ஒருவனுக்கும் ஒருத்தி என்ற கலாச்சாரத்தில் ஊறி திழைத்து வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பாலியல் சேவை செய்பவர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடி வருபவர்களில் வெகுசிலரே அவர்களின் தேவை மிகவும் அவசியமானதாக இருக்க முடியும். பெரும்பான்மையான மனிதர்களுக்கு அவர்களின் அவசியம் இல்லவே இல்லை. ஆனால் ஏன் அவர்களை நாடுகிறார்கள்?
மும்பையிலும் கல்கத்தாவிலும் தனியே ஒரு பகுதியே இருக்கிறதாக திரைப் படங்கள் காட்டுகின்றன. ( நாயகன், மகாநதி...) அத்தனை பேரும் ஒரே இடத்தில் குழுமி இருப்பதாக காட்டுகிறார்கள், அத்தனை பேர் அங்கே இருந்தால் அவர்களுக்கு போதுமான அளவு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா.... வாடிக்கையாளர்கள் இருப்பதால்தானே கொடிகட்டிப் பற்க்கிறது.... ஒரே நாளில் நான்கைந்து பேருக்கெல்லாம் ஒரே நாளில் சேவை புரிந்தால் எத்தனை எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள்.. கணக்கிடவே முடியவில்லை. இங்கு செல்லும் அனைவரும் திருமண்மானவ்ர்களா... மனைவியிடம் திருப்தி அடையாதவர்களா.... அவர்களுக்கு இதுதான் தீர்வா.... அப்போது இந்த சேவை வளர்ந்து கொண்டேதான் போகுமா......
இத்தனை ஆண்கள் அங்கு போய் வந்துகொண்டிருந்தால் அவர்தம் மனைவியர் நிலை....... கணவன் மனைவி இருவருமே ஒரே தராசில்தானே வருவார்கள்.? இவர்களுக்கு இருக்கும் அதே நியாயங்கள் அவர்களுக்கும் இருக்கும் தானே..
இந்த கேள்விகளையெல்லாம் மனதில் சுமந்துகொண்டு இருந்த நேரத்தில்தான் கண்டபடி பேருந்து பயணங்களும் திரைப் படம் பார்க்கும் வாய்ப்புகளும் அமைந்தன. அறுபதுக்கு முந்தைய படங்களில் நாயகி மிகவும் மரியாதைக்குரியவராக வந்து போய் கொண்டிருந்தார்.
எழுபதுகளில் கவர்ச்சியாக இருந்து கொண்டு இருந்தார்கள். ( சிலர் கொடிகட்டிப் பறந்தார்கள்). இப்போதைய நாயகிகள் சும்மா.... பின்னி எடுத்து கொண்டிருக்கிறார்கள். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு பொருந்தும் முண்ணனி நடிகை நயந்தாராதானே..
நாமெல்லாம் திரைப்பட நடிகர்களை நமது லட்சிய புருஷர்களாகவும் தலைவர்களாகவும் பார்க்கும் இயல்புடையவர்கள் அல்லவா... நமது லட்சிய நாயகர்களின் ஜோடிகளையே மனைவிகளையே நாமெல்லாம் இப்படி அற்புதமான ரசனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோமா...
தங்கள் இதய தெய்வத்தின் அன்பு அண்ணனின் காதலியை வருங்கால இல்லத்தரசியை உரித்து வைத்து பார்க்கும் மனப் பான்மை எங்கு வளர்ந்ததோ அன்றே அடுத்தவன் மனைவியையும் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பார்க்கும் எண்ணம் வளர்ந்துவிடுகிறதே...,
நேற்று கவர்ச்சிக் காட்சிகள் நிறைந்த படத்திற்கு மறைந்துபோய் பார்த்தகாலம் போய் இன்று வரவேற்பறையிலே களியாட்டங்களை கண்டு ரசிக்க ஆரம்பித்துவிட்டோமே..
அப்படியென்றால் பிறன்மனை நோக்கா பேராண்மை என்பதெல்லாம்...
என்னமோ போங்க.......,
இது ஒரு மீள்பதிவு
நல்லா சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteஒரு முறை நான் பணிபுரியும் அலுவலகத்தில் 'எய்ட்ஸ்' விழிப்புணர்வு ப்ரெசென்டேஷன் என்று சொல்லிவிட்டு, 95% பாலியல் சேவையாளர்களைப் பற்றிதான் சொன்னார்கள். மற்ற எந்தவிதத்திலும் எய்ட்ஸ் பரவாது என்பது போன்ற மாயையைத் தோற்றுவித்தார்கள்.
எனது அறிவு பூர்வமான (?!) கேள்வியான, 'எய்ட்ஸ் உள்ள ஒருத்தன கடிக்கற கொசு அப்படியே வந்து நம்மள கடிச்சா நமக்கு எய்ட்ஸ் வருமா?' என்பதற்குக் கூட பதிலில்லை.
இந்த ஒரு கோணமிருக்க, பாலியல் சேவை சமூகத்தை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பது உங்களைப் போன்ற மருத்துவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இது பற்றிய ஒரு விரிவான பதிவுத்தொடரை எதிர்ப்பார்க்கிறேன்...
//எனது அறிவு பூர்வமான (?!) கேள்வியான, 'எய்ட்ஸ் உள்ள ஒருத்தன கடிக்கற கொசு அப்படியே வந்து நம்மள கடிச்சா நமக்கு எய்ட்ஸ் வருமா?' என்பதற்குக் கூட பதிலில்லை.//
ReplyDeleteகொசுவால் பரவும் மலேரியா, டெங்கு கிருமிகளின் வளர்ச்சிப் பாதையில் கொசு முக்கிய பங்காற்றுகிறது. கொசு இல்லையேல் இந்த கிருமிகளால் தங்கள் வாழ்க்கைப் பாதையை நிறைவு செய்யமுடியாது. அதனால் இனப் பெருக்கம் இன்றி அந்த கிருமிகளே அழிந்து போய்விடும். கொசுவை பூரணமாக அழிக்க முடிந்தால் மலேரியா, டெங்கு ஆகியவையும் தானே அழிந்து போகும்.
அந்த வாழ்க்கை சுழற்சியில் கொசுவின் உமிழ்நீரில் மலேரியா, டெங்கு கிருமிகள் கலந்து வருவதால் அது மனிதனை கடித்தபின் மனிதனின் ரத்த ஓட்டத்தில் தனது வாழ்க்கை பாதையை தொடர்வதால் மலேரியா, டெங்கு ஏற்படுகின்றன.
H I v கிருமியின் பாதை முற்றிலும் மாறுபட்டது. அது கொசுவின் உடலுக்கும் எந்த ஒரு வளர்ச்சியும் பெருவதில்லை. அது முதிர்ச்சி அடைவதோ இனப்பெருக்கம் செய்வதோ கிடையாது. அதன் உமிழ்நீரிலும் H I v கிருமி இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்க படவில்லை. எனவே H I v கிருமி பரவும் வகை மற்றும் வழிகளில் கொசு கடி சேர்க்கப் படவில்லை.
நாகரீகதிற்கான விதிமுறைகள் மாறிக்கொண்டேதான் இருக்கும். மனிதன் ஒரு விலங்குதானே விலங்கு விதிமுறை அனைத்தையும் பின்பற்ற முடியாதே. அதனால் இதுவும் தேவைதான்.
ReplyDeletehttp://yaathirigan.blogspot.com/2008/07/1.html
ReplyDeleteபடித்துப் பார்த்தேன் யாத்திரீகன் அவர்களே... உங்கள் இடுகையைப் படித்தவுடன் இளைய பல்லவன் அவர்கள் கூறியது போல் தொடரலாம் என்று இருக்கிறேன். இதுபோன்ற இடுகைக்களுக்கான தொடுகைகளையும் அதில் கொடுக்கலாம் என்று எண்ணம். தங்களின் ஆதரவும் உதவியும் தேவை.
ReplyDeleteவாங்க குடுகுடுப்பை ஐயா..
ReplyDeleteபல விலங்குகள் பிறன்மனை நோக்குவதில்லை. குறைந்தபட்சம் சண்டைபோட்டு வெற்றிபெற்றபின்னர், அல்லது முற்றிலும் பிரிந்தபின்னரே ஜோடி மாறுகின்றன..
பழமையான சேவைன்னு சொன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எரிமலைவெடிப்பால் அழிஞ்சுபோன பாம்பெய் என்ற ஊரின் இடிபாடுகள் & அழிவுகளைப் பார்த்தப்ப. வழிகாட்டி ஒரு வீட்டைக் குறிப்பிட்டுக் காமிச்சார். விலைமகள் இல்லம். வீட்டு முகப்பில் (நம்மூர்லே சுவரில் பதிக்கும் மார்பிள் பெயர்ப்பலகை போல) இங்கே ஆணுறுப்பு ஒன்னு செஞ்சு பதிச்சிருக்கு. இந்தக் குறிப்பிட்டத் தெருவில் மட்டும் வண்டிகள் ஏகத்துக்கும் போய் கல்தரையிலே வண்டி ட்ராக் பதிஞ்சு ஆழமா அடையாளம்.
அந்தக் காலத்திலும் ஆண்களுக்கு தங்கள் வீட்டம்மாவோடு திருப்தியில்லை போல.
(இங்கே நியூஸியில் இது அங்கீகரிக்கப்பட்ட தொழில்)
//(நம்மூர்லே சுவரில் பதிக்கும் மார்பிள் பெயர்ப்பலகை போல)//
ReplyDelete??????????
வாங்க துளசி கோபால் மேடம், அதிரவைக்கிறீர்களே... இடுகையை விட உங்கள் பின்னூட்டம்தான் அனைவரையும் உலுக்கப் போகிறது
ReplyDeleteeppothaan ulagaththai purinjikka poringalo?
ReplyDeleteஆம்பிளைகளில் 99 சதவிகிதம் பேர் தப்பானவர்கள்... இன்னும் 1 சதவிகதம் தப்பு செய்யாதவர்களுக்கு தப்பு செய்ய வாய்ப்பு அமையவில்லை என்று எனது நண்பிகள் காமடியாக சொல்லி கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteஉண்மையில், ஆண்களின் மனம் ஒரு குரங்கு என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அவற்றை கட்டுபாட்டில் கொண்டு வருவதன் மூலமே ஒருவனால் மற்றவர்களிடம் இருந்து வேறுபட முடிகிறது.
அனைவரும் அந்த கட்டுபாடை கொண்டு வர முயல வேண்டும் என்பதே என் அவா. ஒரு முக்கியமான தலைப்பை பதிவிற்கு உபயோகபடுத்தி இருப்பதற்கு நன்றிகள் சுரேஷ்... கூடவே அந்த HIV கிருமிகள் பற்றிய விளக்கம் ஏ1 ரகம்... அதை இன்னும் விளக்கமாக ஒரு தனி பதிவிலேயே நீங்கள் இடலாம்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
இதுக்கெல்லாம் முக்கிய காரணம் சினிமா தானே ....
ReplyDelete//Rafiq Raja said...
ReplyDeleteஆம்பிளைகளில் 99 சதவிகிதம் பேர் தப்பானவர்கள்... இன்னும் 1 சதவிகதம் தப்பு செய்யாதவர்களுக்கு தப்பு செய்ய வாய்ப்பு அமையவில்லை என்று எனது நண்பிகள் காமடியாக சொல்லி கேட்டிருக்கிறேன். //
காமெடி என்று எடுத்துக் கொண்டே தீர வேண்டும் தல..,
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஇதுக்கெல்லாம் முக்கிய காரணம் சினிமா தானே ....
//
சினிமா நடுவீட்டிற்கு வந்ததுதான் காரணம் தல..
பல தவறுகளை நடைமுறையாகிக் கொண்டு இருக்கின்றன தல
மனிதனும் விலங்கின வகை தான்.இனப்பெருக்க முறைக்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்ட இனப்பெருக்க வகைப்பாடுகள்.இயற்கையை தாண்டி மனிதன் வெகுதூரம் வந்துவிட்டாலும் அடிப்படை உணர்வுகள் மாறவில்லை.மனித உடற்கூற்றினை மேலோட்டமாக பார்க்காமல் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் உணரலாம்.
ReplyDeleteநல்ல இடுகை சுரேஷ் சார்.
ReplyDeleteஆனால் நீங்கள் கூறுவது போல் சினிமாவால் இந்த கலச்சார சீரழிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பழைய வரலாற்றை பார்த்தீர்களானாலும் நிறைய சான்றுகள் கிடைக்கும்.
அதனால் தான் பிறன் மனை நோக்கா பேரண்மை என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறார்.
புதிய இடுகை பாருங்கள்
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_24.html
//அக்பர் said...
ReplyDeleteநல்ல இடுகை சுரேஷ் சார்.
ஆனால் நீங்கள் கூறுவது போல் சினிமாவால் இந்த கலச்சார சீரழிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பழைய வரலாற்றை பார்த்தீர்களானாலும் நிறைய சான்றுகள் கிடைக்கும்.//
உண்மைதான் தல, ஆனால் பல தவறுகள் ஜீரணித்துக் கொள்ளப் படுவதற்கும் நடைமுறையாக ஏற்றுக் கொள்ளப் படுவதற்கும் சினிமா நடுவீட்டிற்கு வந்தது முக்கிய காரணமாக நினைக்கிறேன்.
நயந்தாராவை தங்கள் தலைவரின் மனைவியாகப் பார்ப்பதில்லையே, நயந்தாராவைப் பார்க்கும் எண்ணமே பிற நண்பர்களின் மனைகளைப் பார்க்கும் பார்வையில் தோன்றிவிடுகிறது,
அதுவே தவறுகளுக்கு முதல் படியாகிறது
//Anonymous said...
ReplyDeleteமனிதனும் விலங்கின வகை தான்.இனப்பெருக்க முறைக்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்ட இனப்பெருக்க வகைப்பாடுகள்.இயற்கையை தாண்டி மனிதன் வெகுதூரம் வந்துவிட்டாலும் அடிப்படை உணர்வுகள் மாறவில்லை.//
பெரும்பாலான விலங்குகள் குடும்ப வாழ்க்கையைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளன..,
This comment has been removed by the author.
ReplyDeleteசரியா சொன்னீங்க காலம் மாறி போச்சுங்க அண்ணா .
ReplyDeleteவாங்க ஆனந்தன் சார், நீங்கள் கேட்ட கேள்வியில் தவறு ஏதும் இல்லையே அப்புறம் ஏன் நீக்கிவிட்டீர்கள்
ReplyDelete//ஆனந்தன் said...
ReplyDeleteசரியா சொன்னீங்க காலம் மாறி போச்சுங்க அண்ணா .
//
கொடுமையான மாற்றம், பல சீரழிவுகளுக்கு வழிவகுக்கும்..,
//பெரும்பாலான விலங்குகள் குடும்ப வாழ்க்கையைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளன..,//
ReplyDelete???????????
:))))))))
comedy pannaatheenga sir
Guru
நீங்கள் சொல்லும் கோணத்தில் பார்க்கும் போது சரிதான்.
ReplyDeleteமுன்பு கதா நாயகி என்பவர் கண்ணியமான பெண்ணாக காட்டப்ப்டுவார்,
அவர்கள் மேல் தனி மரியாதை இருக்கும்.
கவர்ச்சி ஆட்டக்காரிகள் வில்லனுடன் தான் வருவாங்க, நாமளுக்கும் அந்த மாதிரி பொண்ணுங்க கெட்டவங்க அவங்க உடை, ஆட்டம் எல்லாம் மோசம் என்று என்ன வைப்பார்கள் (அல்லது ஹீரோவாவது திட்டுவார்).
இப்போ கவர்ச்சிக்கென்று தனியாக ஆள் தேவை இல்லை.
என்னமோ போங்க சின்ன வயசுல வில்லன் பொண்ணுங்களோட சேட்டை பண்ணுனா கோபம் வரும் , இப்ப எல்லாம் அந்த மதிரி சீன் இருந்தாத்தான் படமே பார்க்காங்க ( நா இல்லப்பா)
அது எப்படி குறிப்பிட்ட இடைவெளியில் இடுகைகள் இடுகிறீர்கள். எல்லாமே நன்று.
நல்ல அலசல்..
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்..
சினிமாவினால் மக்கள் சீரழிந்தார்களா? அல்லது மக்கள் இவ்வாறு உள்ளதினால் தான் சீரழிந்த சினிமா எடுக்கிறார்களா..??
வாங்க குரு
ReplyDeleteசிங்கம், புலி, யானை
ஏன் வீட்டில் வளர்க்கப் படும், கோழி, பசு ஆகியவற்றின் வாழ்க்கை ஒரு வரையறைக்கு உட்பட்டது
பெரும்பாலான பறவைகள் ஒரு நேரத்தில் ஒரு ஜோடியுடந்தான் வாழுவதாகச் சொல்கிறார்கள்
//அக்பர் said...
ReplyDeleteநீங்கள் சொல்லும் கோணத்தில் பார்க்கும் போது சரிதான்.//
உண்மை, இந்தப் பிரச்சனைக்கு இருக்கும் எத்தனையோ கோணங்களில் இதுவும் ஒன்று.
//அக்பர் said...
ReplyDeleteஇப்போ கவர்ச்சிக்கென்று தனியாக ஆள் தேவை இல்லை. //
மற்றவர் கண்களுக்கு விருந்தளிப்பது, நமது பிறவிக் கடன்களில் ஒன்று என்ற எண்ணத்தை கொண்டுவருவதில் இன்றையத்திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆபாசமாக இருப்பதுதான் பகட்டு என்ற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
//அக்பர் said...
ReplyDeleteஅது எப்படி குறிப்பிட்ட இடைவெளியில் இடுகைகள் இடுகிறீர்கள். எல்லாமே நன்று.//
பாராட்டுக்கு நன்றி தல
மனதில் தோண்றுவதை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு வெளியிடும் நேரத்தைக் குறித்து வைத்து விட்டால் தானாகவே அந்த நேரத்தில் வெளியாகிவிடும் தல..
//பட்டிக்காட்டான்.. said...
ReplyDeleteநல்ல அலசல்..
எனக்கு ஒரு சந்தேகம்..
சினிமாவினால் மக்கள் சீரழிந்தார்களா? அல்லது மக்கள் இவ்வாறு உள்ளதினால் தான் சீரழிந்த சினிமா எடுக்கிறார்களா..??
//
திரைப்படத்திற்கு முன்பே கெட்டவர் உண்டு தல.., ஆனால்
சீரழிந்து போனவர்களின் வாழ்க்கையை தியாக திருவிளக்காக காட்டி அவர்களை உதாரண சீலர்களாக மக்கள் மனதில் நிலை நிறுத்துவதில் திரைப் படத்திற்கு முக்கியப் பங்குண்டு.
ஒரு வாரம்,பத்து நாள் இடைவெளி விட்டு இப்ப தலைப்பு என்னடா வில்லங்கமா இருக்குதேன்னு நினச்சுகிட்டும் மருத்துவக்காரங்க மருந்துதானே தருவாங்கன்ற நம்பிக்கையிலும் இந்தத் தலைப்புக்கு ஏன் இத்தனைபேர் வருகை என்கிற ஆவலிலும் வந்தால் தெரியாத மனோதத்துவக் கோணம் இடுகை.
ReplyDeleteஎன்னமோ போங்க.. என்னத்த சொல்றது
ReplyDelete//ராஜ நடராஜன் said...
ReplyDeleteதெரியாத மனோதத்துவக் கோணம் இடுகை.//
அதைச் சொல்லத்தானே தல இந்த இடுகை, வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி தல
//" உழவன் " " Uzhavan " said...
ReplyDeleteஎன்னமோ போங்க.. என்னத்த சொல்றது
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
இவை தான் சினிமாவின் பரிணாம வளர்ச்சி என்க.
ReplyDelete//murali said...
ReplyDeleteஇவை தான் சினிமாவின் பரிணாம வளர்ச்சி என்க.
//
நடுக் கூடத்தில் காதல் காட்சிகள் எந்த விதக் கூச்சமும் இன்றி ஒளிப் பரப்பப் படுவதைதானே சொல்கிறீர்கள்
மிக அருமை நண்பரே...
ReplyDeleteஒரு முறை ஒரிசாவிலிருக்கும் கோனார்க் போய் பாருங்கள்..(சிற்பங்கள்)ஒருவனுக்கு ஒருத்தி என்பது எப்பவும் இருந்தது இல்லையோ என்று தோன்றும். சினிமா எல்லாம் என்ன செய்யும். சினிமாவின் பாதிப்பு 1% தான் சமூகத்தில் இருக்கும். சமூகத்தில் நல்லது, கெட்டது இரண்டும் சேர்ந்தே தான் எப்பவும் இருந்து வருகிறது.
ReplyDelete