Monday, June 15, 2009

செக்ஸ் கல்வி- இப்பவே கண்ணக் கட்டுதே பாகம்-2

ஏற்கனவே எழுதப் பட்ட செக்ஸ் கல்வி - இப்பவே கண்ணக் கட்டுதே! இடுகையில்




Barari June 15, 2009 3:06 PM
ATHAVATHU KARPPAMAAKAAMAL EPPADI PALIYAL THODARBU KOLVATHU ENBATHAI SOLLI THARA POKOREERKAL.
இப்படி ஒரு பின்னூட்டம். அதற்கான பதில் எழுத ஆரம்பிக்க பெரிய பதிலாகவந்ததால் இந்த இடுகை.



============================================================

மிகவும் தவறான புரிதல் பராரி,

பாலியல் கல்வி என்பது உடல் மற்றும் பருவ மாறுதல்களை விளக்கி இயல்பானதுதான் என்ற கருத்தை ஏற்படுத்துவது. பெரும்பாலும் இந்த ரகசியங்களை தெரிந்து கொள்ளும் முயற்சிதான் பல தவறுகளுக்கு இடம் கொடுக்கின்றன.

அடுத்த கட்டமாக இந்த இயல்பான மாறுதல்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை விளக்கும் வகையில் அமைய வேண்டும். உடல் உறவு என்பதன் அடிப்படை இனப் பெருக்கம்தான் என்பதை புரியும் படி உணர்த்த வேண்டும்.

(கருத்து வேறுபாட்டில் நிற்கும் தம்பதியிடம்தான் உடலுறவு என்பது மிக இனிமையானது அதை அனுபவிக்க வேண்டும் என்று பேச வேண்டும். அது பாலியல் கல்வியின் மிக மிக கடைசிக் கட்டத்தில் வர வேண்டும்)


அதற்கடுத்த புரிய வைக்க வேண்டிய உண்மைகள் சில உண்டு. அடிப்படையில் அனைத்து பெண்களும் (ஆண்களும் ) அடிப்படையில் ஒரேவகையானவர்களே என்ற உண்மை அதில் மிக முக்கியமானது. இதில் பல பெண்களை சேர்வது என்பது தேவையற்றது மற்றும் அதனால் தனித்துவம் வாய்ந்த இன்பம் ஏதும் இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும்.

இது கூட பாலியல் கல்விதான். அதற்கடுத்து இவ்வாறு பல்வேறு தொடுப்புகள் இருப்பதால் ஏற்படும் உடல்ரீதியான, மன ரீதியான சமுதாய ரீதியான பாதிப்புகளைச் சொல்ல வேண்டும். அதையும் கூட உடனடி, சிறிது காலத்திற்குப் பின், நீண்டகாலத்திற்குப் பின், எனப் பிரித்துச் சொல்லலாம்.

சில சந்ததிகள் கழித்துக் கூட ஏற்படும் விளைவுகளைச் சொல்லலாம்.

இதெல்லாம் முடிந்த பின் உடல் ஹார்மோன்கள் பற்றிச் சொல்லலாம். இதில் பால் ஹார்மோன் மட்டுமல்லாமல் சர்க்கரை நோய்க்கு காரணமான இண்சுலின் முதற்கொண்டு சொல்லலாம். அப்போதுதான் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்க முடியும்.

அதற்கடுத்து உடல் உறுப்புகள் செயல்பாடுகள் (கவனிக்க இங்கு கூட உடலுறவு முறைகள் சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை) இதயம் மூளை செயல்பாடுகள் சொல்லித்தருவது போல கர்ப்பப்பை, கருப்பை, விந்தகம், ப்ராஸ்டேட் பற்றிச் சொல்லித் தரலாம். இதய பாதிப்பு வராமல் தடுக்கும் வழி முறைகள் சொல்லித்தருவது போல பால் உறுப்புகள் பாதிப்பு வராத தூய்மையான வாழ்க்கைப் பற்றிச் சொல்லித் தரலாம் (இப்போதும் உடலுறவு பற்றிய பேச்சே ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை)

அதற்கடுத்து எந்த வய்தில் குழந்தை பெறுவது ஆரோக்கியம், எந்த வயதிற்குப் பிற்கு குழந்தை பெறுவதை தவிர்க்கலாம்? சொந்தத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் என்ன? என்பது போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கலாம்.

இவ்வாறு போகும் பாலியல் கல்வியில் எங்கு தவறு நேரமுடியும் என்று நினைக்கிறீர்கள்.

22 comments:

  1. சுரெசு!! நல்ல இடுகை!!

    ReplyDelete
  2. ஓட்டும் போட்டு விட்டேன்!!

    ReplyDelete
  3. இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கிற வரைக்கும்
    இந்தியா எங்கே முன்னேறும் பாஸ்...

    ReplyDelete
  4. நல்ல கருத்து சொன்னாலும் ஏத்துக்க மட்டாங்க‌

    அவங்களுக்கும் புரியாது....

    ReplyDelete
  5. நம்ம ஆளுங்களுக்கு எத சொன்னாலும்.. வில்லங்கமா தான் தெரியும்.

    ReplyDelete
  6. //thevanmayam June 15, 2009 5:41 PM

    சுரெசு!! நல்ல இடுகை!!
    //

    நன்றி ஐயா..,

    ReplyDelete
  7. //starjan June 15, 2009 9:07 PM

    நல்ல கருத்து சொன்னாலும் ஏத்துக்க மட்டாங்க‌

    அவங்களுக்கும் புரியாது....
    //

    அவர்களுக்கு புரியும்பட்சத்தில் ஏற்றுக் கொள்வார்கள்

    ReplyDelete
  8. //பிரியமுடன்.........வசந்த் June 15, 2009 9:23 PM

    அ....ஆ....
    //

    ஓ.கே.. ஓ.கே.....

    ReplyDelete
  9. //எட்வின் June 15, 2009 9:26 PM

    நம்ம ஆளுங்களுக்கு எத சொன்னாலும்.. வில்லங்கமா தான் தெரியும்.
    //

    வில்லங்கமான விஷயம்தான் மக்களை விரைவில் சென்றடையும் தல..,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  10. ***இதயம் மூளை செயல்பாடுகள் சொல்லித்தருவது போல கர்ப்பப்பை, கருப்பை, விந்தகம், ப்ராஸ்டேட் பற்றிச் சொல்லித் தரலாம். இதய பாதிப்பு வராமல் தடுக்கும் வழி முறைகள் சொல்லித்தருவது போல பால் உறுப்புகள் பாதிப்பு வராத தூய்மையான வாழ்க்கைப் பற்றிச் சொல்லித் தரலாம் (இப்போதும் உடலுறவு பற்றிய பேச்சே ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை)***

    உடலுறவு என்கிற வார்த்தை இல்லாமல் எப்படி "பாதுகாப்பான உடலுறவு" பற்றி சொல்லிக்கொடுப்பீங்க?

    பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவை புகுத்துவதும் நம் முயற்சி இல்லையா?

    ReplyDelete
  11. //உடலுறவு என்கிற வார்த்தை இல்லாமல் எப்படி "பாதுகாப்பான உடலுறவு" பற்றி சொல்லிக்கொடுப்பீங்க?

    பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவை புகுத்துவதும் நம் முயற்சி இல்லையா?//

    அது கடைசிக் கட்டம் நண்பரே..,

    உண்மையில் அடிப்படை அற்வினை வளர்க்கும்போது பாதுகாப்பற்ற உடலுறவு என்ற வார்த்தைக்கே இடம் இருக்கமுடியாது.

    திருமணத்திற்கு முந்தைய, வெளித் தொடர்புகளைப் பற்றியும் அதன் விளைவுகளையும் பற்றிய அடிப்படையைச் சொல்லிக் கொடுப்பதே அதைத் தவிர்த்து விடும்

    ReplyDelete
  12. சரி, சுரேஷ், இதுக்கு பதில் சொல்லுங்க!

    இன்றைய உல்கத்தில் பாலியல் கல்வி யின் தேவைக்கு காரணமே, எயிட்ஸ் மற்றும், டீன் ப்ரெக்னண்ஸி இவைகள் தானே?

    இல்லையா?

    ReplyDelete
  13. //வருண் June 15, 2009 10:39 PM

    சரி, சுரேஷ், இதுக்கு பதில் சொல்லுங்க!

    இன்றைய உல்கத்தில் பாலியல் கல்வி யின் தேவைக்கு காரணமே, எயிட்ஸ் மற்றும், டீன் ப்ரெக்னண்ஸி இவைகள் தானே?

    இல்லையா?
    //


    உலக அளவில் அது உண்மைதான். ஆனால் உண்மையான கல்வி, உண்மையை எடுத்துக் கூறுவதாகவே அமையும். பிழையில்லாமல் வாழ வழி வகுக்கும். பாதுகாப்பாக பிழை செய்ய கற்றுக் கொடுப்பது உண்மையான கல்வி ஆகாது.

    அடிப்படையில் இருந்து வந்தால் கண்டிப்பாக நேர்வழியிலேயே பதின்ம கர்ப்பங்களைத் தடுக்க முடியும்.

    அதைவிடுத்து ஆணுறை அணிந்து கொள்வது தவறு செய்வது என்பது பைத்தியக் காரத் தனம். ஆணுறை கிழிந்துபோகும் தன்மை வாய்ந்தது என்பதும், கிழிந்த ஆணுறையால் பால்வினை வியாதிகளுக்கு பாதுகாப்பளிக்க முடியாது என்ற செய்தியையும் இங்கு பகிர விரும்புகிறேன்

    ReplyDelete
  14. ***அடிப்படையில் இருந்து வந்தால் கண்டிப்பாக நேர்வழியிலேயே பதின்ம கர்ப்பங்களைத் தடுக்க முடியும். ***

    அதாவது உங்கள் "நேர்வழி" என்பது "காமம் இல்லாமை"? அப்படித்தானே?

    எப்போவரைக்கும்?

    திருமணம் ஆகும் வரைக்குமா?

    ReplyDelete
  15. தெலிவான கல்வியின் மூலம் பதின்ம வயது திருமணத்தையும் தவிர்க்கலாம், தடுக்கலாம், வெளிவட்டார உடலுறவுகளையும் தவிர்க்கலாம்.

    அவ்வாறு அமைந்தால் மட்டுமே முழுமையான பாடமாக அமையும்

    ReplyDelete
  16. Sorry for my English!

    The problem is we are not conservative anymore! Neither are we liberal!

    What are we?!

    Can we do anything in a systematic manner including this sex education?

    I suspect very much!

    We can stay as conservative and respect all the values!

    Or we can be copletely liberal.

    We dont fall in any category. Then how can we teach sex education in this mess?!

    I dont see how!

    We just have to decide what we really are? How do we want to live our life in the future?

    ReplyDelete
  17. கருத்துக்களுக்கு நன்றி வருண் அவர்களே..,

    எந்த ஒரு செயலையும் மிக மென்மையாகவும் கையாள முடியாது, மிக வன்மையாக கையாளவும் முடியாது.

    ReplyDelete
  18. //T.V.Radhakrishnan June 15, 2009 11:23 PM

    நல்ல இடுகை
    //

    நன்றி தல

    ReplyDelete
  19. NEENGAL SOLLIYIRUPPATHU POL PADAM NADATHTHAPADUMAANAAL VARAVERKKALAAM.IDAIYIL THISAI MAARUM VAAIPPU IRUPPATHAIYUM KAVANATHTHIL KOLLA VENDUM.

    ReplyDelete
  20. //Barari June 16, 2009 2:31 PM

    NEENGAL SOLLIYIRUPPATHU POL PADAM NADATHTHAPADUMAANAAL VARAVERKKALAAM.IDAIYIL THISAI MAARUM VAAIPPU IRUPPATHAIYUM KAVANATHTHIL KOLLA VENDUM.
    //

    உண்மைதான், கவனமாகச் செய்யப் பட வேண்டிய விஷயம்தான்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails