Sunday, September 27, 2009

ரசிகன் 27.9.09

ரசிகர் மன்றம் ஏன்? யார் நடத்துகிறார்கள் ?

வளரிளம் வாலிபர்கள்தான் ரசிகர் மன்றத்தின் தூணாக விளங்குகிறார்கள். அவர்கள் ஏன் ரசிகர் மன்றத்தில் சேருகிறார்கள் என்று யோசித்து இருக்கிறீர்களா?

உண்மையில் அவர்கள் ஏதாவது சாதிக்கத் துடிக்கும் சிங்கங்ளின் சங்கமமாகவே இருக்கும்.

தமிழகத்தின் ஆரம்ப கட்ட ரசிகர்மன்றங்களை நோக்கிப் பார்த்தாலே தெரியும். ஒரு அமைப்பு தேவைப் படுபவர்கள், அந்த அமைப்பின் மூலம் பெயர் வாங்க நினைப்பவர்கள் நாடும் இடமாகவே ரசிகர்மன்றம் இருக்கிறது. ஓரளவு படிப்பும் வேலையும் இருப்பவர்கள் தங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சங்கம் மூலமாகவோ அமைப்பு மூலமாகவோ ஏதாவது செய்கிறார்கள்.


சிலருக்கு வேலையும் வீடும் மட்டுமே கண்தெரியும். அவர்கள் ஏன் இதெல்லாம் செய்யவில்லை என்ற கேள்வியெல்லாம் வேண்டாம்.

ஜாதிய ரீதியான அமைப்பு வைத்திருப்பவர்கள், அதில் இறங்கி தங்கள் தலைவர் மூலமாக ஏதாவது விழாக்கள் நடத்துகிறார்கள். ஏதாவது உருப்படியாக செய்ய முடிகிறது.

பணபலம் இருப்பவர்கள் அந்த அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளிலும், உடல்பலம் இருப்பவர்கள் அதைப் பயன்படுத்தியும் பெயரைச் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

இது இல்லாமல் வசதி மட்டும் படைத்தவர்கள் என்றால் உலகளாவிய சங்கங்களில் கிளைகளை அமைத்துக் கொண்டு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறார்கள்.

பேச்சுத்திறமையும், சாதுர்யமும் இருப்பவர்கள் அரசியலில் புகுந்து ஏதாவது ஒரு இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள்.

ஆனால் சரியான படிப்பு, பொருளாதார வசதி, பின் புலம், நல்ல வருமானம் தரக்கூடிய வேலை என்ற தேவைகள் நிறைவேறாமல், ஆனால் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியோ அல்லது பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணமோ கொண்ட இளைஞர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு வழியாக இருப்பது ரசிகர் மன்றம்தான். எந்த ஒரு அமைப்பில் நீங்கள் நுழைந்தாலும் செயல்பாடுகளுக்கு தாய் அமைப்பின் வழிதான் சென்றாக வேண்டும். ரசிகர் மன்றங்களில் அப்படி இல்லை. விரும்பினால் தாய் அமைப்பின் வழியில் செல்லலாம். இல்லையென்றால் மன்றத்தின் விருப்பம்தான்.

சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம் என்று ஒன்று அமைத்துக் கொள்ளலாம். அதனை பதிவும் செய்து கொள்ளலாம். அந்த மன்றத்தின் மூலமாக நீங்கள் விரும்பும் நபருக்கு பிறந்த நாள் கொண்டாடலாம். அந்த அமைப்பின் மூலமாக நீங்கள் விரும்பும் நபருக்கு வாழ்த்துத் தெரிவித்து பெரிய பெரிய பேனர்கள் வைத்துக் கொள்ள முடியும்.

அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தரலாம். மூக்குக் கண்ணாடிகள் வாங்கித்தரலாம். அதை ஒரு விழாவாக எடுக்க முடியும்.

ஊரில் உள்ள கோவிலில் விழா எடுக்க நினைத்தால் கூட அந்த ஊர் அல்லது சாதிப் பெரியவர்கள்தான் அதைப் பற்றிய முடிவு எடுக்க முடியும். அதையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறைதான் செய்ய முடியும். ஆனால் ரசிகர் மன்றம் மூலமாக எப்பொழுது வேண்டுமானாலும் அதை செய்ய முடியும். இரண்டு பேர் ரத்த தானம் செய்தால் அதை படம் எடுத்து செய்தித்தாள்களில் செய்தியாக வர வைத்து காலரைத்தூக்கிக் கொண்டு சுற்ற முடியும்.

இதற்காக வெல்லாம்தான் வளரிளம் பருவத்தினர் மன்றங்களில் சேர்கிறார்கள். அந்த மன்றத்திலேயே விரும்பும் அளவு பேரும் புகழும் கிடைத்தால் அந்த மன்றத்திலேயே காலம் தள்ளுகிறார்கள். அல்லது அடுத்த கட்டத்திற்குச் சென்று வாழ பழகிக் கொள்கிறார்கள்.

அப்படியே ஏதாவது புதுமையாகச் செய்ய நினைப்பவர்கள் பாலாபிஷேகம், போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களுக்கு கடவுளும் ஒன்றுதான்; தங்கள் தலைவனும் ஒன்றுதான்.


உண்மையில் பெரிய பெரிய அமைப்பினர் செய்யும் நற்பணிகளுக்கும் அவர்களின் வருமானத்தையும் கணக்கில் கொண்டால்

இந்த ரசிகர் மன்றத்தினர் தங்கள் வருமானத்திற்கு மிக அதிகமான அளவிலேயே செலவு செய்துவருகிறார்கள்.

இவர்களுக்கு மட்டும் ஒருங்கிணைக்க ஒரு தலைவன் அமைந்தால்...............

இவர்களில் பெரும்பான்மை ஆனவர்களுக்கு வேலை மற்றும் நல்ல கல்வி இல்லாத காரணத்தாலோ என்னவோ பெரும்பாலும் இவர்களைப் பற்றி நல்ல எண்ணங்களே அமைவதில்லை.

9 comments:

  1. நியாயமான ஆதங்கம்.

    ReplyDelete
  2. நான் , அகில இந்திய பழனி வள்ளல் டாக்டர் சுரேஷ் நற்பணி மன்ற ‍உறுப்பினர் .

    ReplyDelete
  3. //சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம் என்று ஒன்று அமைத்துக் கொள்ளலாம்.//


    ஏன்??? எதுக்கு இப்படி???

    ReplyDelete
  4. @வானம்பாடிகள்
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @ஜெட்லி
    @T.V.Radhakrishnan


    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  5. நேர்மையான பதிவு. இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  6. // இய‌ற்கை said...

    நல்ல சிந்தனை//

    நன்றி தல..,

    ReplyDelete
  7. // r.selvakkumar said...

    நேர்மையான பதிவு. இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து.//

    நன்றி தல..,

    மீள்பதிவில் ஆழப்படுத்தி விடலாம்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails