உலக வரலாற்றில் ஒரு உன்னதப் படமான enter the dragon பல வழிகளிலும் நமது உள்ளங்களிலும் உணர்வுகளிலும் கலந்து நின்று கொண்டிருக்கிறது. ப்ரூஸ் லீ அவர்களின் மார்ஷியல் ஆர்ட் கலையை அழகாக மார்க்கெட்டிங் செய்து வெற்றியடைந்திருப்பார்.
அவருக்குப் பின்னர் எத்தனை சண்டைக் கலைஞர்கள் திரையுலகில் நுழைந்திருந்தாலும் லீ யின் வெற்றியைப் பெற்ற கலைஞர்கள் குறைவு. பெரும்பாலான சண்டைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டும் வண்ணம் நிறைய நடித்திருக்கிறார்கள். உண்மையாகவே சண்டை போட்டு அதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் ப்ரூஸ் லீயின் வழி தனி வழி.. அவர் மக்களுக்குப் புரியும் வண்ணம் சண்டைகள் அமைத்திருப்பார். பெரும்பாலான கருப்பு பெல்ட் காரர்களுக்கு இந்த சூத்திரம் தெரியாததால் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஜாக்கி சான் ப்ரூஸ் லீயின் வழியைப் பின் பற்றி அவருக்கென்று தனி காமெடி வழியைப் பின் பற்றிய பின்பே வெற்றி அடைய முடிந்தது.
எண்டர் தி டிராகன் படத்தில் ப்ரூஸ் லீயிடம் ஜாக்கி சான் அடிவாங்கும் காட்சி
எண்டர் தி டிராகன் படத்தின் கதை
சென்ற நூற்றாண்டில் பார்த்தது. அப்போது எனக்குப் புரிந்த அளவில் கதையைத் தருகிறேன்.
லீ ஒரு திறமையான குங்ஃபூ வீரர். அவருக்கு உலக அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த போட்டியை நடத்துபவர் லீயின் குருவிடம் படித்தவர்தான். உலகின் பெரிய கொள்ளைக் கூட்டத்தலைவர்களில் ஒருவராக விளங்குபவர். அவரை அழிக்க வேண்டும் என்று குருநாதர் கேட்டுக் கொள்கிறார்.
அந்த நேரத்தில் அவருக்கு ஒரு தெரிகிறது. லீயின் தங்கையை கற்பழிக்க முயற்சி செய்த கூட்டம் இதே கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்தப் போராட்டத்தில் லீயின் தங்கை தற்கொலை செய்து கொள்கிறாள்.
லீ வில்லனின் தீவுக்குள் சென்று வில்லனது மது,மாது தொழில் வகையறாக்களைக் கண்டறீந்து கடைசியில் வில்லனோடு சண்டைபோட்டு அழிக்கிறார். அவருக்கு வெள்ளைக்காரர் ஒருவர் உதவி செய்கிறார். ஆனால் டைட்டிலில் வெள்ளைக்காரர் பெயர்தான் முதலில் வந்ததாக நினைவு. ஒருவேளை இன்று படத்தைப் பார்த்தாலும் நமக்கு அவ்வளவுதான் புரியும்.
சில சண்டைக்காட்சிகள்
இந்தப் படத்திலிருந்து தமிழுக்கு பல படங்கள் எடுத்திருக்கிறார்கள். தங்கையின் தமக்கையின் மரணத்திற்குக் காரணமானவனைப் பழிவாங்கும் கதைகள் ராமாயணத்திலிருந்தே இருந்தாலும் பெரிய ஒற்றுமையோடு வந்த சில திரைப்படங்களை நாம் பார்ப்போம்
பாயும் புலி:-
ரஜினியின் கண்முன்னே ரஜினியின் தங்கை கொல்லப் படுகிறார். இந்த நிகழ்வு நடக்கும்போது ரஜினி சராசரி மனிதனாக இருக்கிறார். அதன்பிறகு குருகுலத்தில் சேர்ந்து சண்டைப் பயிற்சிகள் பெறுகிறார். இவர் போன்றே அந்த குருகுலத்தில் ஜெய்சங்கரும் இருக்கிறார். இருவருக்கும் இறுதிப் போட்டி நடக்கிறது.
பழிவாங்க ரஜினி வில்லனின் கோட்டைக்குள் நுழைகிறார். அங்கே வில்லனுக்கு உதவியாக ஜெய்சங்கர் இருக்கிறார். அடுத்த சிலகாட்சிகளில் ரஜினியைப் புரிந்து கொண்டு உதவ இருவரும் வில்லனை காலி செய்கிறார்கள். கதையை மிகவும் முயற்சித்து தமிழ் படுத்தி இருந்தாலும் மார்ஷியல் ஆர்ட் கற்றுக் கொடுப்பதாக காட்டி இருப்பார்கள். என்னைப் போன்ற சராசரி ரசிகனுக்கு தென்கிழக்கு ஆசிய நாட்டு படங்களில் காட்சிகளை அப்படியே காப்பி அடித்ததாகவே தோன்றியது. அதுவும் ராதாவின் உடை, குடும்பம் போன்றவை அந்த ஊர் கலாச்சார பின்னனியிலேயே அமைந்திருக்கும்.
நான் மகான் அல்ல:-
இதுவும் கூட ஒரு பழிவாங்கும் கதைதான். நீதி மன்றத்தில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் காட்சி.
இந்தப் படத்திலும் ரஜினியின் தங்கையை மானபங்கப் படுத்த முயல்வார்கள்.
இறுதிக்காட்சியில் ரஜினியும் நம்பியாரும் சண்டை போடுவார்கள். அந்தச் சண்டையைப் படிக்கும் முன் இந்தச் சண்டையைப் பாருங்கள்
ப்ரூஸ் லீ படத்தில் வில்லன் கத்திகளால் பின்னப் பட்ட கையுறை அணிந்து சண்டை போடுவது போல நம்பியாரும் கையுறை அணிந்துதான் சண்டை போடுவார். அதைப் போலவே கத்தியை எடுத்து வீசுவார். அது கதவில் குத்தி நிற்கும். பின்னர் கண்ணாடி மாளிகையில் சண்டை போடுவார்கள். ப்ரூஸ்லீ படத்தைப் பார்த்ததாலோ என்னவோ ரஜினி எல்லா கண்ணாடிகளையும் வேகமாக உடைத்துவிடுவார். பின்னர் நம்பியாரை ஓங்கிக் குத்த ப்ரூஸ்லீயின் வில்லன் போலவே நம்பியாரும் கதவில் குத்தி நிற்கும் ஈட்டியில் சிக்கி உயிரை விட்டுவிடுவார்.
நான் சிவப்பு மனிதன் படத்தில் கூட ரஜினியின் தங்கை கற்பழிக்கப் பட்டு தற்கொலை செய்து கொல்வது போல காட்சிகள் அமைந்திருக்கும் சிலகால இடைவெளியில் வந்த ரஜினி படங்கள் ஓரே படத்திலிருந்த காட்சிகளுடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ்:-
இவரை சின்ன ப்ரூஸ்லீ என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்களாமே
//இவரை சின்ன ப்ரூஸ்லீ //
ReplyDeleteIt appears that he is well deserved for it!
//. ப்ரூஸ்லீ படத்தைப் பார்த்ததாலோ என்னவோ ரஜினி எல்லா கண்ணாடிகளையும் வேகமாக உடைத்துவிடுவார்.//
ReplyDeleteஹா ஹா..உங்க டச் தல...
தல எழுதம் போதே அடுத்து என்ன எதிர் பார்ப்பார்கள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு எழுதறா மாதிரி இருக்கு..
ReplyDeleteகடைசில ச்சே தனுஷ் பத்தி சொல்லாம விட்டுட்டாரேன்னு நெனக்கும் போது அவர் ஃபோட்டோ...
பின்னாடி யாரு ?? சோதிகாவா??? :-)
ReplyDelete//பழமைபேசி said...
ReplyDelete//இவரை சின்ன ப்ரூஸ்லீ //
It appears that he is well deserved for it!
//
வருகைக்கும் நன்றி தல
//கடைக்குட்டி said...
ReplyDelete//. ப்ரூஸ்லீ படத்தைப் பார்த்ததாலோ என்னவோ ரஜினி எல்லா கண்ணாடிகளையும் வேகமாக உடைத்துவிடுவார்.//
ஹா ஹா..உங்க டச் தல...
//
நன்றி தல
//கடைக்குட்டி said...
ReplyDeleteதல எழுதம் போதே அடுத்து என்ன எதிர் பார்ப்பார்கள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு எழுதறா மாதிரி இருக்கு..
கடைசில ச்சே தனுஷ் பத்தி சொல்லாம விட்டுட்டாரேன்னு நெனக்கும் போது அவர் ஃபோட்டோ...
//
இது மக்களாட்சி நடைபெறும் இடம் தல
//கடைக்குட்டி said...
ReplyDeleteபின்னாடி யாரு ?? சோதிகாவா??? :-)
//
நம்பவே முடியலதானே தல
தல,
ReplyDelete//சென்ற நூற்றாண்டில் பார்த்தது// அடேங்கப்பா. உங்க ஞாபக சக்தி அபாரம் போங்க.
//தமக்கையின் மரணத்திற்குக் காரணமானவனைப் பழிவாங்கும் கதைகள் ராமாயணத்திலிருந்தே இருந்தாலும்// தல டச்.
//ப்ரூஸ்லீ படத்தைப் பார்த்ததாலோ என்னவோ ரஜினி எல்லா கண்ணாடிகளையும் வேகமாக உடைத்துவிடுவார்// சென்ற கமெண்ட் அப்படியே ரிபீட்டு.
//தனுஷ்:-
இவரை சின்ன ப்ரூஸ்லீ என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்களாமே// நல்ல வேலை, இந்த கொடுமையை எல்லாம் பார்க்காமல் ப்ரூஸ்லீ'யும் அவர் பையனும் இறந்து விட்டார்கள். இருந்தால் மறுபடியும் இறந்து இருப்பார்கள்.
//King Viswa said...
ReplyDeleteதல,
//சென்ற நூற்றாண்டில் பார்த்தது// அடேங்கப்பா. உங்க ஞாபக சக்தி அபாரம் போங்க.
//
நன்றி தல...,
நலல பதவு
ReplyDeleteஅண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..எப்படி கண்டு பிடிச்சீங்க? உக்கார்ந்து யோசிப்பீங்களோ?
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteஎண்டர் தி ட்ராகன் நல்ல ஜனரஞ்சகப் படம் என்பதில் சந்தேகமில்லை. இவனை புருசு லீ இப்படி அடிச்சா நல்லா இருக்கும், என நாங்கள் முன் வரிசையில் இருந்து எண்ண, அப்படியே அடியாட்களினை கூவிக் கூவி அடிப்பார் அவர். படத்தில் ஜிம் கெலி எனும் அஃப்ரோ அமெரிக்கரும் புருசு லீக்கு நட்பாக இருந்து, அடி வாங்கி இறப்பார். கடைசிக் காட்சியில் வில்லனின் கூர் நகங்கள் கொண்ட பொருத்தும் கை ஒர் கட்டையில் குத்திக் கொண்டு நிற்பது நினைவில் இருக்கிறது.
வே ஆஃப் தி டிராகன் எனும் படத்தில் புருசு லீ, சாக் நொரிஸுடன் மோதும் இறுதிச் சண்டைக் காட்சி அபாரமானது. அதிலும் ஒர் பூனை மியாவ் என்று கத்தியதும் அம் மோதல் ஆரம்பமாகும் என்று நினைக்கிறேன்.
நல்லதொரு நினைவூட்டல்.
//இது நம்ம ஆளு said...
ReplyDeleteநலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
//
வந்து விட்டோம் தல..,
வாழ்த்துக்கள்
//முக்கோணம் said...
ReplyDeleteரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..எப்படி கண்டு பிடிச்சீங்க? உக்கார்ந்து யோசிப்பீங்களோ?
//
நன்றி தல..,
//கனவுகளின் காதலன் said...
ReplyDeleteநல்லதொரு நினைவூட்டல்.
//
வருக்கைக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி தல
தல
ReplyDeleteஎங்க தல ஐ பற்றி எழுதலியா !
//starjan said...
ReplyDeleteதல
எங்க தல ஐ பற்றி எழுதலியா !
//
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
"கண்ணு இடுங்குனவனெல்லாம் ப்ரூஸ் லீ இல்ல!"
ReplyDelete-கமல்ஹாசன்(படம்-விருமாண்டி)