1.இணைய தள மக்களும் வலைப்பூ மக்களும் தங்கள் மின்னஞ்சல், மற்றும் தள முகவரிகள் எங்கே ஹேக் செய்யப் பட்டுவிடுமோ என்ற பய்த்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது கந்த சாமி ஒருவங்கிக் கணக்கையே ஹேக் செய்வது என்பது நமது வலைஞர்களாலே ஜீரணிக்க முடியாத ஒரு காரியமாக அமைந்துவிட்டது. அந்த ஒரு காரணத்தினாலேயே கந்த சாமியை வெறுத்துவிடலாம்.
2. தமிழக போலீஸ் ஒரு சி.பி.ஐ அதிகாரியை உண்மையை ஒப்புக் கொள்ள அவருக்கு பிடித்த பெண்ணை கற்பழிக்கும் அளவுக்கு போவார்கள் என்பதாக காட்சி அமைத்திருப்பது கோடாணு கோடி தமிழ் மக்களுக்கு பிடிக்கவில்லை
(சி.பி.ஐ.அதிகாரி அதை நம்புவதுபோலவும், கற்பழிப்பைத் தடுப்பதற்காக உண்மையை ஒப்புக் கொள்வது போலவும் காட்சி அமைத்திருப்பதால் இந்தமாதிரி வழக்கம் இருப்பதுபோல அழுத்தமாக கருத்தினை பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் இதற்கெல்லாம் மனசு விடவேண்டியதில்லை. இதைவிட அலைபேசி வெளிச்சத்தில் அறுவைசிகிச்சையை பார்த்தவர்கள் அல்லவா நாம்)
3. நம்து நாயகி எப்போதும் குடும்ப குத்துவிளக்காக இருப்பதே ரசிகர்களின் விருப்பம். சிவாஜி படத்தில் கூட ஆரம்பம் முதல் கடைசிவரை அவரை குடும்ப குத்துவிளக்காகவே காட்டி இருப்பார்கள். வீட்டில் இருக்கும்போது தாவணி அணிந்திருப்பார். கணவனின் நண்மைக்காக காதலைத் துறப்பார்; அவருக்காக அவரையே காட்டிக் கொடுப்பார். இந்த படத்தில் குத்துவிளக்கு எஃபக்ட் சரியாக போதாமல் இருப்பதும் ஒரு காரணம்.
4.முனுசாமி என்ற மண்ணின் மனிதரை வில்லனாக ஏற்க யாருக்கும் விருப்பம் இல்லை. மெக்ஸிகோ போனாலும் மேலூர், மேல்கரைப் பட்டி மொழிகளில் பேசும் ஒரு மனிதரை பணம் மாற்றம் செய்ய உதவும் ஒரு மா மனிதரை வில்லனாக பார்க்கவிரும்பவில்லை. சிவாஜி படத்தில் அவரை நாயனுக்கு உதவும் பாத்திரத்தில் உபயோகப் படுத்தி இருப்பார்கள். தவிர அதில் இன்னொரு மெல்லிய மாற்றமும் செய்திருப்பார்கள்.
5.கண்களை, கைகளை கட்டிக் கொண்டு கந்தசாமி போடும் சண்டை தமிழில் உள்ள பிறமுண்ணனி நடிகர்களின் ரசிகர்களுக்கு பொறாமையை கிளரிவிட்டுவிட்டது.
6.ஒரு பக்கம் செயலிழந்தால் மற்றொரு பக்கம் வாய் இழுத்துக் கொள்ளும் போன்ற மருத்துவ செய்திகளையெல்லாம் கேட்கும்போது ஒரு கருத்துவிளக்கப் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திவிட்டதாம். ஏற்கனவே கருத்து கந்தசாமி பாத்திரம் தமிழகத்தில் பிரபலம்.
7.முதன்முதலாக சாட்டிலைட் டி.வி பார்த்த தலைமுறைக்கு ஜெமினி டி.வி.யும். கிருஷ்ணா- விஜயசாந்தி ஜோடியும் மனத்தை விட்டு நீங்காதது. அந்த கிருஷ்ணாவை விசில் விழுங்கிய பாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.
8.கந்த்சாமியை சூப்பர் ஹீரோவாக காட்ட இயக்குநரே விரும்பவில்லை. அதனால்தான் கம்பிகளையும், நாடா ஒலிப்பானையும் உபயோகப் படுத்தியிருக்கிறார். அதாக கந்தசாமியை பிடிக்காத முதல்நபர் அதன் இயக்குநர்தான்
9.சேவல்முகமூடி அணிபவர்களை கிண்டலடித்து வடிவேலுவை மொக்குவதால் அதன்பாதிப்பில் சேவல் முகமூடி அணிந்துவரும் கந்தசாமியையே மக்கள் மொக்க ஆரம்பித்துவிட்டார்கள்
10.ஒருகாட்சி முடிவடைய வெகுநேரம் ஆகிவிடுவதால் அடுத்த காட்சிக்கு திரையரங்க வாசலில் காத்திருக்கும் நிலையை எரிச்சலாக மக்கள் காட்டிவருகிறார்கள்
உங்களுக்கு பிடிச்சிருக்கானு சொல்லவே இல்லை?!
ReplyDelete// பழமைபேசி said...
ReplyDeleteஉங்களுக்கு பிடிச்சிருக்கானு சொல்லவே இல்லை?!//
இப்போது முடிவுசெய்ய முடியவில்லை தல, இன்னும் ரெண்டுமுறை பார்த்தால்தான் பிடிச்சிருக்கான்னு சொல்ல முடியும். அநேகமாக பிடிக்காதுண்ணு நினைக்கிறேன். எதுக்கும் ரெண்டு மூணுமுறை பார்த்துவிட்டு சொல்றேனே!
கந்தசாமி, உங்களை ரொம்பப் பாதிச்சிருச்சு போல! நிறைய இடுகை போட்டுத் தள்ளுறீங்க! அப்புறம் சந்தடி சாக்கில கேப்டனை வாரியதை வன்மையாக் கண்டிக்கிறேன். ஹிஹி!
ReplyDeleteYesterday afternoon I went to Kandaswamy movie with some friends. INOX Theatre was full, with families and kids. It is a decent entertaining movie. Only the elite "blogging" class would have missed.
ReplyDeleteநீங்க நல்லவரா.. கெட்டவரா... (கந்தசாமிக்கு )
ReplyDeleteஅருமையான அலசல் டாக்டர் சார்..
நான் இன்னும் படம் பார்க்கவில்லை,... படம் உங்களுக்கு எப்படினு சொல்லுங்க டாக்டர்..?
ReplyDelete// சங்கா said...
ReplyDeleteகந்தசாமி, உங்களை ரொம்பப் பாதிச்சிருச்சு போல! நிறைய இடுகை போட்டுத் தள்ளுறீங்க! அப்புறம் சந்தடி சாக்கில கேப்டனை வாரியதை வன்மையாக் கண்டிக்கிறேன். ஹிஹி!//
:))
//Raju said...
ReplyDeleteYesterday afternoon I went to Kandaswamy movie with some friends. INOX Theatre was full, with families and kids. It is a decent entertaining movie. Only the elite "blogging" class would have missed.//
:))
// லோகு said...
ReplyDeleteநீங்க நல்லவரா.. கெட்டவரா... (கந்தசாமிக்கு )
அருமையான அலசல் டாக்டர் சார்..//
:)
// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteநான் இன்னும் படம் பார்க்கவில்லை,... படம் உங்களுக்கு எப்படினு சொல்லுங்க டாக்டர்..?//
சிட்டிசன் மாதிரி இருக்கு தல..,
:):)
//சிட்டிசன் மாதிரி இருக்கு தல..,//
ReplyDelete!!
:) :)
என்னத்தை சொல்லி..என்னத்தை பண்ண..!!!
ReplyDeleteஅதைச் சொல்லுங்க ...கந்தசாமிய இயக்கியவருக்கே பிடிக்கலையாக்கும் ?! அப்போ சரி தான்..சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க.படத்தை விட உங்க போஸ்ட் நல்ல காமெடி .இனி படம் பார்க்க போவேனோ !!!
ReplyDeleteஇன்னும் படம் பார்க்கல! உங்க உழைப்புக்கு ஒரு ஓட்டு!
ReplyDelete// அதாக கந்தசாமியை பிடிக்காத முதல்நபர் அதன் இயக்குநர்தான்//
ReplyDeleteஹி ஹி ஹி
பாவம் தல இதுல மாட்டுனது விக்ரமுதான்
கந்தசாமியை ஒரு தடவை பாக்கலாம் .
ReplyDeleteபிடிக்கிறதுக்கு ஆயிரம் காரணம் சொல்லாம்
ஆனா பிடிக்காததுக்கு ....
தல கந்தசாமி உங்களை ரொம்ப தாக்கி இருக்காரு
ReplyDeleteபோல.... போய் மொதல்ல ஒரு சீட்டு எழுதி போடுங்க..
தல கந்தசாமி உங்களை ரொம்ப தாக்கி இருக்காரு
ReplyDeleteபோல.... போய் மொதல்ல ஒரு சீட்டு எழுதி போடுங்க..
@புருனோ Bruno
ReplyDelete@T.V.Radhakrishnan
@மிஸஸ்.தேவ்
@தேவன் மாயம்
@பிரியமுடன்...வசந்த்
@ஜெட்லி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே
@mix
ReplyDelete@உலவு.காம் (ulavu.com)
செய்து விடுவோம் நண்பர்களே
குழந்தைகளுக்கு மியாவ் மியாவ் பாட்டு சொல்லி கொடுத்த ஸ்ரேயாவுக்காகவே படம் பார்க்கலாம் தல,
ReplyDelete/துக்கும் ரெண்டு மூணுமுறை பார்த்துவிட்டு சொல்றேனே!/
ReplyDeleteஇது கிண்டலா சொன்னதா. நிஜம்மா சொன்னீங்களா.
// சுந்தர் said...
ReplyDeleteகுழந்தைகளுக்கு மியாவ் மியாவ் பாட்டு சொல்லி கொடுத்த ஸ்ரேயாவுக்காகவே படம் பார்க்கலாம் தல,//
ஓரே கல்லுல ரெண்டு மாங்கா...,
//வானம்பாடிகள் said...
ReplyDelete/துக்கும் ரெண்டு மூணுமுறை பார்த்துவிட்டு சொல்றேனே!/
இது கிண்டலா சொன்னதா. நிஜம்மா சொன்னீங்களா.//
:))