Monday, May 25, 2009

ஷாரூக்கின் மகிழ்ச்சி மற்றும் தவறியஆப்பு

ஒரு வழியாக ஐ.பி.எல் போட்டிகள் முடிவடைந்து விட்டன. முடிவுகள் ஷாரூக் கானுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்ற ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி இந்த ஆண்டு வெற்றிக் கோப்பையை வாங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த அணிகள்தான் இந்த ஆண்டு இறுதி போட்டியில் பங்கேற்றன. (இந்த ஹைதரபாத், கொல்கத்தா போன்ற வார்த்தைகள் தேவையில்லாதவை என்று நினைக்கிறேன்.)


ஷாருக்கின் அணி கடைசிக் கட்டத்தில் சென்னை துரத்திப் பிடி(அடி)த்ததில் தாங்களும் சிறந்த அணிதான் என்பதை மீண்டும் காட்டி விட்டனர். செண்டிமெண்ட்டாக அடுத்த ஆண்டு வெற்றிபெறும் வாய்ப்பு வேறு இருக்கிறது. ஷாரூக் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார் என்று நினைக்கிறேன்.

=================================================================

டெக்கான் அணியின் பயிற்சியாளர் லேஹ்மன். உலகக் கோப்பை காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பல வீரர்களும் பெரிய பயிற்சியாளராக வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வெற்றி பெற்ற அணியின் பயிற்சியாளர்களுக்கு கொட்டிக் கொடுப்பதைவிட விளையாட்டுவீரர்களுக்கு பயிற்சியாளராக ஒரு பதவி மாற்றம் அல்லது கூடுதல் பொறுப்பு கொடுக்கலாம். இந்தியாவின் ஸ்ரீகாந்த், சந்தீப் பாட்டில் ஆகியோர் ஏற்கனவே அதை நிரூபித்து இருக்கிறார்கள்.


உள்ளூரில் கூட பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்திய அணி வெற்றிப் பாதையை நோக்கித் திரும்பிய காலகட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் உள்நாட்டுக் காரர்கள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

============================================================

விஜய் மல்லையா அணியின் முதல் ஆட்டம் முடிந்த போது வெற்றிக் காரண்மான கும்ளேவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப் படவில்லை என்று புலம்பி ஒரு இடுகை(சுட்டி) போட்டிருந்தோம். இந்த இறுதி ஆட்டத்தில் வெற்றிக் கிடைக்காவிட்டாலும் ஆட்டநாயகன் விருது கொடுத்துவிட்டார்கள். கிரிக்கெட் உலகின் எம்.ஜி.ஆர். கும்ளே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இறுந்திருக்கும்.

===============================================================

இந்த ஐ.பி. எல் போட்டிகளால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மாற்றங்கள் இந்தச் சுட்டியில் கொடுக்கப் பட்டுள்ளது

=================================================================


கடைசியில் ஐ.பி.எல் போட்டிகளின் மிக முக்கியமான பரிசினையும் அறிவித்திருக்கிறார்கள். 35 வயதான டுனே கொசாட்ஸ் மிஸ்.பாலிவுட்டாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த விருதும் ஐ.பி.எல்லின் ஒரு பகுதிதான். இவருக்கு ஷாருக்கின் நாயகி வாய்ப்பு வழங்கப் படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே நொந்து போயிருக்கும் ஷாருக் கானுக்கு நெருக்குதல் கொடுக்காமல் இருக்கும் பொருட்டோ என்னமோ இந்திப் பட வாய்ப்பு வழங்கப் படும் (நாயகி என்ற உறுதியெல்லாம் கிடையாது ) என்றிருக்கிறார்கள். இளம் சிட்டுகள் சிறகடித்துப் பற்க்கும் இந்திப் பட உலகில் ஐஸ், ஷில்பா போன்றவர்களைவிட வயதான பேரிளம் பெண் நாயகியாக வருகிறார். ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்.

7 comments:

  1. தல,

    மீ த ஃபர்ஸ்ட்டு.

    //இந்த ஹைதரபாத், கொல்கத்தா போன்ற வார்த்தைகள் தேவையில்லாதவை என்று நினைக்கிறேன்.// மிகவும் சரி.

    // கிரிக்கெட் உலகின் எம்.ஜி.ஆர். கும்ளே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்// இதை விட கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறி இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

    //ஏற்கனவே நொந்து போயிருக்கும் ஷாருக் கானுக்கு நெருக்குதல் கொடுக்காமல் இருக்கும் பொருட்டோ என்னமோ இந்திப் பட வாய்ப்பு வழங்கப் படும் (நாயகி என்ற உறுதியெல்லாம் கிடையாது ) என்றிருக்கிறார்கள்// ஹா ஹா ஹா. நல்ல காமெடி.

    ReplyDelete
  2. அடுத்த முறை அப்ப நைட்ரைடர்ஸ் தான் வெற்றி பெறப்போகிறார்கள் என்று கூறுங்கள் :) :)

    கூட மோதப்போவது மும்பை இந்தியன்சா

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    கிங் விஸ்வா சார்

    ReplyDelete
  4. //புருனோ Bruno said...

    அடுத்த முறை அப்ப நைட்ரைடர்ஸ் தான் வெற்றி பெறப்போகிறார்கள் என்று கூறுங்கள் :) :)

    கூட மோதப்போவது மும்பை இந்தியன்சா
    //


    சரியான திட்டமிடுதல் இருந்தால் நடக்கும் தல

    ReplyDelete
  5. திட்டமிடுதல் என்பதை தவறான பொருளில் பார்க்க வேண்டாம் தல..,

    ReplyDelete
  6. ”” கிரிக்கெட் உலகின் எம்.ஜி.ஆர். கும்ளே ”

    அவர் கும்.ஜி.ஆர்...

    ReplyDelete
  7. //சூரியன் said...

    ”” கிரிக்கெட் உலகின் எம்.ஜி.ஆர். கும்ளே ”

    அவர் கும்.ஜி.ஆர்...
    //


    மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளவர்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails