இந்த இடுகை காஞ்சித் தலைவனின் எக்சர்ஸைஸ் போட்டிக்காக எழுதப் பட்டது.
முன்குறிப்பு:= கேட்கப் பட்டுள்ள நீளம் மிகக் குறைவாக இருக்கிறது. இருந்தாலும் நமது திறமையை நிரூபிக்கும் வண்ணம் இருப்பதால் அந்த சவாலை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
அவர் கொடுத்துள்ள கதை மற்றும் விதிகள்
ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
நமது ஆக்கம்
காட்சி 1:-
நகரத்திற்கு வரும் இளைஞனை ஒரு சேரியில் இறக்கிவிடுகிறார். அந்த ஆட்டோக்காரர்.
காட்சி2:-
தனது கற்பனை நகரத்திற்கும் , இந்த நகரத்திற்கும், கிராமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து கண்கலங்கி ஒரு முடிவுக்கு வருகிறான்.
காட்சி3:-
சேரியில் உள்ள குப்பைகளை கூட்டத்தொடங்குகிறான். இரவு பகலாக சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கிறான்.
காட்சி4:-
சில மாதங்கள் கழித்து அந்த நகரம் முழுவதும் ஒரு கொடிய நோய் வருகிறது. அந்த சேரியில் மட்டும் இல்லை.
காட்சி5:-
சேரி மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டு தங்களுக்கு கொள்ளை நோய் வராமல் காப்பாற்றிய இளைஞனை நன்றிப் பெருக்குடன் நோக்குகின்றனர்.
காட்சி6:-
அந்த இளைஞனை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கின்றனர். அவர் வாழ்வும் சேரி மக்கள் வாழ்வும் வளம்பெறுகிறது.
அவர் வைத்த போட்டியை அறிய இந்தச் சுட்டியை சுட்டுங்கள்
அலெக்ஸா வில் ---- டாப்பில் இருப்பதற்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅருமையா எழுதி இருக்கீங்க..
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteஅருமையா எழுதி இருக்கீங்க..
//
நன்றி சார், அலெக்ஸாவில் நீங்கள் பல முண்ணனி பிரபல வலைஞர்களைவிடவும் முன்னிலை பெற்று இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக அருமையாக இருக்கிறது... பாராட்டுகள்.
ReplyDeleteகருத்துகள் பிறகு..
நல்லா இருக்கு நண்பரே
ReplyDelete//லோகு said...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
//
//இளைய பல்லவன் said...
மிக அருமையாக இருக்கிறது... பாராட்டுகள்.
கருத்துகள் பிறகு..
//
//ஆ.ஞானசேகரன் said...
நல்லா இருக்கு நண்பரே
//
நன்றி.., நன்றி.., நன்றி..,