உமக்கு கடிதம் எழுத வெகுநாட்களாக நினைத்ததுண்டு. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. உங்கள் வீட்டில் கணினி, சாவிப் பலகை, மற்றும் வெண்திரை அனைத்தும் நலமாகவே இருக்கும் என்று நம்புகிறேன். நானும் சில காலமாக இந்த வலைப் பூவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நீ அடிக்கடி இந்த வலைப்பூவை நோட்டமிடுகிறாய். மிகவும் நல்லது. தமிழ்மணம் தமிழீஷ் ,உலவு, தமிழர்ஸ் போன்ற திரட்டிகள் மூலமாகவும், இளமை விகடன் மூலமாகவும் அவ்வப் போது எட்டிப் பார்க்கிறாய்.
பல திரட்டிகளில் பிடித்திருந்தால் ஓட்டுப் போடச் சொல்கிறார்கள். அந்தத் திரட்டிகளின் முகப்பில் வெகுநேரம் நிற்பதற்கு இந்த ஓட்டுக்கள் அவசியமாகிறது.
நாளைய தத்துவங்களை (இந்த வலைப்பூவின் தலைப்பின் விளக்கத்தைப் பாருங்கள்) நிறையப் பேர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பதுதானே..
ஆனால் நண்பா...
தமிழ்மணம் திரட்டிக்கு மட்டும் ஒரு வக்கிர (இந்த வார்த்தையை ஒரு சூப்பர்ஸ்டார் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்) எண்ணம் உண்டு. படிப்பவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதன் பரிந்துரை ஓட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடலாம். அதற்கு கீழ்நோக்கிய கட்டைவிரலில் ஒரு சுண்டு சுண்டினால் போதும். இதற்கு எதோ ஒரு உயரிய நோக்கம்தான் காரணமாக இருக்கும்.
ஆனால் நண்பா
சமீபத்தில் நீ எதிர்த்து குத்திய சில இடுகைக்களைப் பார்த்தால் அதில் எதிர்ப்பதற்கு ஒன்றுமே இருக்காது. நான் எழுதிய சில இடுகைகள் கூட உன்னால் அனுபவித்துப் படிக்கவில்லையென்றால் கூட எதிர்த்து வாக்களிக்க வேண்டிய காரணம் ஏதும் இருக்குமா என்று தெரியவில்லை.
| ||||||
============================================
| |||
Pathivu Toolbar ©2009thamizmanam.com | |||
கலைஞருக்கே தெரியாத ரகசியம்?
=============================================
போன்ற இடுகைகளுக்கு எதிர்வாக்களிக்க வேண்டிய அவசியம்தான் புரிய்வில்லை.
இதுகூட பரவாயில்லை
சகபதிர்வர்கள் எழுதியவற்றில்
| |||
Pathivu Toolbar ©2009thamizmanam.com | |||
"ற்க்" பிழையும் பதிவர்களும்
இந்த இடுகையில் எதற்காக எதிர்வாக்கு குத்தவேண்டும்?=====================================================
’நறுக்கு’ன்னு நாலு கேள்வி -- 1?
தமிழ்மணம் பரிந்துரை : 6/10 |
|
===================================================
தமிழ்மணம் பரிந்துரை : 10/12 |
|
இது இதுதான்....
==================================================நான் எழுதியது கூட சும்மா பொழுதுபோக்கிற்காக என்று எடுத்துக் கொண்டாலும் இந்த இடுகைகளும் இது போன்று பல இடுகைகளும் மிகவும் கடினமாக உழைத்து சிந்தித்து எழுதப் படுகின்றன..
நீ எதிர் ஓட்டுப் போட்டதால் வாசகர் பரிந்துரையில் இருந்த எனது இடுகை ஒன்று வெளியே வந்து விட்டது. நன்றாக வாசகர்கள் வந்து கொண்டிருந்த இடுகை உனது விருப்பச் செயலால் வெளியே தள்ளப் பட்டுவிட்டது. அதனால் உனக்கு கிடைத்த பலன் தான் என்ன? உனது கொள்கையை எதிர்த்து எழுதியிருந்தால் நீயும் அதில் பின்னூட்டம் மூலம் உனது வாதத்தை வைத்திருக்கலாமே? அதைவிட்டு எதிர்போட்டுப் போட்டு என்ன சாதித்தாய் நண்பா?
இனிமேல் முடிந்தவரை யாருடைய இடுகைக்கும் எதிர் ஓட்டுப் போடாதே..
அப்படியே எதிர் ஓட்டுப் போட்டால் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு எதிர் ஓட்டு போடு நண்பா. உனது கோணத்தையும் மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.
புரிந்துகொள்வாய் என்று நினைக்கிறேன்
இங்ங்னம்
உனது இடுகைக்கு எதிர் ஓட்டுப் போடத்துடிக்கும்
உன்நண்பன்
உனது இடுகைக்கு எதிர் ஓட்டுப் போடத்துடிக்கும்
உன்நண்பன்
அப்டீங்களா???
ReplyDeleteஇந்த தமிழ் மணம் ஒன்னுமே புரியலங்க எனக்கு இன்னும்..
நான் அந்தப் பக்கம் போகாததால் ஒருதலையாக உங்கள் கருத்துக்களை மட்டும்தெரிந்து கொண்டு கருத்து சொல்ல விரும்பவில்லை...
அதனால
சிம்பிளா..
மறுக்கா சொல்லிக்கிறேன்.
அப்டீங்களா???
//அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு//
ReplyDeleteஇங்கதான் நீங்க இடுகைக்கு வலு கூட்டிட்டீங்க!
//கடைக்குட்டி said...
ReplyDeleteஅப்டீங்களா???
இந்த தமிழ் மணம் ஒன்னுமே புரியலங்க எனக்கு இன்னும்..//
வாங்க தல.. இப்போதைய முண்ணனி திரட்டி இதுதான் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஈ-ரெஃப் உம் அதை உறுதி செய்கிறது
//பழமைபேசி said...
ReplyDelete//அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு//
இங்கதான் நீங்க இடுகைக்கு வலு கூட்டிட்டீங்க!
//
நன்றி தல..,
யார்க்கர் இடுகைக்கு காலைவரை 100 அதற்குப்பிறகு மிகச் சொற்பம்
எதிர்த்து குத்துவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கு, கலைஞர் என்ற வார்த்தையை பார்த்தவுடனேயே எதிர்த்து குத்திவிடுகிறார்கள் சிலர். இதற்கு உதாரணம் கலைஞருக்கே தெரியாத ரகசியம் என்ற உங்கள் இடுகை. எங்கள் வலைப்பதிவே கலைஞர் பெயர் கொண்டு இருப்பதால் தினம் தினம் எங்களை எதிர்த்து அவர்கள் குத்துவது வாடிக்கையான ஒன்று
ReplyDeleteநல்லா சொன்னீங்க.
ReplyDeleteஎதிர் ஓட்டும் போடுவார்களா? :(
ReplyDeleteநல்ல தலைப்பு...என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று யூகிக்க முடியாத தலைப்பு
ReplyDeleteதோழர் சுரேஷ்,
ReplyDeleteஎதிர் ஓட்டுகள் குத்துபவர்களை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் அதற்கு பதிலாக ஓட்டுகள் வாங்கும் பதிவுகளாக தொடர்ந்த வெளியிட்டு அவர்கள் செய்கைகளை எண்ணி வருந்தி விலகி ஓட செய்ய முடியும். அது உங்களாள் சாதிக்க முடியாத ஒன்றல்ல.
ஓட்டுகளை நம்பியா நாம் இருக்கிறோம்? உங்கள் வலைப்பூவுக்கு ஒரு வாசகர் வட்டம் உருவாகி இருக்கிறது, அவர்கள் உங்கள் பதிவுக்கு உண்டான உண்மையான கருத்தை கூறுவார்கள். கவலை இல்லாமல் தொடரவும்.
//உடன்பிறப்பு said...
ReplyDeleteஎதிர்த்து குத்துவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கு, கலைஞர் என்ற வார்த்தையை பார்த்தவுடனேயே எதிர்த்து குத்திவிடுகிறார்கள் சிலர். இதற்கு உதாரணம் கலைஞருக்கே தெரியாத ரகசியம் என்ற உங்கள் இடுகை. எங்கள் வலைப்பதிவே கலைஞர் பெயர் கொண்டு இருப்பதால் தினம் தினம் எங்களை எதிர்த்து அவர்கள் குத்துவது வாடிக்கையான ஒன்று
//
வாங்க உடன் பிறப்பே.., நீங்கள் சொல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இடுகைக்கூட இரண்டு எதிர் ஓட்டுப் போடப் பட்டுள்ளது. யார்க்கர் இடுகைக்கு மூன்று எதிர் ஓட்டு. இவைகளுக்கான காரணம் தெரியவில்லையே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//குறும்பன் said...
ReplyDeleteநல்லா சொன்னீங்க.
//
நன்றி தல..,
//ஆகாய நதி said...
ReplyDeleteஎதிர் ஓட்டும் போடுவார்களா? :(
//
உண்மைதான் தல.., ஃபயர் ஃபாக்ஸ் உலாவி, கூகிள் குரோம் உலாவிகளில் ஓட்டு எண்ணிக்கை தெரியுகிறது. ஆனால் I E உலாவியில் ஓட்டு எண்ணிக்கை தெரிவதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//S Senthilvelan said...
ReplyDeleteநல்ல தலைப்பு...என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று யூகிக்க முடியாத தலைப்பு
//
நன்றி தல..,
//Rafiq Raja said...
ReplyDelete//அதற்கு பதிலாக ஓட்டுகள் வாங்கும் பதிவுகளாக தொடர்ந்த வெளியிட்டு அவர்கள் செய்கைகளை எண்ணி வருந்தி விலகி ஓட செய்ய முடியும்.//
உண்மைதான் தல..,
//உங்கள் வலைப்பூவுக்கு ஒரு வாசகர் வட்டம் உருவாகி இருக்கிறது, அவர்கள் உங்கள் பதிவுக்கு உண்டான உண்மையான கருத்தை கூறுவார்கள். கவலை இல்லாமல் தொடரவும்.//
நன்றி தல
அண்ணா,உங்கள் வலைப்பூவுக்கு ஒரு வாசகர் வட்டம் உருவாகி இருக்கிறது,அதை யாராலும் தடுக்க முடியாது.
ReplyDeleteஎதிர் ஓட்டுப் போட்டால் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு எதிர் ஓட்டு போடு நண்பா. உனது கோணத்தையும் மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவலை இல்லாமல் தொடரவும்...
சும்மா நச்னு சொன்னிங்க டாக்டர், எத்தனையை நல்ல பதிவுகள் காரணமே இல்லாம எதிர் வோட்டுகள், அரசு பள்ளி பற்றிய பதிவு, ஏன் லக்கி அப்பா ஆனாரு வாழ்த்திய பதிவுக்கு கூட எவனோ 10 பேரு எதிர் வோட்டு
ReplyDeleteசில பேர் அந்த இடுகைகளில் அவர்கள் பதிவு வர வேண்டும் என்று கடைசியா உங்க இடுக்கைக்கு பின்பு இருப்பவன் அவனாக இருப்பான்
இப்படி பதிவை படிக்காம கூட போடுவான்
தமிழ்மணம் அந்த இடுகையை அவர் படித்து போடுகிறா என்று நினைத்து கோடு மாத்தினால் நல்லது இல்லை என்றால் எதிர் வாக்குங்கள் தேவை இல்லாத ஒன்று ஒருத்தன் படிச்சு பிடித்தால் மட்டுமே பதிவுக்கு வோட்டு போடுவான்... இல்லைனா நண்பராய் இருப்பது..
இப்போ எதிர் வோட்டுகளுக்கு இதே பிரச்சனை பதிவு படிச்சு பிடிக்காடி பரவாவில்லை.. ஆனா தனி நபர் தாக்குதல் மாதிரி எதிர் குத்து குத்திட்டு அதில் ஒரு ஆனந்தம் இதை சைக்காலஜியில் சேடிஸ்ட் என்று சொல்லுவார்கள்
அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம், அது ஒரு வித மண நோய் என்பது அவன் அறியாமல் செய்கிறான்
மாதவராஜ்க்கு இந்த பிரச்ச்னை இருந்தது...
ஆனா ரொம்ப டீஸண்டா எழுத் இருக்கிங்க இதை பார்த்தாவது அந்த ஸடிஸ்ட் மாறுவாரா பார்ப்போம்
இதுக்கு எதிர் குத்துகள் வோட்டாய் விழுந்து இருக்கு தமிழ் மணம் இதை தூக்கினால் நல்லது போல
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி இது நம்ம ஆளு
ReplyDelete//Suresh said...
ReplyDeleteசும்மா நச்னு சொன்னிங்க டாக்டர்.தமிழ்மணம் அந்த இடுகையை அவர் படித்து போடுகிறா என்று நினைத்து கோடு மாத்தினால் நல்லது இல்லை //
உண்மைதான் தல
//Suresh said... இதை சைக்காலஜியில் சேடிஸ்ட் என்று சொல்லுவார்கள்
ReplyDelete//
சேடிஸ்ட் அப்படினா அடுத்தவரைத் துன்புறுத்துவதால் பாலியல் இன்பம் அடைவது தல..,
எதிர் ஓட்டுப் போட்டுக்கூட பாலியல் இன்பம் அடைகிறார்களா இவர்கள். ஆச்சரியம்.. (மற்றும் கருமம்)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல