காமன் மேன் யாரு எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.பதிவுகளைப் படிக்கும்போது நானும் கூட பாமரத்தன்மையுடன் கூடிய நடிகர் யார்? என்று யோசித்துப்பார்த்தேன்.
அப்போது எழுந்த சந்தேகம் பாமர மனிதன் தான் காமன் மேனா? கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை சராசரி மனிதன் தான் காமன் மேன் என்பவனா? அப்போது அவரேஜ் மேன் என்பவன் யார்? காமன் மேன் தான் அவரேஜ் மேனா... இல்லை ஆவரெஜ் மேன் தான் காமன் மேனா? காமன் மேன் அபவ் ஆவரேஜ். இல்லை பிலே ஆவரேஜ்.?
எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். காமன் மேன் பாத்திரத்திற்கு யார் பொறுத்தமாக இருப்பார்?
1. எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். தமிழகத்தின் எல்லா வீட்டிலும் அதே மாதிரி ஒருவர் இருக்க வேண்டும்.
2.அநியாயங்களைப் பார்த்து பொங்க வேண்டும். அதை எதிர்த்து பக்கம் பக்கமாக பேச வேண்டும். பறந்து பறந்து உதைப்பதாக கற்பனை செய்து கொள்ளவேண்டும்.
3.ஆங்கிலம் பேச வேண்டும். அதில் தமிழ் தெரிய வேண்டும். பேசும் தமிழிலும் ஆங்கிலம் தெரிய வேண்டும்.
4. நகைச்சுவையாக பேசத்தெரிய வேண்டும். அல்லது நகைச்சுவையாக பேசுபவர்களோடு சுற்ற வேண்டும். அல்லது தாங்கள் பேசுவதுதான் நகைச்சுவை என்ற எண்ணமாவது இருக்க வேண்டும்
5.வெள்ளையாக கொழுகொழுவெண்று இருக்கும் பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிக்க வேண்டும்.
6.கந்தையானாலும் கசக்கிக் கட்டு கூழானாலும் குழித்துக் குடி பழமொழிக்கு ஏற்ப எந்த வேலை செய்தாலும் நட்சத்திர ஓட்டலில் சாப்பிட வேண்டும். விளையாட்டு வீரர்களின் காலணிகள் அணிய வேண்டும். இறக்குமதி செய்யப் பட்ட அழகு சாதனப் பொருட்களை உபயோகப் படுத்த வேண்டும்.
7.உலகத்திலேயே மோசமான மனிதர்கள் தங்கள் அண்டைவீட்டுக் காரர்கள் தான் என்று சொல்ல வேண்டும். அது பக்கத்து நாடாகக்கூட இருக்கலாம்.
8.கற்பு, பண்பாடு பற்றி வகுப்பெடுக்க தெரிந்திருக்க வேண்டும்.
9.எம்.ஜி.யாரை பின்பற்றுவதாகச் சொல்ல வேண்டும்.தங்கள் வய்துக்கேற்ப சிம்பு,தனுஷ் போன்றவர்களைக்கூட தங்கள் தலைவர்களாகச் சொல்லலாம்.
10. தனக்குப் பின்னால் ஒரு கூட்டமே இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வேண்டும். தன்னைக்காக்க தன் தலைவன் வருவான் என்று சொல்ல வேண்டும்.
இது போன்ற குணாதியங்களை பெருமளவு நிறைவேற்றும் வலிமை வாய்ந்தவராக தமிழ் திரையுலகில் ராமராஜன் மட்டுமே தென்படுகிறார். பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைத்து பார்ப்பதுபோல் விஜயகாந்த் தென்படுகிறார்.
எனவே காமன்மேன் பாத்திரத்திற்கு பொறுத்தமாக தென்படும் விஜயகாந்த் அல்லது ராமராஜன் ஆகியோரை வைத்து மீண்டும் ஒருமுறை காமன்மேன் படத்தை எடுக்க வேண்டும்,
யாராவது எடுக்கத்தயாரா?
ஒரு பின்னூட்டம் கூட காணோம். காமன் மேன் பின்னூட்டம் போடணுமே..,
ReplyDeleteநான் அவன் இல்லை
ReplyDeleteபடிச்சுட்டு பின்னூட்டம் இடாமல் போவதும் காமன் மேனின் பழக்கம்.
ReplyDeleteபடிக்கும் போதே நெனச்சேன், ராமராஜனாத்தான் இருக்கும்னு!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
டாக்டர் சார். காமன் மேன் பாத்திரப்படைப்பு இங்கே சிலரால் விமர்சிக்கப்படவில்லை. அதில் கமல் பொருந்துகிறாரா என்பதைத்தான் பலர் விவாதித்திருக்கிறார்கள். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. வெட்னஸ்டே படமே என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. கமல் அந்த பாத்திரத்தை கண்டிப்பாக "overcook" செய்திருப்பார் என்று உள் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
ReplyDeleteஎனக்கென்னவோ, கமல் இந்தப் படத்தில் நடித்ததற்கு பதிலாக நாசர் அவர்களை காமன் மேன் பாத்திரத்தில் நடிக்கவைத்து விட்டு இவரே இயக்கி இருக்கலாம். எனக்கென்னவோ, நடிகன் கமலை விட, திரைக்கதையாசிரியன், வசனகர்த்தா, டைரக்டர் கமலைப் பிடித்திருக்கிறது.
ஹே தலைப்பை பார்த்து விட்டு படிக்க ஆரம்பிக்கும் போது ராமராஜனன தான் நான் நினைத்தேன்.
ReplyDeleteஇப்படிக்கு
காமன் வுமன்
@DHANA
ReplyDelete@வடகரை வேலன்
@பயங்கரவாதி டாக்டர் செவன்
@முகிலன்
@அமுதா கிருஷ்ணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
@முகிலன்
ReplyDeleteஆமாம் தல, காமென் மேன் பாத்திரத்திற்கு ராமராஜன் தான் பொருத்தமாக இருப்பார் என்று சொல்கிறேன். மற்றவர்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
எனவே காமன்மேன் பாத்திரத்திற்கு பொறுத்தமாக தென்படும் விஜயகாந்த் அல்லது ராமராஜன் ஆகியோரை வைத்து மீண்டும் ஒருமுறை காமன்மேன் படத்தை எடுக்க வேண்டும்,
ReplyDelete:)
அருமைங்க....
ReplyDeleteநான் டெம்ப்லேட்ட சொன்னேன்..:))
அவரே தான்
ReplyDelete@இது நம்ம ஆளு
ReplyDelete@குறை ஒன்றும் இல்லை
@Anonymous
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
//காமன் மேன் தான் அவரேஜ் மேனா... இல்லை ஆவரெஜ் மேன் தான் காமன் மேனா?//
ReplyDeleteயப்பா...என்ன ஆச்சு? நல்லாத்தான போய் கிட்டு இருந்துச்சு :-)) கலக்குங்க சுரேஷ் :-))
நீங்க சொல்றது இங்கிலிபீசு 'காமன்'-ஆ இல்லை தமிழ் 'காமன்' மேனா?!
ReplyDeleteவிளக்கம் ப்ளீஸ்!
// சிங்கக்குட்டி said...
ReplyDelete//காமன் மேன் தான் அவரேஜ் மேனா... இல்லை ஆவரெஜ் மேன் தான் காமன் மேனா?//
யப்பா...என்ன ஆச்சு? நல்லாத்தான போய் கிட்டு இருந்துச்சு :-)) கலக்குங்க சுரேஷ் :-))//
நன்றி தல..,
// (Mis)Chief Editor said...
ReplyDeleteநீங்க சொல்றது இங்கிலிபீசு 'காமன்'-ஆ இல்லை தமிழ் 'காமன்' மேனா?!
விளக்கம் ப்ளீஸ்!//
ஓ.., ரஜினி முன் மீனா பாடிய பாட்டல்லவா அது!
காமன் மேனுக்கு இத்தனை qualification வேணுமா? சொல்லவே இல்லை?
ReplyDeleteஎனது வலைத்தளத்திற்கு வருகை தந்தற்கும் கருத்தினுக்கும் நன்றி.
ReplyDelete//கல்யாணி சுரேஷ் said...//
ReplyDeleteநன்றி தல..,
தல
ReplyDeleteஅசத்துறீங்களே :) :) :)
// புருனோ Bruno said...
ReplyDeleteதல
அசத்துறீங்களே :) :) :)//
நன்றி தல..,