சக்கரத்தை சேர்த்தே வைத்தாய் இறைவா
சாவியையும் கையில் கொடுத்தாய் இறைவா
எஞ்சினையும் உள்ளே வைத்தாய் இறைவா
எட்டுத் திக்கும்போகச் சொன்னாய் இறைவா
சாவியையும் கையில் கொடுத்தாய் இறைவா
எஞ்சினையும் உள்ளே வைத்தாய் இறைவா
எட்டுத் திக்கும்போகச் சொன்னாய் இறைவா
சொகுசாய் இருக்கைகள் கொடுத்தாய் இறைவா
சொகுசாய் பாதைகள் கொடுத்தாய் இறைவா
மாமியார் ஓட்டினாலும் மருமகள் ஓட்டினாலும்
மாற்றம் இல்லாப்பாதை தந்தாய் இறைவா
சக்கரத்தின் ஓட்டத்திற்கும் இறைவா உள்ளே
சக்திவாய்ந்த குழலை வைத்தாய் இறைவா
காற்றினை அடிக்கச் சொன்னாய் இறைவா
காற்றைப்போல் ஓட்டச் சொன்னாய் இறைவா
எல்லாமும் எமக்குத் தந்தாய் இறைவா
எளிமையாய் கற்றுத் தந்தாய் இறைவா
எரிபொருளைப் போடச் சொன்னாய் இறைவா
இன்னொருவன் கையில் கொடுத்ததேன் இறைவா
ஒவ்வொரு முறையும் காசு கொடுத்தால்தான்
ஒருசொட்டு எரிபொருள் கிடைக்குமாம் இறைவா
எல்லாம் கொடுத்த இறைவா -எரிபொருளையும்
இலவசமாய் கொடு இறைவா
** யாருங்க உங்களுக்கு வண்டி இலவசமா கொடுத்தது..
ReplyDelete** பெட்ரோல் பங்குல எழுதுன கவிதையா டாக்டர் சார்..
//லோகு June 20, 2009 10:54 AM
ReplyDelete** யாருங்க உங்களுக்கு வண்டி இலவசமா கொடுத்தது..
** பெட்ரோல் பங்குல எழுதுன கவிதையா டாக்டர் சார்..
//
வண்டிக்கு ஒரு விலை.., பெட்ரோலுக்கு ஒவ்வொருமுறையும் விலை...,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
இது கவிதை இல்லை உள்ளக்குமுறல்
ReplyDelete//கவிக்கிழவன் June 20, 2009 1:39 PM
ReplyDeleteஇது கவிதை இல்லை உள்ளக்குமுறல்
//
நன்றி தல..,
//ஒவ்வொரு முறையும் காசு கொடுத்தால்தான்
ReplyDeleteஒருசொட்டு எரிபொருள் கிடைக்குமாம் இறைவா
எல்லாம் கொடுத்த இறைவா -எரிபொருளையும்
இலவசமாய் கொடு இறைவா //
ம்ம்ம் அப்ப வண்டி யாரு கொடுப்பது நண்பா
கலர் டி.வி மாதிரி ஏதேனும் ஒரு தேர்தலில் ஆசை நிறைவேறும்.
ReplyDeleteஅன்புடன்,
தங்கமணி
www.gkexpress.blogspot.com
இலவசம் , அதானே வேணும்.....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஆ.ஞானசேகரன்
THANGA MANI
starjan அவர்களே..,
இலவசமா பெட்ரோல் கேக்குதா?
ReplyDeleteஎதுக்கும் தலைவர்கிட்டே சொல்லிப்பாருங்க!!
//thevanmayam said...
ReplyDeleteஇலவசமா பெட்ரோல் கேக்குதா?
எதுக்கும் தலைவர்கிட்டே சொல்லிப்பாருங்க!!
//
செஞ்சிடுவோம்