவார்।
அந்தப் பாடல் இதோ.....
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
(நல்ல வேளை )
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
(நல்ல வேளை )
நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் ஒரு திருப்பம்
என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்
எதிர் காலம் ஒன்று புது கோலம் கொண்டு
மனவாசல் தேடி வருமே
(நல்ல வேளை )
கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில் அன்று கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
சரி பாதி இங்கு வருமே
(நல்ல வேளை )
மடி மேல் துயிலும் கொடி போல் துவளும்
பேரழகை படம் பிடித்தேன்
அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால்
தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
காதல் போன்ற உள்ளம் கரை மீறி துள்ளும்
உடல் சேரும் எண்ணம் வருமே
(நல்ல வேளை )
:))
ReplyDeleteஅடுத்த பார்ட் எப்ப வரும்..
தயவு செய்து திரைப்படத்தின் பெயரையும் எழுதிவிடவும். எந்த படமென்று ஞாபகம் வரவில்லை :(
வணக்கம் சென்ஷி சார்,
ReplyDeleteநான் ஆணையிட்டால் படத்தில் தான் இக்காட்சி.
மாமன் மகளாக கே.ஆர்.வி. அவர்களும்
காதலியாக சரோஜா தேவி அவர்களும் நடித்திருப்பார்கள்.
கூடுதல் தகவலாக இந்தப் பாட்டின்போது அடிமைப் பெண் (விரைவில் வருகிறது) படத்திற்கான விளம்பர பலகையும் வரும். தமிழில் இது போல் படத்தின் நடுவில் விளம்பரங்கள் வருவது அரிது.
மறுமொழிக்கு மிக்க நன்றி :))
ReplyDeleteஅசத்தல் தலைவரே. சுவராசியமான பதிவுகளை தொடர்ந்து பதிவிடுவீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்ஷி சார், மு.க.சார்.
ReplyDeleteசுவராசியமாக சொல்லியிருக்கிறீர்கள் தொடருங்கள்....
ReplyDelete///இந்தப் பாட்டின்போது அடிமைப் பெண் (விரைவில் வருகிறது) படத்திற்கான விளம்பர பலகையும் வரும். தமிழில் இது போல் படத்தின் நடுவில் விளம்பரங்கள் வருவது அரிது.
///
உண்மைதான்....
நன்றி த.ஜீ.சார்
ReplyDelete