Wednesday, June 24, 2009

சின்னப் பசங்க உருவாக்கப் பார்த்த மதக் கலவரம்

பள்ளி பருவத்தினை நினைத்துப் பார்க்கும்போது ஏற்பட்ட இன்னொரு சம்பத்தினை கண்டிப்பாக நினைவு படுத்தியே ஆக வேண்டும். நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு முறை கொடிக்காபுளி பிடுங்குவதற்காகச் சென்றோம்.

அந்த மரங்கள் வேம்பு, புளி அளவுக்கு கெட்டியானது அல்ல. ஆனால் அந்த மரத்தில் ஏறமுடியும். நாங்கள் கொக்கிச் சல்லையுடன் மரத்தில் ஏறியிருந்தோம். கொக்கியில் ஒரு கூர்மழுங்கிய கத்தியையும் சேர்த்திருப்பார்கள். கொடிக்காபுளி நன்றாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததது. நண்பர் இருவர் நன்றாக மேலே ஏறி செல்லமுடியும் அளவு சென்றுவிட்டார். இனியும் முன்னேறினால் ஒடிந்துவிடும் அளவு சென்றுவிட்டு கொக்கியைப் ப்யன்படுத்தி பிடுங்க வேண்டும். கீழே நிற்கும் நாங்கள் அதைப் பொறுக்கிக் கொள்வோம்.கடைசியில் பங்கு போட்டுக் கொள்வோம்.

அதே மரத்திற்கு ஊரின் இன்னொரு பகுதியைச் சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவரும் அதே மரத்தில் ஏறியிருந்தார். அவரும் பிடுங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். எங்கள் நண்பர் மேலே சென்று முயற்சித்துக் கொண்டிருந்தார் அல்லவா.., இவர் அவருக்கு கீழே நின்று கொண்டு இறங்கிறாயா? அல்லது மரத்தினை ஆட்டி கீழே விழவைக்கவா? என்ற ரீதியில் மிரட்டிக் கொண்டிருந்தார். அது மொத்தமாக குத்தகைக்கு விடப் படும் மரங்கள் சின்ன பசங்க என்னபெரிதாக பிடுங்கிவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். உரிமைக்காரர்கள் பார்த்தால் விரட்டுவார்கள். அதுகூட பெரிய அளவில் இருக்காது.

இவர் ஆட்டிய வேகத்துக்கும் மரம் ஆடிய வேகத்துக்கும் எல்லோருக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் நண்பர் கொஞ்சம் தைரியமானவர். அவர் அதற்கெல்லாம் அசராமல் தன்வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கோபமடைந்த எதிர்குழு நண்பர் கொஞ்சம் காட்டமாக சாதிப் பெயரை உபயோகப் படுத்த ஆரம்பித்தார். அவருக்கும் கீழே இருந்த எங்கள் ந்ண்பர் வேகமாக மரத்தில் ஏறினார். பெரிய சண்டைவரும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அவரால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மேலேசெல்ல முடியவில்லை. அவர் நின்ற இடத்திலிருந்து மேலே பார்ர்த்தார். எதிர் குழு நண்பர் அவருக்கு நேர் மேலே நின்றிருந்தார். எதிர்குழு நண்பர் லுங்கி அணிந்திருந்தார். அதையும் மடித்துக் கட்டியிருந்தார். அவர்களில் சிறுவர்கள் கூட லுங்கிதான் அணிந்திருப்பார்கள். அந்த நபர் உள்ளாடைகூட அணியவில்லை. கீழே நின்ற நண்பர் தனது கொக்கி சல்லையை மேலே உள்ளவர்மேல் பயன்படுத்த ரத்தம் கொட்டோகொட்டு என்று கொட்ட ஆரம்பித்தது. சிறுவர் உபயோக ப் படுத்திய கத்தி ஆகையால் பதம் என்பதே இல்லாமல் இருந்தது. இல்லையென்றால் முக்கிய உறுப்பு துண்டாகியிருக்கும். ரத்த வெள்ளத்தில் அந்த நபர் ஓட அவரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எங்களைத் தேட நாங்கள் எஸ்கேப். இதில் ஜாதிப் பிரச்சனை வேறு சேர அந்தப் பகுதியே பதட்டம் ஆனது.

கடைசியில் ஊர்பெரியவர்கள் களத்திற்கு வந்து சின்னப் பசங்க சண்டையை பெரிது படுத்தவேண்டாம் என்று கூறி காயம் பட்டவனுக்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து பிரச்சனையை முடித்தனர். ஆனாலும் கூட நாங்கள் எங்கள் பகுதியைவிட்டு மற்ற பகுதிகளுக்கு விளையாடச் செல்வது ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு தடைச் செய்யப் பட்டே இருந்தது.

========================================================

ஸ்டார்ஜன் அழைத்த தொடர்பதிவில் எனது பங்குப் பதிவினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம் தொடக்கப் பள்ளியிலிருந்து.......,

இந்திரா காந்தி அவர்கள் இறந்த போது.., ஆகிய பகுதிகளையும் இந்தப் பதிவுடன் சேர்த்துப் படித்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது. கண்டிப்பாக அவை தொடரும்

==========================================================

இந்தத் தொடர்பதிவின் விதிகள்


விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

==========================================================

ஆசிரியர்களைப் பற்றியும் எழுதிவிடுகிறேன். ஆனால் அனைவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைப்பதால் தனித் தொடராக அதை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

=========================================================

இந்தப் பதிவினைத் தொடர

அக்பர் http://sinekithan.blogspot.com

இது நம்ம ஆளு http://vanakamtamilan.blogspot.com/


குறையொன்றும் இல்லை http://yellorumyellamum.blogspot.com

ஆகியோரை அழைக்கிறேன்

13 comments:

 1. இப்படி கூட காரியம் பண்ணி இருக்கீங்களா... ஊர் பக்கம் உங்கள ரொம்ப நாளா தேடிகிட்டிருக்காங்கப்பு... ஹி ஹி ஹி...

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

  ReplyDelete
 2. நீங்க மரம் ஏறியிருக்கீங்களா.

  சண்டையில சட்டை கிழியிரதைப் பார்த்திருக்கேன்...

  உங்க ஊர்க்காரங்க ரொம்ப நல்லவங்க.

  தொடருக்கு அழைத்ததற்கு நன்றி.

  ReplyDelete
 3. அட முடிச்சிட்டீயளா??

  உங்கள இந்தப் பதிவுல பொறுத்திப் பார்க்க முடியல..

  ஆனாலும் நல்லா இருக்கு :-)

  ReplyDelete
 4. நல்ல அற்புதமான குழந்தைப் பருவம்

  உங்களுடையது.

  நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே

  இருக்குது தம்பி
  ‍_ தலைவர்


  நான் அழைத்தற்கு இணங்கி அற்புத தீவை

  கொடுத்திருக்கிறீர்கள் தல...

  உங்கள் பணி தொடரட்டும் இனிதே...

  ReplyDelete
 5. //Rafiq Raja said...

  இப்படி கூட காரியம் பண்ணி இருக்கீங்களா... ஊர் பக்கம் உங்கள ரொம்ப நாளா தேடிகிட்டிருக்காங்கப்பு... ஹி ஹி ஹி...

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்
  //

  உண்மையில் ஓரிரு வருடங்கள் அப்படித்தான் இருந்தது. ஊருக்கு வெளியே போய் விளையாட அனுமதி இல்லை

  ReplyDelete
 6. //அக்பர் said...

  சண்டையில சட்டை கிழியிரதைப் பார்த்திருக்கேன்...//


  என் சட்டையையா தல..,

  ReplyDelete
 7. //டைக்குட்டி said...

  அட முடிச்சிட்டீயளா??

  உங்கள இந்தப் பதிவுல பொறுத்திப் பார்க்க முடியல..

  ஆனாலும் நல்லா இருக்கு :-)
  //


  இதில் நான் கொடுக்காபுளி கலெக்டர் தல..,

  சேகரித்துக் கொண்டு இருந்து ஓட்டம் பிடித்தவர்களில் ஒருவன்.

  ReplyDelete
 8. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  நல்ல அற்புதமான குழந்தைப் பருவம்

  உங்களுடையது.//

  உண்மையில் எனக்கு எல்லா இடங்களிலும் நல்ல சுவாரசியமான நண்பர்கள் வாய்க்கிறார்கள்

  ReplyDelete
 9. மன்னிக்கவும் தல,

  இப்போ வோட்டு போடுங்க.

  கள்ள வோட்டும் போடலாம்.

  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்.
  இந்தியாவின் மானத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் எப்படி காப்பாற்றினார்?

  ReplyDelete
 10. எனக்கு கொடுக்கா புளி தின்ற அனுபவம் இருக்குது.ஆனா கொடுக்கா புளி கத்தி வில்லங்கமா இருக்குதே.சாதீயச் சண்டைகள் இப்படி ஏதாவது ஒரு சின்ன புள்ளியில்தான் ஆரம்பமாகின்றனவா! அனுபவ பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. //ராஜ நடராஜன் said...

  எனக்கு கொடுக்கா புளி தின்ற அனுபவம் இருக்குது.ஆனா கொடுக்கா புளி கத்தி வில்லங்கமா இருக்குதே.சாதீயச் சண்டைகள் இப்படி ஏதாவது ஒரு சின்ன புள்ளியில்தான் ஆரம்பமாகின்றனவா! //

  ஆமாம் தல

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails