Sunday, May 10, 2009

சக பதிவர்களின் உதவி தேவை

எனக்கு இந்த சூழலில் மற்ற பதிவர்களின் உதவி தேவைப் படுகிறது.

நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் கிடையாது. சின்ன வயதில் இருந்த எழுத்து ஆர்வத்தில் மிச்ச சொச்சம் வைத்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

முடிந்தவரை யார் மனதையும் நோகடிக்காமல் எழுத வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.

எனது இந்தப் பதிவு எழுதும்போது சற்று வித்தியாமாக இருந்தது. இருந்தாலும் நண்பர்கள் அதில் பல நல்ல சிந்தனைகள் இருந்ததாகவே பின்னூட்டங்கள் இட்டு இருந்தனர். நண்பர் கிருஷ்ணா அதில் சில விஷயங்கள் நெருடல் கொடுப்பதாக எழுதி இருந்தார். உடனே அதை சரி செய்தும் விட்டேன்.



இரவு பத்து மணி அளவில் பார்த்த போது ஏறக்குறைய எதிர்மறையான விமர்சனத்துடன் ஒரு பதிவரின் பின்னூட்டம் இருந்தது. பின்னூட்டம் என்றால் எதிர்ம்றையாகக் கூட இருக்கலாம் என்ற நிலையில் அதற்கு எனக்குத் தெரிந்தவரையில் சற்று நகைச்சுவையாகவே பதிலளித்து இருந்தேன்.

இந்த நிலையில்

அவரது வலைப் பூவில்


சில நேரங்களில் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதறாங்க...

இது மாதிரி...
MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

//என்ன சொல்ல வரீங்கன்னு புரியலே. மாட்டையும், அம்மாவையும் எதுக்கு வீனா கலக்கி ஒரு பதிவு?//


என்று ஒரு இடுகையில் நடுப்பகுதியில் எழுதி யிருக்கிறார். இப்படி ஒரு எதிர்மறையான விமர்சனத்துடன் (அதுவும் பதிவரைப் பற்றி பதிவரின் எழுதும் தன்மையைப் பற்றி) ஒரு இடுகைக்கு அறிமுகம் அவசியமா?

எனக்கு சக பதிவர்களின் உதவி தேவைப் படுகிறது.

1. எனக்கு இப்போது ரோஷம் வரலாமா.?

2.ரோஷம் வந்தால் நான் என்ன செய்வது?

3.அப்படி ரோஷப் படுவதால் ஏற்படும் நல்லவிளைவுகள்தான் என்ன?

4.இப்படி ஒரு அறிமுகத்துடன் ஒரு தொடுப்பு கொடுத்ததால் அவருக்கு நன்றி சொல்லலாமா?

5.இதை கண்டு கொள்ளாமல் விட்டால் என்ன நிகழும்?

24 comments:

  1. ச்சும்மா லூஸ்ல வுடுங்க...

    ReplyDelete
  2. //எனக்கு சக பதிவர்களின் உதவி தேவைப் படுகிறது./

    கண்டிப்பா தல

    //1. எனக்கு இப்போது ரோஷம் வரலாமா.?//
    வரத்தேவையில்லை.
    திங்களை......
    ஞாயிற்றை கைமறைப்பார் இல்
    என்ற பழமொழிகளை நினைவில் கொள்க

    //2.ரோஷம் வந்தால் நான் என்ன செய்வது?//
    ஒன்றும் செய்ய வேண்டாம்

    //3.அப்படி ரோஷப் படுவதால் ஏற்படும் நல்லவிளைவுகள்தான் என்ன?//
    ஒன்றும் கிடையாது

    //4.இப்படி ஒரு அறிமுகத்துடன் ஒரு தொடுப்பு கொடுத்ததால் அவருக்கு நன்றி சொல்லலாமா?//
    நன்றி சொல்லுங்கள். அப்படியே உங்கள் விளக்கத்தை

    //5.இதை கண்டு கொள்ளாமல் விட்டால் என்ன நிகழும்?//
    கண்டு கொள்ளவேண்டும். ஆனால் உங்கள் நிலையை விளக்கினால் போதும்

    don't label as malevolance actions that can be attributed to ignorance

    ReplyDelete
  3. நன்றி பிராட்வே பையன் சார்

    புருனோ சார்

    அப்படியே செய்து விடுகிறேன்

    ReplyDelete
  4. //2.ரோஷம் வந்தால் நான் என்ன செய்வது?//

    ஆட்டோ அனுப்பிடலாமா தல ம்ம்ன்னு சொல்லுங பிரிச்சு மேஞ்சுடுவோம்

    ReplyDelete
  5. புருனோவை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  6. //சில நேரங்களில் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதறாங்க...//

    பதிவு என்றால் இப்படித்தான் எழுத வேண்டும்; இதைத்தான் எழுத வேண்டும்; இதையெல்லாம் எழுதக் கூடாது என்று வரையறை வைத்துள்ளீர்களா நீங்கள் (Vinitha)...?

    அப்படிப்படி வைத்திருந்தால்... பதிவுகளின் முன்னோடி நீங்கள் என்றால் தயவு செய்து அந்த வரையறைகளை எங்களுக்குக் கொடுங்கள். எங்களைப் போன்ற புதிய பதிவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

    பதிவு என்பது எங்கள் மனத்தில் உதிப்பனவற்றை, எங்களுக்கே உரிய கோணத்தில், ஏதோ எங்களுக்குத் தெரிந்த மொழி நடையில் பதிந்துவிட்டுச் செல்கிறோம். அதில் ஏதேனும் பிழைகளோ, தவறான புரிதலோ இருப்பின் மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது பின்னூட்டம் இடுங்கள். இதை விட்டுவிட்டு, ஏதோ அறிவு ஜீவி உங்களால் தான் தரமான பதிவுகளை இட முடியும் என்கிற ரீதியில் விமர்சனப் பதிவு இடாதீர்கள். அதனால், எங்களைப் போன்ற அனுபவமற்ற பதிவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

    "சில பதவுகள்" என்ற தலைப்பில் புதிய இடுகையை இடும் நீங்கள், 'பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆச்சு.' என்று தொடங்கி... மற்ற பதிவர்கள் மெனக்கெட்டு பதிந்த பதிவுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறீர்கள். இது தான் தரமான பதிவுக்கு வரையறையா?

    எங்களைப் போன்ற துவக்க நிலைப் பதிவர்களுக்கு நீங்கள்தான் (http://vinthawords.blogspot.com/2009/05/blog-post.html) வழிகாட்ட வேண்டும்.

    //1.எனக்கு இப்போது ரோஷம் வரலாமா.?

    2.ரோஷம் வந்தால் நான் என்ன செய்வது?//

    நீங்கள் டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை. படைப்பாற்றல் வறட்சியின் காரணமாக வாதிடுபவர்களுக்கு மெளனம்தான் சரியான பதிலடி. நேர்மையான விமர்சனங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

    - குளோபன்
    (globen.wordpress)

    ReplyDelete
  7. தல,

    சில பேர் எப்பவுமே இப்படித்தான் இருப்பாங்க. அவங்களுக்கு பதிவை பற்றிய விஷய ஞானம் கம்மி.

    பதிவ முழுசா படிக்காம, தலைப்ப மட்டும் பார்த்து விட்டு, நுனிப்புல் மேய்ந்து அவங்களாவே ஏதாவது நினைத்து கொண்டு அதை போய் ஊர் முழுவதும் சொல்லும் இதைப் போன்ற நபர்களுக்கு நாட்டில் பஞ்சமில்லை.

    அவங்களுக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேங்குறது: When you Assume, You Make an Ass out Of You and Me.

    இதே மாதிரி ஒரு விஷயம் எங்க காமிக்ஸ் வலைப்பூக்களிலும் நடந்தது. முதலில் ஒரு தடவை அமைதியாக கூறிப்பார்த்தோம். அப்படியும் திருந்தாதல் ஜஸ்ட் இக்னோர் செய்து விட்டோம். டோடல் இக்னோர்.

    1. எனக்கு இப்போது ரோஷம் வரலாமா.? = தேவை இல்லை தல. புத்தர் சொன்ன மாதிரி, அவருடைய கருத்த நாம அக்சப்ட் பண்ணா தான் அது நமக்கு, இல்லை என்றால் அது சொன்னவர்களுக்கே என்ற பாலிசி தான் பெஸ்ட்.

    2.ரோஷம் வந்தால் நான் என்ன செய்வது? = டோடல் இக்னோர்.

    3.அப்படி ரோஷப் படுவதால் ஏற்படும் நல்லவிளைவுகள்தான் என்ன? = ஒன்றும் இல்லை.

    4.இப்படி ஒரு அறிமுகத்துடன் ஒரு தொடுப்பு கொடுத்ததால் அவருக்கு நன்றி சொல்லலாமா? = கண்டிப்பாக ஒரு முறை நன்றி / மறுப்பு தெரிவித்து விட வேண்டும். இல்லை என்றால் சில பல வேளைகளில் தொடரும் வாய்ப்பு உண்டு. அதனால் முதல் மற்றும் கடைசீ முறையாக ஒரே ஒரு Communication செய்யுங்கள்.

    5.இதை கண்டு கொள்ளாமல் விட்டால் என்ன நிகழும்? = தொடரலாம். அதனால் முதல் மற்றும் கடைசீ முறையாக ஒரே ஒரு Communication செய்யுங்கள்.

    ReplyDelete
  8. தல,

    அந்த //முதல் மற்றும் கடைசீ முறையாக ஒரே ஒரு Communication செய்யுங்கள்// இந்த பதிவுதான். அதனால இனிமே டோடல் இக்னோர் தான்.

    ReplyDelete
  9. நண்பா,

    தனிமனிதத் தாக்குதலும், முறையற்ற சொற்களும் இல்லாத வரையிலும், நாம எதுக்கும் சலனப்படத் தேவை இல்லை. மேற்கொண்டு விளக்கம் கொடுக்கலாம், அதுவும் உங்களுக்கு அவசியமானதா தோணிச்சுன்னா....

    ReplyDelete
  10. வருகைக்கும் ஆதரவுக்கு நன்றி

    பிரியமுடன்.........வசந்த் சார்.,

    முரளிகண்ணன் சார்...

    saravanan சார்.,

    King Viswa சார்.,


    பழமைபேசி சார்.,

    ReplyDelete
  11. // எனக்கு இப்போது ரோஷம் வரலாமா.? //

    என்னண்ணா இது....இப்பிடி யாருமே பதில் சொல்லமுடியாதபடி ஒரு கேள்வி..

    எல்லா பதிவர்குள்ளும் இருக்கின்ற குழப்பத்தை அருமையான கேள்விகளாய் கேட்டீர்கள்

    ரசித்தேன்....

    ReplyDelete
  12. இது எல்லாம் ரொம்ப சாதாரணம் சார்..

    இப்ப இதை இப்படியே விட்டுருங்க.. பதிவு எழுத விஷயம் இல்லாத போது அவங்க கடைல என்ன விக்கிராங்கன்னு பாத்துட்டு வந்து அதுக்கு ஒரு எதிர் பதிவு போடுங்க..

    எங்களுக்கும் பொழுது போகும்..

    ReplyDelete
  13. லூசுல விடுங்க டாக்டரே....!
    மேட்டர்,தானா சால்வ் ஆயிடும்...!

    ReplyDelete
  14. //இப்படி ஒரு அறிமுகத்துடன் ஒரு தொடுப்பு கொடுத்ததால் அவருக்கு நன்றி சொல்லலாமா?//

    நன்றி சொல்லுங்கள் நண்பரே , ஆனால், உங்கள் எழுத்துகளை மாற்றாதீர்கள். மிக அருமையாக உள்ளது.

    ReplyDelete
  15. வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி

    Kanna சார்..,

    லோகு சார்..,

    டக்ளஸ்....... சார்..,


    தேனீ - சுந்தர் சார்.,

    ReplyDelete
  16. ரெண்டு நாளா நான் இந்த ஏரியா பக்கம் வராட்டி.. என்ன தல..
    இதெல்லாம் ஒரு மேட்டரா நமக்கு???

    சுமித்ராவுக்கும் சுமனுக்கும் என்ன ஆச்சோன்னு நான் இருக்கேன்.. வினிதா வனிதாவுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிக்கிட்டு...

    ReplyDelete
  17. உங்க பதிவு நல்லாஇல்லாட்டி நானே உங்கள திட்டி இருப்பேன்... நல்லா இருக்குன்னு சொன்ன இந்த வாயால நல்லா இலாஇன்னும் சொல்லலாம்..

    ஆனா அதுகு அவசியம் வரல...

    இந்தப் ப்ரச்சனையில் உங்க மேல தப்பு இருக்குறதா தோணல...

    ச்சும்ம அவங்க ஒரு க்வுஜ போட்டுருக்காங்க...
    நாம வேலய பாப்போம் வாங்க!!!

    ReplyDelete
  18. //கடைக்குட்டி said...

    ரெண்டு நாளா நான் இந்த ஏரியா பக்கம் வராட்டி.. என்ன தல..
    இதெல்லாம் ஒரு மேட்டரா நமக்கு???

    சுமித்ராவுக்கும் சுமனுக்கும் என்ன ஆச்சோன்னு நான் இருக்கேன்.. வினிதா வனிதாவுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிக்கிட்டு...
    //


    வருகைக்கு நன்றி தல..,

    சுமித்ராவுக்கு வேரொரு இடத்தில் திருமணம் ஆகிவிட்டது. அதற்குப் பிற்கு தான் கதை ஃபிளாஷ் பேக் தத்துவத்தில் தொடங்குகிறது.

    ஆனால் சுபமாகத்தான் முடியும் என்று உறுதி அளித்து கதை போய் கொண்டிருக்கிறது.

    ஆதரவுக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  19. தலைவரே .... இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா?...
    சப்பை மேட்டர் இது ... ப்ரீயா உடுங்க தலைவரே....

    ReplyDelete
  20. நானும் ரவுடி தான்யா......நான் ஜெயிலுக்கு போறேன்....ஜெயிலுக்கு போறேன் ....எல்லாரும் பத்துக்குங்க.....அது மாதிரி தான் இது சும்மா விட்டு தள்ளுங்க டாக்டர்,காமெடி பீசு....

    ReplyDelete
  21. ஆதரவுக்கு நன்றி

    ஜெட்லி சார்..,

    சே.வேங்கடசுப்ரமணியன். சார்..,

    ReplyDelete
  22. நண்பர் சுரேஷ்,

    இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன். எனது உண்மையான கருத்தை கேட்பீர்கள் என்றால், எப்படி நம் மனதிற்கு தோன்றிய விஷயங்களை பற்றி தடையில்லாமல் நாம் பதிகிறோமோ, அதே போல பதிவுலகில் எடுத்து வைக்கும் எந்த ஒரு பதிவிற்கும் விமர்சனங்கள் வருவதை நம்மால் தடுக்க முடியாது. அந்த விமரிசனங்கள் ஆக்கபூர்வமான எண்ணத்துடனோ, அல்ல தனி மனித துவேஷ நோக்கோடு இல்லாமல், இருக்கும் வரை அதை பெரிய மனதுடன் ஏத்துக் கொள்வது தானே சிறந்தது?

    இதே மாதிரி காமிக்ஸ் வலைப்பூகளிலும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பாணியில் கருத்திட்டு கொண்டிருந்தவர்கள், கடைசியில் மரியாதை இழந்து நடுத்தெருவில் நிற்கும் கதையும் நடந்திருக்கு. அவர்களை நாம் வெறுப்பதை விட, அவர்களே அவர்களின் செய்கைகளுக்கு தன்னை தானே வெறுத்து ஒதுக்கும் நிலை வரும், வந்திருக்கிறது.

    அப்படி இல்லாமல், நயமாக தான் தன் கருத்தை வினிதா எடுத்து வைத்திருக்கிறார்... எனவே அதற்கு ஒரு நன்றி சொல்லி விட்டு அமர்க்களமாக உங்கள் வேலையை தொடருங்கள் தல....

    எப்பவும் போல உங்களுடைய வித்தியாசமான பதிவுகளை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    ÇómícólógÝ

    ReplyDelete
  23. //Rafiq Raja said...

    நண்பர் சுரேஷ்,
    அப்படி இல்லாமல், நயமாக தான் தன் கருத்தை வினிதா எடுத்து வைத்திருக்கிறார்... எனவே அதற்கு ஒரு நன்றி சொல்லி விட்டு அமர்க்களமாக உங்கள் வேலையை தொடருங்கள் தல..//

    வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி தல..

    பின்னூட்டமாகப் பார்த்தபோது இயல்பாகவே இருந்தது. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கத்தக்கதுதானே..

    தனியாக ஒரு பதிவே போட்டபோது தான் மனம் கொஞ்சம் கஷ்டப் பட்டுப் போனது. அவ்வளவுதான். அனைவரின் ஆதரவின் காரணமாக இயல்நிலைக்கு வந்துவிட்டேன்.

    மீண்டும் நன்றி..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails