குறைந்தபட்சம் ரஜினி ரசிகர்கள் மட்டுமாவது மகிழ்ச்சி அடைய இந்த இடுகை உதவும்। திண்டுக்கல் சாரதி படம் பார்த்தவர்கள் கூறுவது பேசாமல் குசேல்ன் படத்தை இதே இயக்குனரிடம் கொடுத்து இருக்கலாம் என்று கூறிவருகிறார்கள்।
அன்புள்ள ரஜினிகாந்த் என்றொரு படம் அந்தப் படத்தின் கதையை முதலில் எம்ஜியருக்காக தயார் செய்யப் பட்டதாம்। அவர் முதல்வராகி விட்டதால் ரஜினி என்று கூட பேசிக் கொள்கிறார்கள்.
குசேலனுக்கு முன் சந்திரமுகி வந்தது। அதன் மலையால மூலத்திற்கும் கன்னட மூலத்திற்கும் பல மடங்கு மாற்றங்கள்। படம் வென்றதால் வாசு। சூப்பர் ஆகப் பேசப் பட்டார்। இதற்கு முன் லாவாரிஸ் என்றொரு இந்திப் படம் பார்க்கும்போதே கண்கள் பனிக்கும் இதயம் கணக்கும் கதை। அமிதாப் பச்சனின் அற்புத நடிப்பில் வெளியான படம் । ஒரு அனாதையின் வாழ்வின் கொடுமையையும் அவனது உள்ள குமுரல்களையும் அழகாக வெளிப் படுத்தி இருப்பார்கள்। அதே படத்தை தமிழில் பணக் காரனாக எடுத்தார்கள்। சுத்த கமர்சியலாக... சில பல மாற்றங்களுடன்......... ரஜினி மேடையில் பேசும் ஒரு காட்சியைத் தவிர மற்ற இடங்களில் பெரிய ஒரு பாதிப்பும் ஏற்படாத ஒரு கமர்சியல் படம் அது। வாசுவின் திறமை ரீமேக் திறமை பலமுறை வெளிப் படுத்தப் பட்டுள்ளது।
அன்புள்ள ரஜினி காந்த் வந்தபோது படத்தில் ஒரு குழந்தை ரசிகைக்காக ரஜினியே தனது நேரத்தை செலவிட்ட போது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசித்தார்கள்। தங்களுக்காக வந்து தங்களுடன் நேரத்தை செலவிட்டதாக நினைத்தனர்।
ஆனால் குசேலன் படத்தில் ஒரு நண்பனுக்காக தலைவர் கண்கள் கலங்குவதை யாரும் ஏற்கத்தயாராக இல்லை। அந்த காரணத்திற்காக தலைவனின் கண்கள் கலங்குவதை மீண்டும் பார்க்க விரும்பாத ரசிகர்கள் மீண்டும் பார்க்காத காரணத்தாலேயே அந்தப் படம் தோல்வி அடைந்தது। ரசிகர்களின் பேராரதவாலேயே அந்தப் படம் தோல்வி அடைந்தது எனச் சொல்லலாம்। எனவே குசேலன் தோல்வி அடைந்ததற்கு வாசுவோ, ரஜினியோ வருத்தப் படவே தேவையில்லை।
//
ReplyDeleteதலைவனின் கண்கள் கலங்குவதை மீண்டும் பார்க்க விரும்பாத ரசிகர்கள் மீண்டும் பார்க்காத காரணத்தாலேயே அந்தப் படம் தோல்வி அடைந்தது
//
வாழைப்பழத்தில் ஊசி
இமேஜ் ரொம்பவே..............
ReplyDeleteபெரீஈஈஈஈஈஈஈஈஈஈசாஆஆஆஆஆஆஆ இருப்பதாலும் கதையில் வரும் நாயகனையும் ரொம்ப பெரீ......ய ஆளாய் காட்டியதுமே பிரச்சனையாயானது....
ஏன் ரஜினி மீது இவ்வளவு பாசமாக இருக்கிறீர்கள்
ReplyDeleteஉண்மையாகப்பார்த்தால்
ReplyDeleteஅந்தப்படத்தை இடைவெளைவரை வாசு வேஸ்ட் பண்ணிவிட்டார்!
ஒரு பெரிய நடிகரை இடைவேளை வரை போற்றிக்கொண்டு இருப்பதும் அதுவரை படத்தில் ஒரு வரி கூட கதை நகராமல் இருப்பதும் இயக்குனரின் கற்பனை வறட்சியையே காட்டுகிறது!(இந்த்ப்படத்தில் ). ஏகப்பட்ட கதைகள் கற்பனைகளுடன் புதியவர்கள் கத்திருக்க கோடிக்கணக்கான ரூபாய்களை இதில் வேஸ்ட் பண்ணியிருப்பது தமிழ் பட உலகின் சாபக்கேடு!!
ரஜினியோ வாசுவோ நஷ்டப்பட மாட்டார்கள்! ப்ரொடியுசர், வினியொகிப்பவர் தலையில் கட்டிவிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க!!!
தேவா.
வாங்க புருனோ Bruno சார்,
ReplyDeletethevanmayam சார்.
//புருனோ Bruno கூறியது...
ஏன் ரஜினி மீது இவ்வளவு பாசமாக இருக்கிறீர்கள்//
அவர வெச்சுத்தான் கொஞ்சம் ஒப்பேத்த வேண்டும்.
//ஒரு பெரிய நடிகரை இடைவேளை வரை போற்றிக்கொண்டு இருப்பதும் அதுவரை படத்தில் ஒரு வரி கூட கதை நகராமல் இருப்பதும் //
ReplyDeleteஅதுதான்சார் கதையே
வாசுனாலதான் படம் தோல்விங்கிரேன்
ReplyDelete