இன்று ஒருவழியாக 20-20 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடக்க இருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அந்த ஆட்டத்தைப் பார்க்கும்முன் கல்லூரி நாட்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கத்தோன்றுகின்றது.
==========================================================
எங்கள் கல்லூரியில் ஆத்தா என்ற பாத்திரம் மிக முக்கியமானது. அதிர்ஷ்ட தேவதையை நாங்கள் ஆத்தா என்று அழைப்போம். அதேபோல் ஆத்தா கண்ணைக் குத்திடுவா என்ற வாக்கியமும் பிரபலம். அதிர்ஷ்ட தேவதை வாய்ப்புக் கொடுத்தும் உபயோகப் படுத்திக் கொள்ளாவிட்டால் அதிர்ஷ்ட தேவதை பழிவாங்கிவிடுவாள் என்ற ரீதியில் சொல்லப் படும் வார்க்கியம் அது.
தேர்வுக்குச் செல்லும்போது கூட ஆத்தாதான்... என்று சொல்வார்கள். ஆத்தா நம்ம பக்கம் இருந்தால் தெரிஞ்ச கேள்வியா வரும். அப்படியே தெரியாத கேள்வி வந்தா கூட நம்ம சொல்ற பதில் சரியா இருக்கும் என்பார்கள்.
அவனுக்கு ஆத்தா ஆட்றாடா... பார் அவன் எந்த பந்தை தொட்டாலும் அது பவுண்டரிக்குப் போகுது. அவன் சும்மா நின்னாலும் பந்து தானா வந்து பட்டு ஃபோர் போகுது பார். என்றெல்லாம் சொல்வதுண்டு.
எத்தனை ஆத்தா இருந்தும் என்ன பிரயோஜனம். லவ் ஆத்தா மட்டும் கண்ணத்தொறக்க மாட்டேங்கறாளே என்பது போன்றும் பேசப் படுவதுண்டு.
மொத்தத்தில் ஆத்தா என்பது அதிர்ஷ்டம், பயம், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து ரத்தத்தில் ஊறிய ஒரு பாத்திரம்
=====================================================
பத்ம விருது கொடுக்கப் படும்போது தோனி போகாததன் காரணமாகவே ஆத்தா கோபம் கொண்டு டோணிக்கு இவ்வளவு சிரமம் கொடுக்கிறாளோ? என்று இப்போது உங்களுக்குத் தோண்றுகிறதா?
===========================================================
ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆடியதில் அவர்களது பலம் ,பலவீனம் ஆகியவை எல்லா வீரர்களுக்கும் தெரிந்து விட்டது. உண்மையில் இந்தப் பிரச்சனியிலிருந்து மீண்டவர்கள்தான் சச்சின் போன்றவர்கள். இதில் சச்சினைவிட மிக அற்புதமாக கிரிக்கெட் சகாப்தத்தைத் தொடங்கிய காம்ப்ளி சிக்கிக் கொண்டு கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர் அணிக் காரர்கள் எல்லாம் நண்பர்களாக மாறிவிட்டதால் ஒரு போட்டி, போராட்ட மணப்பான்மை குறைந்து விட்டது. அதேபோல் இந்திய அணீயிலும் உள்ளுக்குள் போட்டி, போராட்டம் அதிகரித்து இருக்கலாம்.
ஐ.பி.எல் நிறைய ஆடியதால் வெற்றி, தோல்விகளைச் சமமாக எடுத்துக் கொள்ளும் மனப் பான்மை வந்துவிட்டது என்றே சொல்லலாம். தோற்றால் அதற்காக வருந்துவதில்லை. நம்ம சங்ககாரா, நம்ம கிப்ஸ், நம்ம குல் என்ற எண்ணம் வளர்ந்திருக்கலாம். ஜெயித்தவர்கள் தோற்றவர்களுடன் சேர்ந்து மச்சி, மச்சி என்று ஷாம்ப்பெயின் பார்ட்டிகள் கொண்டாடுவதால் தோற்ற உணர்வே வருவதில்லை.
ரசிகர்களுக்குக் கூட முதலில் இருந்த ஒரு வெறி, கோபம் இல்லை பாருங்கள். அவர்கள் சாந்தமாக தொடர்ச்சியாக போட்டிகளைப் பார்த்துவருகிறார்கள்.
சற்று காயம் அடைந்தவர்கள் கூட கொஞ்ச நேரம்தானே ஆடினால் போயிற்று என்று விளையாடுவது கூட தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
========================================================
இன்று உலகக் கோப்பை ஆத்தா யாரைப் பார்த்து கண்விழிப்பாள் என்று யோசித்த போது சில விவரங்கள் மனதில் ஓடியது?
1.எந்த நாட்டில் இப்போது கிரிக்கெட் தள்ளாடிக் கொண்டிருக்கிறது?
2.எந்த நாட்டு வீரர்களுக்கு விளம்பரதாரர்கள் மிகக் குறைவாக வருகின்றன?
3.எந்த அணி ஜெயித்தால் உள்நாட்டில் ஒரு அலை ஏற்படும்?
4.எந்த அணி வென்றால் அந்த அணி வீரர்களுக்கு ஐ.பிஎல்லில் கூடுதல் வருவாய் கிடைக்கும்?
5எந்த நாட்டு அணியை அடுத்த ஐ.பி.எல்லில் சேர்க்க முடியும்?
6.எந்த நாட்டில் ஐ.பி.எல்லுக்கு நிகரான போட்டிகளை நடத்த முடியும்?
இப்படி எல்லாம் ஒரு கணக்கு ஆத்தாவுக்கு இருக்க வேண்டும்.
நாம் இப்படி எல்லாம் நினைத்துப் பார்த்தால் கூட கிரிக்கெட் ஆத்தா என்ன நினைக்கிறாள் என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.
நான் நம்ம பங்காளிகள் ஜெயிக்கணும்னு நினைக்கிறேன் டாக்டர்...
ReplyDelete/லோகு June 20, 2009 2:44 PM
ReplyDeleteநான் நம்ம பங்காளிகள் ஜெயிக்கணும்னு நினைக்கிறேன் டாக்டர்...//
பங்காளி அப்படின்னா.., யாருங்க..,
பெரிய வார்த்தையைப் போட்டு குழப்புறீங்க தல
//அவர்கள் சாந்தமாக தொடர்ச்சியாக போட்டிகளைப் பார்த்துவருகிறார்கள்.//
ReplyDeleteமறுபடியும் டோணி வீட்ட இடிக்க ஆள் சேத்துறீங்க போலிருக்கு!
இறுதிப்போட்டி நாளை(21.07)... இன்று என தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteநல்ல அலசல். ஆத்தா மேட்டர் சூப்பர்.
ReplyDeleteஆத்தா ஆசியாவுக்கு கண்ணத் தொறந்திட்டாங்க
பங்காளினா நம்ம பாகிஸ்தான் தான் டாக்டர்...
ReplyDeleteயப்பு...இறுதி ஆட்டம் நாளைக்கு....இன்னைக்கி இல்ல
ReplyDelete//மொத்தத்தில் ஆத்தா என்பது அதிர்ஷ்டம், பயம், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து ரத்தத்தில் ஊறிய ஒரு பாத்திரம்//
ReplyDeleteநல்ல ஆத்தா டாக்டர்
நல்ல அலசலான பதிவுங்க..
ReplyDeleteகருத்துக்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உள்ளது..
இப்படி எல்லாம் உண்மை எழுதினா ஆத்தா கண்ணை குத்திடுவா.
ReplyDeleteநல்ல அலசல்.
நல்ல விளையாடி வெற்றி பெரும் யாராக இருந்தாலும் வாழ்த்துக்கள்.
ஆத்தா , நான் பாஸ் ஆயிட்டேன்
ReplyDeleteஆத்தா நான் எழுதிற பதிவை எல்லோரும் பாக்கணும்
http://ensaaral.blogspot.com/2009/06/blog-post_19.html
தல,
ReplyDeleteஎது நடந்தாலும் கோப்பை நம்ம ஆசிய நாடுகளுக்கு தான் என்பதில் மிக்க சந்தோஷம்.
கத்த முறையும் இறுதிப் போட்டியில் நம்ம ஆட்கள் தான். இந்த முறையும் நம்ம ஆட்கள் தான்.
என்ன சொல்றீக?
இந்த ஆத்தாவுக்கும் நம்ம ஆத்தா குரு'வுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
ReplyDeleteபூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்
//ஷோபிகண்ணு June 20, 2009 4:17 PM
ReplyDelete//அவர்கள் சாந்தமாக தொடர்ச்சியாக போட்டிகளைப் பார்த்துவருகிறார்கள்.//
மறுபடியும் டோணி வீட்ட இடிக்க ஆள் சேத்துறீங்க போலிருக்கு!//
அப்படியில்ல தல..,
அமைதியாக இருப்பதை கொஞ்சம் பெருமையுடந்தான் சொன்னேன்.
//ஆபிரகாம் June 20, 2009 4:28 PM
ReplyDeleteஇறுதிப்போட்டி நாளை(21.07)... இன்று என தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்//
ஆமாம் தல.., நாளை வெளியிட தயார் செய்து சேமிப்பில் வைப்பதற்குப் பதில் வெளியிட்டு விட்டேன். பெரிய தவறாக இல்லாததாலும், நாளைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததாலும் அப்படியே விட்டுவிட்டேன்
//முரளிகண்ணன் June 20, 2009 4:46 PM
ReplyDeleteநல்ல அலசல். ஆத்தா மேட்டர் சூப்பர்.
ஆத்தா ஆசியாவுக்கு கண்ணத் தொறந்திட்டாங்க//
ஆமா தல
//Sri June 20, 2009 6:20 PM
ReplyDeleteயப்பு...இறுதி ஆட்டம் நாளைக்கு....இன்னைக்கி இல்ல//
ஆமாம் தல.., நாளை வெளியிட தயார் செய்து சேமிப்பில் வைப்பதற்குப் பதில் வெளியிட்டு விட்டேன். பெரிய தவறாக இல்லாததாலும், நாளைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததாலும் அப்படியே விட்டுவிட்டேன்
ஆ.ஞானசேகரன் June 20, 2009 6:57 PM
ReplyDelete//மொத்தத்தில் ஆத்தா என்பது அதிர்ஷ்டம், பயம், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து ரத்தத்தில் ஊறிய ஒரு பாத்திரம்//
நல்ல ஆத்தா டாக்டர்
குறை ஒன்றும் இல்லை !!! June 20, 2009 7:19 PM
நல்ல அலசலான பதிவுங்க..
கருத்துக்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உள்ளது..
akbar June 20, 2009 7:20 PM
இப்படி எல்லாம் உண்மை எழுதினா ஆத்தா கண்ணை குத்திடுவா.
நல்ல அலசல்.
நல்ல விளையாடி வெற்றி பெரும் யாராக இருந்தாலும் வாழ்த்துக்கள்.
starjan June 20, 2009 7:31 PM
ஆத்தா , நான் பாஸ் ஆயிட்டேன்
ஆத்தா நான் எழுதிற பதிவை எல்லோரும் பாக்கணும்
http://ensaaral.blogspot.com/2009/06/blog-post_19.html//
நன்றி நண்பர்களே..,
//King Viswa June 20, 2009 8:29 PM
ReplyDeleteதல,
எது நடந்தாலும் கோப்பை நம்ம ஆசிய நாடுகளுக்கு தான் என்பதில் மிக்க சந்தோஷம்.
கத்த முறையும் இறுதிப் போட்டியில் நம்ம ஆட்கள் தான். இந்த முறையும் நம்ம ஆட்கள் தான்.
என்ன சொல்றீக?
//
தல இதே மாதிரித்தான் நம்ம ஆட்களுக்கும்
நம்ம சங்ககாரா, நம்ம கிப்ஸ், நம்ம குல் என்ற எண்ணம் வந்து ஜாலியா தோற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்
//பூங்காவனம் June 20, 2009 8:32 PM
ReplyDeleteஇந்த ஆத்தாவுக்கும் நம்ம ஆத்தா குரு'வுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்
//
தெய்வமே...., தெரியலயே தெய்வமே..,
ரெண்டு பங்களிங்களில் ஒருத்தர் ஜெயிக்கட்டுமே!
ReplyDeleteயார் ஜெயிச்சா என்னா தல ஜெயிப்பு ஜெயிப்பு தான
ReplyDeleteஅதான் நம்ம தோத்துட்டோமே
//thevanmayam June 20, 2009 10:33 PM
ReplyDeleteரெண்டு பங்களிங்களில் ஒருத்தர் ஜெயிக்கட்டுமே//
கண்டிப்பாக ஜெயித்தே தீருவார்கள்; வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
//பிரியமுடன்.........வசந்த் June 21, 2009 1:13 AM
ReplyDeleteயார் ஜெயிச்சா என்னா தல ஜெயிப்பு ஜெயிப்பு தான
அதான் நம்ம தோத்துட்டோமே//
நல்ல தத்துவம் தல..,
நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்
மீண்டும் உறுதி படுத்தி விட்டீர்கள்
எவன் ஜெயிச்சா என்ன தல??
ReplyDeleteஎது எப்படியோ ஏக பில்டப்பு, சுய விளம்பரத்தோட வந்த தோனி&கம்பெனியோட இந்தியா டீம் எங்ககிட்ட தோத்து ஓடிப் போனது எனக்கு ரொம்ப சந்தோஷம் :0))
நல்ல சிந்தனை 'ஆத்தா' விடயம். என்னதான் இருந்தாலும் இம்முறையும் இறுதிப்போட்டியில் இரண்டு ஆசிய அணிகள்தான். நமது கிரிக்கெட் நல்ல நிலையில்தானே இருக்கிறது.....
ReplyDelete/அது சரி said...
ReplyDeleteஎவன் ஜெயிச்சா என்ன தல??
எது எப்படியோ ஏக பில்டப்பு, சுய விளம்பரத்தோட வந்த தோனி&கம்பெனியோட இந்தியா டீம் எங்ககிட்ட தோத்து ஓடிப் போனது எனக்கு ரொம்ப சந்தோஷம் :0))
June 21, 2009 2:47 AM //
ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க தல
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//கதியால் said...
ReplyDeleteநல்ல சிந்தனை 'ஆத்தா' விடயம்//
அது எங்கள் கல்லூரியின் மணம் தல
//கதியால் said...
ReplyDeleteஇம்முறையும் இறுதிப்போட்டியில் இரண்டு ஆசிய அணிகள்தான்.
எல்லா அணி வீரர்களும் நம்ம ஐ.பி.எல் வீரர்களே தல
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் சுரஷ்,
ReplyDeleteஐபிஎல் போன்ற போட்டிகளின் தாக்கமே, நமது . இரண்டு வாரங்கள் முன்பு வரை தனி தனி அணிகளுக்கு தலைமை தாங்கி ஒருவரை ஒருவர் வீழ்த்த வியூகம் வகுத்து கொண்டு, உடனே ஒரு அணியில் ஆட சொன்னால் எப்படி என்பதற்கு இது உதாரணம்.
அதே வேளையில், நமது ஐபிஎல் அணிகளில் தன் பங்கை ஆற்றி விட்டு அவர்கள் அணிகளுக்கு திரும்பியவுடன், பட்டைய கிளப்பிய மற்ற தேசத்தவர்களை பார்த்து நாம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.
இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவிலும் பாகிஸ்தான் அணி கோப்பையை கைபற்றி இருப்பது, அவர்கள் மன உறுதியை தெளிவுபடுத்துகிறது. நம் மக்களுக்கு விளம்பரங்களில் பிபசா பாசுவையும், இலியானாவையும் துரத்துவதற்கே நேரம் போதவில்லை... இவைகளை கவனிக்க எப்படி முடியும் :)
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
கிரிக்கெட் நல்லா அடிச்சு ஆடுறீங்க தல!வாழ்த்துக்கள்.
ReplyDelete