Sunday, May 3, 2009

அசல் கார்பந்தயம் (நான்காம் பாகம்)

முன்கதை சுருக்கம்:-மர்லின் மன்றோ போன்ற போசில் வெள்ளைக்கார கலெக்டர் பெண்மனியை படம்வரைந்து கொடுத்து அவர் மனதில் இடம் பிடிக்கிறார் சின்ன தல. நாட்டின் வறுமையும், வறட்சியையும் பற்றி கலெக்டரிடன் எடுத்துக் கூறுகிறார் பெரிய தல.

==============================

பெரிய தல, சின்ன தல பற்றி விரிவாகப் படிக்க

முதல் பகுதி,

இரண்டாம் ப்குதி,

மூன்றாம் பகுதியை சொடுக்கி படியுங்கள்

====================================

பெரிய தல சொல்லிக் கொண்டிருக்கும் போதே சின்ன தலயின் கண்களும் வெள்ளை அதிகாரியின் கண்களும் ஒன்றையொன்று கலக்கின்றன. அங்கே சப்தம் இல்லாத ஒரு யுத்தம் நடக்கிறது.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் அரசின் பார்வையாளராக பெண்கலெக்டரின் தந்தையும் முன்னாள் கலெக்டரும் வந்து சேருகிறார்.

அவர் சின்ன, பெரிய தல களைப் பார்த்து அதிர்கிறார்.

இந்த பையன் இவ்வளவு சிவப்பாக இருக்கிறானே...

உடனே வெள்ளைக்காரப் பாட்டி வந்து பெரிய தலக்கும் சின்னத்தலக்கும் உள்ள உறவு பற்றி சொல்கிறார். அவருக்கும் தலைகளுக்கும் உள்ள உறவு பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்.)
அதே நேரத்தில் அவர்களது தந்தைகள் பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்)

வெள்ளைக்காரர்களால் தங்கள் தந்தையர் இருவரும் அடிமைப் பட்டு இருப்பதை அறிந்த சின்ன தல குமுறுகிறார்.

பெரிய தல:- நம்ம அப்பாக்கள், அம்மாக்கள் மட்டுமல்ல தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, மாமன், மாமன் மகன் அத்தை, அத்தை மகன், மகள், பெரியப்பாவுக்கு பெண்கொடுத்தோர், பெண் எடுத்தோர், சித்தப்பாவுக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், அப்பப்பா, அப்பம்மா, அம்மாப்பா, அம்மம்மா, வருவோர், போவொர், வருவதைப் பார்ப்போர், பார்க்காதோர் எல்லோரையும் இந்த வெள்ளையர்கள் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்களை உடனே இவர்களை கைது செய்ய வேண்டும்

சின்ன தல:- அண்ணே விடுதலை செய்ய வேண்டும்.

வெள்ளைக்காரப் பாட்டி:- பேரப் பிள்ளைகளா.. வெள்ளைக்கார ராஜா ஒரு போட்டி வெச்சிருக்கார். அச்சு அசலா யார் ஜெயிச்சாலும் அவர்கள் கேட்கும் பரிசைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். வடக்கே நடந்த போட்டியில் கூட கிரிக்கெட் போட்டியில் ஜெயித்து ஒரு நாடு சுதந்திரம் வாங்கியிருக்கிறார்கள்.

பெண்கலெக்டர்( சின்ன தலயின் ஆள்தான்):- உங்களுக்கு கார் பந்தயம்.

மேலிட பார்வையாளர்:- ஹா,,,,, ஹா,,,, இன்னும் மாட்டுவண்டிக்கே டயர் வைக்காத பசங்க....... இவங்களாவது கார் ஓட்டுவதாவது... (சொல்லிக் கொண்டிருக்கும் போதே...)

சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.

அதிர்ச்சியில் வெள்ளைக்காரர்களின் கூடாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் உறைந்து போகின்றனர்.

பெரிய தல:- தம்பி உன்ன வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவச்சது வீண்போகலடா..... (புதிதாகப் படிப்பவர்கள் இங்கே சுட்டவும்)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

படத்தின் முக்கிய காட்சியாக கார்பந்தயம் நடைப்பெறுகிறது. அந்தக் காலத்து கார்களைப் பயன்படுத்தி போட்டி நடக்கிறது. சின்னத்தல ஒரு பழைய காரை சைக்கிள் பெடலை சேர்த்துவைத்து ஒரு புதிய தொழில்நுட்பத்தில் வண்டி ஓட்டுகிறார். அவரது கார் சுலபமாக இமயமலை பகுதிகளைச் சுற்றி வந்து வெற்றிவாகை சூடுகிறது.

அடுத்ததுதான் பிரச்சனையே....

மேலிட பார்வையாளர்கள் தல உபயோகப் படுத்தியது காரே இல்லை என்று சொல்கிறார்கள்.

அப்போது வெள்ளைக்காரப் பட்டி ஒரு பழம்பெரும் புத்தகத்தை கொண்டுவருகிறார். அந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்தது. அதில் கூறியுள்ள இலக்கணப் படி சின்ன தல ஓட்டிவந்தது கார்தான் என்பதை ஊருக்கு உணர்த்துகிறார்.
=====================================

கடைசியில் சின்ன தல பெரிய தல ஆகியோரின் நாடும் நாட்டு மக்களும் அவர்களின் பெற்றோரும் விடுதலை செய்யப் படுகிறார்கள்.

21 comments:

  1. தல,

    தலையோட பொறந்த நாள் அன்னிக்கு இத போட்டு இருக்கலாமே?

    //சின்னத்தல ஒரு பழைய காரை சைக்கிள் பெடலை சேர்த்துவைத்து ஒரு புதிய தொழில்நுட்பத்தில் வண்டி ஓட்டுகிறார். அவரது கார் சுலபமாக இமயமலை பகுதிகளைச் சுற்றி வந்து வெற்றிவாகை சூடுகிறது.// நீங்க தெலுகு சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதப் போனால் கொள்ளையாக சம்பாதிக்கலாம்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  2. //சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.
    அதிர்ச்சியில் வெள்ளைக்காரர்களின் கூடாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் உறைந்து போகின்றனர்.
    பெரிய தல:- தம்பி உன்ன வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவச்சது வீண்போகலடா..... //

    தீனா பாதிப்பு இன்னும் போகல போல இருக்கே?

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  3. //King Viswa said...

    தல,

    தலையோட பொறந்த நாள் அன்னிக்கு இத போட்டு இருக்கலாமே?
    //

    அஜித் கையில் அனுஷ்கா; ஷாலினியின் பார்வையில்அப்படின்னு ஒரு பதிவு போட்டுருந்துமே தல

    ReplyDelete
  4. //King Viswa said...
    தீனா பாதிப்பு இன்னும் போகல போல இருக்கே?
    //


    வருகைக்கும் கருத்துக்களுக்கும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஆதரவுக்கும் நன்றி தல

    ReplyDelete
  5. தல,

    அந்த பதிவை நான் படிச்சேன் (வழக்கம் போல உங்க எல்லா பதிவையும் படிக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்).

    ஆனா, இந்த பதிவு சூப்பர் என்பதால் அன்றைக்கு இட்டு இருக்கலாம் என்றேன்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  6. தலைவரே,

    இதப் படிச்சதும் நீங்கெல்லாம் (நாங்களும்தான்) அந்த காலத்துல போட்ட வெரைட்டி ஸ்கிட்டெல்லாம் ஞாபகத்துக்கு வருது!

    ஆனா கடசீல அவசர அவசரமா முடிச்சுப்புட்டீங்களே!

    அடுத்தது வேட்டைக்காரன் கதைய எப்பப்போடுவீங்க? எப்பப்போடுவீங்க?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. //King Viswa said...

    (வழக்கம் போல உங்க எல்லா பதிவையும் படிக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்).//

    நன்றிகள் கோடி தல

    ReplyDelete
  8. //பயங்கரவாதி டாக்டர் செவன் said...

    இதப் படிச்சதும் நீங்கெல்லாம் (நாங்களும்தான்) அந்த காலத்துல போட்ட வெரைட்டி ஸ்கிட்டெல்லாம் ஞாபகத்துக்கு வருது!
    //

    நன்றி தல

    ReplyDelete
  9. //பயங்கரவாதி டாக்டர் செவன் said...

    அடுத்தது வேட்டைக்காரன் கதைய எப்பப்போடுவீங்க? எப்பப்போடுவீங்க?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.//

    நல்லதொரு யோசனை..,

    நாளையே துவக்கிவிடுகிறேன்

    பய்ங்கரவாதிக்கும் ஒரு பாத்திரம் உண்டு..,

    ReplyDelete
  10. தல,

    என்ன கொடுமை இது?

    //பய்ங்கரவாதிக்கும் ஒரு பாத்திரம் உண்டு..,//

    உங்களுடைய அடுத்த அறுபத்தி ரெண்டாயிரத்து முன்னுத்தி நாலு பதிவுகளிலும் வந்து மீ த பஸ்ட்டு என்று கமெண்ட் போடப் போகும் கிங்'குக்கு ஒரு ரோல் இல்லையா?

    அய்யகோ, தமிழ் கூறும் நல்லுலகம் இந்த சக சதிகாரர்களின் கூட்டு சதியை தாங்குமா?

    பதில் சொல்லுங்க தல, இல்லன்ன உங்க வீட்டு வாசல்ல வந்து டி குடிப்பேன். (ஏதோ என்னால முடிஞ்சது).

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  11. சுரெஷ்!! தமிழ்மணம் முழுக்க உங்கள் வாசம்தான் வீசுது!!! பூந்து விளையாடுங்க!!

    ReplyDelete
  12. ஓட்டு போட்டாச்ச்சு!

    ReplyDelete
  13. //King Viswa said...

    உங்க வீட்டு வாசல்ல வந்து டி குடிப்பேன். (ஏதோ என்னால முடிஞ்சது).

    கிங் விஸ்வா.
    Carpe Diem.

    //


    வேட்டைக்காரன் பாத்திரத்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் தல

    ReplyDelete
  14. //thevanmayam said...

    சுரெஷ்!! தமிழ்மணம் முழுக்க உங்கள் வாசம்தான் வீசுது!!! பூந்து விளையாடுங்க!!
    //

    நன்றி சார்

    ReplyDelete
  15. தல, பழைய இடுகை வெளியீடு ஆயிடுச்சோ? அமெரிக்கத் தேர்தல்ன்னு??

    ReplyDelete
  16. //உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும்//

    கருத்தே இல்லைன்னா? அவ்வ்வ்...

    ReplyDelete
  17. அண்ணாச்சி

    இதெல்லாம் டூ மச் :) :)

    ReplyDelete
  18. தல,

    //வேட்டைக்காரன் பாத்திரத்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் தல//

    ஏதோ தண்டனை வாங்கின மாதிரி இருக்கு தல. அப்படி ஏதும் பண்ணி நம்ம (இல்லாத) இமேஜ்'ஐ டேமேஜ் பண்ணிடாதீங்க.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  19. //பழமைபேசி said...

    தல, பழைய இடுகை வெளியீடு ஆயிடுச்சோ? அமெரிக்கத் தேர்தல்ன்னு??
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    தொழ்ற்நுட்பக் கோளாறு சரிசெய்து விட்டேன்.

    நீங்கள் அதைக்கண்டிப்பாகப் படித்தே தீர வேண்டும்.

    ReplyDelete
  20. //புருனோ Bruno said...

    அண்ணாச்சி

    இதெல்லாம் டூ மச் :) :)
    //

    ஆமா தல நாலு பாகம் ஆகிப் போச்சு

    ReplyDelete
  21. //King Viswa said...

    தல,

    //வேட்டைக்காரன் பாத்திரத்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் தல//

    ஏதோ தண்டனை வாங்கின மாதிரி இருக்கு தல. அப்படி ஏதும் பண்ணி நம்ம (இல்லாத) இமேஜ்'ஐ டேமேஜ் பண்ணிடாதீங்க.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்
    //


    கண்டிப்பாக மகிழ்ச்சியடைவீர்கள் தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails