Thursday, December 18, 2008

கிரிக்கெட்??? ஏன் இப்படி

 1. கிரிக்கெட்டில் உள்ள வசதிகள்
 2. 1.கிரிக்கெட்டை யார் வேண்டுமானாலும் விளையாடிப் பார்க்கலாம். பெரும்பாலான விளையாட்டுகளை விளையாடி பார்க்கமுடியாது. கால்பந்து பத்து நிமிடங்கள் விளையாடினால் மூச்சு வாங்க ஆரம்பிக்கும். கைப்பந்து, டென்னிஸ் போன்றவைகளுக்கு பந்து கைக்கு வருவதற்கே பயிற்சி எடுக்க வேண்டும். தடகள விளையாட்டுகளை தவம் போல கருதுபவர்கள் மட்டுமே விளையாட முடியும். சில விளையாட்டுகளுக்கு செலவு அதிகம்.
 3. 2.கிரிக்கெட்டின் பரபரப்பை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். இன்னும் எத்தனை ரன்? எத்தனை பால்? எளிதில் புரியும். கால்பந்தில் கூட எத்தனை கோல் என கேட்க முடியும், ஆனால் கிரிக்கெட்டில் நிமிடத்திற்கு நிமிடம் புள்ளிவிவரங்கள் மாறும். பரபரப்பு கூடும். மற்ற விளையாட்டுகளுக்கு இந்த வசதி கிடையாது.
 4. 3.கால்பந்து, கைபந்துகளில் யார் சிறப்பாக விளையாடிகிறார்கள் என்பது பார்த்தால் மட்டுமே புரியும்.
 5. 4.அதுவும் விளையாட்டு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கிரிக்கெட்டுக்கு அந்த அவசியம் கிடையாது.
 6. 5கிரிக்கெட் பற்றி நாள் பூரா கேட்டுக் கொண்டே இருக்கலாம். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்து விடும்.(20/20 பத்தி அப்புறம் பார்ப்போம்).
 7. 6.தூய வெள்ளை மற்றும் கவர்ச்சியான கல்யாண மாப்பிள்ளை போன்ற உடைகளுடன் கிரிக்கெட் விளையாடப் படுகிறது. மற்ற விளையாட்டுகளில் அப்படி இல்லை.(செஸ், துப்பாக்கி தவிர).
 8. 7.டி.வி.யில் பல கோணங்களில் காட்டும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. (ஸ்டம்பிலயே காமிரா வைக்கிறாங்களே)
 9. 8. ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் ஒளிபரப்பும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. அதனால் தொலைக்காட்சிக்கு தனிகாதலே உண்டு.
 10. 9.கிரிக்கெட் முடிந்த பின் அரைமணிநேரம் விவாதிக்க முடியும்.அதற்கு மேல கண்ட காரணங்களே உதவும்.
 11. 10.மூச்சு விடுவது கூட சாதனையாக கிரிக்கெட்டில் மட்டுமே கருதப்படுகிறது. தொடர்ச்சியாக 0 எடுப்பது கூட இங்கு சாதனை. தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் கடைசி பந்துகளில் 4 எடுத்தால் இந்த மைதானத்தில் இது 3ம் தடவை. இந்த நாட்டிக்கெதிராக இது 8ம் முறை. இந்த நவம்பர் மாதத்தில் இது முதல் முறை. அந்த நேரத்தி சச்சின் மிட் ஆனில் நிற்பது இது 15ம் முறை என்றெல்லாம் சாதனைப்பட்டியல் போடுவார்கள்.
 12. 11.இந்தியாவும் பாகிஸ்தானும் சமபலத்தில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஹாக்கி கூட ஒரு காலத்தில் புகழுடன் இருந்தது நினைவு இருக்கலாம்.
 13. பின்குறிப்பு;- இது ஒரு மீள்பதிவு. போன மாதத்தில் எழுத ஆரம்பித்தபோது போட்டது. நிறைய பேர் படிக்கவில்லையோ என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு,

10 comments:

 1. //தூய வெள்ளை மற்றும் கவர்ச்சியான கல்யாண மாப்பிள்ளை போன்ற உடைகளுடன் கிரிக்கெட் விளையாடப் படுகிறது. மற்ற விளையாட்டுகளில் அப்படி இல்லை.//

  !!!!!!super thala!!!

  ReplyDelete
 2. வாங்க நர்சிம் சார். கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 3. ஆமாம்,முதல் பதிவை படிக்கவில்லை.
  இன்றும் வெள்ளை பேண்டு அல்லது விளையாட்டு வெள்ளை காலனி(ஷூ) போடும்போது ஸ்சுவ்வ்வ்வ் என்று ரத்தம் சூடு ஏறும் பாருங்க....

  ReplyDelete
 4. வாங்க வடுவூர் குமார், அதனால்தான் ஒருமாதத்திற்குள்ளாகவே மீள்பதிவு

  ReplyDelete
 5. "அந்த நேரத்தி சச்சின் மிட் ஆனில் நிற்பது இது 15ம் முறை என்றெல்லாம் சாதனைப்பட்டியல் போடுவார்கள்."


  அருமையான நடை

  ReplyDelete
 6. வாருங்கள் பெயரில்லா அவர்களே.

  தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி,

  பெயருடன் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்

  ReplyDelete
 7. நான் எல்லாம் அந்த கர்மத்தை பாத்து ரெம்ப நாள் ஆச்சு

  ReplyDelete
 8. //நசரேயன் சொன்னது…

  நான் எல்லாம் அந்த கர்மத்தை பாத்து ரெம்ப நாள் ஆச்சு
  //


  வாங்க சார்,

  அதனால்தான் கனவுகளே என்ற தலைப்பில் வருகின்றது.

  ReplyDelete
 9. கிரிக்கெட் விளையாடுவதற்கு infrastructure மிக குறைவு

  தேர்வு எழுதும் அட்டையே மட்டையாகவும், உருட்டப்பட்ட காலுறையே (சாக்ஸ்) பந்தாகவும், தூணே ஸ்ட்ம் ஆகவும் விளையாடலாம்

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails