Thursday, May 14, 2009

யாரந்த fake ipl player ?

இந்த நிழல் மனிதரின் எழுத்துக்கள் பலராலும் ரசிக்கப் படுகின்றன். ஏறக்குறைய 7000 பின் தொடர்பவர்களுடன் வலைப்பூ போய் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப் படுகிறது. நைட் ரைடர்ஸ் அணிவீரராக அறிமுகத்தில் இப்போதைய நிலை போய் கொண்டு இருக்கிறது.

அவரே ஒரு ஓட்டளிப்பு பட்டையை ஒருவாக்கி இருக்கிறார். கேள்வி

Who is FIP?

என்பது தான் . அதில் குறிப்பிட்ட பெயர்கள் எல்லாம் குறிப்புகளில்தான் இருக்கின்றன. ஆகாஷ் சோப்ராவை சந்தேகப் பட்டுதான் அவரை வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறுகிறார்கள். அத்ற்குக் காரணம் அவர்தான் கணினியை அதிகம் உபயோகப் படுத்தும் ஆட்டக்காரராம். ஆனால் அவர் வந்த பிறகும் கூட
fake ipl player வலைப்பூ வெற்றிகரமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.


அந்த வலைப்பூவின் முன்னோடி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? சென்னைப் பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் அவர்கள்தான். லட்சுமி காந்தன் யார் கேட்பவர்களுக்கு கடைசியில் பதில் சொல்கிறேன்

அவரது முதல் இடுகையில் அவரை கடுமையான களத்தடுப்பாளராக அவரை அடையாளம் காட்டிக் கொள்கிறார். இதுவரை விளையாடாத ஆட்டக்காரராகவும் சொல்லி இருக்கிறார்.

அவர் எழுதும் ஆங்கிலம் சில நேரங்களில் அகராதியை நாடும் வகையில் அமைகிறது. நமது கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் அவ்வளவு சிறப்பாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக கங்கூலி இப்படியெல்லாம் நிழல் மறைவில் எழுதும் இயல்பு உடையவர் அல்ல. எது நடந்தாலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் இயல்புள்ளவராக அவர் எனக்குத் தெரிகிறார். கல்கத்தா அணியில் இருப்பவர்களில் மிகச் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா.. என்று தொடர்ச்சியாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் சொல்லுங்களேன்.

 • Sourav Ganguly
 • Cheteshwar Pujara
 • Ricky Ponting
 • Ishant Sharma
 • Iqbal Abdullah
 • Ashok Dinda
 • Wriddhiman Saha
 • David Hussey
 • Yashpal Singh
 • Murali Kartik
 • Brendon McCullum
 • Ajit Agarkar
 • Aakash Chopra
 • Debabrata Das
 • Moises Henriques
 • Mark Cameron
 • Angelo Mathews
 • Mashrafe Mortaza
 • Ajantha Mendis
 • Laxmi Ratan Shukla


 • Chris Gayle
 • Morne van Wyk

 • Brad Hodge

அணியின் பயிற்சியாளர் புக்கனன், மெக்கல்லம் போன்றவர்கூட ஆட்டம் முடிந்ததும் அணிக்கு டாட்டா சொல்லும் நிலையில் இருப்பதால் அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால் வாய்ப்பு குறைவுதான்.

================================================================

தமிழ்திரை யுலகின் முன்னாள் உச்ச நடிகரும், நகைச்சுவையின் நிரந்தர உச்ச நடிகரும் லட்சுமிகாந்தனை கொலைசெய்ததாக குற்றம் சாட்டப் பட்டு தண்டனை அனுபவித்திருக்கின்றனர். அவர் இந்து நேசன் என்ற பத்திரிக்கையை நடத்திவந்தவர்.

=================================================================
எப்படியோ fake ipl playerன் முன்னோடியை கண்டுபிடித்துவிட்டோம். விரைவில் உண்மையான நிழல்மனிதனை கண்டுபிடித்திவிடலாம். அவரே கூட வெளிக்காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்போது நம் இடுகையின் காரணமாகவே அவர் வெளியில் வந்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

25 comments:

 1. தல

  அது யாராக இருந்தாலும் அந்த வலைப்பதிவை படித்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்பதே உண்மை

  ஆமை புகுந்த வீடும் ஆஸ்திரேலியன் புகுந்த வீடும் உருப்படாது என்று மீண்டும் ஒரு முறை நிருபணமாகியுள்ளது

  ReplyDelete
 2. ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் தானே தன்னை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளார். அத்துடன் கிரிக்கட்டுக்கும் முழுக்குப்போடப் போவதாக கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 3. என்ன சுரேஷ் யாருன்னு சொல்லாமலே சொல்லுறிங்க

  யாரது ?...

  ReplyDelete
 4. நீங்க கலைவாண்ர் பண்ண் ஒரு கொலைய பத்தி பேசுறீங்கன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. //புருனோ Bruno said...

  தல

  அது யாராக இருந்தாலும் அந்த வலைப்பதிவை படித்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்பதே உண்மை

  ஆமை புகுந்த வீடும் ஆஸ்திரேலியன் புகுந்த வீடும் உருப்படாது என்று மீண்டும் ஒரு முறை நிருபணமாகியுள்ளது
  //


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..

  ReplyDelete
 6. //Unmai said...

  ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் தானே தன்னை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளார். அத்துடன் கிரிக்கட்டுக்கும் முழுக்குப்போடப் போவதாக கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.
  //


  அதற்கு நமது பதிவுதான் காரணம் என்று சொல்லிக்கலாம் தல......

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...

  ReplyDelete
 7. //starjan said...

  என்ன சுரேஷ் யாருன்னு சொல்லாமலே சொல்லுறிங்க

  யாரது ?...
  //


  நிறையப் பேர் கடுப்புல சுத்திட்டு இருங்காங்க தல..

  சிக்கினா லட்சுமிகாந்தன் கதைதான்...

  அந்தப் பாவம் நமக்கு எதற்கு?

  ReplyDelete
 8. //pappu said...

  நீங்க கலைவாண்ர் பண்ண் ஒரு கொலைய பத்தி பேசுறீங்கன்னு நினைக்கிறேன்.
  //


  அவர்கள் பல வருட தண்டணைக்குப் பின் திரு எத்திராஜ் அவர்களின் வாதத்திறமையால் குற்றவாளி அல்ல என்று விடுவிக்கப் பட்டுவிட்டார்கள். என்வே கொலையை அவர்கள் செய்ய்வில்லை என்பதே என் எண்ணம்

  ReplyDelete
 9. பல வருடங்கள் என்பதை முப்பது மாதங்கள் என்று படிக்கவும். ஆனால் அந்த முப்பது மாதங்களில் உலக, இந்திய அரசியலிலும், தமிழ் சினிமாவிலும் மிக மிக அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன..,

  ReplyDelete
 10. தல,

  //அவரே கூட வெளிக்காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்போது நம் இடுகையின் காரணமாகவே அவர் வெளியில் வந்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்// ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆவதற்கான தகுதிகள் அனைத்தும் உங்களிடம் காணப் படுகிறது.கட்சிய எப்ப தல அன்னவுன்ஸ் பண்ணப் போறீங்க?

  ReplyDelete
 11. ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் தானே தன்னை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளார். அத்துடன் கிரிக்கட்டுக்கும் முழுக்குப்போடப் போவதாக கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.///

  சுரெஷு!! ஜூடு தாங்கலை!!

  ReplyDelete
 12. //King Viswa said...

  தல,ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆவதற்கான தகுதிகள் அனைத்தும் உங்களிடம் காணப் படுகிறது.கட்சிய எப்ப தல அன்னவுன்ஸ் பண்ணப் போறீங்க?//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

  ReplyDelete
 13. //thevanmayam said...

  சுரெஷு!! ஜூடு தாங்கலை!!//

  கிரிக்கெட் உலகமே அந்த நிழல் மனிதரைக் கண்டு காய்ச்சல் கண்டு உள்ளது சார். மேலே குறிப்பிட்டுள்ள புகைப் படங்கள் கேகேயார் அணியைச் சார்ந்தவர்களுடையது. உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா சார். யார் அந்த நிழல் மனிதர் என்று?

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

  ReplyDelete
 14. சுரேஷ், நல்லதொரு ஆராய்ச்சி.. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் இது பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். வாசித்தீர்களா?

  http://loshan-loshan.blogspot.com/2009/04/blog-post_25.html

  அப்போது முதலில் நானும் இது பற்றி எழுதினேன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.. ;)

  அஜந்தா மென்டிஸ் என்றால் நிச்சயமாக இல்லை.. நீங்கள் சொல்லி இருப்பது போல கங்குலியாக இருக்கும் வாய்ப்பும் இல்லை..

  வெளியில் உள்ள ஒருவர் எழுத வாய்ப்பும் குறைவு..

  என் சந்தேகம் முரளி கார்த்திக் மீதே..
  விபரம் அறிந்தோர் உறுதிப் படுத்தலாம்..

  ReplyDelete
 15. வருகைக்கு நன்றி லோஷன் சார்

  எழுதுபவருக்கு ஆங்கிலப் புலமை உள்ளது என்பதை யோசித்துப்பாருங்கள்.

  மார்க்கெட்டிங் திட்டங்களில் ஒன்றாக அவர்களே இப்படித்திட்டமிட்டு எழுத நினைத்திருக்கலாம்.
  ஆனால் எழுதப்படும் விஷயங்கள் தனக்குத்தானே எழுதப் படுவது போல தோன்றவில்லையே சார்.

  ReplyDelete
 16. எனக்கு என்னமோ இது யாரோ வெளில இருந்து விளம்பரத்துக்காக பண்றாங்கன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 17. தல அந்த வலைக்கு போனேன் ஒன்னும் புரியல.. நீங்க மொழிபெயர்த்து போடுங்களேன்...

  :-)

  ReplyDelete
 18. //கார்த்திகைப் பாண்டியன் said...

  எனக்கு என்னமோ இது யாரோ வெளில இருந்து விளம்பரத்துக்காக பண்றாங்கன்னு நினைக்கிறேன்
  //


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

  அந்த நிழல் மனிதர் முகம் காட்டாமல் இருக்கிறார். அதில் என்ன விளம்பரம் கிடைத்திட முடியும். அந்த வலைப்பூவில் விளம்பரங்களும் இடம்பெறவில்லை.

  யாரோ ஒருவர் கோபத்தில் எழுதுகிறார் என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

  ReplyDelete
 19. //கடைக்குட்டி said...

  தல அந்த வலைக்கு போனேன் ஒன்னும் புரியல.. நீங்க மொழிபெயர்த்து போடுங்களேன்...

  :-)
  //

  வாங்க தல. மொழி பெயர்த்துப் போட்டால் தமிழ் மணத்தில் நம்ம சேர்த்துக் கொள்வார்களா என்று தெரியவில்லையே தல..,

  லோஷன் அவர்களின் வலைப்பூவில் உள்ள பின்னூட்டத்தில் ரகசிய வார்த்தைகளுக்கான பொருள் கொடுக்கப் பட்டிருக்கிறது அங்கே போய் பின்னர் நிழலான வலைப்பூவுக்குப் போனால் ஓரளவு புரியும் வாய்ப்பு இருக்கிறது.

  ReplyDelete
 20. என் கடைக்கு வாங்க‌

  யாருன்னு சொல்லுரேன் !

  ReplyDelete
 21. யாராவது அமீர்க்கான், சல்மான்கான் ரசிகராயிருக்கும்.
  விடுங்கப்பா!!!!!!
  ஹிஹி

  ReplyDelete
 22. //starjan said...

  என் கடைக்கு வாங்க‌

  யாருன்னு சொல்லுரேன் !
  //

  வந்து பார்த்தேன் தல.., பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் இன்னும் சொல்லவில்லையே..,

  ReplyDelete
 23. //Subash said...

  யாராவது அமீர்க்கான், சல்மான்கான் ரசிகராயிருக்கும்.
  விடுங்கப்பா!!!!!!
  ஹிஹி
  //

  மறுப்பத்ற்கில்லை நண்பரே,,,,

  ReplyDelete
 24. ஹா ஹா... அந்த வலைப்பூவுக்கு வெறும் 30 பின்தொடர்பாளர்கள் இருக்கும் போதே அதை படித்து கொண்டிருந்தேன்... இப்போது 7000 தொடர்பாளர்களுடன் களை கட்டி கொண்டிருக்கிறார்.

  எனக்கென்னவோ, அந்த ப்ளாக்கின் உரிமையாளர், போட்டியில் ஆடும் ஒருவராக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒரு வேளை விளையாட்டு வீரர்களின் நண்பனாக தகவல்களை திரட்டி கொண்டு வெளியிடும் பத்திரிக்கை நிருபர் போல தான் தெரிகிறது. அணியில் இருந்து கொண்டு மறைமுகமாக அவர் காரியம் ஆற்றுவதாக கூறுவது நம்ப தகுந்த மாதிரி இல்லை. கூடவே நீங்கள் கூறியபடி அவரின் வார்த்தை உபயோகங்கள், பத்திரிக்கை அல்லது ஊடக துறையில் அதிகம் கலந்திருக்கும் ஆசாமி போல தான் தெரிகிறது.

  எது எப்படியோ கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கொண்டாட்டம் தான் அவர் பதிவுகள் எல்லாம்.

  டெம்ப்ளேட்டை திரும்ப மாற்றி அமைத்தற்கு நன்றி... குறுகிய முறை நன்றாக எடுபடவில்லை, கடைசியாக நான் இங்கே வருகை தந்த போது.

  ÇómícólógÝ

  ReplyDelete
 25. //Rafiq Raja said...


  எது எப்படியோ கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கொண்டாட்டம் தான் அவர் பதிவுகள் எல்லாம்.
  //


  தல கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமா.. தல..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails