Monday, June 15, 2009

செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி

இதில் எந்த விதமான உதாரணங்களைச் சொன்னாலும் நகைப்பிற்கும் கேலிக்கும் உள்ளாக்கப் படும் விஷயங்களாகவே உள்ளன.

சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்று சொல்லி இருக்கிறார்கள். படுக்கை அறை பாடம் என்பது வேறு; பாலியல் கல்வி என்பது வேறு.

பள்ளிகளில் பாலியல் கல்வி என்ற சொல்லே ஏதோ ஒரு கெட்ட வார்த்தை என்ற அளவில் யோசிக்கப் படுகிறது. பள்ளிகளில் மன்மதக் கலையைச் சொல்லிக் கொடுத்தால்தான் அது விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கும்.

அனைவருக்குமே எதிர்பாலினர் மேல் ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். அது இயற்கையான இயற்கை.

அந்தக் குறுகுறுப்பையே பலரும் காதலாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். அந்தக் குறுகுறுப்பு உணர்வுடன் திரைப்படம் பார்க்கத் தொடங்கினால் அதில் உள்ள உணர்வு தூண்டல் காட்சிகள்(இதனை காதல் காட்சிகள் என்றும் சொல்லுவார்கள்), பார்க்கும் சூழலில் அந்த இருவரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்கிறார்கள். இன்னும் இணையம் மூலமாக நமது மக்களின் படிக்கும் ஆர்வம் வேறு வளர்ந்து வருகிறது. அதில் அவர்கள் படிக்கும் இலக்கியங்கள் வேறு பற்பல தவறுகளை ஏதோ தவறில்லாத் தவறுகளாக எண்ணக் கூடிய சூழல் கூட உருவாகிக் கொண்டு இருக்கிறது.

விளைவுகளாக பல தேவையில்லாத கருத்தறிப்புகளையும், அவசியமே இல்லாத திருமணங்களையும் விவாகரத்துக்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது.

இதனைத் தவிர்க்கத்தான் பாலியல் கல்வி அவசியமாக இருக்கிறது. பாலியல் கல்வி என்பது பால் என்றால் என்ன? பால்வேறுபாடு என்றால் என்ன? வளரிளம் பருவத்தில் ஏற்படும் இயல்பான மாறூபாடுகளையும் அதன் அடிப்படைகளையும் எடுத்துச் சொல்லும் வகையில் அமைதல் நலம்.

பதின்ம வயது குழந்தைகளிடம் வயதுக்கு வருதல், அந்த கால கட்டத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களையும், அதன் அடிப்படைத் தத்துவங்களையும் எடுத்துச் சொல்லுதல் எப்படி தவறாக இருக்க முடியும். ஒரு வய்துக்கு வராத பெண்ணிடம் வயதுக்கு வருதல் என்றால் என்ன? உதிரப் போக்குவந்த உடன் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி பெரும்பாலானவர்கள் சொல்லித்தானே வைக்கிறோம். அதையே கொஞ்சம் அறிவியல் கண்ணோடு பார்ப்பதுதான் பாலியல் கல்வி.

ஏன் வயதுக்கு வருகிறோம். அந்த சூழலில் பெண்களின் உடலில் நடப்பது என்ன? ஆண்களில் நடப்பது என்ன?

சமீபத்தில் ஒரு இடுகையில் படித்தேன். அக்குளில்முடி இருப்பதைப் பார்த்து அந்தப் பெண்ணின் கணவன் , பெண்ணின் பெண்மையில் சந்தேகம் கொள்வதுபோல் சூழல் ஏற்படும்வகையில் ஒரு தவறான புரிதலை திரைப்படம் கொண்டுவருவதாக எழுதி இருந்தார் (எழுதியவரின் கருத்தும் கோணமும் சரியே). உண்மையில் அக்குளில் முடி இல்லாவிட்டால்தான் அந்தப் பெண்ணின் பெண்மையில் சந்தேகம் கொள்ள வேண்டும். பருவ மாற்றங்களில் மிக முக்கியமான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.

அதேபோல்தான் உடலில் முடி வளருவது, மார்பகங்கள் வளருவது, அதன் அடிப்படைத் தேவை, காரணங்கள் போன்றவற்றையும் சொல்லித் தருவதிலும் உடல் பாகங்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி சொல்லித் தருவதும் கூட பாலியல் கல்விதான். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவணம் எடுத்துச் சொல்லித் தந்தால் தானாகவே இனப்பெருக்கம் பற்றியும் எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லித் தர முடியும்.

அடுத்த பாலினரைப் பற்றி தேவையில்லாத கற்பனைகளுக்கு முற்றுப் புள்ளிவைத்தாலே பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியுமே.

ஆண்கள் உடைகளிலேயே எல்லாப் பணிகளையும் செய்யும் பெண்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இந்த உடைகள்தான் வசதியாக இருப்பதாகச் சொல்க்கிறார்கள். அதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பெண் உடையில் இருக்கும் ஆண்களைப் ப்ற்றிய கண்ணோட்டம் எவ்வாறு இருக்கிறது. இதைப் பற்றி நண்பர் புருனோ பல இடுகைகளில் தெளிவாக கொடுத்துவிட்டதால் நான் தனியாக இங்கே நீட்டப் பொவதில்லை.

உண்மையில் பதின்ம வய்து வளர்ச்சி பற்றி தெளிவான கருத்து நம்மில் பலருக்கும் இருக்கவில்லை. கிராமப் புறங்களில் கூட வளரிளம் பெண்களுக்கான பயிற்சி முகாம்களை தொடர்ச்சியாக அரசு நடத்திவருகிறது. அதில் மருத்துவர், சட்ட வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள். அதில் கூட ஓரளவு நடுத்தர வர்க்கத்தினர்மற்றும் பெரியவீட்டுப் பெண்கள் கலந்து கொள்வதில்லை. ஆண்களுக்கான கல்வி சக நண்பர்களிடம்தான் கிடைக்கிறது. அது ஒரு கட்டத்தில் துண்டுஅணியாத் துண்டுப் படங்களில் வந்து நிற்கிறது.

அதனால் பாலியல் கல்வி அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

பாலியல் கல்வியை அறிமுகப் படுத்துவதில் உள்ள முக்கியப் பிரச்சனை என்னவென்றால் பாலியல் கல்வி என்பதை மன்மதக் கலையைச் சொல்லித் தருவதுபோல பலரும் நினைத்துக் கொண்டு இருப்பது தான் முக்கியக் காரண்மாக தோன்றுகிற்து. அதனால்தான் கற்றறிந்தவர்கள்கூட பொது அவச் சொல்லுக்கு பயந்து அதனை எதிர்பதாகவே தோன்றுகிறது.

இதற்கு ஒரு தீர்வு உண்டு. கூச்சப் படாமல் இதற்கு வேறு ஒரு பெயர் வைத்து விடலாம். அந்தப் பெயரில் மன்மதன்,ரதி, பால்,செக்ஸ் போன்ற வார்த்தைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது எனப்து இந்தக் கல்வியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும். இல்லையன்றால் பெரும் எதிர்ப்பை மீண்டும் சந்திக்க வேண்டி இருக்கும்.

================================================

தோழர் பராரியின் பின்னூட்டத்திற்கு பதில் இந்த இடுகையில் இருக்கிறது
செக்ஸ் கல்வி- இப்பவே கண்ணக் கட்டுதே பாகம்-2

29 comments:

  1. //விளைவுகளாக பல தேவையில்லாத கருத்தறிப்புகளையும், அவசியமே இல்லாத திருமணங்களையும் விவாகரத்துக்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது.//

    நீங்கள் சொல்வதைபோல பாலியல் கல்வி தற்கால சமுக அமைப்பிற்கு அவசியமே

    ReplyDelete
  2. பிரச்சார நடையில் இருந்தாலும்..

    முடிவு சூப்பர் :-)

    ReplyDelete
  3. //தேனீ - சுந்தர் June 15, 2009 10:04 AM

    தேவையான ஒன்னு
    //

    நன்றி தல

    ReplyDelete
  4. //ஆ.ஞானசேகரன் June 15, 2009 10:55 AM

    //விளைவுகளாக பல தேவையில்லாத கருத்தறிப்புகளையும், அவசியமே இல்லாத திருமணங்களையும் விவாகரத்துக்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது.//

    நீங்கள் சொல்வதைபோல பாலியல் கல்வி தற்கால சமுக அமைப்பிற்கு அவசியமே



    ஆமா தல..,

    ReplyDelete
  5. கண்டிப்பா.

    ReplyDelete
  6. ATHAVATHU KARPPAMAAKAAMAL EPPADI PALIYAL THODARBU KOLVATHU ENBATHAI SOLLI THARA POKOREERKAL.

    ReplyDelete
  7. //நீங்கள் சொல்வதைபோல பாலியல் கல்வி தற்கால சமுக அமைப்பிற்கு அவசியமே//

    வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  8. //கடைக்குட்டி June 15, 2009 11:41 AM

    பிரச்சார நடையில் இருந்தாலும்..

    முடிவு சூப்பர் :-)
    //

    நன்றி தல

    ReplyDelete
  9. //pukalini June 15, 2009 2:47 PM

    கண்டிப்பா.
    //

    ஆமாம் தல.,

    ReplyDelete
  10. ada nalla visayam eluthi irukiringa. piraku ethuku neengale oruvitha nakkala thalaipai ippadi podirukiringa... "செக்ஸ் கல்வி - இப்பவே கண்ணக் கட்டுதே" :-)) aiyoo aiyoo

    ReplyDelete
  11. //தீப்பெட்டி June 15, 2009 3:07 PM

    //நீங்கள் சொல்வதைபோல பாலியல் கல்வி தற்கால சமுக அமைப்பிற்கு அவசியமே//

    வழிமொழிகிறேன்..
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீப்பெட்டி

    ReplyDelete
  12. //Anonymous June 15, 2009 4:04 PM

    ada nalla visayam eluthi irukiringa. piraku ethuku neengale oruvitha nakkala thalaipai ippadi podirukiringa... "செக்ஸ் கல்வி - இப்பவே கண்ணக் கட்டுதே" :-)) aiyoo aiyoo
    //

    வாங்க அனானி

    அவசியமான ஒரு விஷயத்தை சொல்ல செய்ய முயற்சி செய்யும் போது சோர்வு ஏற்பட்டால் சட்டென்று புத்துணர்ச்சி ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள் அவை. வடிவேலுக்கு நன்றி சொல்லவேண்டும். அப்படியே எழுதியவருக்கும்..,

    தங்கள் வருகைக்கு நன்றி..,

    தங்கள் பெயருடன் வந்தால் மேலும் மகிழ்ச்சி

    ReplyDelete
  13. அருமையான கருத்துரை.. கண்டிப்பாக
    நீங்கள் சொல்வதுபோலதான் அனைவரும்
    புரிந்துகொண்டுள்ளனர்!

    ReplyDelete
  14. புதிய இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
    http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

    ReplyDelete
  15. //கலையரசன் June 15, 2009 5:32 PM

    அருமையான கருத்துரை.. கண்டிப்பாக
    நீங்கள் சொல்வதுபோலதான் அனைவரும்
    புரிந்துகொண்டுள்ளனர்!
    //

    நன்றி தல..,

    ReplyDelete
  16. //கலையரசன் June 15, 2009 5:38 PM

    புதிய இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
    http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html
    //


    படித்து விட்டேன். பலரும் பலகோணங்களில் கருத்து சொல்லியிருக்கிறார்கள். நானும் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  17. அண்ணா அருமையான கருத்துக்கள்

    அ....ஆரம்பிச்சுட்டீங்க

    ஃ வரை தொடர்ந்து கூறிவிடுங்கள்

    ReplyDelete
  18. யோசிக்க வேண்டிய விஷயம் தான்

    ReplyDelete
  19. செக்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் செக்ஸ் கல்வியா? போங்கண்ணே, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு!

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பிரியமுடன்.........வசந்த்,

    நசரேயன் அவர்களே..,

    ReplyDelete
  21. //Joe June 15, 2009 10:36 PM

    செக்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் செக்ஸ் கல்வியா? போங்கண்ணே, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு!
    //

    செக்ஸ் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு விண்ணப்பம் கூட எழுத முடியாது தல..

    ஆனால் பாலியல் கல்வியின் துவக்கத்தில் உடலுறவு பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த வார்த்தையை உபயோகப் படுத்தும் முன் பல விஷயங்களை தாண்ட வேண்டும்

    ReplyDelete
  22. உடற்கல்வி என்றே பெயர் வைக்கலாமே-- ராஜு

    ReplyDelete
  23. செக்ஸ் கல்வி தேவையில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன். இன்று நாம் செக்ஸ் பற்றி தெரிந்துவைத்துள்ளவைகள் எல்லாம் எந்தப் பள்ளியில் இருந்து நாம் கற்றது?
    அதுவும் இன்றைய நாட்களில், சாதாரண தினப்பத்திரிக்கைகளிலேயே இது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள்/நிபுனர்கள் எழுதுகிறார்கள். அதுபோக இப்போது தொலைக்காட்சிகளிலும் நிபுனர்கள் பதில் தருகிறார்கள்.

    பாலியல் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கும் அனுமதியளிப்போம். குழந்தையின் வயதிற்கேற்றவாறு பெற்றோர்கள் மட்டுமல்லாது அண்ணன், மாமன், நண்பன் இப்படி யாராக இருந்தாலும், பாலியல் சம்பந்தமான ஒரு தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்த முயலுவோம்

    இதெல்லாம் போக, தனியாக ஒரு வகுப்பு என்று ஒன்று தேவையா?

    ReplyDelete
  24. //Anonymous June 16, 2009 7:32 AM

    உடற்கல்வி என்றே பெயர் வைக்கலாமே-- ராஜு
    //

    வைக்கலாம் தல

    ReplyDelete
  25. உழவன் சார் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை..,

    அதன் அடிப்படையிலேயே நாம் பாலியல் கல்வி அவசியம் என்று சொல்லலாம்.

    //இன்று நாம் செக்ஸ் பற்றி தெரிந்துவைத்துள்ளவைகள் எல்லாம் எந்தப் பள்ளியில் இருந்து நாம் கற்றது?//

    தேவையான அளவு தெளிவு எல்லோருக்கும் இருக்கிறது என்று சொல்லமுடியாது சார்.


    //சாதாரண தினப்பத்திரிக்கைகளிலேயே இது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள்/நிபுனர்கள் எழுதுகிறார்கள்.//

    உண்மை, அதுகூட கல்விதான். அதை முறைப்படுத்தி வரிசைக்கிரமமாக சொல்லிக் கொடுக்க பாடத்திட்டமாக அமைதல் நலம் அல்லவா?


    //பாலியல் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கும் அனுமதியளிப்போம்//

    புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வரக்கூடாது அல்லவா.., அதற்குப் பாடத்திட்டம் அவசியம் என்பது என் கருத்து..,

    //குழந்தையின் வயதிற்கேற்றவாறு பெற்றோர்கள் மட்டுமல்லாது அண்ணன், மாமன், நண்பன் இப்படி யாராக இருந்தாலும், பாலியல் சம்பந்தமான ஒரு தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்த முயலுவோம்
    //

    சிலர் முயலுகிறார்கள். ஆனால் பலர் குழப்பி விடுகிறார்கள். பெண்களுக்கு கிடைக்கும் அளவிற்கு அலோசனைகள் ஆண்களுக்கு கிடைப்பதில்லை என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    அதே நேரத்தில் பெண்களுக்கு கிடைக்கும் அறிவுரைகள் பலவும் ஆணாதிக்கம் என்ற நோக்கத்தில் பார்க்கப்பட ஆரம்பித்துள்ளன.

    அதனாலேயே பாலியல் கல்வி அவசியமாகிறது. அது எவ்வாறு இருந்தால் நலமாக அமையும் என்பதையும் இரண்டாம் பாகத்தில் சொல்லி இருக்கிறேன்

    ReplyDelete
  26. ippa irukkurathea pothum inraya manavarkalukku neraya theriyum
    10 years kku munala internet appatinna palarukku theriyathu innaikku nilamai marivittathu
    naan patham vakuppu patikkum poluthu yeannakku yathuvumea theriyathu inraya manavarkal sollaventiyathea illai

    ReplyDelete
  27. ippa irukkurathea pothum inraya manavarkalukku neraya theriyum
    10 years kku munala internet appatinna palarukku theriyathu innaikku nilamai marivittathu
    naan patham vakuppu patikkum poluthu yeannakku yathuvumea theriyathu inraya manavarkal sollaventiyathea illai

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails