Tuesday, June 23, 2009

முஸ்லிம் தொடக்கப் பள்ளியிலிருந்து.......,

ஷேக் மைதீன் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவரது பூர்வாசிரமப் பேர் உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். பதிவுலகில் சுற்றிவரும் டார்ஜன் அவர். தற்காலத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அவர். அவர்தான் ஸ்டார்ஜன்.

மற்றொரு பிரபல பதிவர் கோவி. கண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் ஒரு தொடர்பதிவினைப் போட்டுவிட்டு அப்படியே என்னையும் தொடருமாறு கேட்டுள்ளார். எனக்குத் தொடரலாம் என்று பதிவிட ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது சமீபத்தில் நான் எழுதிக் கொண்டிருக்கும் தோழிக்கு திருமணமான போது நடந்த சம்பவங்களும் அதற்கு முன்பின் நடந்த சம்பவங்களும் வந்து பயமுறுத்த ஆரம்பித்தன.

======================================================

முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம்பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

=======================================================

ஓரிரு பகுதிகளில் வெளிவிட நினைத்து அதுபாட்டுக்கு போய் கொண்டே இருக்கிறது. ஒரு பகுதி எழுத ஆரம்பித்தால் அது இரண்டு அல்லது மூன்று பகுதி விஷயங்கள் வந்து விழுகின்றன. நல்ல வேளை டயரி எழுதும் வழக்கம் இல்லை. யோசித்து எழுதும் போதே இப்படி என்றால் பார்த்து எழுதியிருந்தால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. அந்த கதை முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் போல. இதில் சில நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து சில நிகழ்ச்சிகளை விட்டுவிட்டதாகவும் அவற்றையும் சேர்க்குமாறு வேறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பேரையும் மாற்ற வேண்டாம் தங்கல் பேரையே உபயோகப் படுத்துமாறும் சொல்கிறார்கள். சுத்தமாக அந்தக் கதையின் போக்கு என் கட்டுப் பாட்டைத் தாண்டி விட்டது. அதனால் இந்த இடுகையை மிக எச்சரிக்கையாகவேதான் ஆரம்பித்திருக்கிறேன்.

=================================================

நான் துவக்கக் கல்வியைத் துவக்கியது ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் துவக்கப் பள்ளியில்.., பெரிய சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏதும் மனதில் இல்லாவிட்டாலும் கூட அந்த நாட்களை நினைத்துப் பார்ப்பதே சுவாரசியமான நிகழ்ச்சிதானே...

அந்தப் பள்ளி முஸ்லிம் மக்கள் நிறையப் பேர் வாழும் பகுதியில் இடம் பெற்றிருந்ததாலும், பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இருந்ததாலும் அந்த பள்ளிக்கு ஓராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளி என்று பெயர். அது மட்டுமல்லாமல் அங்கு வெள்ளி, சனிதான் வார விடுமுறை. ஞாயிறு அன்று பள்ளி நடக்கும். பள்ளிக்கு பெரிய அளவில் சீருடை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அப்போதைய முதலமைச்சரின் தயவில் சட்டை, கால்சட்டை, செருப்பு, பல்பொடி, புத்தகம் போன்ற பொருட்கள் எங்களுக்கு இலவசமாகக் கிடைத்தன.


துவக்கத்திலிருந்தே நான் ஒழுங்காகப் பள்ளிக்குப் போனதாகவே ஞாபகம். ஆனாலும் கூட எங்கள் பள்ளியில் ஒரு பணியாளர் இருந்தார். அவரை நாங்கள் டீச்சர் என்றுதான் அழைப்போம். ஆனால் அவரது பணி என்னவென்று இன்றும் கூட தெரியாது, எங்கள் ஊரில் எல்லாத்தெருக்களுக்கும் அவர் பவனி வருவார். அவர் வந்தாலே மாணவர்கள் எல்லோரும் தலைமறைவு ஆகிவிடுவார்கள். மாலை வேளைகளில் அவரைப் பார்த்தால் கூட எங்களுக்கு வியர்த்துவிடும்.

நான் அங்கு படித்த காலத்தில் ரஜினிதான் பெரிய ஹீரோ.., அப்போது எங்களுக்கு மிகப் பரிச்சையமான பாடல் அண்ணனுக்கு ஜே..., காளையனுக்கு ஜே..., தான் ஆனாலும் கூட அந்தப் படமும் பாடலும் வந்து சில ஆண்டுகள் ஆயிருந்தன. ஆனால் எங்களுக்கு அவைதான் புதிய படம். அந்த சூழலிலும் எம்.ஜி.ஆருக்குத் தான் ரசிகர் அதிகம். நாங்கள் ரஜினியின் பெருமை பேசினால் அந்த மாணவர்கள் எப்போதும் எம்ஜியாரின் புகழ் பேசுவார்கள். எம்.ஜி.யார் அப்படியே பெரிய தீயைக் கூடத் தாண்டிக் குதிப்பார் என்பதை அவர்கள் எங்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்து வைத்தனர். அதன் காரணமாகவே கூட பதின்ம வயது காலங்களில் நாங்கள் எம்.ஜி.ஆர் படங்களை துரத்தித் துரத்துப் பார்த்தோம் என்று சொன்னால் அதுதான் உண்மை.

அந்தப் பள்ளியில் ஏற்க்குறைய பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். ஓரிரு ஆண் ஆசிரியர்கள் மிதி வண்டியிலும் சிலர் பேருந்திலும் வருவார்கள்.

பேருந்தில் ஆசிரியர்கள் இறங்கி விட்டால் ஊர் முழுவதும் செய்தி பரவும். டீச்சர் வந்திட்டாங்க, சீக்க்கிரம் ஓடுங்கடா என்ற பேச்சு எல்லா வீட்டிலும் கேட்கும். தலைசீவிக் கொண்டோ, சட்டையை போட்டுக் கொண்டோ பள்ளிக்கு ஓடுவோம்

நாங்கள் படித்த காலத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று இந்தியப் பிரதமரின் படுகொலை, மற்றொன்று தமிழக முதல்வரின் மரணம்

அவைகளைப் பற்றி அடுத்த இடுகைகளில்.........

==============================================================
சின்னப் பசங்க உருவாக்கப் பார்த்த மதக் கலவரம்

இந்திரா காந்தி அவர்கள் இறந்த போது..,

 

15 comments:

  1. //நாங்கள் படித்த காலத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று இந்தியப் பிரதமரின் படுகொலை, மற்றொன்று தமிழக முதல்வரின் மரணம்
    //

    அய்யய்யோ... அடுத்த வருஷம்தான் தல முடிப்பாரு போல ....

    ReplyDelete
  2. // சுத்தமாக அந்தக் கதையின் போக்கு என் கட்டுப் பாட்டைத் தாண்டி விட்டது//

    ஆமாம .. அதான் இதுவும் பயமா இருக்கு...

    ஆனா செம கலாயா எழுதுறீங்க .. உங்களுக்கு என்ன.. தொடருங்க :-)

    ReplyDelete
  3. ஆரம்பமே அசத்தல்

    கலக்கிட்டீங்க தல

    ஆரம்பிங்க பள்ளிப்பருவத்தை

    சொல்லுங்க அனுபவ‌த்தை

    கேட்க தயார்

    இன்னும் இன்னும்

    ReplyDelete
  4. அது என்னமோ தெரியலை சின்ன வயசுல வாத்தியாரை பார்த்தா ஒரு பூச்சாண்டியை பார்க்கிற மாதிரி பயமாத்தான் இருக்கு.


    நீங்காத நினைவுகள்

    வாங்க வாங்க .. http://www.sinekithan.blogspot.com

    ReplyDelete
  5. //கடைக்குட்டி said...

    ஆனா செம கலாயா எழுதுறீங்க .. உங்களுக்கு என்ன.. தொடருங்க :-)//

    நன்றி தல..,

    உங்களைப் போல் நல்லவர்களின் ஆதரவால்தான் அந்தக் கதை போய் கொண்டிருக்கிறது. முடிவை வேறு நான் சொல்லி விட்டதால் அதனால் சடாரென முடிக்கவும் முடியாது. இதுவரை எழுதியதை போல மூன்றுமடங்கு காலம் நகர வேண்டும். நிகழ்ச்சிகளை வெட்டினால் முழுமை இல்லாமல் போய் விடுமோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    ஆரம்பமே அசத்தல்

    கலக்கிட்டீங்க தல //

    அழைத்ததற்கும், ஆதாரவிற்கும் நன்றி தல..,

    ReplyDelete
  7. //அக்பர் said...

    அது என்னமோ தெரியலை சின்ன வயசுல வாத்தியாரை பார்த்தா ஒரு பூச்சாண்டியை பார்க்கிற மாதிரி பயமாத்தான் இருக்கு.


    நீங்காத நினைவுகள்

    வாங்க வாங்க .. http://www.sinekithan.blogspot.com
    //

    உண்மைதான் தல..,

    எச்சரிக்கையாய் இருங்கள் இந்தப் பதிவின் முடிவில் நீங்களும் கூட தொடர அழைக்கப் படலாம்,

    ReplyDelete
  8. கூப்பிடுங்கள் கலக்கிவிடுவோம்.

    ReplyDelete
  9. //அக்பர் said...

    கூப்பிடுங்கள் கலக்கிவிடுவோம்.
    //

    அழைத்துவிட்டேன் , நீங்களும் தொடருங்கள்..,

    ReplyDelete
  10. ஒண்ணு அழகா ஆரம்பிச்சுட்டீங்க

    இரண்டாவதுக்கு வெயிட்டிங் தல

    ReplyDelete
  11. //பிரியமுடன்.........வசந்த் said...

    ஒண்ணு அழகா ஆரம்பிச்சுட்டீங்க

    இரண்டாவதுக்கு வெயிட்டிங் தல
    //





    நன்றி தல.., அடுத்த பாகத்தினைப் போட்டுவிட்டேன்

    ReplyDelete
  12. பழைய பள்ளிக்கூட நினைவுகளை கிளறிவிட்டீர்கள் சுரேஷ்.... ஆசிரியரை வெளி இடங்களில் பார்த்து விட்டால் மனதில் தானாக வந்து கூடிகொள்ளும் அந்த பயம் இன்றும் நினைவில் நிற்கிறது. கனாக்காலம் அது....

    அடுத்த பதிவுகளையும் படித்து விட்டு கருத்திடுகிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  13. //தொடர்பதிவினைப் //

    தொடர் இடுகையினைப்

    ReplyDelete
  14. //Rafiq Raja said...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.., மற்ற இடுகைகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  15. // பழமைபேசி said...

    //தொடர்பதிவினைப் //

    தொடர் இடுகையினைப்//

    நானே தொடர்ச்சியாகப் போடுவது தொடர் இடுகைதான் தல..,

    ஆனால் ஒரு பதிவர் ஒரு இடுகையிட்டு அதனை இன்னொரு பதிவரை அழைத்துத் தொடரச் செய்யும்போது அதை தொடர் பதிவென்று அழைக்கலாம் அல்லவா..?

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails