=================================================================
கும்ளே கூட டெஸ்ட் போட்டி அழியவே அழியாது என்று இன்று கூறியுள்ளார்
=================================================================
அடிப்படையில் டெஸ்ட் போட்டி எப்படி விளையாடப் படுகிறது என்று பார்க்க வேண்டும். மட்டை பிடிப்பவர்கள் பந்துக்களைப் பார்த்து ஆடுகிறார். அடித்து ஆடவேண்டிய பந்துக்களை அடிக்கிறார்.
தடுத்து ஆட வேண்டிய பந்துக்களை அடித்து ஆடுகிறார்கள். பந்து வீச்சாளர்களும் தொடர்ச்சியாக பந்து வீசுகிறார்கள். மட்டையாளர் ஏமாறும்போது அல்லது களைப்படையும்போது பந்துவீச்சாளர் சரியான அளவில் பந்துபோட்டு அவரை ஆட்டமிழக்கச் செய்வார். ஆட்டமிழக்கும் வகையில் திட்டமிட்டு களத்தடுப்பு அமைக்கப் படுகிறது.
சில நேரங்களில் ஓட்டங்கள் அதிகமாக எடுக்கப் பட்டாலும் அதைப் பற்றி பெரிதாக கவலைப் படாமல் தொடர்ச்சியாக பந்துவீசப் படுகிறது.
வேகமும் ஆக்ரோஷமும் இருந்தாலும் நிதானம் மிக முக்கியப் பங்கு வகிக்கப் படுகிறது. ஓட்டங்கள் ஓடும்போது நீண்ட நேரம் விளையாடும்வகையில்தான் ஓட்டங்கள் எடுக்கப் படுகின்றன.
விக்கெட் வீழ்த்துவதும், விக்கெட் விழாமல் தடுத்து ஓட்டங்கள் எடுக்கும் வகையிலும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடப் படுகிறது
20-20 கிரிக்கெட்
இந்த வகை ஆட்டத்தில் நிதானம் என்பது பின்னுக்குத் தள்ளப் பட்டு ஓட்டங்கள் குவிப்பது மட்டுமே முன்னால் நிற்கிறது. (அதை விட பொழுதுபோக்கு விவகாரங்கள் முன்நிற்கிறது).
ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரில் முக்கிய இரண்டுவிக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் அடுத்த சில ஓவர்களில் வரும் ஆட்டக்காரர்கள் விக்கெட் விழாமல் தடுக்க முயற்சி செய்யும் போது ஆட்டம் மற்றொரு அணிக்குச் சென்று விடுகிறது. இந்த சூழலில் தப்பிப்பது என்பது பந்துவீச்சில் பெரும் வெற்றியைப் பொறுத்துதான் அமையும். மட்டையாளர்கள் மீண்டு அணியை மீட்டுவருவது மிக அபூர்வ்மே
டெஸ்ட் ஆட்டத்தில் அப்படி இருப்பதில்லை. எத்தனை விக்கெட்கள் போனாலும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் நிதானமாக மட்டைபிடிக்க வழியிருக்கிறது. கும்ளே இவ்வாறுதான் மட்டையாளராக மாறினார். லார்ட்ஸ் மைதானத்தில் கூட சதம் அடிக்க முடிந்தது. இப்போதைய ஆல்ரவுண்டர் வெட்டோரி கூட இந்த முறையிதான் ஆல்ரவுண்டராக மாறினார்.
ஆனால் 20-20 போட்டியில் அது சாத்தியமில்லை. அப்படியே அதிரடியாக ஆடி 20அல்லது30ரன் சேர்த்தால்கூட அது வெறும் குத்தாட்டமாகவே அமையும்.
ஒருபந்துவீச்சாளர் 4 ஓவர்கள் ரன்கொடுக்காமல் பந்துவீசிவிட்டால் அந்த ஓவர்களுக்கு இணையான 4 ஓவர்களிலும் ரன் எடுக்க சிரமப் பட்டு மட்டை பிடிக்கும் அணியினர் சரணடையும் சூழல் ஏற்படுகிறது.
ஆனால் டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் எவ்வளவு அதி அற்புதமாக பந்துவீசினாலும் அவர் பந்துகளை தடுத்து தப்பித்துவிட்டு வாய்ப்பு வரும்வரை நின்றிருந்து பின்னர் அடித்துக் கொள்ளலாம்.
அதேபோல் 20-20 போட்டிகளில் அவசரப் பட்டு அவுட் ஆனால் அதோடு அந்த ஆட்டம் முடிகிறது. டெஸ்ட்டில் இரண்டாம் சுற்றும் நடைபெறுவதால் மட்டக்காரர்களுக்கு ஒருவாய்ப்பாக அமைகிறது.
இதெல்லாம் விட 20-20 விளையாடும்பொது அடிக்கடி காயம் படும் வாய்ப்பு உள்ளது. 20-20 விளையாட்டில் அதிக ரன் எடுக்க வேண்டிய அவசியத்தில் ரிஸ்க் எடுத்து சில முரட்டுத்தனமான ஆட்டங்களை ஆட வேண்டிய அவசியம் ஏற்படுவதால் காலப் போக்கில் அதுதான் ஆட்டமுறையாக மாறி கிரிக்கெட் மட்டையாளர்கள் காட்டடி அடித்து தங்கள் ஆட்டத்திறனை இழக்கின்றனர். அதற்கடுத்து அவர்களை பந்து வீச்சாளர்கள் சுலபமாக ஆட்ட்மிழக்கச் செய்து வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.
===============================================================
தேசிய அணியிலிருந்து கட்டாய ஓய்வு வாங்கிக்கொண்டு ஐ.பி. எல் விளையாடும் பெருந்தலைகள் நன்றாக விளையாடாத சூழலில் வெளியே உட்காரப் படவைக்கும் வாய்ப்பும் அடுத்த ஏழத்தில் மிகக்குறைந்த ஏலம் போகும் வாய்ப்பும் இருப்பதால் அவர்களும் ஒருவழியாக ஓரம் கட்ட்ப் படுவார்கள்.
================================================================
20-20ல் விளையாடாத ஆட்கள் டெஸ்ட்டில் ஒழுங்காக விளையாடி தங்கள் மட்டைத் தொழில்நுட்பத்தினை நிரூபித்தால் மீண்டும் 20-20 அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் 20-20ல் நன்றாக விளையாடுபவர்களை டெஸ்ட்டில் சேர்ப்பது அபூர்வமே..
இது ஏற்கனவே ஒருநாள் ஆட்டத்தில் நிரூபணம் ஆயிருக்கிறது. ஹெய்டன், கம்பீர் போன்றவர்கள் டெஸ்ட்டில் நன்றாக ஆடி ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால் யுவராஜ் நிலமை..? கங்கூலிக்கு கட்டாய ஓய்வு கொடுத்துத்தான் அவருக்கு அணியில் இடம் கொடுக்க முடிந்தது. இல்லையென்றால் கடைசிவரை பதிலி யாக வே இருந்து அடிக்கடி அணியில் இடம்பெறும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டே இருந்திருப்பார். நிறந்த இடம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.
===============================================================
அணித்தலமைப் பண்பு பற்றிக் கூட் ஒரு கேள்விக்குறி இருந்துக் கொண்டிருக்கும்.
டோனி20-20 உலகக் கோப்பை வாங்கிய பின்னும் கூட கிரிக்கெட் தெய்வங்கள் அவரை வயதுக்குவரவில்லை என்று கூறி சிலகாலத்திற்கு கேப்டனாக கும்ளேக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
=================================================================
அணியில் நிரந்தர இடம் பெறுவதற்கு டெஸ்ட் போட்டிகள் அவசியம் என்ற சூழல் இருப்பதால் 20-20 எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் டெஸ்ட் அழியவே அழியாது.
அடக் கொடுமையே
ReplyDeleteஇத்தனைப் பேர் படிச்சிருக்காங்க
தமிழீஷில் இத்தனை ஓட்டு வேற விழுந்திருக்கு
விஷயமும் கும்மியடிக்க வைக்கற மேட்டர்தான். ஒரு பின்னூட்டமும் காணோம்.
பின்னூட்டப் பெட்டியில் தகறாரா..,
அப்படியும் இல்லையே..,
ReplyDeleteNeenga solrathu 100 % unmai
ReplyDeleteநல்லா ஒவ்வொரு போட்டியயும் விளக்கி இருக்கீங்க...
ReplyDelete:)))
தல,
ReplyDeleteவந்துட்டோம்ல.
தல.
ReplyDelete//அணியில் நிரந்தர இடம் பெறுவதற்கு டெஸ்ட் போட்டிகள் அவசியம் என்ற சூழல் இருப்பதால் 20-20 எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் டெஸ்ட் அழியவே அழியாது//
நிரந்தர இடம் தேவை இல்லை என்றாலும் கூட டெஸ்ட் போட்டி அழியவே அழியாது தல.
தல,
ReplyDelete//ஹெய்டன், கம்பீர் போன்றவர்கள் டெஸ்ட்டில் நன்றாக ஆடி ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்// காம்பிர் கத ரிவர்ஸ் தல. காம்பிர் ஒரு நாள் போட்டியில் நன்றாக ஆடியதால் தான் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றார்.
தல,
ReplyDelete//ஆனால் யுவராஜ் நிலமை..? கங்கூலிக்கு கட்டாய ஓய்வு கொடுத்துத்தான் அவருக்கு அணியில் இடம் கொடுக்க முடிந்தது. இல்லையென்றால் கடைசிவரை பதிலி யாக வே இருந்து அடிக்கடி அணியில் இடம்பெறும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டே இருந்திருப்பார். நிறந்த இடம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்// இப்போ கூட அப்படி தான் தல. இன்னும் அவர் நிரந்தர இடம் பெற வில்லை. ஆனால் அடுத்த ஆட்டக்காரர் யாரும் இல்லாததால் மட்டுமே அவரால் இடம் பெற முடிகிறது.
போன சீசன் ரொஹித் சர்மா அவுட் ஆப் பார்ம். மற்ற வீரகள் யாரும் சொல்லும்படி பிரகாசிக்காததால் தான் யுவராஜ் டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாட முடிந்தது.
தல,
ReplyDelete//அணித்தலமைப் பண்பு பற்றிக் கூட் ஒரு கேள்விக்குறி இருந்துக் கொண்டிருக்கும்.
டோனி20-20 உலகக் கோப்பை வாங்கிய பின்னும் கூட கிரிக்கெட் தெய்வங்கள் அவரை வயதுக்குவரவில்லை என்று கூறி சிலகாலத்திற்கு கேப்டனாக கும்ளேக்கு வாய்ப்பு கொடுத்தனர்.// இப்ப கூட எனக்கு மண்வெட்டி டோனி மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை வரவில்லை. அவர் இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை ஒரு மேட்ச் வின்னர் என்று நிரூபிக்க வில்லை.
தல என்னது இது கிரிக்கெட் பற்றி இவ்வளவு தீவிரமான அலசல்..
ReplyDelete//Priya said...
ReplyDeleteNeenga solrathu 100 % unmai
//
நன்றி தல
//வழிப்போக்கன் said...
ReplyDeleteநல்லா ஒவ்வொரு போட்டியயும் விளக்கி இருக்கீங்க...
:)))
//
நன்றி தல
பின்னூட்டங்களில் அதிக புள்ளிவிவரங்கள் எதிர்பார்க்கிறேன்
//King Viswa said...
ReplyDeleteநிரந்தர இடம் தேவை இல்லை என்றாலும் கூட டெஸ்ட் போட்டி அழியவே அழியாது தல.//
வாங்க தல வந்து பிரித்து மேய்ந்ததற்கு நன்றி தல
ஒவ்வொருவரிடமும் இதுபோன்ற விரிவான அலசல்களை எதிர்பார்க்கிறேன்.
//vinoth gowtham said...
ReplyDeleteதல என்னது இது கிரிக்கெட் பற்றி இவ்வளவு தீவிரமான அலசல்..
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
வந்து நீங்களும் அலசுங்கள்
தல,
ReplyDelete//ஒவ்வொருவரிடமும் இதுபோன்ற விரிவான அலசல்களை எதிர்பார்க்கிறேன்// அது கொஞ்சம் கஷ்டம் தல.
நானும் பல வலைப் பூக்களில் பார்த்து இருக்கேன். மேம்போக்கான கமெண்ட்'துகள் மட்டுமே இருக்கும். உங்களைப் போல யாரும் முழுவதும் படித்து பார்ப்பதே இல்லை.
அதே சமயம் அவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு கமெண்ட் (பெரும்பாலும் - முழுவதும் படித்து விட்டு வருகிறேன் என்று ஆங்கில வலைப் பூக்களிலும், சூப்பர் தல என்று தமிழ் வலைப் பூக்களிலும் இருக்கும்).
இது போல சில பல பதிவுகளில் விவாதங்கள் தேவை.
ஹ்ம்ம்..
ReplyDeleteரொம்ப நேரம் அந்தப் பதிவிலேயே வேஸ்ட் பண்ணிட்டேன்...
தல எப்புடி இப்பெடி ??? சரியான ஆய்வு
20-20 புடிக்காதா ???
ReplyDeleteஎன்னதான் டெஸ்ட் பத்தி சொன்னாலும் அது காண்டு தல..
fast food காலத்துல இதுதான் கரெக்ட்...
எனக்கு டெஸ்ட்யைவிட 20-20 ,ஒரு நாள் ஆட்டங்களே பிடிக்கும்..
//இத்தனைப் பேர் படிச்சிருக்காங்க
ReplyDeleteதமிழீஷில் இத்தனை ஓட்டு வேற விழுந்திருக்கு
விஷயமும் கும்மியடிக்க வைக்கற மேட்டர்தான். ஒரு பின்னூட்டமும் காணோம்.//
அட என்ன தல.. பின்னூட்டமில்லன்னு கஷ்டப்பட்டீங்களா??
இப்போ பாருங்க!!
பின்னூட்டம் ..
ReplyDeleteபின்னூட்டம் ..
ReplyDelete10 பின்னூட்டம் .. போடலாம்னு நெனச்சேன்..
ReplyDeleteஆனா இதுக்கே கம்ப்யூட்டர் முக்குது..
என்னவோ. தங்கள் வலையுல சேவை தொடர வாழ்த்துக்கள் :-)
மீண்டும் நன்றிகள் கிங் விஸ்வா அவர்களுக்கு
ReplyDelete//கடைக்குட்டி said...
ReplyDeleteஹ்ம்ம்..
ரொம்ப நேரம் அந்தப் பதிவிலேயே வேஸ்ட் பண்ணிட்டேன்...
தல எப்புடி இப்பெடி ??? சரியான ஆய்வு
//
வாங்க தல வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி
//கடைக்குட்டி said...
ReplyDelete20-20 புடிக்காதா ???
என்னதான் டெஸ்ட் பத்தி சொன்னாலும் அது காண்டு தல..
fast food காலத்துல இதுதான் கரெக்ட்...//
நாங்கெல்லாம் கல்லூரி நாட்கள்ல 15-15தான் விளையாடுவோம். இறுதியாட்டம் மட்டும் 20-20 அல்லது 25-25 இருக்கும். அதனால் இந்த வடிவம் பிடிக்கும்தான் தல
நீங்களே சொல்லிவிட்டீர்கள்: இது துரித உணவு என்று. இது வியாபார ரீதியான வடிவம்தல..
சிவாஜிதான் சூப்பர்ஹிட் திரைப்படம் என்றாலும் ரஜினிக்கு அதிகப் பெயர்வாங்கித்தந்தது வேறு படங்கள்தான்.
சிறந்த வியாபாரரீதியான வெற்றிக்கு நல்ல தொழில்திறமை அவசியம். அதற்கு டெஸ்ட் அவசியம்..
//கடைக்குட்டி said...
ReplyDeleteஅட என்ன தல.. பின்னூட்டமில்லன்னு கஷ்டப்பட்டீங்களா??
இப்போ பாருங்க!!//
120ஹிட் வரை இருந்தேன்.ஒரு பின்னூட்டமும் இல்லை. தமிழீஷ் ஓட்டுக்கள் கூட பதினான்கு வந்துவிட்டபிறகு நானே எனக்குவந்த சந்தேகத்தில் பின்னூட்டம் போட்டுப் பார்த்தேன்
//Congrats!
ReplyDeleteYour story titled 'இதுக்கு மட்டும் அழிவே கிடையாது.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 29th May 2009 11:00:11 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/67961
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
நன்றி தமிழீஷ்
வாங்க தல என் தளத்துக்கு
ReplyDelete//starjan said...
ReplyDeleteவாங்க தல என் தளத்துக்கு
//
கண்டிப்பாக தல