சில நிகழ்ச்சிகல் மிகச் சிறிய வயதில் நடந்தால்கூட அது ஏற்படுத்தும்தாக்கம், மறக்க முடியாமல் போகும். உண்மையில் ஆறு,ஏழுவயதில் நடந்த நிகழ்ச்சி, உங்கள் மனதில் ஆழமாக பதிய முடியுமா? என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை. அதை அப்படியே இன்று உங்களால் திருப்பிச் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.அதுபோலத்தான் இந்த நிகழ்ச்சியும் ஆனால் இந்த நிகழ்ச்சியை பலரும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே வந்தததால் ஓரள்வு அப்படித்தான் என்ற எண்ணமே வந்து நிலைத்து நிற்கிறது..,
அந்த நாள் எப்படி ஆரம்பித்தது என்ற எண்ணம் எனக்கு நினைவில் இல்லை. பள்ளி உணவு இடைவேளைவிட்டபிறகு நேராக புத்தகப் பையுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். சாலையின் ஓரங்களில் கடைகளில் வாசலில் வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட போதுதெரிந்த விஷயம்தான் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொள்ளப் பட்ட செய்தி.
அப்படியே வீடு நோக்கி வந்த நான் தாயாரிடம் அப்படியே செய்தியைச் சொன்னேன். டேய், சின்னப் பசங்க அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா, என்று சொன்னார். இல்லமா அப்படித்தான் ரோட்ல பேசிக்கறாங்க. தாயாருக்கு பயங்கர கோபம் அப்படியேகையில் கிடைத்த ஒரு குச்சியை எடுத்து மிரட்ட ஆரம்பித்தார். எதோ ஒரு தவறு செய்து விட்டது போல தோன்றியது.
சரி, துணைக்கு அழைப்போம், என்று நினைத்து அம்மா மாமாவ வேணும்னாலும் கேட்டுப் பாரும்மா.., அவர் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். என்னை அவர்தான் பள்ளிக்கு அழைத்துச் செலவார். வீட்டிற்கு அருகிலேயேதான். அவரும் ஆமாம் போட்டார். நான் மாமாவைத்துணைக்கு அழைக்க தாயார் மாமாவின் தாயாரை துணைக்கு அழைத்தார். அவர் நெல் அல்லது அரிசியைப் போட்டு உரலில் குத்திக் கொண்டு இருந்தார். அவருக்கும் கடுமையான கோபம், அவர் உலக்கையுடன் எங்களை துரத்த ஆரம்பித்தார். எதோ தவறு செய்து விட்டோம் என்ற எண்ணத்தில் நானும், மாமாவும் ஓட ஆரம்பித்தோம். சற்று நேர துரத்தலுக்குப் பிற்கு அவர்கள் நின்று கொள்ள, நாங்கள் தெருவையே சுற்றி, சுற்றி ஓடிக் கொண்டு இருந்தோம். யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு புளிய மரத்தில் ஏறிவிட்டோம். அந்த மரம் சின்ன பசங்க கூட ஏறிவிடும் வகையில் வளர்ந்திருந்தது. படியில் ஏறுவது போல ஏறி கொஞ்சம் மேலே சென்று உட்கார்ந்து கொண்டோம். கொஞ்ச நேரத்தில் நாங்கள் சொன்ன செய்தியைப் பற்றி விவாதித்துக் கொண்டு பல இளைஞர்கள் கையில் தடிகளுடன் சுற்ற ஆரம்பித்தனர்.
சற்று நேரத்தில் எங்கள் உறவினர்களும் எங்கள் பெயரைக் கூவிக் கொண்டே எங்களைத்தேட ஆரம்பித்தனர். அவர்கள் கையிலும் தடிகள் இருந்தன. எங்களுக்கு பயம் கூடிக் கொண்டே போனது. அப்படியே பொழுது சாயத் தொடங்கியது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் வெறிச்சிடத் தொடங்கியது. இருந்த சின்ன சின்னகடைகளும் அடைக்கப் பட்டன. வெள்யே நடமாடுபவர்கள் கையில் தடிகளுடந்தான் சுற்றிக் கொண்டிருந்தனர். எங்களுக்கு பயம்.., பயம்.., மேலும் பயம்.....
எதோ எங்களால்தான் எல்லோரும் தடியுடன் சுற்றுவது போலவும் எங்களை அடிக்கத்தான் எல்லோரும் சுற்றுவது போலவும் எண்ணத்தில் அப்படியே தூங்கியும் விட்டோம் (பசி மயக்கமாய் கூட இருந்திருக்கலாம்). மறுநாள் காலையில் அந்த புளியமரத்தடியில் கூடிய ஐக்கிய நாட்டுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களில் ஒருவர் மேலே தலையையைத்தூக்கிப்பார்த்து அதில் தூங்கிக் கொண்டிருந்த எங்களை மீட்டார்களாம்..
===================================================
இது ஸ்டார்ஜான என்னை அழைத்த தொடக்கக் கல்வி பருவம் பற்றிய தொடர்பதிவின் இரண்டாம் பாகம். முதல்பாகம் இங்கே இருக்கிறது.
விரைவில் இந்த பதிவின் அடுத்த பகுதியைப் போட்டுவிடுகிறேன்.
இந்தத் தொடர் பதிவின்
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !
ஹ்ம்ம்...
ReplyDeleteஉங்க அனுபவம் மாதிரி தான் என் அனுபவமும் .....
எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது ராஜீவ் காந்தியின் கொலையின் போது...
எல்லோருக்கும் ஒரு அனுபவம் இருக்கும் போல .....
நல்ல அனுபவமாக இருக்கே
ReplyDeleteநல்லவேளை.. நான் அப்பொ கொயந்த !!!
ReplyDeleteஎன்ன கொடுமை தலைவரே.....
ReplyDeleteதில்லான அனுபவம் தான் போங்க
\\\ சரி, துணைக்கு அழைப்போம், என்று நினைத்து அம்மா மாமாவ வேணும்னாலும் கேட்டுப் பாரும்மா.., அவர் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். என்னை அவர்தான் பள்ளிக்கு அழைத்துச் செலவார். வீட்டிற்கு அருகிலேயேதான். அவரும் ஆமாம் போட்டார். நான் மாமாவைத்துணைக்கு அழைக்க தாயார் மாமாவின் தாயாரை துணைக்கு அழைத்தார். அவர் நெல் அல்லது அரிசியைப் போட்டு உரலில் குத்திக் கொண்டு இருந்தார். அவருக்கும் கடுமையான கோபம், அவர் உலக்கையுடன் எங்களை துரத்த ஆரம்பித்தார். எதோ தவறு செய்து விட்டோம் என்ற எண்ணத்தில் நானும், மாமாவும் ஓட ஆரம்பித்தோம். சற்று நேர துரத்தலுக்குப் பிற்கு அவர்கள் நின்று கொள்ள, நாங்கள் தெருவையே சுற்றி, சுற்றி ஓடிக் கொண்டு இருந்தோம். யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு புளிய மரத்தில் ஏறிவிட்டோம். அந்த மரம் சின்ன பசங்க கூட ஏறிவிடும் வகையில் வளர்ந்திருந்தது. படியில் ஏறுவது போல ஏறி கொஞ்சம் மேலே சென்று உட்கார்ந்து கொண்டோம். ////.
ReplyDeleteஉங்களுக்கு ரொம்ப சேட்டைதான் !!!
அறியாத வயசு புரியாத மனசு
ரெக்கைகட்டி பறக்கும் !!!
நல்லா இருக்கு....
தல உங்க வலைப்பதிவில் ஒப்பன் பண்ணும்போது அடிக்கடி எரர் வருது.
சரி செய்யவும்...
MayVee சார்
ReplyDeleteஆ.ஞானசேகரன் சார்
குறை ஒன்றும் இல்லை !!!சார்
ஜெட்லி சார்
Starjan ( ஸ்டார்ஜன் ) சார்
ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றி
//தல உங்க வலைப்பதிவில் ஒப்பன் பண்ணும்போது அடிக்கடி எரர் வருது.
ReplyDeleteசரி செய்யவும்...//
சந்தேகம் படும் இணைப்புகளை வெட்டிவிட்டேன். இப்போது எப்படி தல இருக்கு
இந்திரா காந்தி இறந்தபோது, இங்கு நகரத்தில் பெரிய அளவில் விஷயம் பரவியதாக நியாபகம் இல்லை.... புத்தகபையுடன் வீடு திரும்பி கொண்டிருக்கையில் ஒரு குட்டி போஸ்டரில் கண்ணீர் அஞ்சலி என்று படித்தது மட்டுமே நியாபகம் இருக்கிறது... ராஜீவ் காந்தி கொலை போதும் அப்படியே.... வடக்கத்திய தலைவர்கள் தமிழகத்தில் அவ்வளவு தாக்கத்தை உண்டு பண்ணியது இல்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆனால் ஊரே அல்லோகல்லோபடுத்தி கலவர ரேஞ்சுக்கு போய் வீட்டில் அனைவரும் பதுங்கி கிடந்த நாள், எம்ஜிஆர் இறப்பில் மட்டுமே.... இன்றும் நினைவில் இருக்கிறது அந்த பயம் கலந்த நாட்கள்.... பர பர அண்ணா சாலை மொத்தமும் கலவர காடாக என் வாழ்க்கையில் நான் கண்டது அன்று மட்டும் தான்.
பயங்கரமான நினைவலைகளை தூண்டிவிட்டது உங்கள் பதிவு, சுரேஷ்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
வாருங்கள் ரஃபிக் ராஜா..,
ReplyDeleteஇந்திரா காந்தி அவர்கள் இறந்து விட்டதாக சொன்னதற்கு எங்கள் வீட்டில் கிடைத்த வரவேற்பு அது. அம்மாவுக்கும் அத்தைக்கும் பயந்து நாங்கள் ஒளிந்து கொண்டோம். ஆனால் கடைகள் அடைக்கப் பட்டன,,, ஒரு பரபரப்பான சூழல் நிலவியது. எங்கள் பகுதியில் வன்முறை நிகழ்ந்ததாக நினைவில் இல்லை.
நடக்கவே இல்லை என்று கூட சொல்லலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
அனுபவ பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதங்கள் வலைதளம் அருமையாக உள்ளது. உங்களது உதவி எனது வலைதளத்திற்கும் தேவை.
ReplyDeletepls visit: http://bala-vanakkam.blogspot.com/
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteஅனுபவ பகிர்வுக்கு நன்றி.
//
நன்றி தல
//bala said...
தங்கள் வலைதளம் அருமையாக உள்ளது. உங்களது உதவி எனது வலைதளத்திற்கும் தேவை.
pls visit: http://bala-vanakkam.blogspot.com/
//
நன்றி தல.., கண்டிப்பாக..,
அன்பின் சுரேஷ்
ReplyDeleteநல்ல நினைவாற்றல் - பள்ளிப் பருவத்தில் - அதுவும் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை சுவாரஸ்யமகாத்தான் இருக்கும். நினைத்துப் பார்த்து அசைபோட்டு ஆனந்திக்க பல நிக்ழ்வுகள் உண்டு
நல்வாழ்த்துகள் சுரேஷ்
// cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் சுரேஷ்
நல்ல நினைவாற்றல் - பள்ளிப் பருவத்தில் - அதுவும் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை சுவாரஸ்யமகாத்தான் இருக்கும். நினைத்துப் பார்த்து அசைபோட்டு ஆனந்திக்க பல நிக்ழ்வுகள் உண்டு
நல்வாழ்த்துகள் சுரேஷ்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..,
நினைவாற்றல் என்று சொல்வதைவிட அவ்வாறு எங்கள் மனதில் பதியவைக்கப் பட்டிருக்கிறது. இந்த இடுகையின் துவக்கத்திலேயே இதைச் சொல்லிவிட்டேன். புளியமரத்தில் தூங்கிய கதையை இன்னும் அவ்வப்போது நினைவு கூர்ந்து கொண்டே இருக்கிறார்கள்..,
பாராட்டுதல்களுக்கு நன்றி..,