வலைப்பூவில் எழுதுவதில் நம்மைக் கவர்ந்த எழுத்தாளர்களின் சாயல் தென்படுவது இயல்பு. நமக்கு வலைப்பூவை அழைத்த எழுத்தாளாரை பின்பற்றியே எழுதிவருகிறார்கள். சமீபத்தில் பலதொடர்பதிவுகள் போட்டு நண்பர்கள் பலரையும அழைத்து தொடர்பதிவை எழுதச் சொல்கிறார். அதைப் படிப்பவர்கள் எல்லோரும் தொடர்பதிவாக அதைப் போடுகிறார்கள். பொதுவாக ஒத்த கருத்தைக்க் கொண்டவர்களே தொடர்பதிவுக்கு அழைக்கப் படுவதால் அதே போன்ற விமர்சனமே தொடர்ந்து கிடைக்கிறது.
ஒரு வலைப்பூவைப் படிக்கும்போது அதில் உள்ள கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தையும் யாரும் தொடர மாட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட வலைப்பூ பக்கமும் வர மாட்டார்கள். குறைந்தபட்சம் அந்த இடுகையின் பக்கம்.., இதில் விதிவிலக்காக அதிகம்பேர் படிக்கும் வலைப்பூ என்றால் எதிர்கருத்துடைய சில பதிவர்கள் மட்டுமே தொடர்ந்து எதிர்ப்பார்கள். மற்றபடி ஆதரித்து பின்னூட்டம் மட்டுமே பொதுவாக வரும். எதிர்கருத்துடைய பெரும்பாலானாவர்கள் அடுத்த வலைப்பூ பக்கம் சென்றுவிடுவார்கள்
கந்தசாமி விமர்சனம் கூட அந்த வகையில் பார்க்கலாம். முதல்நாளிலியே ஏறக்குறைய இருபத்தைந்துக்கும் மேற்பட விமர்சன இடுகைகளை வாசிக்க நேரிட்டது. பலரும் அடுத்த நாளும் பார்த்துவிட்டு மறக்காமல் விமர்சனம் எழுதுவதிலேயே குறியாக இருந்தனர். இதற்கு முன் வந்த விஜய். அஜித் தின் படங்களுக்கெல்லாம் வராத எண்ணிக்கையில் விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு வந்தன. முதல் சில நாட்கள் வந்த ஒட்டுமொத்த விமர்சங்களை இந்த இடத்தில் பார்க்கலாம்
படம் சரியில்லை என்று நாம் மிகவும் மதிக்கும் பதிவர் எழுதிய பின்னரும் கூட மனசு கேட்காமல் அந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற மனநிலையில் பார்த்துவிட்டு அந்த ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள் பதிவர்கள்.
எனக்கென்னவோ அதே தியரி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வேலை செயகிறதோ என்று தோன்றுகிறது. பெரும்பாலான ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று சொன்னாலும் கூட அடுத்த ஆளும் பார்த்துவிட்டு
ஆமாம் படம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை தோன்றுகிறது.
அதுவும் படம் சரியில்லை என்று சொல்பவர்கள். விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். ஷ்ரேயாவும் சிறப்பாக திறமை காட்டியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு படம் சரியில்லை என்று சொல்கிறார்கள்.
மற்றவர்களும் அந்த ஆசையிலேயே படம் பார்த்துவிட்டு படம் சரியில்லை என்று சொல்லிவிட்டு அவர்களின் பார்வையில் கூடுதலாக சில கருத்துக்களை அள்ளித் தெளித்துவருகிறார்கள்.
பார்ப்போம். நன்றாக இல்லை என்று சொல்லி வரும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படம்பார்த்து விட்டு மேலும் மேலும் குறைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்களோ என்னவோ!
இல்லை காக்க காக்க மாதிரி இந்தப் படமும் தோல்விப்படம் ஆகி அதன் நாயகனும் இயக்குநரும் திட்டுவாங்கியது போல இந்தப் பட ஆட்களும் திட்டு வாங்குவார்களோ!
=======================================================
கந்தசாமி தமிழ் கடவுள்
தமிழ் கடவுளை தோற்கடிக்க தமிழர்கள் விடமாட்டார்கள். திட்டியாவது வெற்றி பெறச் செய்து விடுவார்கள்
=======================================================
இல்லை காக்க காக்க மாதிரி இந்தப் படமும் தோல்விப்படம் ஆகி அதன் நாயகனும் இயக்குநரும் திட்டுவாங்கியது போல இந்தப் பட ஆட்களும் திட்டு வாங்குவார்களோ!]]
ReplyDeleteமெய்யாலுமா ‘தல’
//காக்க காக்க மாதிரி இந்தப் படமும் தோல்விப்படம் //
ReplyDelete??????????
Mail Delivery Subsystem
ReplyDeleteto 3njSeSgsJFbsbe.
show details 5:02 PM (0 minutes ago)
This is an automatically generated Delivery Status Notification
Delivery to the following recipient failed permanently:
drpsureshkumarpalanai@yahoo.com]]
this is coming every time we comment.
Please check the settings there you would have given this email address. Please change to working one.
@நட்புடன் ஜமால்
ReplyDelete@சூரியன்
வருகைக்கும் கருத்தும் நன்றி தல..,
காக்க காக்க படத்தால் நஷ்டம் ஆகிவிட்டதாக தயாரிப்பாளர் இயக்குநரை திட்டியதாக செய்திகள் வந்தன..
valthukala nanba
ReplyDeletenalla improve pannirukeenga
thodarndu kalaka
abt kandhasami very sorry sema mokai
:-)))
ReplyDelete//ஷ்ரேயாவும் சிறப்பாக திறமை காட்டியிருக்கிறார்//
ReplyDeleteஹீ ஹீ....
கந்தசாமி உங்களை விடுற மாதிரி தெரியல தல....
இன்னும் எத்தனை இடுகை தல கந்தசாமி பத்தி?
ReplyDeleteஆமா கந்தசாமி சூப்பர்
ReplyDeleteஇதில் வடிவேலுவின் காமெடி சூப்பர் .
தல: உங்களை இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
ReplyDeleteகருணை காட்டவும் :)
http://timeforsomelove.blogspot.com/2009/09/blog-post_2112.html
//கந்தசாமி தமிழ் கடவுள்
ReplyDeleteதமிழ் கடவுளை தோற்கடிக்க தமிழர்கள் விடமாட்டார்கள். திட்டியாவது வெற்றி பெறச் செய்து விடுவார்கள்//
அட....
உங்க பினிஸிங் புடிச்சுருக்கு...
ReplyDeleteஎனக்குத்தான் சினிமா பார்க்கற பழ்க்கம் இல்லையே..
ReplyDelete****
ஜமால் அண்ணா கருத்தை வழி மொழிகிறேன்..உங்களுக்கு பின்னூட்டம் போடும் போதெல்லாம் அவர் சொன்ன அந்த பிழை செய்தி மின்னஞ்சலுக்கு வருகிறது..
@கார்த்திக் பிரபு
ReplyDelete@T.V.Radhakrishnan
@ஜெட்லி
@பிரியமுடன்...வசந்த்
@Starjan ( ஸ்டார்ஜன்
@வருண்
@ஆ.ஞானசேகரன்
@வழிப்போக்கன்
@லோகு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
//ஜமால் அண்ணா கருத்தை வழி மொழிகிறேன்..உங்களுக்கு பின்னூட்டம் போடும் போதெல்லாம் அவர் சொன்ன அந்த பிழை செய்தி மின்னஞ்சலுக்கு வருகிறது..//
ReplyDeleteஅதை எப்படி சரிசெய்வது நண்பர்களே..,
மிக எளிது...
ReplyDeleteDash Board -> Settings -> Comments டேப் இல் கடைசியில் Comment Notification Email என்று இருக்கும் இடத்தில் சரியான மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள்.. இல்லையெனில் முற்றிலுமாக எடுத்து விடுங்கள்..
உங்களுக்கு இருக்கும் அலுவல்களுக்கு
ReplyDeleteமத்தியில் என்னுடைய கந்தசாமி கருத்தையும் பார்த்துவிடுங்களேன்!
http://apdipodu.blogspot.com/2009/08/30.html