Thursday, September 10, 2009

அரசியலுக்கு வர விஜய்க்கு உள்ள தகுதிகள்

1. விஜய் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த மிகச் சில மனிதர்களில் ஒருவர்.

2.அவரால் எந்த ஒரு இடத்திலும் ஒரு கூட்டத்தைக் கூட்ட முடியும்.

3.அவர் சொன்னால் ரத்தம் தானம் செய்யவும், நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.


4.அவர் தேர்தல்களில் ஓட்டுப் போடுகிறார்.

5.வரிக் கட்டுகிறார்.




மேற்கண்ட காரணங்களைக் கொண்ட அனைத்து நடிகர்களும் தொழிலதிபர்களும், உழைப்பாளிகளும் அரசியலுக்கு வரத்தகுதியானவ்ர்களே..,

கூட்டம் கூட்டுபவர் சொல்லும் கருத்துக்கள் அந்தக் கூட்டத்தினரால் ஏற்றுக் கொள்ளப் படும் வகையில் இருந்தால் தொடர்ந்து கூடுகிறார்கல். குறைந்த பட்சம் பிரியாணியாவது பிடித்தவண்ணம் அமைந்தால் போதும்.

அந்தக் கூட்டத்தினரை மூளைச் சலவை செய்யும் அளவுக்கு பேசத்தெரிந்தால் அரசியலில் கூடுதல் தகுதி உடையவராக கருதலாம். உலக அளவிலேயே இது போன்ற தகுதியுடைய தலைவர்கள் மிகக் குறைவு.


அரசியலுக்கு வரும் மனிதன் படித்தவனாகவோ, அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நடக்கும் நிகழச்சிகள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை கொடுப்பதாக குறைந்த பட்சம் கெடுதல் விளைவிக்கா வண்ணம் இருந்தாலே போதும். அது தனது தவறுகளை திருத்திக் கொண்டாலே போதும், ஒரு சிறந்த மனிதன், தலைவன் உருவாகிவிட முடியும்.

ஆரோக்கியமான அரசியல் நடந்திட அனைத்து குடிமக்களும் அரசியலில் ஈடுபட்டால்தான் சாத்தியமாகும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் மட்டுமல்ல, அவரது ரசிகக் கண்மணிகளும் அரசியலுக்கு வருவார்கள். அப்படிவந்தால் ஓட்டுப் பதிவு கூடும். கள்ள ஓட்டுக் குறையும். குறைந்த பட்சம் அவரது ரசிக கண்மணிகள் அவரவர் ஊரில் அரசியல் நிகழ்ச்சிகளை உற்றுப் பார்ப்பார்கள்.

ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்கள் ஓட்டைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தே தீர வேண்டிய கட்டாயமும் ஏற்படும். விஜய் போன்று நாடறிந்த மக்கள் தனித்தனியாக புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கும்போது திட்டங்கள் மக்களைச் சென்றடையவும், நேர்மை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். '

எனவே விஜய் மட்டுமல்லாது, மக்கள் செல்வாக்கு உள்ள அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும்.

விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்பவர்களும் கூட அரசியலுக்கு வரலாம.

நமக்குத்தான் ஒரு தத்துவம் தெரியுமே

தகுதியுள்ளவை தப்பைப் பிழைக்கும்.
தப்பி வந்தால் தலைவராகி விட்டுப் போகட்டுமே..,

13 comments:

  1. நேர்மையான கருத்துகள்..
    :)

    ReplyDelete
  2. பாவம் மக்கள் என்ன பண்ண
    எல்லா கன்றாவியையும்
    பாக்க வேண்டி இருக்கு
    விஜய் மட்டும் என்ன விதி விளக்கா வாங்க
    இந்த
    காமெடீயையும் ரசிப்போம்

    ReplyDelete
  3. @தீப்பெட்டி
    @நையாண்டி நைனா
    @லோகு
    @புருனோ Bruno
    @மெலோடி மனசு
    @Anbu


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  4. வரட்டும் வரட்டும்! அமெரிக்கா மாதிரி அப்பதான் பொருளாதாரத்தை தூண்டிவிட அவர்களது பணம் உதவும்!

    ReplyDelete
  5. சங்கவிக்கு சோப்புபோட்டவர் காங்கிரஸ்காரர்களுக்கு இனி சோப்புபோடுவார்,

    ReplyDelete
  6. @மணிப்பக்கம்
    @குறை ஒன்றும் இல்லை
    @சம்பத்
    @Anonymous

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  7. அவர்களின் கருப்புபணம் ஏதோ ஒரு வகையில் வெளியாகும் அது நல்லதுக்கோ கெட்டதுக்கோ...

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails