Tuesday, June 16, 2009

கமல்-விஜய் விருதுகள் ஒரு குழப்பம்

முன்குறிப்பு:- இந்த இடுகை கமல் அவர்களின் திறமையைப் பார்த்து வியந்துதான் எழுதப் படுகிறது.

விஜய் விருதுகள் கொடுத்துவிட்டார்கள். ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வழங்கப் படும் விருதுகளாக இந்த விருதுகள் கருதப் படுகின்றன.

ஆனாலும் ரசிகர்களால் ஏகோபித்த வரவேற்பு பெற்ற ஏகன், குருவி போன்ற படங்களுக்கு ஒரு விருது கூட கொடுக்கப் படவில்லை. இதென்ன ஜன்நாயகம் என்று சக நண்பர்கள் குமுறிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கமலுக்கு மட்டும் நான்குவிருதுகள்.

திரைக்கதைக்கு, அபிபான நடிகருக்கு, வில்லனுக்கு, நகைச்சுவையாளருக்கு, என வழ்ங்கி யுள்ளனர். கமல் இதெற்கெல்லாம் தகுதியானவர்தான். திரைக்கதைக்கு கொடுத்ததைப் பற்றி மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. படம் பிடிக்காதவர்கள் கூட பத்துக் கதாபாத்திரங்களை வைத்து ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைத்ததை பிரமித்துத்தான் பார்த்திருப்பார்கள்.

வில்லனுக்குக் கொடுத்துள்ளார்கள். அதில் ஃப்ளெட்சர் பாத்திரத்தை வில்லனாகக் கருதியிருக்கிறார்கள். அவர் கதையின் வில்லன் அல்ல, திரைப் படத்திற்கே அவர் வில்லன். கொடூரமான நகைச்சுவையான, வெகுளியான, பைத்தியக்காரத்தனமான வில்லன்களையே பார்த்த நமக்கு எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாத அமெரிக்க பாத்திரம் மிகவும் புதியது. எங்கே கோவிந்துவை போட்டுத் தள்ளுவதற்குப் பதிலாக படத்தையே போட்டுத் தள்ளிவிடுவாரோ என்று ரசிகர்களையே நடுங்க வைத்த பாத்திரம்தான் அந்த அமெரிக்கர். அவர் நடை உடை பாவனைகளைப் பார்த்த பிறகுதான் சுல்தான் தி வாரியர் படம் எடுக்கும் எண்ணம் கூட தோன்றியிருக்கலாம். அந்த வகையில் வில்லன் விருதுக்கு பொறுத்தமானவர் அந்த அமெரிக்கர்.


நகைச்சுவையாளர்

உண்மையில் இந்தப் படத்தில் சிறந்த நகைச்சுவையாளராக விளங்கியவர்களில் அமெரிக்க வில்லனுக்கும், உயர்ந்த மனிதருக்கும் கடும் போட்டி நிலவிவந்தது. அமரிக்கரின் நடை உடை முக பாவனைகளில் கொடுரம் காட்ட முயற்சி செய்தாலும் நகைச்சுவையே மேலோங்கி நின்றதை யாரும் மறக்க முடியாது. அதைவிட உயந்தவரின் பாத்திரமே ஒரு நகைச்சுவை. அதில் அவரது ஒப்பனை நகைச்சுவையில் ஒரு மைல்கல், அவரது குரல் நகைச்சுவையின் உச்சகட்டம். இவர்களையெல்லாம் விடுத்து அதை பல்ரம் நாயுடுவுக்கு கொடுத்திருக்கிறார்கள் அதுவும் கூட நகைச்சுவைதான்.

நாயக நடிகர்

வழக்கமாக யாருக்கு டூயட் இருக்கோ அவர்தான் நாயகன் என்ற எண்ணத்தில் படத்தைப் பார்த்தால் கோவிந்த் தான் நாயகன். கோவிந்த்க்கு டூயட் இல்லையே, அப்ப சிங்தான் நாயகன், மல்லிகா கூட கல்யாணம் ஆனதால் அமரிக்கர்தான் ஹீரோ..

ஆனால் உண்மையான ஹீரோ யார்..,

உண்மைகளைக் கண்டறிபவர். நாட்டிற்கு நன்மைதரும் துப்பறியும் பணியில் இருப்பவர். எவ்வளவு சிரமம் வந்தாலும் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடியவர் பலராம் நாயுடு, அவர்தான் இந்தப் படத்தின் நாயகனாகவும் அபிமான நடிகராகவும் இருக்க முடியும்.

அசின் பலவந்தப் படுத்தப் ப்டும்போது கூப்பிட்ட குரலுக்கு விளக்கு, மற்றும் ஒலிபெருக்கிகளோடு வந்து காப்பாற்றுகிறாரே வின்செண்ட் பூவராகவன் அவர்தான் ஹீரோவா, அவர்தான் மண்பற்றி பேசுகிறார். தனக்கு தீமை செய்தவனுக்கு கூட நன்மை செய்கிறார். அதுவும் உயிரைக் கொடுத்து.., இப்படியெல்லாம் நன்மை செய்தால் அவர் இரண்டாம் நாயகனாகவே இருக்க முடியும்.

எண்டர் தி டிராகன் மாதிரி தங்கை மரணத்திற்கு பழிவாங்க வருகிறாரே.., ஒருவேளை அவர்தான் நாயகனா?

பழைய சிம்பு படங்களில் ஒரு வசனம் வரும்.

பேசறது நான். பேச வைக்கரது அவரு.
அப்போதே டைட்டில் கார்டு விழும்,

அதுபோல் பேச வைச்சாரே அவர்தான் ஹீரோவா.. எல்லாமே கமல்தான் என்பதால் குழப்பம் இல்லாமல் விருதினை அவருக்கு வழங்கி இருக்கிறார்கள்.

எப்பூடி!

ஆனாலும்கூட இந்தச் சுட்டியில் உள்ள பதிவில் உள்ளதை கமல் யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை.

26 comments:

  1. மக்களின் அபிமான நடிகர் விருதுதான் கமலுக்கு கிடைத்திருக்கிறது. படம் தசாவதாரம். எந்த கேரக்டருக்கு என விருதில் அறிவிக்கவில்லை. ஆகவே அது கோவிந்தோ? ஆராவமுதனோ? கலிபுல்லாவோ? நம்பியோ ?இல்லை சிங்காகவோ இருக்கலாம்.

    சிறந்த நடிகர் விருது வாரணம் ஆயிரம் சூரியாவுக்குத்தான் கிடைத்தது. அங்கேயும் சூரியா இரண்டு பாத்திரங்கள் யாருக்கு கிடைத்தது என அறிவிக்கவில்லை.

    ReplyDelete
  2. சுரேசு ஒவ்வொரு இடுகைக்குக்கீழ் ஹிட் காண்பிக்கும் விட்கெட் கைவசம் இருக்கா!

    ReplyDelete
  3. ஓட்டு தமிழ்மணத்தில் போட்டாச்சு. தமிலிசில் அப்புறம்!!

    ReplyDelete
  4. Tala,

    Please check my comments for my previous post in my blog..:)

    ReplyDelete
  5. //அவர் நடை உடை பாவனைகளைப் பார்த்த பிறகுதான் சுல்தான் தி வாரியர் படம் எடுக்கும் எண்ணம் கூட தோன்றியிருக்கலாம்.//

    "சுல்தான் தி வாரியர்" ஒரு அனிமேடெட் மூவி. இந்த நடை உடை பாவனை எல்லாம் ரஜினிக்கு ஒத்து வராது. கூடுமானவரை ரஜினியின் ஒரிஜினல் ஸ்டைலை பிரேம் டு பிரேம் கொண்டு வரவே முயற்ச்சிகின்றார்கள்.

    ReplyDelete
  6. //ஒலிபெருக்கிகளோடு வந்து காப்பாற்றுகிறாரே ஆராமுவதன் அவர்தான் ஹீரோவா//

    வின்செண்ட் பூவராகவந்தானே அவருடைய பேரு படத்துல...

    தல..

    ஆனா இந்த முயற்சிய யோசிச்சாலே சிலிர்க்குது தல..

    கமல் கமல்தான்.... :-)

    ReplyDelete
  7. ரெண்டிலேயும் ஓட்டு போட்டாச்சி

    ReplyDelete
  8. கமல் கலைத்தாய் பெற்றெடுத்த இளையமகன்

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வந்தியத்தேவன் சார்,

    தமிழினி சார்,

    thevanmayam சார்.

    ReplyDelete
  10. //thevanmayam June 16, 2009 9:19 AM

    சுரேசு ஒவ்வொரு இடுகைக்குக்கீழ் ஹிட் காண்பிக்கும் விட்கெட் கைவசம் இருக்கா!//

    வைத்திருந்தேன். இப்போது காணவில்லை. தேடிப்பார்க்கிறேன் சார்

    ReplyDelete
  11. //வினோத்கெளதம் June 16, 2009 10:11 AM

    Tala,

    Please check my comments for my previous post in my blog..:)
    //

    பார்த்தேன் தல.., பார்த்தேன்..,

    ReplyDelete
  12. //முரளிகண்ணன் June 16, 2009 10:22 AM

    முடியல
    //

    மு சொன்ன மு

    நன்றி தல

    ReplyDelete
  13. நல்ல விஷயம்தானே ராஜன் சார்,

    ReplyDelete
  14. //கடைக்குட்டி June 16, 2009 7:32 PM

    வின்செண்ட் பூவராகவந்தானே அவருடைய பேரு படத்துல...

    //

    நன்றி தல , சரி செய்து விடுகிறேன்

    ReplyDelete
  15. //நசரேயன் June 16, 2009 8:16 PM

    ரெண்டிலேயும் ஓட்டு போட்டாச்சி


    பிரியமுடன்.........வசந்த் June 16, 2009 9:30 PM

    கமல் கலைத்தாய் பெற்றெடுத்த இளையமகன்
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  16. ம்ம்ம் வித்தியாசமான கனிப்பு பாராட்டுகள்

    ReplyDelete
  17. தல,
    நீங்க சொன்னது போல 'ஏகன்' & 'குருவி'-க்கு விருது குடுக்காதது கண்டிக்கத்தக்கது தான்.. அதே போல சிறந்த நடிகரா அண்ணன் ஜே.கே.ரித்தீஷை அறிவிக்காததுக்கு எதாவது அரசியல் காரணம் இருக்குமா டாக்டர் ?

    ReplyDelete
  18. //ஆ.ஞானசேகரன் June 16, 2009 11:23 PM

    ம்ம்ம் வித்தியாசமான கனிப்பு பாராட்டுகள்
    //

    நன்றி தல

    ReplyDelete
  19. //செந்தில்குமார் June 17, 2009 3:49 AM

    தல,
    நீங்க சொன்னது போல 'ஏகன்' & 'குருவி'-க்கு விருது குடுக்காதது கண்டிக்கத்தக்கது தான்.. அதே போல சிறந்த நடிகரா அண்ணன் ஜே.கே.ரித்தீஷை அறிவிக்காததுக்கு எதாவது அரசியல் காரணம் இருக்குமா டாக்டர் ?
    //

    அண்டசராசரமும் அப்படித்தான் பொங்கிக் கொண்டு இருக்கிறது

    ReplyDelete
  20. கமலை தோண்டி அகழ்வாராய்ச்சி பண்ணீட்டீங்களே தல....
    இன்னும் நெறைய ஆராய்ச்சி பண்ணி எங்களுக்கு அறிக்கை கொடுங்க......

    ReplyDelete
  21. படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

    ReplyDelete
  22. //Sukumar Swaminathan June 18, 2009 11:57 PM

    கமலை தோண்டி அகழ்வாராய்ச்சி பண்ணீட்டீங்களே தல....
    இன்னும் நெறைய ஆராய்ச்சி பண்ணி எங்களுக்கு அறிக்கை கொடுங்க......
    //

    நன்றி தல..,

    ReplyDelete
  23. //அப்பாவி தமிழன் June 19, 2009 8:47 AM

    படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க
    //

    நன்றி தல....,

    ReplyDelete
  24. புரியுது ஆனா புரியவில்லை கடைசி பேராக்கள் உண்மையில் புரியவில்லை

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails