Thursday, June 25, 2009

தல.., பின்னூட்டம் படிக்கலாம் வாங்க

சில நேரங்களில் நமக்கு வரும் பின்னூட்டம் நமது கருத்தினைவிட சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி ஒரு பின்னூட்டம்தான் இது. நான்

Saturday, June 20, 2009 அன்று எழுதிய

இன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும் இடுகையில் நண்பர் ரஃபீக் ராஜா இட்ட பின்னூட்டம் போட்டிருக்கிறார். இடுகை வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்ட காரணத்தால், படித்த இடுகைதானே என்று மீண்டும் அங்கே மற்றவர்கள் செல்ல தயங்குவதாலும் அந்தப் பின்னூட்டத்தை மீண்டும் இடுகையாகவே வெளியிடுகிறேன்.
==========================================================

Rafiq Raja said...

நண்பர் சுரஷ்,

ஐபிஎல் போன்ற போட்டிகளின் தாக்கமே, நமது . இரண்டு வாரங்கள் முன்பு வரை தனி தனி அணிகளுக்கு தலைமை தாங்கி ஒருவரை ஒருவர் வீழ்த்த வியூகம் வகுத்து கொண்டு, உடனே ஒரு அணியில் ஆட சொன்னால் எப்படி என்பதற்கு இது உதாரணம்.

அதே வேளையில், நமது ஐபிஎல் அணிகளில் தன் பங்கை ஆற்றி விட்டு அவர்கள் அணிகளுக்கு திரும்பியவுடன், பட்டைய கிளப்பிய மற்ற தேசத்தவர்களை பார்த்து நாம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவிலும் பாகிஸ்தான் அணி கோப்பையை கைபற்றி இருப்பது, அவர்கள் மன உறுதியை தெளிவுபடுத்துகிறது. நம் மக்களுக்கு விளம்பரங்களில் பிபசா பாசுவையும், இலியானாவையும் துரத்துவதற்கே நேரம் போதவில்லை... இவைகளை கவனிக்க எப்படி முடியும் :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

===========================================================

24 comments:

 1. இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.. ஐ பி எல் வருவதற்கு முன்னரும் ரஞ்சி கோப்பை போன்ற முதல் தர போட்டிகளில் நம் வீரர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி கொண்டு தானே இருந்தனர்..
  இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில் பல நாட்டு வீரர்கள் வெவ்வேறு அணிக்கு விளையாடி கொண்டுதானே இருக்கிறார்கள். ஐ.பி. எல்லுக்கு முன்னோடி அதுதானே..

  நம் அணி தோற்றத்துக்கு ஐ.பி.எல் காரணம் என்றால் தொடர்ச்சியான போட்டிகளால் வீரர்களுக்கு ஏற்பட்ட அயர்ச்சி என்று சொல்லலாம்.. அதை விடுத்து எதிர் எதிர் அணியில் விளையாடியது தான் என்ற கருத்தை ஏற்க முடியவில்லை..


  அடுத்து விளம்பரம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. நெடுங்காலமாக விளம்பரத்தில் நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். (ஜெயிக்கும்போது கூட)... விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்,, அதை ஏற்று கொள்ள முடியாமல் தோற்ற உடனே விளம்பரத்தில் நடிக்க கூடாது, ரோட்டில் நடக்க கூடாது என்று சொல்வதெல்லாம் ஓவர்..


  வீரர்களுக்கு ஜெயிக்கும் போது கிடைக்கும் பாராட்டை விட, தோற்கும் போது கிடைக்கும் ஊக்கமும், ஆதரவுமே அதிக பலனை தரும்.. அடுத்த போட்டியில் ஜெயித்தாக வேண்டும் இல்லாவிட்டால் வீட்டை கொளுத்துவோம் என்றால் யாரால் நன்றாக விளையாட முடியும்..

  விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்..

  ReplyDelete
 2. வாங்க லோகு சார்..,

  உலகக் கோப்பை போட்டி ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்வரை எதிர் அணிகளில் தலைமை ஏற்று நடத்தி ஒருவரை ஒருவர் வீழ்த்த முயற்சி செய்து கொண்டிருந்தது முக்கியக் காரணம்.

  அதனால் மனதளவில் பெரிய இடைவெளி விழுந்திருக்கும்.

  ஒருவேளை இந்திய வீரர்தலைமையிலான ஏதாவது ஒரு அணி ஐ.பி.எல் கோப்பை வென்றிருந்தால் பேச்சுக்கள் எப்படியெல்லாம் போயிருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கும்? அந்தத் தலைவர் விரும்பாவிட்டால்கூட......


  அணியின் ஒற்றுமை, மற்றும் மனதளவிலான நெருக்கம் போன்றவை கெட்டத்ற்கு கடைசி சிலநாட்கள் வரை ஐ.பி.எல் என்ற அதே வகை ஆட்டம் நடந்தது ஒரு காரணம் என்று கண்டிப்பாக சொல்லமுடியும்.

  ReplyDelete
 3. வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தவறுகள் தவறுகள்தான் தல..,

  வெற்றியில் முணுமுணுக்கப் படும் தவறுகள்

  தோல்வியில் வெடிக்கின்றன.,

  ReplyDelete
 4. ஐ.பி. எல் போட்டிகளை எல்லோரும் சாதாரணமாக எடுத்து கொண்டுதான் ஆடினார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது..

  வீரர்களுக்கு போதிய ஒய்வு கிடைக்காமல் தொடர்ச்சியாக, முக்கிய உலக கோப்பை போட்டிக்கு சில நாள்கள் முன் வரை ஐ.பி.எல்லை நடத்தியதை நானும் சரி என்கவில்லை.. ஆனால் இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அது மாதிரி போட்டிகள் திறமையுள்ள இளம் வீரர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஐ.பி.எல் உதவும் என்பதை நீங்கள் ஏற்று தான் ஆக வேண்டும்..

  எனவே முக்கிய போட்டிகளுக்கு போதிய இடைவெளி கொடுத்து அவற்றை நடத்த வேண்டும் என்று சொல்லலாம்.. ஐ.பி.எல்லே வேண்டாம் என சொல்வது சரியாக இருக்காது..


  *** இது நட்புடன் முன்வைக்கும் கருத்துகள் மட்டுமே.. எதிர் விவாதமோ / சண்டையோ போடும் நோக்கில் அல்ல..

  ReplyDelete
 5. //*** இது நட்புடன் முன்வைக்கும் கருத்துகள் மட்டுமே.. எதிர் விவாதமோ / சண்டையோ போடும் நோக்கில் அல்ல..//

  புலவர்களுக்கு சண்டையும் சச்சரவும் பரம்பரைச் சொத்து.., இறையனாரின் வாதம்..,

  ReplyDelete
 6. //ஐ.பி. எல் போட்டிகளை எல்லோரும் சாதாரணமாக எடுத்து கொண்டுதான் ஆடினார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது..
  //


  போட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் தோல்விகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். தோல்விகளைத் தவிர்க்கும் எண்னங்கள் மாறிவிட்டன, வெல்வது நண்பந்தானே என்ற எண்ணம் வந்துவிட்டதுபோலவே தோன்றுகிறது,

  ReplyDelete
 7. இன்னொரு விண்ணப்பம்.. பழநி கோவிலில் புதிதாக வருபவர்களிடம் பணம் பறிக்க நடக்கும் ஏமாற்று வேலைகளை பற்றி நீங்கள் விரிவாக எழுத வேண்டும்.. வருபவர்களுக்கு உதவியாக இருக்கும்..

  ReplyDelete
 8. //லோகு said...

  இன்னொரு விண்ணப்பம்.. பழநி கோவிலில் புதிதாக வருபவர்களிடம் பணம் பறிக்க நடக்கும் ஏமாற்று வேலைகளை பற்றி நீங்கள் விரிவாக எழுத வேண்டும்.. வருபவர்களுக்கு உதவியாக இருக்கும்..
  //


  பழநில நெரயா ஆட்டோ ஓடுதுண்ணு உங்களுக்கு தெரியாதா தல..,

  பெரும்பாலும் சில்லறை திருட்டுகள் நடக்கும். கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்தாலே சுலபமாக தப்பி விடலாம். பல நிகழ்ச்சிகள் நகைச்சுவை கொடிகட்டிப் பறக்கும். நல்ல கோடு காட்டி உள்ளீர்கள்.., ரோடு போட்டுவிடுகிறேன்

  ReplyDelete
 9. //பழநில நெரயா ஆட்டோ ஓடுதுண்ணு உங்களுக்கு தெரியாதா தல..,
  பெரும்பாலும் சில்லறை திருட்டுகள் நடக்கும். கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்தாலே சுலபமாக தப்பி விடலாம். பல நிகழ்ச்சிகள் நகைச்சுவை கொடிகட்டிப் பறக்கும். நல்ல கோடு காட்டி உள்ளீர்கள்.., ரோடு போட்டுவிடுகிறேன்
  //
  முருகா.. இது சூப்பர் டாபிக். சும்மா பிச்சு உதறணும் ​சொல்லிப்புட்டேன். அதுவும் இந்த மலை அடிவாரத்தில பூஜைத் தட்டுக்கு பில் போடுவாங்களே "பூ 10 ரூவா, புஷ்பம் 5 ரூபா, சூடம் 4 ரூபா, கற்பூரம் 2 ரூபா" அப்பிடின்னுட்டு... நம்மாளுங்க கற்பனையே தனிங்க. அரகரரோ அரகரா சத்தம் அப்படியே காதில விழற மாதிரி எழுதுங்க முருகா...! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அண்ணா.
  அணியின் ஒற்றுமை, மற்றும் மனதளவிலான நெருக்கம் போன்றவை கெட்டத்ற்கு கடைசி சிலநாட்கள் வரை ஐ.பி.எல் என்ற அதே வகை ஆட்டம் நடந்தது ஒரு காரணம் என்று கண்டிப்பாக சொல்லமுடியும்.
  விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்..
  அருமை

  ReplyDelete
 11. நண்பர் லோகு,

  ரஞ்சிக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் காலந்தொட்டு ஆடி கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அதில் எத்தனை போட்டிகளை நேரடி ஒளிபரப்பில் நாம் கண்டிருக்கிறோம். இல்லை அங்கேதான் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களை அந்த அந்த அணியில் அனுமதித்து இருக்கிறார்களா?

  எந்த துறையிலும், முன்னேற்றம் அடைவோர், அந்த பிரபலத்தின் அடிபடையில் விளம்பரங்களில் பணம் ஈட்டி கொள்வது இயல்புதான். அதை நான் குறை சொல்லவில்லை. ஆனால், 3 சூப்பர் 8 போட்டிகளில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியாமல் போனதற்கு வீரர்களிடையே மனஸ்தாபம் இருந்தது என்பது தான் பிரதான காரணமாக இருக்கும்.

  உலக கோப்பை முடிந்தபின்பு கலந்து கொண்ட எல்லா பேட்டியிலும் தோனி, காட்டமாக தனது சக வீரர்களையே விமர்சிப்பதை பார்த்தீர்களா.... போட்டி நடக்க ஆரம்பிக்கும் போதே சேவக் தோனிக்கு மோதி கொண்டது.... கொஞ்ச நாட்களில் எப்போது தோனி யுவராஜ் இடையே போர் மூலும் என்று புகைந்து கொண்டிருந்தார்கள்...

  இவற்றிக்கெல்லாம் அடிப்படை அந்த ஐபிஎல் போட்டிகளே என்பது தான் என் வாதம். பணம் ஈட்டி தரும் போட்டிகளில் பங்கு கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினாலும், அதன் விளைவாக இப்படிபட்ட சில விஷயங்கள் நடப்பது இயல்புதான்.

  உலக கோப்பை நடக்க போகிறது என்று தெரிந்தும் அவசரம் அவசரமாக ஐபிஎல் போட்டிகளை நடத்தி காசு சம்பாதித்து கொள்ள நினைத்த நம் கிரிக்கெட் போர்டு தான் இதற்கு முதல் காரணகர்த்தா.

  ஆரம்ப காலத்தில் இந்தியா வெற்றி பெறுமா என்ற எண்ணத்துடன் போட்டிகளை பார்த்து கொண்டிருந்த நான், இப்போது வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்து கொண்டு மற்ற அணிகளையும் தொடரும் கிரிக்கெட் ரசிகனாக என்னை மாற்றி கொள்ள... ஐபிஎல் போன்ற போட்டிகள் உதவியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது...எல்லா நாட்டு வீரர்களையும் நம் அணிகளில் பார்த்து அவர்களையும் உற்சாகபடுத்தியதன் விளைவு. ஒருவேளை இதே எண்ண ஓட்டம், நம் வீரர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதையே நான் அந்த கருத்தில் வலியுறுத்த விரும்பினேன்.

  தனிபட்ட தாக்குதல் இல்லாமல் எதிர்மறை கருத்தை முன்வைப்பது என்றுமே நல்ல வாதத்திற்கு மூலம். எனவே, நீங்கள் தயங்காமல் உங்கள் தரப்பு கருத்துகளை கூறலாம். பதிவுலக நண்பர்களிடையே சண்டை சச்சரவுக்கு இடம் எங்கு. :)

  பி.கு.: சுரேஷ் என் கருத்தை ஒரு பதிவில் அரங்கேற்றி என்னை பெருமிதம் கொள்ள செய்து விட்டீர்கள்.. நன்றி நண்பரே.

  உங்கள் அடுத்த பதிவிற்கு இப்போதே பழநி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் தடா போட கோர்டில மனு செய்ய முயன்று கொண்டிருப்பதாக தகவல்கள் கசிகிறது :)

  ReplyDelete
 12. அன்பு Rafiq Raja,


  ம்ம்ம்.. ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு காட்சிகள்.. இருவர் தரப்பிலும் நியாயம் இருக்கிறது..
  இந்த விவாதத்தில் நிறைய அலசி விட்டோம்.. மேலும் வளர்க்க வேண்டாமே..

  இனிமேல் நல்லவை நடக்க நம்புவோம்.. தோல்வியிலும் தோள் கொடுப்போம்..

  உங்கள் அன்புக்கு நன்றி.. நட்பு தொடரும் என நம்புகிறேன்..

  நன்றி..

  ReplyDelete
 13. உண்மையே லோகு...முடிந்த வரை அலசி விட்டோம், இனி அடுத்த டாபிக்குக்கு தாவி கொள்ளலாம் :).

  நம்ம சுரேஷ் போற வேகத்திலே இன்னும் எவ்வளவோ தலைப்புகளில் பதிவு வெளியிடுவார் போலிருக்கு.... இனி நமக்கு அரட்டை அடிக்க நிறைய களம் இருக்க போகிறது :)

  ReplyDelete
 14. அலசி காயப்போட்டாச்சா??

  வழக்கம்போல நான் லேட்டா ??

  ReplyDelete
 15. //ஜெகநாதன் said...

  நம்மாளுங்க கற்பனையே தனிங்க. அரகரரோ அரகரா சத்தம் அப்படியே காதில விழற மாதிரி எழுதுங்க முருகா...! வாழ்த்துக்கள்!//


  தங்களின் இனிய வரவு நல்ல வரவாகுக தல

  ReplyDelete
 16. //நாமக்கல் சிபி said...

  :)
  //

  ரசிப்புக்கு நன்றி தல

  ReplyDelete
 17. உங்களுக்கு மட்டும் எப்பிடித்தான் இப்பிடி எல்லாம் தோனுதோ???
  :)))

  ReplyDelete
 18. //இது நம்ம ஆளு said...

  விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்..
  அருமை//

  நாமெல்லாம் திருவிளையாடலையே பார்த்தவங்க தல.. இதெல்லாம் எம்மாத்திரம்

  ReplyDelete
 19. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  லோகு சார்

  ரஃபிக் ராஜா சார்

  கடைக்குட்டி சார்

  வழிபோக்கன் சார்

  ReplyDelete
 20. எத்தனை தடவைதான் ?
  முடியல.. விட்டுடுங்க!!
  ஓட்டும் போட்டாச்சு..

  ReplyDelete
 21. //கலையரசன் said...

  எத்தனை தடவைதான் ?
  முடியல.. விட்டுடுங்க!!
  ஓட்டும் போட்டாச்சு..
  //

  நன்றி தல..,

  ReplyDelete
 22. //.. நம் மக்களுக்கு விளம்பரங்களில் பிபசா பாசுவையும், இலியானாவையும் துரத்துவதற்கே நேரம் போதவில்லை... இவைகளை கவனிக்க எப்படி முடியும்..//

  :-)

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails