1. பாட்டு பாடுவதற்கு முன் நீளமாக இழுப்பீர்களே ( சில்லென்று என்பதுபோல) அது பிடிக்கும்
2. வேதாள உலகம் படத்தில் உங்க அப்பா, சித்தப்பா, அண்ணன்கள் சுயம்வரத்திற்குப் போன அதே பெண்ணிற்காக நீங்களும் சுயவரம் போவீர்களே அது பிடிக்கும். நீங்கள் சிறுவனாக இருந்தபோதே சுயம்வரம் நடத்தப் பட்ட பெண்ணையே கடைசியில் திருமணம் செய்து கொள்வீர்களே அந்த தியாக உள்ளம் ரொம்பவே பிடிக்கும்
3. பேசும் போது இரண்டு கையையும் சேர்த்துவைத்து பேசிவிட்டு முடிக்கும்போது சடாரென்று விரிப்பீர்களே, அந்த ஸ்டைல் பிடிக்கும்
4. அணுகுண்டு என்ற பொருளை கடலை உருண்டை ரேஞ்சுக்கு எடுத்து மடியில் கட்டிக் கொண்டு போவீர்களே அந்த குருட்டு தைரியம் மிகப் பிடிக்கும்.
5.உங்கள் பாடலைக் கேட்டுத்தான் கடவுள் பாடக் கற்றுக் கொண்டாராமே.., அந்தக் கதை கூட எங்களுக்குப் பிடிக்கும்
6. உங்களுக்காக ஒரு காமெடிக்காரரோ அல்லது ஒரு வயோதிக நடிகரோ துப்பறிவதாக வரும் படங்களிலேயே நடித்தீர்களே அந்தப் பெருந்தன்மை ரொம்பவே பிடிக்கும்.
7.உங்கள் மீசை அதன் அடர்த்தி எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
8. எம்.கே.டி. நடிக்காமலிருந்த போது சூப்பர் ஸ்டார் இடத்தை பாதுக்காத்து தான்வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.யாரிடம் தூக்கிக் கொடுத்த அந்த கடமை உணர்வு மிகவும் பிடிக்கும்
9.ஆட்ட்க்கார நாயகிகள் இருந்தாலும் நடந்து கொண்டே மூச்சுமுட்டப் பாடுவீர்களே அது ரொம்ப பிடிக்கும்
10.ஒரு கையில் எண்ணைக் குவளையை வைத்துக் கொண்டு உலகம் சுற்றிவந்து அகத்தியருடன் டூயட் பாடுவீர்களே.., அந்த பக்தி ரொம்ப பிடிக்கும்
11.பொன்னியின் செல்வனோடு தென்றலோடு பிறந்தவளாம் செந்தமிழ் பெண்ணாள் என்று சொல்லச் சொல்ல இசை அமைப்பீர்களே அந்த நடிப்பு ரொம்பவே பிடிக்கும்.
12.இன்றும் ரசிகர்களோடு இருக்குறீர்களே அது ரொம்ப பிடிக்கும்
இதுதான் தல(அட, அவரு இல்லப்பா..!). ஜூப்பரு..!
ReplyDeleteகலக்கிட்டீங்க டாக்டரே.. (அட, அவரு இல்லப்பா..!).
இன்னைக்கு நடந்த கலாட்டாவுலையே உங்களுதுதான் சூப்பரு..
ReplyDelete// டக்ளஸ்... said...
ReplyDeleteஇதுதான் தல(அட, அவரு இல்லப்பா..!). ஜூப்பரு..!
கலக்கிட்டீங்க டாக்டரே.. (அட, அவரு இல்லப்பா..!).//
வித்தியாசமான பின்னூட்டத்திற்கு நன்றி தலைவரே..,
//லோகு said...
ReplyDeleteஇன்னைக்கு நடந்த கலாட்டாவுலையே உங்களுதுதான் சூப்பரு..//
நன்றி தல..,
This comment has been removed by the author.
ReplyDeleteதல எப்படி உங்களால மட்டும் ... (ஆவ்வ்வ்வ்)
ReplyDeletepinnee pedaleduththuteenga bossssssssssss
ReplyDeleteகவுண்டர் : அட்ரா சக்க .. அட்ரா சக்க !!!
ReplyDeleteattack ..
ReplyDeleteரசனையான பதிவு
ReplyDeleteசில்லென்று பூத்த..
வாழ்த்துக்கள்
அழகு
ReplyDelete@அக்பர் நன்றி தல
ReplyDelete@பாலா நன்றி தல
@குறை ஒன்றும் இல்லை !!! நன்றி தல
// சூரியன் said...
ReplyDeleteattack ..//
வம்பில் மாட்டிவிடுறீங்களே தல
// நிகழ்காலத்தில்... said...
ReplyDeleteரசனையான பதிவு
சில்லென்று பூத்த..
வாழ்த்துக்கள்//
நன்றி தல
// jothi said...
ReplyDeleteஅழகு//
நன்றி தல
எல்லாம் நல்லா பிடிச்சாப்புல இருக்கு நண்பரே
ReplyDeleteஎங்கோ நினைவு சுழலில் அமிழ்ந்து கொண்டிருந்த குரலை லாவகமாக பற்றி இழுத்து வந்திருக்கிறீர்கள் இந்த இடுகை மூலமாக. ரொம்ப பிடிச்சிருக்கு தல!! நல்ல விஷய ஞானம் உங்களுக்கு! அதுக்கு ஒரு பூச்செண்டும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteடி ஆரின் சிறப்பை சீர்தூக்கி நிறுத்திய சுரேஷ் வாழ்க
ReplyDeleteமகாலிங்கம் என்ன சொல்வார் என்று யோசித்துப்பார்த்தேன்
ReplyDelete1.//நீளமாக இழுப்பீர்களே..// அதை விருத்தம் என்று சொல்வார்கள்.
2. தியாக உள்ளம் எல்லாம் இல்லை. எங்க காலத்தில் கதைக்காகத்தான் நடிகர்கள். நடிகருக்காக கதை இல்லை.
3. ஸ்டைலா? நன்றி.
8.கடமையா? உங்க சூப்பர் ஸ்டார் இன்னும் ஹீரோவா நடித்துக் கொண்டிருக்கிறாரே, எங்களை அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை.
9.//மூச்சுமுட்ட பாடுவீர்களே..//மாலையிட்ட மங்கை எடுத்தபோது, எம்.எஸ்.வியும் கண்ணதாசனும், உங்கள் பாட்டு எல்லாமே உச்சஸ்தாயியிலேயே இருக்கிறதேனு கேட்டார்கள். இதுவரை யாருமே இப்படி கேட்டதில்லை என்றேன். அப்போ உருவான பாட்டுதான் இது. "நானன்றி யார் வருவார்..."அதைக்கேட்டுப் பாருங்கள்.
12. ரசிகர்களுடன் இருப்பது நான் பாடிய பாட்டுக்கள் தான். இன்றைய தலைமுறை எல்லோரும் கேட்கச் செய்யுங்கள். என்னையும் நினைத்து எழுதியதற்கு நன்றி
சகாதேவன்
// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteஎல்லாம் நல்லா பிடிச்சாப்புல இருக்கு நண்பரே//
நன்றி தல..,
//ஜெகநாதன் said...
ReplyDeleteநல்ல விஷய ஞானம் உங்களுக்கு! அதுக்கு ஒரு பூச்செண்டும் வாழ்த்துக்களும்.//
நன்றி தல..,
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteடி ஆரின் சிறப்பை சீர்தூக்கி நிறுத்திய சுரேஷ் வாழ்க//
ஆஹா......,
//சகாதேவன் said...//
ReplyDeleteதலைவா நீங்கள் எழுதிய அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி...,
டி.ஆர் அவர்களுக்கே நன்றி சொல்வதாக நினைத்துக் கொண்டு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
கலக்கல் பதிவு தல..
ReplyDeleteடி ஆர் எம் ஐ நினைவு படுத்தியதற்கு நன்றி...நகைச் சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும்...
ReplyDeleteஅந்தக் காலத்தில் கதை அமைப்பு, அணுகுண்டு விஷய ஞானம் என்னவோ அதற்குத் தகுந்த மாதிரிதான் நடிக்க முடியும். அதை இப்போது சிரிப்பது சரி இல்லை.
சகா சொன்ன மாதிரி நானன்றி யார் பாடலை யாரால் மறக்க முடியும்?
இசைத் தமிழ் நீ செய்த பாடலை அவர் எடுக்கும் இடம்...உனக்கன்றி எனக்கில்லை என்று பாடும் உயரத்தை எத்தனை பேரால் எட்ட முடியும்?
'தென்றலோடு பிறந்தவளாம்' இல்லை, 'தென்றலோடு உடன் பிறந்தாள்...'
//வினோத்கெளதம் said...
ReplyDeleteகலக்கல் பதிவு தல..//
நன்றி தல..,
//ஸ்ரீராம். said..
ReplyDeleteநகைச் சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும்...
அந்தக் காலத்தில் கதை அமைப்பு, அணுகுண்டு விஷய ஞானம் என்னவோ அதற்குத் தகுந்த மாதிரிதான் நடிக்க முடியும்.//
மிகச் சிறிய அணுகுண்டைப் பயன்படுத்தி மிக எளிதாக அனைத்தையும் அழிக்க முடியும் என்றுதான் கூறியுள்ளார்கள் எனவே பிரமிக்கத்தக்க விஷயம்தான்
//'தென்றலோடு பிறந்தவளாம்' இல்லை, 'தென்றலோடு உடன் பிறந்தாள்...'//
ReplyDeleteஓ.கே தல..,
//ஸ்ரீராம். said...
ReplyDeleteடி ஆர் எம் ஐ நினைவு படுத்தியதற்கு நன்றி...நகைச் சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும்...//
இந்தப் பதிவு எழுதப் பட்ட தேதியில் அஜித் 10, விஜய் 10 என அனல் பறந்து கொண்டிருந்தது தல..,