Saturday, May 30, 2009

கூரையேறி கோழி பிடிக்க....













சென்ற ஆண்டு 20-20 உலகக் கோப்பைக்குப் போன இந்திய அணிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. இந்தியாவில் கூட பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எதோ இரண்டாம்தர அணியை அனுப்புவது போல்தான் அனுப்பினார்கள். இந்திய அணி கேப்டன் டிராவிட் கலந்து கொள்ளவில்லை. அவருடன் சச்சின், கங்கூலி ஆகியவர்களும் இல்லை. இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் என்ற எண்ணத்திலேயே பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு ஏதேதோ காரணங்களால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது காமன்வெல்த் போட்டிகளுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது போல இருந்தது.


அதற்கு முந்தைய காலத்தில் இந்திய அணி முத்திரை ஆட்டத்தைக் காட்டியிருந்ததால் ஜாம்பவான்கள் இல்லாத இந்திய அணியை நம்ம்மூர் ரசிகர்கள் ஸ்கூல் அணியாகவே பார்த்தனர். போட்டிகள் 20-20 என நடந்ததுவேறு அதை உறுதி படுத்தியது. நம்மூர் பள்ளிமாணவர்கள் அந்த அளவில்தானே விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சுக்கோ ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், ஜோகிந்தர் சர்மா, என்று குட்டி பசங்க., பதான், பஜன் இவங்கதான் சீனீயர்ஸ்..,

வந்தால் மலை என்பதை தாரக மந்திரமாய் சிங்கம் போல முடி வைத்திருந்த தலைவரின் பின்னே அணிவகுத்துச் சென்றது இந்திய அணி.

அவ்வப்போது சின்ன சின்ன அதிர்ச்சிகள் கொடுத்து அரையிறுதிப் போட்டியில் நுழைந்து கடைசியில் வென்று கோப்பையுடன் வந்து டெண்டுல்கர், டிராவிட், கங்கூலி முதலான அனைத்து மக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

ஒருநாள் அணியின் தலைவராக நியமணம் செய்யப் பட்ட பின்னரே டோனிக்கு பொறுப்பு வந்து சக்தி கமல் மாதிரிமுடிவெட்டிக் கொண்டார்.
=============================================================

ஆனால் இன்று இருக்கும் இந்திய அணி

பல சாதனைகள் படைத்திருக்கிறது. ஒருநாள் போட்டியில் முதலிடம் பெற வைக்கும் சில முக்கியப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறது ( அந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் ஒருவேளை தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கலாம்).

சேவக்,கம்பீர்,யுவராஜ்,டோனி,ரெய்னா,ரோஹித் என்ற பலம்பொறுந்திய பேட்டிங் வரிசை பதான்ஸ்,பிரவீன்,ஜாகிர், ஆர்,பி,சிங்,ஹர் பஜன்சிங் போன்ற வலிமைவாய்ந்த ஆட்ட்க் காரர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக மட்டை பிடிப்பவரின் பின்னால் நின்று வியூகம் அமைக்கும் தலைவர் என்று சிறப்பான
அணி செல்கிறது. பயிர்ச்சியாளர் கிரிஸ்டன் இருக்கிறார்.


சேவக் ஃபார்மிற்கு திரும்புவார் என்ற நம்பிக்கையையும் அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும் என்ற வார்த்தைகளையும் சொன்ன டோனி

மோசமான நாளாக அமைந்தால் சராசரி அணிகூட தங்களைத் தோற்கடித்துவிடக்கூடும் என்ற பொன்மொழியையும் கொடுத்து இருக்கிறார்.

===================================================================

வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்களைக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி இருக்கும் டிராவிட்,டெண்டுல்கர் ,லார்ட்ஸ் மைதானத்தில் சதம் கண்ட கும்ளே, இந்திய அணிக்கே ஆக்ரோஷத்தைக் கொடுத்த கங்கூலி ஆகியோருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து ஆலோசகர்கள் என்று அழைத்துச் சென்றிருக்கலாம். குறைந்தபட்சம் சிலரையாவது அழைத்துச் சென்றிருக்கலாம்.

===================================================================

சென்ற ஆட்டத்தில் சின்ன அணியாகச் சென்றதால் மற்ற அணியினர் பெரியதாக மதிக்காத காரணத்தால் இழப்பதற்கு ஒன்றுமில்லை பாணியில் ஆடி கோப்பையைத் தட்டி வந்தனர்.

ஆனால் இப்போதோ முக்கிய அணிகளில் ஒன்றாக விளங்குவதால் இப்பொதைய இந்திய அணியின் விளையாடும் பாணியை டி.வி.டி மூலமாகப் பார்த்து வியூகங்கள் அமைக்கப் பட நேரிடலாம். இதனால் மற்ற அணி வீரர்களுக்கு பயங்கர மகிழ்ச்சி அடையும் வாய்ப்பும், இந்திய அணிக்கு நாமம் சாத்தும் வாய்ப்பும் இருப்பதால் இந்திய அணியின் விளையாட்டுக்கு ஒரு சவால் காத்திருக்கிறது.

=======================================================

19 comments:

  1. \\வந்தால் மலை என்பதை தாரக மந்திரமாய் சிங்கம் போல முடி வைத்திருந்த தலைவரின் பின்னே அணிவகுத்துச் சென்றது இந்திய அணி\\

    இதுவும் சக்திகமலௌம் சூப்பர்.

    ReplyDelete
  2. //முரளிகண்ணன் said...

    \\வந்தால் மலை என்பதை தாரக மந்திரமாய் சிங்கம் போல முடி வைத்திருந்த தலைவரின் பின்னே அணிவகுத்துச் சென்றது இந்திய அணி\\

    இதுவும் சக்திகமலௌம் சூப்பர்.
    //


    நன்றி தல

    ReplyDelete
  3. //லார்ட்ஸ் மைதானத்தில் சதம் கண்ட கும்ளே//

    அகார்கரை விட்டு விட்டீர்களே

    ReplyDelete
  4. தல,

    //ஒருநாள் அணியின் தலைவராக நியமணம் செய்யப் பட்ட பின்னரே டோனிக்கு பொறுப்பு வந்து சக்தி கமல் மாதிரிமுடிவெட்டிக் கொண்டார்.// கலக்கல் ட்ச்.

    ReplyDelete
  5. தல,

    பீட்டர் ரோபக் இந்த தடவ இலங்கை நியுசிலாந்து பைனல் என்று கூறி உள்ளார். நடந்து விடுமோ?

    எனென்றால் போன முறை மக்கள் இந்தியா-பாகிஸ்தான் பைனலை எதிர்பார்க்கவில்லை.

    ReplyDelete
  6. கும்ப்ளே சதம் கண்டது லார்ட்ஸ் அல்ல.. ஓவல் மைதானத்தில்....

    யோவ் புருனோ...வாயில ஏதாவது வந்துட போவுது...ஏன்யா அகார்கரை எல்லாம் ஞாபகப் படுத்துற.

    இந்திய அணி வீரர்கள் (T20 team) IPL போட்டிகளில் என்ன செய்தார்கள் என்று சின்னதாய் என் அறிவுக்கு எட்டியபடி அலசியிருக்கிறேன்... கருத்திடவும் (ஆங்கிலப் பதிவு) http://kkumarasamy.blogspot.com/2009/05/indias-t20-stars-in-ipl-2-report-card.html

    ReplyDelete
  7. தல,

    //மோசமான நாளாக அமைந்தால் சராசரி அணிகூட தங்களைத் தோற்கடித்துவிடக்கூடும் என்ற பொன்மொழியையும் கொடுத்து இருக்கிறார்.// சமீப காலங்களில் தோனியின் பேச்சு எல்லாமே தோல்விக்கான காரணங்களை கூறுவதாகவே உள்ளது. அதுவும் எல்லாமே ஊனமுற்ற சாக்குகளாக உள்ளது தான் வருத்தம் வர வைக்கிறது.

    மேலும் பஜன் கூறியதை கேட்டீர்களா? மும்பை அணியின் தோல்விக்கு காரணம் சச்சின் தலைமையாம். அதுவும் இவருக்கு பந்து வீச சரியான வாய்ப்பு அளிக்காததால் தான் இந்த நிலை என்று கூறி உள்ளார். என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  8. தல,

    //சேவக்,கம்பீர்,யுவராஜ்,டோனி,ரெய்னா,ரோஹித் என்ற பலம்பொறுந்திய பேட்டிங் வரிசை பதான்ஸ்,பிரவீன்,ஜாகிர், ஆர்,பி,சிங்,ஹர் பஜன்சிங் போன்ற வலிமைவாய்ந்த ஆட்ட்க் காரர்கள்//

    மட்டை வீரர்கள் - அவுட் ஆப் பாரம் = சேவக்,கம்பீர்,யுவராஜ்,டோனி

    பந்து வீச்சாளர்கள் - அவுட் ஆப் பாரம் = பஜன்சிங், பிரவீன், ஜாகிர்

    காயம் = ஜாகிர்

    ஆள் ரவுண்டர்கள் - அவுட் ஆப் பாரம் = பதான்ஸ்

    அதனால் இப்போதைக்கு ரெய்னா,ரோஹித், ஆர்,பி,சிங் என்று சிலரே நம்பிக்கை அளிக்கின்றனர். இருந்தாலும் கிரிக்கெட்டில் கூறுவதைப் போல "Form is Temporary, Class is Permanant" என்பதை மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
  9. தல,

    ஆனால் இந்த தடவ சச்சின் தானும் விளையாட வேண்டும் என்று ஆசைப் பட்டதாக ஒரு நியூஸ். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை - ஆனால் தேர்வாளர்கள் ஒப்புக் கொள்ள வில்லையாம்.

    ReplyDelete
  10. மோசமான நாளாக அமைந்தால் சராசரி அணிகூட தங்களைத் தோற்கடித்துவிடக்கூடும் என்ற பொன்மொழியையும் கொடுத்து இருக்கிறார்.
    //பள பள உடையில் நம் மக்கள் படு ஸ்மார்ட்!!

    ReplyDelete
  11. ஓட்டுப் போட்டாச்சு!!

    ReplyDelete
  12. உண்மை..
    முதல் சுற்று மிக எளிதான சுற்று..
    அடுத்த சுற்றில் கஷ்டப்பட்டு ஜெயித்தால் அரையிறுதி..

    பின்னர் இரண்டே போட்டிகள்...

    ReplyDelete
  13. வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

    புருனோ சார்,

    கிங் விஸ்வா சார்,

    கெய்த் குமாரசாமி சார்,

    தேவன்மாயம் சார்,

    லோகு சார்.,

    ReplyDelete
  14. //வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்களைக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி இருக்கும் டிராவிட்,டெண்டுல்கர் ,லார்ட்ஸ் மைதானத்தில் சதம் கண்ட கும்ளே, இந்திய அணிக்கே ஆக்ரோஷத்தைக் கொடுத்த கங்கூலி ஆகியோருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து ஆலோசகர்கள் என்று அழைத்துச் சென்றிருக்கலாம். குறைந்தபட்சம் சிலரையாவது அழைத்துச் சென்றிருக்கலாம்.
    //

    சார்,

    நல்லா எழுதியிருக்கீங்க.. என்னோட கருத்தும் இது தான். தேவையில்லாம இந்த புக்கன்னன்ன எல்லாம் நம்பறது வீண்!!

    நம்ம ஊரு மடத்துக்குளம் தாங்க!! ஆனா இப்ப இருக்கறது துபாய்ல..

    நேரம் கிடைச்சா நம்ம பக்கத்திற்கும் வந்திட்டுப் போங்க..

    http://senthilinpakkangal.blogspot.com/

    ReplyDelete
  15. //S Senthilvelan said...


    நேரம் கிடைச்சா நம்ம பக்கத்திற்கும் வந்திட்டுப் போங்க..//

    படித்துவிட்டேன் தல..,

    நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //Congrats!

    Your story titled 'இந்திய அணிக்கு நாமம் சாத்தும் வாய்ப்பு' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th May 2009 09:17:02 AM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/68173

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//


    நன்றி தமிழீஷ்

    ReplyDelete
  17. Yes, you are absolutely right. In addition, Sachin WILL be there in UK for the tournament!. He is going on his own. But I can bet he will be in touch with our players

    ReplyDelete
  18. //azhagan said...

    Yes, you are absolutely right. In addition, Sachin WILL be there in UK for the tournament!. He is going on his own. But I can bet he will be in touch with our players
    //

    நல்ல செய்திதான் நண்பரே..,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. நல்லதொரு கட்டுரை. ஆனால் கும்பிளே சதம் அடித்தது லார்ட்ஸில் அல்ல. ஓவல் மைதானத்தில் :-)

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails