உங்களுக்கு ரூ45 கோடி மதிப்பிலானா ஒரு வைர கிரீடம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன. மிகவும் மகிழ்சி. உங்கள் மீதுதான் அந்த பக்தருக்கு எவ்வளவு அன்பு?
இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடம், 34 கிலோ 800 கிராம் எடையுடன் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 35,700 பெல்ஜியம் வைரக்கற்களும், 819 ஆப்ரிக்க பச்சை கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.இந்த கிரீடத்தை பொற்கொல்லர்கள் ஒன்பது மாதங்கள் வேலை செய்து தயார் செய்துள்ளனர். வைரக் கிரீடத்தின் கீழ் பாகத்தில், தாமரைப் பூ வடிவத்தின் மையப்பகுதியில் திருநாமம் போன்ற வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பச்சைக்கல், ஆப்ரிக்க நாட்டில் ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்புடையது என செய்திகள் கூறுகின்றன.
எங்களுக்குக் கூட உங்கள் மீது மிகவும் அன்பு உண்டு: ஆனால் அதை வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புதான் கிடைக்கவில்லை.
வெள்ளிமுதல் இந்தக் கீரிடம் உங்களுக்கு அணிவிக்கப் பட்டு 15 நாட்கள் எங்களுக்கு நீங்கள் காட்சி அளிப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
மிகவும் மகிழ்ச்சி.
உங்களுக்கு இதே போல் ரூ.45 கோடியில் கீரிடம் கிடைப்பது ஏழாவது முறையாகும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் பாருங்கள் திருப்பதியாரே...., எங்கள் ஊர்களிலும் வெங்கடேசர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துளசி மாலையோடு திருப்தி அடைந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு சுண்டலும் எப்போதாவது புளியோதரை, பொங்கல் கிடக்கிறது.
அவர்களுக்கும் இதேபோல் ஏழு இல்லாவிட்டாலும் ஒன்றாவது ஏதோ சில லட்சங்களிலாவது கிடைத்தால் நன்றாக இருக்கும். எங்கள் ஊர் மக்களையும் அந்த அளவு நீங்கள் தயார் செய்து கொடுத்தால் அவர்களும் இது போல் வாரி வழங்கும் வள்ளல்களாக மாறுவார்கள்.
உங்களுக்கு எங்கள் ஊர் வெங்கடேசர்களும் , நாராயணர்களும் பிடிக்கும்தானே?
இங்ஙனம்
இது போன்ற பொருட்களை
செய்திகளில் மட்டும் பார்க்கும்
உன் பக்தன்
//இது போன்ற பொருட்களை
ReplyDeleteசெய்திகளில் மட்டும் பார்க்கும்
உன் பக்தன்//
Me too.
//தல,
ReplyDeleteஎங்க காமிக்ஸ் செட்'ல கூட அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அப்படின்னு ஒருத்தர் இருக்கார் தல. அவருக்கு ஏதாவது கெடச்சா கூட எனக்கு சந்தோஷம் தான்.//
தல,
எங்க காமிக்ஸ் செட்'ல கூட அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அப்படின்னு ஒருத்தர் இருக்கார் தல. அவருக்கு ஏதாவது கெடச்சா கூட எனக்கு சந்தோஷம் தான்.
//
ReplyDeleteஉங்களுக்கு எங்கள் ஊர் வெங்கடேசர்களும் , நாராயணர்களும் பிடிக்கும்தானே?//
தல,
எங்க காமிக்ஸ் செட்'ல கூட அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அப்படின்னு ஒருத்தர் இருக்கார் தல. அவருக்கு ஏதாவது கெடச்சா கூட எனக்கு சந்தோஷம் தான்.
/*ஆனால் பாருங்கள் திருப்பதியாரே...., எங்கள் ஊர்களிலும் வெங்கடேசர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துளசி மாலையோடு திருப்தி அடைந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு சுண்டலும் எப்போதாவது புளியோதரை, பொங்கல் கிடக்கிறது.*/
ReplyDeleteஎன்ன டாக்டர் சார், ஏதோ எழுமலயானே இவரிடம் சென்று இந்த கிரீடம் வேண்டும் என்று கேட்டது போல் சொல்கிறீர்?? இவர் என்ன பாவம் செய்தாரோ ஊரை ஏமாற்ற, பந்தா பண்ண, சாமியை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் (ஏன் உண்மையான பற்றுடன் கூட செய்திருக்கலாம்) செய்திருக்கிறார் அதனால் இந்த மடலை நீங்கள் அந்த அமைச்சருக்கு எழுதி இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
Tala,
ReplyDeleteWrite Something about Palaniyandavar..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteகிங் விஸ்வா சார்,
சித்து சார்,
வினோத் கௌதம் சார்.
இது போன்ற பொருட்களை
ReplyDeleteசெய்திகளில் மட்டும் பார்க்கும்
மானிடன்....
//ஆ.ஞானசேகரன் June 13, 2009 9:36 PM
ReplyDeleteஇது போன்ற பொருட்களை
செய்திகளில் மட்டும் பார்க்கும்
மானிடன்....
//
இது நன்றாக இருக்கிறது தல.., இனி மேல் திருத்தினால் நன்றாக இருக்காது. அடுத்த முறை ஏதாவது இதுமாதிரி எழுதினால் இதை உபயோகப் படுத்திக் கொள்வோம்
கோவிந்தா கோஓவிந்தா...
ReplyDelete:)))
ம்ம்ம்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வழிப்போக்கன் சார், கடைக்குட்டி சார்..,
ReplyDelete